Thottal Thodarum

Aug 11, 2014

கொத்து பரோட்டா - 11/08/14

சென்ற வாரம் பதிவர்கள் இணைந்து உருவாக்கிய பரோட்டா கார்த்தி எனும் குறும்பட விழாவிற்கு சென்றிருந்தேன். நான் போய் சேர்வதற்குள் குறும்படம் ஒளிபரப்பப்பட்டு, வெளியிட்டு விட்டார்கள். பதிவர்கள் மின்னல் வரிகள் கணேஷ் பெற்றுக் கொண்டாராம். தொட்டால் தொடரும் ஆரம்பித்ததிலிருந்து பதிவர்கள் யாரையும் சந்திக்க முடியவில்லை. சுரேகா, அவரது உதவியாளர், கே.ஆர்.பி, சிவகுமார், கோவை ஆவி, சீனு, சேட்டைக்காரன், மூத்த பதிவர் சுப்பு தாத்தா வந்திருந்து வாழ்த்தினார் என நண்பர்கள் பல பேர் வந்திருந்தது சிறப்பாக இருந்த்து விழா. குறும்படத்தை பார்த்துவிட்டு கருத்து சொல்வதாய் சொல்லியிருந்தேன். விழாவில் கலந்து கொண்ட பதிவர்களுக்காக தொட்டால் தொடரும் படத்தின் வெளிவராத ட்ரைலரையும், பெண்ணே.. பெண்ணே பாடல் காட்சியையும் போட்டுக் காட்டினேன். நன்றாக இருந்ததாய் சொன்னார்கள். வழக்கம் போல நிகழ்ச்சி முடிந்தும் வேடியப்பனின் கடையின் கீழ் கூட்டம் நடந்தது. நெடுநாள் கழித்து ஒர் சிறப்பான மாலையாய் அமைந்தது பரோட்டா கார்த்தி குறும்பட விழா.
@@@@@@@@@@@@@@@@@@@



In To The Strom
படத்தின் ட்ரைலரை பார்ததிலிருந்து 1996ல் வந்த டிவிஸ்டர் ஞாபகம் வந்து கொண்டேயிருந்தது. மைக்கேல் கிரிஸ்டன், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஸ்பீட் இயக்குனர் ஜேன் டி பாண்ட்  என ஜாம்பவான்கள் எல்லோரும் சேர்ந்து எடுத்த படம். விஷுவலாகவும், கதையாகவும் அற்புதமான படம். டிவிஸ்டரில் முதல் காட்சியில் ஒரு குடும்பம் ஓக்கல்ஹாமாவில் சூறாவளி புயலிலிருந்து தப்பிக்க, பதுங்கு குழிக்குள் போக, குழியின் கதவை பிய்த்து கொண்டு போய் ஒருவர் பறப்பார். ஆனால் இதில் ஒரு கார் மாட்டிக் கொள்கிறது. ம்ஹும்.. அந்த ஓப்பனிங் கொடுத்த டெரர் இதில் கொஞ்சம் கூட இல்லை. முன்னாள் கணவன் தன் மனைவியிடம் டைவர்ஸ் அப்ளிகேஷனுக்கு கையெழுத்து வாங்க, தன் எதிர்கால மனைவியோடு வர, முன்னால் மனைவியும், கணவனும் டொர்னடோவை துறத்தும் பணியில் இருந்தவர்கள். தற்போது மனைவி வேலை செய்யும் இடத்தில் டொர்னடோ வருவதாய் தெரிய, அதை நோக்கி தங்கள் டோரத்தி வண்டியை எடுத்துக் கொண்டு போகிறார்கள். டொர்னடோ ஊரையே அழித்து விட்டுத்தான் போகுமென்றாலும், பிரிந்த இரண்டு காதல் தம்பதியரை சேர்த்து வைக்கிறது. செம்ம படம். இன்றளவும் எனக்கு அப்படம் கொடுத்த ஆச்சர்யம் குறையவேயில்லை. ஆனால் இந்தப்படம் விஷுவலாய் ஒர் பெரிய டொர்னடோவை காட்டியது, ஊரை நாசப்படுத்தும் சில காட்சிகளைத் தவிர, நல்ல மசாலா படத்தின் எல்லா அம்சங்கள், நெஞ்சை நக்கும் இளம் காதலர்கள், அப்பாவிடம் சண்டை போடும் பையன், அப்பா, தன் பிள்ளைக்காக டொர்னடோவில் போக விழைவது, அன்பு, பாசம், 25 வருஷத்துக்கு அப்புறம் நாம் எப்படி இருப்போங்கிற வீடியோ தொகுப்பு போன்ற ஒர் சில காட்சிகளைத் தவிர பெரிய சுவாரஸ்யமேதுமில்லை. காமெடி ட்ராக்காய் ஏதேனும் சாகசம் செய்து வீடியோ எடுத்து தள்ளும், இளைஞர்கள் வேறு. போகிற போக்கில் எப்படி நாம் ஆங்கில படங்களை தமிழில் டப் செய்து பார்க்கிறோமோ அது போல தமிழ் படங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் டப் செய்யப்பட்டு, வடிவேலு, கவுண்டர் எல்லாம் பிசியாக வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. ம்ஹும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
பார்த்ததில் பிடித்தது
எப்படியெல்லாம் யோசிக்கிறாயங்கப்பா..  டி.என்.டி என்கிற அமெரிக்க சேனல் ஒன்று பெல்ஜியத்தில் லாஞ்ச் செய்ய செய்த விளம்பர யுக்தியிது. அட்டகாஷ்.. அட்டகாஷ்
@@@@@@@@@@@@@@@@
தொட்டால் தொடரும்
படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் என்று முடிவெடுத்த மாத்திரத்தில் இந்த பாடல் இரண்டாம் பாதியில் முக்கியமான கட்டத்தில் வருகிறது. ஒர் ட்ராவலுக்கு நடுவே நடக்கும் சிற்சில விஷயங்களோடு. எனவே பாடலில் காதலும், வேகமும் தேவையாய் இருந்தது. நிச்சயம் ஒர் ரேஸியான பாடலாகவும், அதே சமயம் ஒர் நல்ல மெலடியாகவும் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து இசையமைப்பாளர் பி.சி.ஷிவன் நான்கைந்து ட்யூன்களைப் போட, அதிலிருந்து இந்த ட்யூனை செலக்ட் செய்தேன். கொஞ்சம் உச்சஸ்தாயில் பாட வேண்டிய பாடல். குட்டிப்புலி படத்தில் வரும் அருவாக்காரன் பாடலைப் பாடிய பத்மலாதாவின் குரலை கேட்டதிலிருந்து அவர் பாடினால் நன்றாக வரும் என்ற எண்ணம் எனக்கு இருந்து கொண்டேயிருக்க, அதே எண்ணத்தை இசையமைப்பாளரும் தெரிவித்தார். அதே போல சூப்பர் சிங்கரில் டாப் 20 வரை வந்த கணேஷ் வெங்கட்ராமன் பாடிய சில ஹைபிட்ஸ் பாடல்களை கேட்டு அவரை பாட வைக்கலாம் என்று முடிவு செய்தோம். கணேஷ் பாடும் போது நான் ரிக்கார்டிங்கில் இருந்தேன். அபாரமான சாரீரம். நா. முத்துகுமாரின் விறு விறு வரிகளில் சிறப்பாய் அமைந்த பாடல், கேட்ட மாத்திரத்தில் சில பேருக்கு பிடிக்கும், சில பேருக்கு கேட்க கேட்க பிடிக்கும் உங்களுக்கு எப்படி என்கிற கருத்துக்காக..
@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
  • இங்கிலீஷ் படத்துல காட்டுறத நம்பி எல்லாரும் மழையில, போன், லேப்டாப், கேமரா எல்லாம் யூஸ் பண்ணா புஸ்வாணம்தான் சொல்லிட்டேன்.
    • ஆயிரம் சிஜி வந்தாலும் twister படத்தோட குவாலிட்டி In to the Stormல இல்ல..:
      • Scenu.. Scenu.. intresting all the best @gauravnarayanan @Dhananjayang @immancomposer

        • தமிழக பெண்கள் ஒரு விதமான மஸோகிஸ நிலையில் இருப்பது உறுதியாகிறது சன் டிவி சக்தி சீரியலை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதன் மூலம்#Feelingbad

        • ராஜாவோட வேலை வேலை சொல்றது.. வேலை செய்யுறது இல்லை. - இந்த சதுரங்க வேட்டை வசனம் புரிஞ்சவங்க பிஸ்தா..

          • கேன்சர் பேஷண்ட் ரெண்டு பேர் லவ் தான் @Faultinourstarsபடத்தோட கதையாம். நம்ம மணி சாரோட கதை சுட்டுட்டாய்ங்க. இதை கேக்க ஆருமேயில்லையா.. அவ்வ்
      • @@@@@@@@@@@@@@@@@@@@@@@
      • சண்டியர்
      • இணையமெங்கும் ஜிகர்தண்டா பற்றிக் கொண்டு எறிய, சரபம், சரசமாய் இருக்க, அதே நாளில் வெளியான சண்டியர் எனும் படம் பற்றி யாரும் பேசியதாய் தெரியவில்லை. ஒரிரு பத்திரிக்கையாளர்களைத் தவிர. கமலஹாசன் சண்டியர் என்று பெயர் வைத்தால் ஏதோ தங்கள் மானமே போய்விட்டதாய் களேபரம் செய்த கிருஷ்ணசாமி போன்றோர்கள் கவனத்திற்கு கூட இப்படம் போகாதது வருத்தமாய் தான் இருக்கிறது. அட்லீஸ்ட் அவர்கள் கவனத்திற்கு போய் சலசலப்பு ஏற்பட்டிருந்தால் கூட கொஞ்சமாவது கவனம் பெற்றிருக்கும் என்றே தோன்றுகிறது. தமிழ்நாட்டில் அரசியல் எப்படி மக்களிடம் ஊடுருவி மலிந்து கிடக்கிறது என்பதை சொல்லும் படம். முற்றிலும் புதியவர்கள். அதிலும் பெரிசுகளாய் நடித்தவர்களில் வில்லனின் அப்பாவாக வருபவரின் நடிப்பும், பாடி லேங்குவேஜும். சூப்பர். தஞ்சை மாவட்ட வட்டார வழக்கு அப்படியே கொண்டு வந்திருக்கிறார்கள். படம் ஆரம்பித்த போது கொஞ்சம் ஊர் பாசத்தில் புகழ் பாட்டு பாடினாலும், அதற்கு பிறகு லவ் சீனில் கூட அவ்வளவாய் இம்சிக்கவில்லை. சீராக கதை சொன்ன பாணி, சுவாரஸ்யமான இண்டர்வெல் ப்ளாக். இடைவேளைக்கு பிறகு வரும் மிக இயல்பான கேரக்டர் மாற்றங்கள், சூது, துரோகம், பணம், கொலை என தெரிந்த விஷயங்கள் தான் என்றாலும், அதனை தெளிவாய் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் கவனத்துடன் திரைக்கதையும், காஸ்டிங்கும், பார்க்கும் படியான டிசைன்களோடும், சொல்கிறபடியான ப்ரோமோஷன்களும் கொடுத்திருந்தால் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தாவிட்டாலும், இருக்கிற இடத்திலாவது இன்னும் ஸ்ட்ராங்காக வைத்திருக்கும் இந்த சண்டியர். சும்மா ஒரு ட்ரை பண்ணுங்க.. வாழ்த்துக்கள் இயக்குனர் சோழதேவன்
      • @@@@@@@@@@@@@@@
      • அடல்ட் கார்னர்
      • A typical macho man married a typical good looking lady, and after the wedding, he laid down the following rules. "I'll be home when I want, if I want, what time I want, and I don't expect any hassle from you. I expect a great dinner to be on the table, unless I tell you that I won't be home for dinner. I'll go hunting, fishing, boozing, and card playing when I want with my old buddies, and don't you give me a hard time about it. Those are my rules. Any comments?" His new bride said, "No, that's fine with me. Just understand that there will be sex here at seven o'clock every night, whether you're here or not."
      • கேபிள் சங்கர்

Post a Comment

4 comments:

Thulasidharan V Thillaiakathu said...

மிக்க நன்றி கேபிள் சங்கர் சார், பரோட்டா கார்த்திக் குறும்பட விழாவிற்கு வந்து கலந்து கொண்டதற்கு! மாணவர்களுக்கு விஷுவல் மூலம், ஆங்கிலத்தில் interactive session நடத்துவதற்காக இதுவரை இதற்கு முன் எடுக்கப்பட்ட 3 படங்களும் ஆங்கிலத்தில் மட்டுமே எடுத்துத் (with eng, mal, tam subtitle) தொடங்கி, இந்த முறைதான் அதை மலையாளத்திலும், தமிழிலும் என்று எடுக்கப்பட்டாலும் தமிழ் டப்பிங்க் மாணவர்களின் பகுதி சரியாக வரவில்லை. அடுத்த முறை இப்படி இரு மொழிகளில் எடுக்கும் ஓது இன்னும் பல விஷயங்களில் மாணவர்களும், ஆசிரியர்கள் நாங்களும் கலந்து அதில் பங்கு பெற்று எடுக்கப்படுவது. அடுத்த முறை தமிழில் எடுக்கும்போது இன்னும் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று அறிந்து கொண்டோம். திரு கே.ஆர்.பி அவர்களின் விமர்சனமும் தெரிந்து கொண்டோம்.

என்னால் விழாவிற்கு வர இயலாமல் போய்விட்டது. என் தோழி கீதா அவர்கள் (நாங்கள் இருவரும் சேர்ந்துதான் எங்கள் தளத்தில் எழுதுகின்றோம்) அதை அங்கு பதிவர் நண்பர்கள் உதவியுடன் நடத்தினார். உங்கள் வருகை எதிர்பாராத இன்ப அதிர்ச்சி + மகிழ்ச்சி! மிக்க நன்றி சார்!

டி,என்.டி கிளம்பரம் நோ சான்ஸ்...சூப்பர்...

தொட்டால் தொடரும் பாடல்கள் நல்லாருக்கு சார்.....படத்தை விரைவில் எதிர்பார்க்கின்றோம்...வாழ்த்துக்கள் சார்!

அமர பாரதி said...

Congratulations and I wish you all the best for your movie CableJi.

'பரிவை' சே.குமார் said...

கொத்துப் பரோட்டா சுவையாய்...

thekkadu mangutty said...

anne romba naalai oru cinema vimarsam kooda illaye ellam munjakkirathai thaana?