தமிழ் சினிமாவின் 30 நாட்கள் - ஜூன்09
சென்ற மாத கடைசியில் வெளியான தோரணை யோட ரிசல்ட் ஒண்ணும் சொல்லிக்கும்படியா இல்லை. ஐ.பி.எல்., டி20 கப், எல்லாம் முடிஞ்சி காலேஜ், ஸ்கூல் எல்லாம் திற்ந்திருச்சு. சரி இந்த மாச வந்த படஙக்ளை பத்தி பார்ப்போம் மாயாண்டி குடும்பத்தார். பத்து இயக்குனர்கள் படத்தில் நடித்தது படத்துக்கு ஒரு நல்ல பப்ளிசிட்டியை கொடுத்தது என்றே சொல்ல வேண்டும். வெகு சுமாரான ஓப்பனிங்.. பல இடங்களில் டப்பு.. டுப்புன்னு விழுந்திருச்சு, தட்டு தடுமாறி எழுந்து நிக்க முயற்சி செய்யுது மாயாண்டி குடும்பம். கோவையில் மட்டுமே சுமார் 20 லட்சம் லாஸ் வரும்னு சொல்றாஙக். பாப்போம் குளிர் 100 மாயாஜால் ஓனர் பொண்ணு அனிதா உதிப் இயக்கி வெளிவந்த படம். படத்தோட பாடல்கள் இளைஞர்களை உள்ளே இழுத்தது என்னவோ உண்மைதான். அதுவும் மல்ட்டி ப்ளக்கில் மட்டுமே கும்பல் இருந்தது. ஆனால் அந்த ஆடியன்ஸ் எதிர்பார்ப்பையும் திருப்ப்தி செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். மாசிலாமணி வழக்கம் போல் சன் டிவியின் மூளை மழுக்கும் விளம்பரத்தினால் பெரிய ஓப்பனிங் இல்லையென்றாலும், திரும்ப, திரும்ப வரும் விளம்பரத்தினால் சொற்ப கூட்டம...