Thottal Thodarum

Jan 6, 2009

சக்சஸ் பார்முலா



எந்த ஒரு தொழில் செய்தாலும் அதில் வெற்றி பெற்று நிற்பதற்கு காரணம் அதிர்ஷ்டம் என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள். அந்த வெற்றிக்கு பின்னால் ஒரு மிக சிறிய ஒரு யோசனையும், சரியான திட்டமிடலும், சரியான தரமும்,பெரிய உழைப்பும் கண்டிப்பாய் இருக்கும்.

உதாரணமாய் நாம் எல்லோரும் விரும்பும் ஒரு உணவகத்தை எடுத்துக் கொள்வோம். அந்த உணவகத்தை பற்றி பல விஷயங்கள் விலை, தரம், அளவு பற்றி பல விமர்சனங்கள் இருக்கிறது,அது மட்டுமில்லாமல் அதன் உரிமையாளரின் தனிமனித நடவடிக்கைககலால் கெட்டு போயிருந்தாலும் இந்த நிமிடம் வரை அந்த உணவகத்தின் பெயரும், வியாபாரமும், இன்னும் கன ஜோராய் நடை பெற்று கொண்டுதானிருக்கிறது. ஏன் அந்த உணவத்தின் சுவையை யாரும் குறை சொல்லாவிட்டாலும், அவர்கள் வாங்கும் காசுக்கு, தரும் அளவைப் பற்றி பல விமர்சனங்கள் உண்டு. பல சமயங்களில் உண்மையும் கூட..

அவர்களின் வெற்றிக்கு பின்னால் நான் ஏற்கனவே சொன்ன யோசனை, திட்டமிடல், தரம், உழைப்பு மட்டுமில்லாமல், கஸ்டமர் சர்வீஸ் என்பதும் மிக முக்கியம். பல வருடங்களுக்கு முன்னால் அந்த உணவகத்தின் ஒரு கிளையில் நான் புல் மீல்ஸ் ஆர்டர் செய்துவிட்டு, சில பண்டங்களை நான் வைத்துவிட்டு போய் விட்டேன். பில்லை கொடுக்க நின்ற போது, பின்னாலேயே வந்த சூப்பர்வைசர்.. என்னை தனியாய் அழைத்து.. “என்ன சார். டேஸ்ட் சரியில்லையா..?” என்று கேட்டார். நான் சாப்பிடாமல் வைத்துவிட்டு வந்ததை பார்த்து கஸ்டமருக்கு பிடிக்க வில்லையோ என்று ஆதங்கத்தில் அவர் கேட்டது என் மனதில் ஒரு இடத்தை அந்த உணவகத்துக்கு கொடுக்க வேண்டியதாயிற்று.

அதற்கு அப்புறம் பல முறை பல விஷயஙக்ள் அந்த உணவகத்தின் பல கிளைகளில் சாப்பிட்டு இருக்கிறேன். எங்கு சாப்பிட்டாலும் அதே சுவை, தரம், சர்வீஸ் என்பது மாறவில்லை.

ஆனால் நேற்று இரவு நான் அதே உணவகத்தின் துரித உணவு சேவையில் சாப்பிட்டு கொண்டிருந்த போது நடந்த விஷயம் ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் போய்விட்டது. ரெண்டு பரோட்டாவில் ஒன்றை சாப்பிட்டுவிட்டு, இன்னொரு பரோட்டாவுக்கான குருமாவை வாங்கி வர கவுண்டருக்கு போய் வருவதற்குள், என் ப்ளேடடை காணவில்லை. என்னடாவென்று பார்த்தால க்ளினிங் பாய் என் ப்ளேட்டை எடுத்து போய்விட்டான். சரியான பசியில் பதினோரு மணிக்கு பரக்க, பரக்க சாப்பிட்டு கொண்டிருந்த எனக்கு கோபம் வந்தது. அந்த பையனை கூப்பிட்டு,

‘என்னடா தம்பி.. கொஞ்சம் பார்த்து கேட்டு எடுக்க கூடாதா..?” என்றதுக்க்கு அவன் அழுகிற நிலையில் வந்துவிட்டான்.

” சாரி..சார். என்றான்.

“ உன் சாரி.. என் முப்பது ரூபாய் பரோட்டாவை திரும்ப தருமா..? இனிமே கேட்டு செய்ய.. என்று அவனுக்கு புத்திமதி் சொல்லிவிட்டு.. வேறு ஒன்றை வாங்க பில் போட கிளம்பினேன். இருந்தாலும் என் மனம் கவர்ந்த உணவகத்தில் இப்படி நடந்து விட்டதே என்ற வருத்தம் இல்லாமலில்லை. அந்த பையன் புதிதாய் வேலைக்கு சேர்ந்திருப்பதால்.. அவனை பற்றி புகார் செய்யவும் மனமில்லை, வேறு எதையாவது சாப்பிட பில் போட கிளம்புகையில், பின்னாடியே ஒருவர் வந்தார். சூப்பர்வைசர்.. கையில் இரண்டு பரோட்டா குருமாவுடன்.

இப்போது புரிகிறதா சரவணபவன் என்கிற அந்த உணவகம் ஏன் எவ்வளவு பிரச்சனையில் மாட்டிக் கொண்டாலும்.. தொடர்ந்து வெற்றி பெறுகிறது என்று.. இதுதான் அவர்களின் சக்ஸஸ் பார்முலா.. மற்றவர்களின் பார்முலாக்கள் தொடரும்....



Blogger Tips -கிங் தெலுங்கு சினிமா விமர்சனத்தை படிக்க இங்கெ அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

22 comments:

நாமக்கல் சிபி said...

நல்லா இருக்கு உங்க பதிவு!

Cable சங்கர் said...

ரொம்ப நன்றி நாமக்கல் சிபி.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் சேர்த்துதான்.

Anonymous said...

எவ்வளவு கொடுத்தாங்க.. சரவண பவன் அண்ணாச்சி..???

இராகவன் நைஜிரியா said...

சரியாக சொன்னீர்கள் சங்கர். எந்த ஒரு நிறுவனத்தில், அவர்களின் கஸ்டமர்களை மதிக்கின்றார்களோ அந்த நிறுவனம் நிச்சயம் வளறும்.

மஹாத்மா காந்தி அவர்கள் கூறியதுதான் என் ஞாபகத்திற்கு வந்தது -
A customer is the most important visitor on our premises.

He is doing us a favour by giving us the opportunity to do so.

நையாண்டி நைனா said...

/*வேறு எதையாவது சாப்பிட பில் போட கிளம்புகையில், பின்னாடியே ஒருவர் வந்தார். சூப்பர்வைசர்.. கையில் இரண்டு பரோட்டா குருமாவுடன். */

பார்த்து சாப்டீங்கலா....
அவன் வேற டேபில்லே இருந்து எடுத்து வந்திருக்க போறான்

Cable சங்கர் said...

//பார்த்து சாப்டீங்கலா....
அவன் வேற டேபில்லே இருந்து எடுத்து வந்திருக்க போறான்//

ஹா...ஹா....ஹா.. நம்மாளூங்க நகைச்சுவை உணர்வுக்கு இணை வேறெங்கும் இல்லை.. நன்றி நையாண்டி நைனா.. உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்

முரளிகண்ணன் said...

சரவண பவனைப் பற்றி நீண்ட நாட்களுக்குப் பின் ஊடகத்தில் ஒரு நல்ல செய்தி

Cable சங்கர் said...

எதோ நம்மால முடிஞ்சது முரளி..

Anonymous said...

Hi

Eventhough I told many of my friends about that, I did not write as comment. I have been eating in SB for many years in Chennai and last 6 years in Dubai. (they have many branches in Dubai & Sharjah). As you said rightly here also all branch have same taste as like India. When I enquired about that most of the items they are sourcing from the place and send it to here. Sometime before I read it in Business India that SB is selling more DOSA during weekdays than McDonalds in N.Delhi (i think the number is more than 1200 during weekend). It is a kind of standard middle class restaurant with clean and authentic taste. They never affected by the issue created by their promoters. Like a big company they have a good standard process in running their restaurant. Since I am eating for quite sometime, I discuss with their supervisors about their operation etc.

Annachi is king in setting the process to run the hotel (like the Dabbawalla) without having to get any MBA.

Sudharsan

http://urupudaathathu.blogspot.com/ said...

///நையாண்டி நைனா said...

/*வேறு எதையாவது சாப்பிட பில் போட கிளம்புகையில், பின்னாடியே ஒருவர் வந்தார். சூப்பர்வைசர்.. கையில் இரண்டு பரோட்டா குருமாவுடன். */

பார்த்து சாப்டீங்கலா....
அவன் வேற டேபில்லே இருந்து எடுத்து வந்திருக்க போறான்///

ஆத்தீ சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது..


//ஒரு மிக சிறிய ஒரு யோசனையும், சரியான திட்டமிடலும், சரியான தரமும்,பெரிய உழைப்பும் கண்டிப்பாய் இருக்கும். ///
அண்ணே அருமையான பதிவு...


உண்மை தான்,

Cable சங்கர் said...

//Annachi is king in setting the process to run the hotel (like the Dabbawalla) without having to get any MBA.//

நல்ல நிர்வாகத்துக்கான அறிவு எம்.பி.ஏ. படித்தால் மட்டும்போதாது. செய்யும் தொழிலில் ஆர்வமும், காதலும் இருந்தால் வெற்றி நிச்சயம் அனானி..

Cable சங்கர் said...

நன்றி உருப்புடாதது அணிமா.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

பரிசல்காரன் said...

ஒரு புரோட்டாவால், இரண்டு புரோட்டாக்களும் ஒரு நல்ல பதிவும் கிடைத்தது..

அந்தப் பையனுக்கு நன்றி சொல்லுங்கள்!

Cable சங்கர் said...

//ஒரு புரோட்டாவால், இரண்டு புரோட்டாக்களும் ஒரு நல்ல பதிவும் கிடைத்தது..

அந்தப் பையனுக்கு நன்றி சொல்லுங்கள்!//

நன்றி பரிசல்..

http://urupudaathathu.blogspot.com/ said...

இது புரோட்டா பதிவா??



ஹா ஹா ஹா , இது எப்படி?

http://urupudaathathu.blogspot.com/ said...

//Cable Sankar said...

//ஒரு புரோட்டாவால், இரண்டு புரோட்டாக்களும் ஒரு நல்ல பதிவும் கிடைத்தது..

அந்தப் பையனுக்கு நன்றி சொல்லுங்கள்!//

நன்றி பரிசல்..///


அந்த பையனுக்கு தானே நன்றி சொல்ல சொன்னாரு, அப்புறம் நீங்க எதுக்கு பரிசலுக்கு நன்றி சொல்ரீங்க??
ஒன்னுமே விளங்கல

தராசு said...

கடின உழைப்பு, தரம், வாடிக்கையாளர்களை மதிக்கும் குணம், இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டு போகலாம் சரவண பவனைப்பற்றி.

ஆமா அதென்ன ராத்திரி பத்னொரு மணிக்கு பரக்க பரக்க புரோட்டா, இது புதுமாதிரி புரோட்டாவா இருக்குதே, இந்த மாதிரி புரோட்டாவை வச்சிட்டு போனா பறந்துதான் போகும்.

Cable சங்கர் said...

//ஆமா அதென்ன ராத்திரி பத்னொரு மணிக்கு பரக்க பரக்க புரோட்டா, இது புதுமாதிரி புரோட்டாவா இருக்குதே, இந்த மாதிரி புரோட்டாவை வச்சிட்டு போனா பறந்துதான் போகும்.//

அதான் சொன்னேனே.. நம்ம அளுங்களை நகைச்சுவைல அடிச்சிக்க ஆளே கிடையாது.

Anonymous said...

சூப்பர் பதிவு தலைவா!. இந்தியாவில் இருந்தப்ப சரவண பவன் சாப்பிட்டு வளர்ந்த உடம்பு இது. அப்பால அமெரிக்கால SB இல்லாம தவிச்சிருக்கேன். அட்லாண்டால போன வருஷம் ஓபன் பண்ணாங்க. என்ன இருந்தாலும் நம்ப ஊரு taste வராது...
SB trade மார்க் , இட்லிய லென்ஸ் வெச்சி தான் தேடணும். சட்னி கப்ல விரல உட்டா வெளியல எடுக்க முடியாது. இன்னும் அப்படி தானா சென்னைல?

Cable சங்கர் said...

//SB trade மார்க் , இட்லிய லென்ஸ் வெச்சி தான் தேடணும். சட்னி கப்ல விரல உட்டா வெளியல எடுக்க முடியாது. இன்னும் அப்படி தானா சென்னைல?//

அதான் சொன்னேனே.. தொடர்ந்து அதே தரத்தை மெயிண்டெயின் பண்றாங்கன்னு..

நானானி said...

இந்த சக்சஸ் ஃபார்முலா தொழில் முனைவோர் அனைவரும் திரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
ஒரு புதுமொழி சொல்வார்கள்...'கோழி எப்படியிருந்தால் என்ன? குழம்பு ருசியாயிருக்கா...?'

Cable சங்கர் said...

//கோழி எப்படியிருந்தால் என்ன? குழம்பு ருசியாயிருக்கா...?'//

நானானி.. சரியா சொன்னீங்க.. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.