கொத்து பரோட்டா-10/1/11 புத்தக கண்காட்சி ஸ்பெஷல்.
நாலாம் தேதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட புத்தக கண்காட்சியில் நேற்று முன் தினம் முதல்தான் களை கட்ட தொடங்கியிருக்கிறது. ஆனால் ஆரம்பித்த நாள் முதல் "ஜே ஜே"வென கூட்டமிருந்த ஒரு சில கடைகளில் கிழக்கும் ஒன்று. எங்கெங்கு காணினும் சுஜாதா. தலைவன் இறந்தும் எழுத்துலக சூப்பர் ஸ்டார்தான். பெரிய பெரிய இலக்கியவாதிகளின் புத்தகமெல்லாம் 500 காப்பிக்கு போராடும் வேலையில் தலைவன் புத்தகம் ரீபிரிண்டிற்கு ஆர்டர் கொடுத்துக் கொண்டிருப்பது சுஜாதாவின் எழுத்துக்கு கிடைக்கும் மரியாதை. உயிர்மை இம்முறையும் பெரிய பேனர் வைத்திருக்கிறது. சுஜாதாவின் சிறந்த 50 நூல்கள் கிடைக்கும் என்று. மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களின் விளம்பரத்தை விட பத்து மடங்கு பெரியது. நிஜத்தில் அவரது இடத்தைப் பிடிக்க நிறைய தூரமிருந்தாலும் ஜெ.மோவிற்கும்,சாருவுக்கும் அடுத்த சுஜாதா யார்? என்று ஒரு போட்டி வந்திருக்கிறது போலும். இலக்கியவாதிகள் எட்டாத வியாபாரத்தை இறந்து பின்னால் இலக்கியவாதி என்று ஒத்துக்கொள்ளப்பட்ட தலைவன் வியாபாரத்திலே தெரிகிறது. அதே போல் ஜெமோவின் உலோகம் நன்றாக போவதாய் சொன்னார்கள். என் சினிமா வியாபாரம் கிழக்கில் நேற்று வித்து போ...