ஆதி+பரிசல்+யுடான்ஸ் பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்கள், இயக்குனர்கள் பத்ரி, நவீன், சிபி ஆகியோர் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்தார்கள். பத்ரி பதிவர்களிடையே இருக்கும் திறமைகளை கண்டு ரசிப்பதாகவும், அவர்களது திறமைகளுக்கு இன்றைய சினிமா, மற்றும் சீரியல் உலகில் வாய்ப்பிருக்கிறது என்றார். நவீன் தானும் ஒரு எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுவதாகவும், தன்னுடய அடுத்த படத்தில் பதிவுலகில் உள்ள ஆறு கவிஞர்களை பாடலாசிரியராக உயர்த்தப் போவதாய் அறிவித்தார். ரமேஷ்வைத்யா இன்னும் கொஞ்சம் பேச மாட்டாரா என்ற அளவிற்கு சிற்றுரை ஆற்றினார். அண்ணன் சிறுகதைகளைப் பற்றிய விமர்சனஙக்ளை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாய் நச்சென அளித்தார். நிகழ்ச்சியை தொகுத்தளித்த கார்க்கிக்கு இது முதல் மேடை. அந்தவகையில் சிறப்பாகவே செய்தார். முதல் பரிசு பெற்ற ஆர்.வி.எஸ் தான் மைக் நெளிய பேசியதாய் அவரே தன் பேஸ்புக் பக்கத்தில் சொல்லியிருக்கிறார். நன்றி சொன்ன பரிசல், ஆதி, ஆகியோரும் தங்கள் பங்குக்கு மாற்றி, மாற்றி நன்றி தெரிவித்தார்கள். பரிசல் தன் புத்தகத்தைப் பற்றி பேசிய சில விஷயங்களை திருத்த வந்து பேசினார் க...