Posts

மரியா கேண்ட்டீன்

Image
மரியா கேண்ட்டீன் பத்திரிக்கையாளர் சி.முருகேஷ்பாபு எழுதி வெளிவரும் முதல் சிறுகதை தொகுப்பு. முன்னாள் விகடன் க்ரூப். ஒரு வருடத்திற்கு முன்னால் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் வேலைப் பார்க்கும் இணைய இதழுக்காக தொடர் கட்டுரை எழுதக் கேட்டிருந்தார். அந்நேர வேலை பளு காரணமாய் எழுத முடியவில்லை. அதன் பிறகு பல முறை தொலைபேசியிலேயே பேசிக் கொண்டிருந்தோம். கிருஷ்ணவேணி பஞ்சாலை திரைப்பட மார்கெட்டிங் நிகழ்வில்தான் அவரை நேரில் சந்தித்தேன். படு சுவாரஸ்யமான மனிதர். நான் எழுதும் எல்லா பதிவுகளையும் படித்துவிட்டு பின்னூட்டமிட்டிருப்பவர் என்று அறியும் போது சந்தோஷமாயிருந்தது. அவரின் இந்தத் தொகுப்பு பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் புத்தகங்களை மட்டுமே வெளியிடும் பட்டாம்பூச்சி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. புத்தகக் கண்காட்சியில் வெளியான அன்றே வாங்கி விட்டேன்.

கொத்து பரோட்டா -30/01/11

Image
நாயகர்களுக்கு இணையாய் இயக்குனரின் சம்பளமும் வர வேண்டும் என்று ஆசைப்படுவது சரிதான்.ஆனால் அதை எந்த நேரத்தில் எப்போது சொல்ல வேண்டுமென்று கூடவா தெரியாது?. வர வர அமீரின் காமெடி தாங்கவில்லை. இயக்குனருக்கு பத்து லட்சமாம், இணை இயக்குனருக்கு நாலு லட்சமாம், துணை இயக்குனருக்கு இரண்டு லட்சமாம், உதவி இயக்குனருக்கு ஒரு லட்சமாம். அது தவிர இயக்குனருக்கு பேட்டா ஒரு நாளைக்கு ஆயிரமாம்.  இவருக்கு கிடைத்த தயாரிப்பாளர் போல எல்லாருமே ஜே.அன்பழகன் ஆகிவிட முடியுமா? அவரே கண்ணு முழி பிதுங்கிட்டு இருக்காரு.. ஜெயம் ரவியோ எப்படா படத்த முடிப்பாருன்னு ஒரு பக்கம் புலம்பிட்டிருக்காரு. இன்னொரு பக்கம் தயாரிப்பாளர் புலம்புறது தனி. மொத்தமாய் ஒரு கோடிக்குள் படமெடுக்கும் பல சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களை ஆட்டத்தை விட்டே துரத்தியடிக்க செய்த சதியாய்த்தான் தெரிகிறது. 350 ரூபாய் பேட்டாவிலிருந்து 450 கேட்டதற்கே உன்னைப் பிடி என்னைப் பிடி என்று ஆளாளுக்கு உண்ணாவிரதமும், போராட்டமுமாய் இருக்கிற நேரத்தில், இவரின் காமெடி உச்சபட்சம். தினசரி பேட்டா 100 ரூபா ஒழுங்கா கிடைக்குமா? இல்லையான்னு இருக்கிற காலத்தில.. இவரு சொல்றது எல்லாம் எவ்வள...

சாப்பாட்டுக்கடை - கோவிந்த பவன்

Image
கோவிந்த பவனா? என்று யோசிப்பவர்களுக்கு, திருவல்லிக்கேணியில் இது போல பல வித்யாசமான பெயர்கள் கொண்ட பல மெஸ்கள் உண்டு. அதில் ஒன்று இது. திருவல்லிக்கேணி ரோடில் உள்ள ரத்னா கேப்பில் திரும்பி, அதை தாண்டி வரும் முதல் இடது பக்க ரோட்டில் நுழைந்தால் இருக்கிறது இந்த கோவிந்தா பவன்.

தேனி மாவட்டம்

Image
நல்ல கருத்துள்ள, மக்களுக்கு தேவையான விஷயங்களை சொல்லக் கூடிய படங்கள் தமிழில் வருவதில்லை என்று வருத்தப்படுகிறவர்களுக்காகவே வந்திருக்கும் படம். விளை நிலங்களை கட்டிடங்கள் ஆக்காதீர்கள் என்பதை வலியுறுத்தியிருக்கும் படம். சமயங்களில் வருத்தம் நல்லது போலிருக்கிறது.

சாமியாட்டம்

Image
மூத்த பதிவரும், பத்திரிக்கையாளருமான யெஸ்.பாலபாரதியின் முதல் சிறுகதை தொகுப்பு இந்த சாமியாட்டம். இதற்கு முன்னால் இவர் அரவாணிகளைப் பற்றிய நாவல் ஒன்றையும் எழுதியிருக்கிறார். மொத்தம் பன்னிரெண்டு சிறுகதைகளை அடங்கிய இந்த தொகுப்பு 2003 –2011 வரை இவர் எழுதிய சிறுகதைகளின் மொத்தமாம்.  உட்காந்து எழுதியிருக்காரு போல. பாலபாரதியுடன் பேசி பழகியவர்களுக்கு, கதை வாசிக்கையில் அவரின் குரலில் கேட்பதை தவிர்க்க முடியாது. அவ்வளவு கம்பீரமான குரல் மனுஷனுக்கு. சிரித்தால் ப்ரம்ம ராட்ஷசன் போலச் சிரிப்பாரு. சரி.. நாம கதைகளுக்கு வருவோம். 1. கோட்டி முத்து. மனநிலை பிழன்றவனோ என்று யோசிக்க வைக்கும் கேரக்டர். இம்மாதிரியான ஆட்கள் ஊருக்கு ஒருத்தர் நிச்சயம் இருப்பார்கள். தனக்கென்று யாருமில்லாமல் ஊருக்காக நேர்ந்து விட்ட ஆளாக சுற்றியலையும் இவனைப் போன்றவர்களின் முடிவு என்னவாக இருக்குமோ அது போலவே தான் இவன் முடிவும் இருக்கிறது.

Good Night Good Morning

Image
  இரண்டு பேர் தொடர்ந்து போனில் பேசிக் கொண்டிருப்பதை மட்டுமே 73 நிமிடங்கள் காட்டினால் உங்களால் பொருந்தி உட்கார்ந்து பார்க்க முடியுமா? வெட்டியாய் அறிமுகமில்லாத ஆணும், பெண்ணும், பேசிக் கொள்வதில் என்ன பெரிய சுவாரஸ்யமிருந்து விடப் போகிறது?. இம்மாதிரியான பேச்சில் அவ்விரண்டு பேருக்குத்தான் சுவாரஸ்யமான ஸ்வீட் நத்திங்காக இருக்குமேயன்றி, மற்றவர்களுக்கு சுவாரஸ்யமாய் இருக்குமா? ஒரு நாள் இரவு போன் பேச்சில் கடலைப் போட்டு, காதல் சொல்லி, பிரிவு உண்டாகி, அந்த சிறிய பிரிவு மேலும் அவர்கள் உறவை நெருக்கமாக்க முடியுமா? சினிமா எடுப்பதற்கு பெரிய நடிகர்கள், டெக்னீஷியன்கள் தேவை என்று நம்புகிறவரா? இப்படியெல்லாம் தொடர்ந்து பல கேள்விகளை உள்ளடக்கியவரா நீங்கள் உங்களுக்கு இந்தப் படம் பதில் சொல்லும். பிரபல பத்திரிக்கையாளரும், விமர்சகருமான சுதீஷ்காமத்தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இண்டியன் ஆங்கிலப் படம். அமெரிக்காவில் இதை இண்டிபெண்டட் மூவி என்று சொல்வார்கள்.

கொத்து பரோட்டா 23/01/12

Image
லதா ரஜினிகாந்த் தலைமையில் நடக்கும் ஆஷ்ரம் ஆர்ட்ஸ் அகாடமியின் சார்பாக கலைஞர்களுக்கு ரஜினிகாந்த் பெயரில், சிவாஜியின் பெயரில், பீஷ்மர் பெயரில் எல்லாம் வாழ்நாள் விருதுகள் கொடுக்கிறார்கள். அதில் இந்த வருடம் ஷம்மிக்கபூர், ஆஷாபரேக், கே.பாலசந்தர் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதான ரஜினிகாந்த் விருதை அளித்து கெளரவித்தனர்.  இவ்விழாவில் ரஜினி பேசிய போது தன்னை கடைசியில் வந்தால் போதுமென்று சொல்லிவிட்டதால் கடைசியில் பேசுகிறேன் என்றும், தான் ஏதுவும் சாதிக்கவில்லை, என் குருநாதருக்கு என் பெயரில் விருது வழங்குவது வருத்தமாக இருப்பதாகவும், இனி பாலசந்தரின் பெயரில் விருது வழங்க வேண்டும் என்று மனைவியிடம் “கேட்டுக்” கொண்டிருப்பதாகவும் பேசினார். இவர் நினைத்திருந்தால் இந்த விழாவிலேயே பரிசுகள் அளிப்பதற்கு முன்னால் ரஜினியின் இந்தக் கருத்துக்கு மதிப்பளித்து, பாலசந்தரை வைத்தே விருதை மற்றவர்களுக்கு கொடுத்து கெளரவித்திருக்கலாம். ஆனால் கொடுக்கும் விருதை கொடுத்துவிட்டு இம்மாதிரி பேசுவதை பார்த்தால் வடிவேலுவின் ”ரொம்ப நல்லவன்” வசனம் தான் ஞாபகம் வருகிறது. ஒரு விதத்தில் ரஜினியின் நிலையைப் பார்த்தால் பாவமாய்தானி...

நான் – ஷர்மி - வைரம் -13

Image
13 நான் அஞ்சனாவுடன் வந்த ஆள் நிர்வாணமாய் நிற்பதைப் பார்த்த்தும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. இம்மாதிரியான நிகழ்வு எனக்கு புதுசு. அதுவும் மூன்றாம் ஆள் முன்னால் இவ்வளவும் நடந்திருக்கிறது என்று என்னும் போது ஒரு மாதிரி இருந்தது. அவன் முகமெல்லாம் சிரிப்பாய் என்னைப் பார்க்காமல், அஞ்சனாவை மோகத்துடன் பார்த்து, அப்படியே போய் அணைத்துக் கொண்டான். அவளது உறுப்பின் மேல் கைவைத்து “டூ ஹாட்” என்று அசிங்கமாய் சிரித்தான். அஞ்சனா அவன் கை வைத்த்தில் மீண்டும் கிளர்ச்சியடைந்திருக்க வேண்டும். அவன் உதட்டை அப்படியே உள்ளே இழுத்து முத்தமிட ஆரம்பிக்க, அந்த ஆள் அவளை முத்தமிட்டபடியே, என்னையும் அழைத்தான். நான் புரியாமல் பார்க்க, அஞ்சனா முத்தமிடுவதை நிறுத்திவிட்டு, “கமான் விவில் ஹேவ் த்ரீசம். ரொம்ப நாளைக்கு பிறகு குஜ்ஜூ டார்லிங்குக்கு மூட் வந்திருக்கிறது” என்று என்னையும் இழுத்து அணைத்துக் கொள்ள, ஒளிந்திருந்து பார்த்து சூடேற்றிக் கொள்பவன் என்று புரிந்தது. அதன் பிறகு நடந்த்தை எல்லாம் நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பது இல்லை.

சாப்பாட்டுக்கடை – காமேஸ்வரி மெஸ்

Image

சிங்கார சென்னை – நன்றி மேயர் அவர்களே..

Image