Posts

மாயாண்டி குடும்பத்தார் - திரைவிமர்சனம்

Image
தமிழ் சினிமாவில் திடீர்ரென்று ஏதாவது அதிரடியாய் செய்வார்கள். அப்படி இந்த படத்தில் பத்து இயக்குனர்களை நடிக்க வைத்டிருக்கிறார்கள். அதை தவிர ஏதும் புதுமையா எதுவுமில்லை என்றுதான் சொல்லவேண்டும். இப்படத்தில் நடித்த ஒரு சில இயக்குனர்கள் இயக்கத்தை விட்டு நடிப்பதையே தொழிலாய் கொண்டு ரொம்ப நாளாகிவிட்டவர்கள். மாயாண்டியான மணிவண்ணனின் குடும்பத்தில் பொன்வண்ணன், சீமான், ஜெகன்நாத்,  கடைகுட்டி தருண்கோபி, அக்கா, அக்கா கணவராய் ராஜ்கபூர், இன்னொரு பக்கம், மணிவண்ணனின் அண்ணனான ஜி.எம்.குமார், அவரது நான்கு மகன்கள், ரவிமரியா, நந்தா பெரியசாமி, சிங்கம்புலி. இருவர் குடும்பத்திற்கும், சொத்து தகராறு அதனால் பகை. ஆனால் இதுதான் கதை என்று நினைதால் அதுதான் இல்லை. மாயாண்டி இறந்ததும் கடைகுட்டி தருண் கோபியை எல்லோரும் கைகழுவி விடுவதும், சொத்துக்களை பிரித்து கொண்டு வாழ்வதும்,  பின்னால் குடும்பத்துக்காக, எல்லா வலிகளையும் தாங்கிக் கொண்டு, எல்லாரையும் சேர்ப்பதும், இதற்கு நடுவில் தருணின் காதல், படிப்பு என்று ஒரு ட்ராக். போய் இரண்டு குடும்பமும் ஒன்றாய் சேர்கிறதா..? என்று ஒரு டிராக் கதை ஓடுகிறது. நடிப்பதில் இயக்குன...

Prayanam - Telugu Film Review

Image
202 பாலோயர்களுக்கும், மேலும் தொடர்பவர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. ரெண்டு மணி நேரத்தில் ஒரு பெண்ணை காதலிக்க முடியுமா..? முடியும் என்று ஒருவன் முயற்சி செய்கிறான். அந்த பெண் அவனை காதலித்தாளா..? இல்லையா..? என்பதுதான் கதை. அருமையான நாட். முடிந்தவரை இயல்பான திரைக்கதையில் சொல்ல முயற்சித்திருக்கிறார் அய்தே, அனகோகுண்டா ஒக்க ரோஜூ, ஒக்கடுண்ணாடு இயக்குனர் சந்திர சேகர யேலெண்டி. துருவ் உலக சுற்றுலாவுக்காக மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல மலேசிய ஏர்போர்ட்டில் அவன் நண்பர்களுடன் வருகிறான். அதே ஏர்போர்ட்டில் ஹரிகா ம்லேசியாவில் படித்த தெலுகு பெண் தனக்கு மாப்பிள்ளை பார்க்க, தன் தோழியுடன் இந்தியாவுக்கு செல்கிறார். துருவுக்கு ஹரிகாவை பார்த்தவுடன் காதல் பற்றி கொள்ள, அவர்களுக்குள் இரண்டு மணி நேர இடைவெளியே உள்ளது. துருவ் அவளை அந்த இரண்டு மணி நேரத்தில் இம்ப்ரஸ் செய்ய படும் அவஸ்தையை அருமையாக சொல்லியிருக்கிறார்கள். துருவுடன் வரும் 7அப் மாடல் நண்பன் இரண்டு மணிநேரத்தை ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு ப்ளான் சொல்லி ஷெடியூல் போட்டு கொடுப்பதாகட்டும், ஹரிகாவின் தோழியிடம் அவர் பயப்பட்டு அவரிடமிருந்து தப்பிக...

நிதர்சன கதைகள் –9- மகாநதி

Image
202 பாலோயர்களுக்கும், மேலும் தொடர்பவர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. பாக்யம்மாளுக்கு அழுகை அழுகையாய் வந்தது. ஒவ்வொரு முறையும் மகாநதி படத்தை பார்க்கும் போதெல்லாம் அழுது, அழுது  தலைவலி வருவது நிச்சயம். ஆனாலும் விடாமல் பார்பாள். அதிலும் முக்கியமாய் படத்தில் வரும் சோனாகாஞ்சி காட்சிகளை பார்த்தால் அவ்வளவுதான் . கமலஹாசன் தன் பெண்ணை விபசார விடுதியில் பார்க்க, தன் தந்தையை பார்த்த மகள் தன் இரு கைகளையும் வைத்து தன்னை மறைத்து கொள்ள,  அதை பார்த்த பாக்யம்மாள்.. “அய்யோ.. தெவுடா.. தெவுடா..” என்று கண்களில் கண்ணீர் வர ஆரற்ற ஆரம்பித்தாள். படத்தில் கமலஹாசனை அங்கிருக்கும் பெண்கள் சூழ்ந்து கொண்டு அடிக்க, பூர்ணம் விஸ்வநாதன் தமிழில் அலறும் காட்சியை பார்தவுடன்..  அவளையும் அறியாமல் அந்த பெண்களை பச்சை, பச்சையாய் திட்டினாள்.  அவள் பார்த்து கொண்டிருந்த  சோனாகாஞ்சி காட்சிகளை பார்த்து. “தொங்கசச்சிநோடா..: என்று  நிஐ கோபத்துடன் திட்டிய போது வாசலில் காலிங் பெல் அடித்தது. எழுந்து போய் கதவை திறக்க, வாசலை அடைத்தபடி ஒரு திடகாத்திரன் புகைத்தபடி  நிற்க, அவன் உள்ளே வர  வழி...

விடாதுகருப்பு…

p>இந்த தொடர் பதிவு கருப்பு என்னையும் விடவில்லை.. கொஞ்ச நாளைக்கு முன் அழைத்த அத்திரி, ரெண்டு நாளைக்கு முன் அழைத்த ஹாலிவுட் பாலா, நேற்று அழைத்த அக்னிபார்வை என்று அழைப்பு வந்த வண்ணம் இருந்ததால்  இந்த விடாது கருப்பு.. 1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ? ஏதாவது வித்யாசமா பேர் வைக்கணும்னு நினைச்சுகிட்டேயிருந்தேன்  வழக்கமா என்னோட தொழிலையும் சேர்த்து கூப்பிடற நண்பர்கள் அந்த பேரே நல்லாருக்குன்னு சொல்ல அதையே வச்சிட்டேன். ஆரம்ப காலத்தில ஏதோ ஆட்டோ சங்கர் ரேஞ்சுக்கு நினைச்சுகிட்டு  நிறைய பேர் பயந்தாங்க. 2.கடைசியாக அழுதது எப்பொழுது? என்னுடய சித்தப்பாவுக்கு திடீர்னு ப்ள்ட் கேன்சர்னு தெரிஞ்சு ஒரு பதினைஞ்சு நாள்ல அவர் இறந்த அன்னைக்கு. 3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா? திரும்ப படிக்க்கும் போது புரிஞ்சாத்தானே பிடிக்கிறதுக்கு. நல்ல வேளை நான் படிக்கிற காலத்துல நம்மளை பாஸ் போட்டு விட்டுட்டாங்க.. 4).பிடித்த மதிய உணவு என்ன? நல்ல வெங்காய வத்தக்குழம்பு, உருளை ரோஸ்ட்.பொரிச்ச அரிசி அப்பளம்.  நான்வெஜ்ஜில்.. அம்மா ஹோட்டல் மீல்...

தமிழ் சினிமாவின் 30 நாட்கள்- மே 2009

Image
இந்த மாதமும், ஐபிஎல் தொடர்ந்ததால் மிக குறைவான அளவில் தான் படங்கள் வெளிவந்தன.  சென்ற மாதம் வெளியான அயன் நல்ல வசூலை அறுவடை செய்துள்ளது. பசங்க இம்மாத ஆரம்பமே ஒரு அருமையான படத்துடன் ஆரம்பித்தது.  வழக்கமான தமிழ்சினிமாவிலிருந்து வேறுபட்ட சிறுவர்களை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். பப்ளிக் ரிப்போர்ட்டும், பத்திரிக்கைகளின் பாராட்டுகள் ஏராளமாய் இருந்தாலும், பெரிய ஓப்பனிங் இல்லை. பல பி செண்டர் இடங்களில் எடுத்துவிட்டார்கள், ஆனால் ஏ செண்டர்களில் நன்றாகவே போகிற்து. மாதத்தின் கடைசி வாரங்களில் நல்ல பிக்கப் என்றும் சொல்கிறார்கள்.  இம்மாதிரியான படஙக்ள் ஒட வேண்டும். அப்போதுதான் நல்ல படஙக்ல் வரும். அது நம் ரசிகர்களிடையே தான் இருக்கிறது. நியூட்டனின் 3ஆம் விதி பாவம் ஏற்கனவே எஸ்.ஜே. சூரியா செய்த படங்களின் பாதிப்பால், இப்படத்திற்க்கு எதிர்வினை ஆகிவிட்டது என்றும் சொல்லவேண்டும். நல்ல பரபர்ப்பான திரைக்கதையிருந்தும் பெரிதாக போகவில்லை. அதற்கு முக்கிய காரணம் படத்தின் க்ளைமாக்ஸும், லவ் ட்ராக்தான் என்று சொல்கிறார்கள். மெய்பொருள் இப்படம் போன மாதம் ரிலீஸ் ஆகி தொலைத்துவிட்டதா...

தோரணை - திரைவிமர்சனம்

Image
அந்த கால இந்தி பட ஸ்டைலில் சின்ன வயசில ஓடி போன அண்ணனை தேடி வரும் தம்பியின் கதை.  1970களில் வந்த படத்தையெல்லாம் தூசி தட்டி, மீண்டும் எடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே சத்யமில் பட்டும் விஷால் திருந்தவில்லை. ஊருக்குள்ளே இரண்டு ரவுடிகள், ஆளுக்கொரு பாதியாய் சென்னையை பிரித்து கொண்டு அட்டூழியம் செய்கிறார்கள். வழக்கம் போல் விஷால் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் இறங்கும் போது ஒரு கொலையை பார்க்கிறார். அதற்கு சாட்சி சொல்வதாய் சொல்கிறார். இதற்கிடையில் பத்து வயசில் வீட்டை விட்டு ஓடி போன அண்ண்னின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை வைத்து கொண்டு, நண்பன் சந்தானத்துடன் தேடுகிறார். காமெடி பண்ணுகிறேன் என்று நம்மை நெளிய வைக்கிறார். ஒரு நாள் அண்ணனை கண்டுபிடிக்கிறார். அவர் அண்ணனிடம் தான் தான் அவரது தம்பி என்று சொன்னாரா..? அண்ணனை தன் தாயிடம் சேர்க்க  அவர் செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற்றாரா..? என்பது தான் கதை. ரெண்டு ரவுடிகளில் ஒருவர் பிரகாஷ்ராஜ், இன்னொருவர் கிஷோர். இருவருக்குமே மிக ஈஸியான ரோல். பிரகாஷ்ராஜ் படத்தில் அதிக இடத்தில், ‘எட்ரா.. வண்டிய..” “அவனை போட்டு தள்ளுங்கடா” என்கிற வசனங்களிஅ தவி...

உலக சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள் -1

Image
அகிரா குரஸேவா .. இந்த பெயரை கேட்டால் உலகில் உள்ள எல்லா இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும், சினிமா நேசர்களும் எழுந்து ஒரு சலாம் வைப்பார்கள். இன்றளவும் இவரின் படஙகள் உலகின் சிறந்த படஙக்ளாய் மெச்சப்பட்டு வருவதே இவரின் திறமைக்கு ஒரு சாட்சி.. 1910ஆம் ஆண்டு மார்ச் மாதம்23 ஆம் நாள் எட்டாவது குழந்தையாய் பிறந்தவர் அகிரா. அகிராவின் தந்தை இஸாமாகுரஸேவா ஜப்பானிய மிலிட்டரியால் நடத்தப்பட்ட ஒரு பள்ளிகூடத்தின் இயக்குனராக இருந்தார். அவரது குடும்பம் ஒரு அபவ் ஆவரேஜ் குடும்பமாய்தான் இருந்தது. சிறு வயதிலிருந்தே படம் வரைவதில் மிகவும் ஆர்வம் உள்ளவராய் இருந்தார் அகிரா.. 1936ஆம் ஆண்டு  ஜப்பானின் ஒரு PCL  என்கிறா ஸ்டூடியோவில் இயக்குனர் கஜிரோ ஐயமமோட்டோ என்கிறவரிடம் அஸிஸ்டெண்ட் டைரக்டராக வேலைக்கு சேர்ந்தார். சுமார் ஏழு வருடங்கள் கழித்து 1943ல் அவரது முதல்  படமான Shanshiro Sugata  படம் வெளியானது. அதற்கு பிறகு அவர் இயக்கிய படங்கள் எல்லாமே ஜப்பானிய போர்காலங்களில் வெளியானதால், கிட்டத்தட்ட ஜப்பானிய அரசின் பெருமைகளை விள்க்கும் படங்களாகவே இருந்தது. The Most Beautiful People  என்கிற ஒரு படம் ...

விகடனில் இந்த வாரம்மும்…

இந்த வாரமும் விகடனில் நம் சக பதிவரின் ஒரு பக்க கதை ஒன்று வெளிவந்திருக்கிறது. சில மாதங்களாய் ஆணி புடுங்கும் வேளையில் மாட்டிக் கொண்டிருப்பதினால், பதிவு ஆணி புடுங்க முடியாததாலும், பதிவுலகில் சிறுகதைகள் எழுதி பிரபலமானவர்,  பிரியாணி பிரியரான இவரின் சயின்ஸ் பிக்‌ஷன் கதை வெளீயாகியிருக்கிறது. இப்போது புரிந்திருக்குமே அவர் யார் என்று ஆம் அவர் நமது வெண்பூதான். வாழ்த்துகள் வெண்பூ..

ஆட தெரியாத ஆட்டக்காரி..

Image
ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும் ஜெயலலிதா மட்டும் லூசுத்தனமாய் ஒரு அறிக்கை விடுவார். மின்ண்ணு ஓட்டு இயந்திரங்களை பயன் படுத்த கூடாது என்று. ஒவ்வொரு முறை ஓட்டு போட்டுவிட்டு வெளியே வரும் போதும் மிண்ணனு இயந்திரங்களில் அதிமுகவுக்கு ஓட்டு போட்டால், திமுகவுக்கு விழுகிறது என்று சொல்லிவிட்டு தான் செல்வார். அவர் அப்படி சொல்ல ஆரம்பித்த தேர்தலில் அவர் தான் வென்றார். ஆனாலும் இதை ஒரு வழக்கமாகவே சொல்லி வருகிறார். இப்போது அவரின் வழியை பின்பற்றி.. பமக தலைவர் மருத்துவரும் அவரே ஒரு புரோக்ராய் செய்த ஒரு மினியேச்சர் மின்ணனு இயந்திரத்தை வைத்து டெமோ காட்டியிருக்கிறார். அப்படி புலம்பும் லிஸ்டில் லேட்டஸ்டாய் ஒருவர் சேர்ந்திருக்கிறார். நம்ம விஜயகாந்த். வருகிற இடைதேர்தலில் மிண்ணனு இயந்திரங்களை பயன் படுத்த கூடாது  என்று கோர்ட்டை நாடியிருக்கிறார். எனக்கு தெரிந்து தமிழ்நாட்டில் இவர்களை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இம்மாதிரியான அறிக்கைகள் வெளிவந்திருக்கிறதாக தெரியவில்லை. அப்படி ஒவ்வொரு ஆளும்கட்சியும் எளிதாய் ப்ரோக்ராம் செய்து வெற்றி பெற முடியுமானால், எதற்காக இப்படி இழுபறி அரசாகவோ, மைனரிட்டி அரசாகவோ வரும...

கோவை பதிவர் சந்திப்பு

Image
திடீர்னு ஒரு டூர் ப்ரோக்ராம் போடலாமுன்னு தோணிச்சு. எங்க போகலாம்னு யோசிக்க ஆரம்பிச்ச போது, மூணாறு, டாப்ஸ்லிப்ன்னு ஒரே குழப்படியா இருந்துச்சு. சரி எதுக்கும் கோவைக்கு டிக்கெட் புக் பண்ணுவோம். அங்கேர்ந்து எங்க வேணும்னாலும் போய்கலாம்னு முடிவு பண்ணி கிளம்பிட்டேன். சம்மர் ஸ்பெஷ்லா ஒரு ரயிலை விட்டிருந்தார்கள். காலை ஒன்பது மணிக்கு கிளம்பி நாலு மணிக்கு கோவையிலிருக்கும்னு சொன்னாங்க. அந்த பாடாவதி ட்ரையின் அரை கிலோமீட்டர் தூரத்தில ஒரு காக்கா கிராஸ் பண்ணாகூட வெயிட்டிங்கில போட்டு சுமார் ஏழு மணிக்கு கொண்டு போய் சேர்த்தான். சாயங்காலம் சீக்கிரம் போனவுடன் வெளியே சில பேரை சந்திக்கலாம்னு வச்சிருந்த ப்ரோக்ராம் கட்.   கோவைக்கு போய் ரூமை போட்டதும் பரிசலுக்கு ஒரு போனை போட்டேன். கோவை பதிவர்கள் யாரையாச்சும் சந்திக்கணுமேன்னே..? கவலையே படாதீங்க ஒவ்வொருத்தரா உங்களுக்கு கால் பண்ண வைக்கிறேன்னு சொல்லிட்டு தான் ஞாயித்து கிழமை திருப்பூரிலிருந்து வந்து சந்திப்பதாய் சொன்னார். நான் கொஞ்சம் ரிப்ரஷாகி வெளியே போய் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வருவதற்குள் ஒரு கால் வந்தது. “ஹலோ.. கேபிள்சங்கரா.. நான் வடகரை வேலன் பேசறே...