Thottal Thodarum

Dec 3, 2013

நடு நிசிக் கதைகள் - 3

நண்பர் ஒருவரின் பார்ட்டி. போலீஸ் கெடுபிடியினால் எல்லோரும் விரைவாக கிளம்ப, நடந்து செல்லும் தூரத்திலிருந்தவர்களும், வேறொருவரின் வண்டியில் பிரயாணப்பட இருக்கும் ஆட்களைத் தவிர வேறொருவரும் இல்லை. ஒரு விதத்தில் இந்த கெடுபிடி கூட நல்லதே என்று தோன்றியது. நேரம் ஆக ஆக வாதம் விவாதமாகி குடுமிப்பிடி சண்டையாகிப் போகும் நிலைக்கு பல சமயம் இந்த கெடுபிடி புல்ஸ்டாப் போடுகிறது.



தேவையேயில்லாமல் ரஜினி, கமல், அஜித், விஜய் என்று ஆரம்பித்து பர்சனலாய் சண்டையாகி போன வாதங்கள் பல. அவ்வளவாய் குடிக்காமல் இருக்கும் இதை ஆரம்பித்து வைத்து விட்டு அமைதியாய் இன்னொரு பெக்கை அடிக்கும் நண்பர்கள் பல பேர் உண்டு. அப்படியான ஒரு ஆர்க்யூமெண்ட் ஆரம்பிக்கும் முன்னரே பல எஸ்ஸாகிவிட, மீதமிருந்தவர்கள் கற்றது தமிழ் நல்ல படமா? இல்லை மொக்கை படமா? என்று விவாதம் ஆரம்பித்து வெறும் காமெடி படம் மட்டுமே ஏன் ஓடுகிறது என்று ஞானக் கேள்விகள் தோன்றி தமிழ் சினிமா விளங்காது என்று முடிவெடுத்து கிளம்பும் போது மணி 12.

அன்றைக்கு பார்த்து வண்டி பஞ்சர் ஆகி நிற்க நண்பர் ஒருவர் என்னை ட்ராப் செய்வதாய் பேச்சு. காலையில் பார்ட்டி கொடுத்த நண்பர் வண்டியின் பஞ்சர் போட்டு வைப்பதாய் உறுதியளித்திருந்ததால் பார்ட்டியில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. குடிகாரன் பேச்சு என்றாலும் நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறது. நண்பேண்டா.

கிளம்பும் போது நண்பர் “பாஸ் இருங்க.. அந்த முக்கு கடைக்கு போய்ட்டு வர்றேன்”  என்றதும்,

“என்ன தம்மா?”

“இல்லீங்க பால் பாக்கெட் வாங்கிட்டு வர்றத்துக்கு” என்றார். எனக்கு புரியவேயில்லை. நீயோ பேச்சுலர். தனியாய் சமைத்து சாப்பிடுறவனுமில்லை. பின்ன எதுக்கு  பால் பாக்கெட்?.

“மச்சான். உன்னைய பார்த்த்தா எவனும் எதுவும் கேட்கமாட்டான். ஆனா என்னையெல்லாம் பத்து மணிக்கு மேல வீதியில பார்த்தாலே தீவிரவாதின்னு புடிச்சிப் போட்டுருவாங்க. அதுலேயும் சரக்கடிச்சிட்டு போனா.. அவ்வளவுதான். அதனால என்ன பண்ணுவேன்னா.. பால் பாக்கெட்டை வாங்கி பையில வச்சிப்பேன்.போலீஸ் செக்கிங் பண்ணா.. சார்.. குழந்தைக்கு பால் வாங்கணும்னு தான் வண்டி எடுத்து வர வேண்டியதாப் போச்சுன்னு சொல்லுவேன். குழந்தை செண்டிமெண்ட் எப்பவும் ஒர்கவுட் ஆகாம இருந்ததேயில்லை” என்றான்.
கேபிள் சங்கர்

Post a Comment

4 comments:

குரங்குபெடல் said...

ஸூபர் ஐடியா


. . . . இப்படிக்கு பால் பாக்கெட் விற்பனைளர்கள் சங்கம்

”தளிர் சுரேஷ்” said...

நல்ல ஐடியாதான்!

Unknown said...

Antha paal pocket apram enna pannuvanga???

Lithens said...

athu udan paal