Titanic - Movie Review | Kalaiyarasan, Kaali Venkat | Nivas Prasanna - Cable Sankar Review
2016-17ல இந்தப் படத்தைப் பற்றிய ஒரு சின்ன news படித்த மாதிரி ஞாபகம் இருக்கு. இந்தப் படத்தோட logo கூட நல்லா ஞாபகம் இருக்கு. அந்த நேரத்தில் இறுதிச்சுற்று படத்தில் வேலை செய்த Director-ஐ Assistant Director-ஆக இருந்து இந்தப் படத்தின் மூலம் Director-ஆக அறிமுகப்படுத்துகிறார்கள் என்ற மாதிரியான news எல்லாம் வந்திருந்தது. அதே வருடமே இந்தப் படத்தோட shooting start ஆனதா என்று தெரியவில்லை. அதற்கடுத்த வருடம் அல்லது 2018-ல் shooting start ஆகியிருக்கலாம். ஆனால் இந்தப் படத்துக்கான Censor Certificate 2021-ல் வாங்கியிருக்கிறார்கள் என்று CBFC website-ல் information இருக்கிறது. ஆனால் அதற்குப் பிறகும் படம் release ஆகாமல், 2026 நவம்பர் மாதம்தான் release ஆகிறது. இந்தப் படம் எப்படி இருந்தது என்பதைப் பார்ப்போம். Titanic படத்தில் காளி வெங்கட், கலையரசன், ராகவ் விஜய் ஆகிய மூன்று பேரும் ஒரு train journey-ல் meet பண்றாங்க. மூன்று பேரும் Bengaluru போயிட்டு இருக்காங்க. எதிர்பாராத விதமாக மூன்று பேரும் friendly-ஆக பேச ஆரம்பிக்கிறாங்க. கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு வளர வளர, ஒவ்வொருத்தரும் அவர்களுடைய love stories-ஐ ஒருவருக்கொருவர் share பண்றாங்க. கலையரசனுக்கு college time-ல் ஒரு love இருந்திருக்கு. காளி வெங்கட்டுக்கு school time-ல் ஒரு love இருந்திருக்கு. ராகவுக்கு அவர் வேலை பார்க்கும் IT office-ல் ஒரு love இருந்திருக்கு. இந்த மூன்று காதல் கதைகளையும் இவர்கள் share பண்றாங்க. இவர்கள் இப்படி மாறி மாறி தங்களுடைய கதைகளைப் பகிர்ந்து கொள்வதனால் என்ன நடந்தது என்பதுதான் இந்தப் படத்தின் கதை. இந்தப் படத்தோட முக்கியமான முதல் highlight என்னவென்றால், கலையரசன் character-ஐ கடைசி வரைக்கும் உயிரோடு வைத்திருக்கிறார்கள் என்பதுதான்.
அடுத்த plus point நிவாஸ் கே பிரசன்னாவுடைய music. ஒரு இடத்தில் சாய்ராட் படத்தோட music-ஐ அப்படியே கொண்டு வந்து romantic songs எல்லாம் போட்டு try பண்ணியிருந்தாலும், overall-ஆ இந்தப் படத்தோட music மற்றும் songs கேட்க நன்றாகத்தான் இருந்தது. அதற்குப் பிறகு, வேதாளம் முருங்கை மரம் ஏறுவது மாதிரியான ஒரு சின்ன idea-வை cartoon வைத்து try பண்ணியிருக்கிறார்கள். அந்த idea level-ல் நல்லாவே இருந்தது. அதை இன்னும் கொஞ்சம் proper-ஆக flesh out பண்ணியிருக்கலாம். ஆனால் இதைத் தாண்டி, Titanic படம் என்பது முழுமையடையாத ஒரு படம் மாதிரியே இருந்தது. அதுதான் இந்தப் படத்தோட முக்கியமான பிரச்சனை. ஏற்கனவே இருந்த footage-ஐ ஏதோ ஒரு மாதிரி compile பண்ணி, coherent-ஆக edit செய்து release பண்றாங்க என்ற மாதிரிதான் தோன்றியது. Train-ல் இவர்கள் பேசுவது, அங்கிருந்து ஒரு flashback, flashback-ல் ஏதோ comedy try பண்றாங்க, அதன்பிறகு ஒரு song என்று இந்த format-ல்தான் initial portions எல்லாம் progress ஆகுது. படத்தோட tone-மே ரொம்ப random-ஆவும் inconsistent-ஆவும் இருந்தது. திடீரென்று comedy-ஆக பேசிட்டு இருக்காங்க. அடுத்த நிமிஷமே serious-ஆக feel பண்ண வைக்கும் dialogues பேசிட்டு இருக்காங்க. திடீரென்று கலையரசன் character feel பண்ணி ஏதோ சொல்கிறார். “அவளுக்காக நான் காத்துட்டு இருக்கேன்” என்கிறார். ஆனால் flashback-ல் அதற்கு completely contradictory-ஆன பல விஷயங்களைச் செய்திருக்கிறார்கள். அதனால் இந்தப் படத்தின் கதை என்ன சொல்ல வருகிறது என்பதைப் புரிந்துகொள்வதே மிகவும் கஷ்டமாக இருந்தது. அடுத்ததாக, இப்படியான ஒரு romantic comedy-ல் சொல்லப்படும் விஷயங்கள் சுவாரசியமாக இருக்க வேண்டும் அல்லது funny-ஆக இருக்க வேண்டும். இரண்டுமே இருந்தால் இன்னும் பெரிய விஷயம். ஆனால் இவர்கள் சொல்லும் விஷயங்கள் சுவாரசியமாகவும் இல்லை, funny-ஆகவும் இல்லை, புதுசாகவும் இல்லை. Maybe இந்தப் படத்தை ஆரம்பித்த காலத்தில் இவை fresh-ஆன ideas-ஆக இருந்திருக்கலாம்.
ஆனால் பல வருடங்களாக நம்முடைய தமிழ் சினிமாவிலேயே இதே மாதிரியான concepts-ஐ வேறு வேறு characters மற்றும் situations வைத்து நிறைய படங்களில் காட்டி, இதைவிட அதிகமாக சிரிக்க வைத்திருக்கிறார்கள். அதனால் இதிலும் அதே மாதிரியான விஷயங்களைப் பார்க்கும்போது அது மிகவும் tiring-ஆக இருந்தது. Romantic portions போய்க்கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு சின்ன இடத்தில் adult comedy வேறு கொண்டு வருகிறார்கள். சம்பந்தமே இல்லாமல் இங்கே ஏன் ஒரு adult comedy try பண்றாங்க என்று தோன்றியது. அதன்பிறகு அந்த scene ஒரு kuthu song-க்கு lead ஆக வருகிறது. அந்தப் பாடலை STR பாடியிருக்கிறார். அதற்கும் இதற்கும் ஏதாவது connection இருக்குமா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. இந்தப் படத்தைப் பார்க்கும்போது முக்கியமாக ஒரு விஷயம் தோன்றியது. இந்தப் படத்தை எதற்காக theatres-ல் release பண்ணினார்கள் என்பதுதான். இப்படியான முழுமையடையாத ஒரு படத்தை YouTube-ல் கூட release பண்ணியிருக்கலாம். விருப்பம் இருக்கிறவர்கள் பார்த்திருப்பார்கள் அல்லது அது ஒரு pay-per-view மாதிரியாக கூட மாற்றப்பட்டிருக்கலாம். விருப்பம் இருக்கிறவர்கள் தேடிப் பார்த்திருப்பார்கள். ஆனால் இது ஒரு complete-ஆன theatrical film என்ற மாதிரி release செய்வதற்கான காரணம் என்ன என்பதுதான் புரியவில்லை. காளி வெங்கட், கலையரசன், ஆனந்தி ஆகியோர் decent-ஆன performance கொடுத்திருக்கிறார்கள். Actually, சேதன் இந்தப் படத்தில் ஒரு சின்ன role-ல் வருகிறார். இப்போது character artist-ஆக அவருடைய growth வேற level-ல் இருக்கிறது. அதனால் அவரை இந்த மாதிரியான ஒரு சின்ன role-ல் பார்ப்பது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. குறிப்பாக காளி வெங்கட்டுடைய performance genuinely நல்லா இருந்தது. அதிலும் முக்கியமாக climax-ல் மேடை ஏறி அவர் ஒரு விஷயத்தை feel பண்ணும் scene இருக்கிறது.
அந்த emotion-ஐ இன்னும் proper-ஆக articulate பண்ணியிருக்கலாம். இருந்தாலும் அந்த scene-ல் காளி வெங்கட்டுடைய performance நன்றாக இருந்தது. இந்தப் படத்தை மிகவும் harsh-ஆக roast பண்ணவோ அல்லது கடுமையாக விமர்சனம் பண்ணவோ எனக்கு தோன்றவில்லை. “சரி, இப்படி ஒரு படம் வந்திருக்கிறது; இதில் இதெல்லாம் இருக்கிறது. இதை முதலில் ஒரு information-ஆக சொல்லுவோம், அவ்வளவுதான்” என்ற மாதிரியான ஒரு feelingதான் இந்தப் படத்தைப் பார்க்கும்போது இருந்தது. மொத்தத்தில், இதுதான் Titanic – காதலும் கவுந்து போகும். படத்தோட Censor Certificate-ஐ படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் பார்க்க நான் miss பண்ணிட்டேன். BookMyShow-ல் View Certificate என்று போட்டிருக்கிறார்கள். அது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. என்னுடைய பார்வையில் இந்தப் படத்துக்கு U/A 16+ rating சரியாக இருந்திருக்கும்.




Comments