Thottal Thodarum

Jan 15, 2009

காதல்னா சும்மா இல்ல.. திரைவிமர்சனம்

சக பதிவர்கள்.. வாசக நண்பர்கள் அனைவருக்கும் பொங்கள் நல்வாழ்த்துக்கள்


தெலுங்கில் “கம்யம்’ என்ற பெயரில் வெளிவந்து கமர்சியலாகவும், விமர்சகர்களின் பாராட்டையும் ஒரு சேர அள்ளிய படம். படத்தின் பெயரை வைத்து காதல் கதை என்று நினைக்கிறவர்களுக்கு, காதலை விட மேலான வாழ்கையை நோக்கி செல்லும் படம்.

தன் காதலியை தேடி அலையும் அபிராம் என்கிற ஒரு கோடீஸ்வர இளைஞன் வழியில் சந்திக்கும் நிகழ்வுகள் மூலம் வாழ்கையை புரிந்து கொள்கிறான். வழக்கமான காதல் கதையாய் இல்லாமல் காதல் மூலமாய் வாழ்கையின் தேடல்களை தர முயற்சித்திருப்பதால் வித்யாசமான படமாய் அமைகிறது.

மோட்டார் சைக்கிள் டைரிஸ் என்கிற படத்தின் தாக்கம் படத்தில் இருந்தாலும், இயல்பான திரைக்கதையால் நம்மை ஒன்ற வைத்துவிடுகிறார்கள்.

அபிராம் ஒரு மிகப் பெரிய கோடீஸ்வரன். ஜானகி என்கிற டாக்டர் பெண்ணை துரத்தி, துரத்தி காதலிக்கிறான். ஜானகி ஒரு சோஷியல் கான்ஷியஸ் இருக்கிற மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே வாழ்கிற பெண். அபிராமோ.. அவனுடய வாழ்கையில் மற்றவர்களுக்கான இடமே இல்லாதவன். இவர்கள் இருவருக்கும் காதல் வர இருக்கும் தருணத்தில் ஒரு விபத்தினால் அவர்கள் பிரிகிறார்கள். அதற்கு பிறகு ஜானகியை காணாமல் அவளை தேடி போகிறான். வழியில் பைக் திருடனான வெட்டி வேலுவை, ஒரு ரவுடி, ஒரு விபச்சாரி, நக்ஸைலைட்டாய் இருந்து பொது சேவை செய்யும் இளைஞன், நக்ஸலைட் கும்பல் என்று வாழ்கையின் பல யதார்த்தங்களை உணர்கிறான். ஜானகியை கண்டுபிடிக்கிறான். அவர்கள் சேர்ந்தார்களா.. இல்லையா.. என்பது தான் க்ளைமாக்ஸ்.


இதில் வெட்டி வேலுவாய் வரும் ரவிகிருஷ்ணாவுக்கு ஒரு நல்ல கேரக்டர். முடிந்த வரை இயல்பாய் நடிக்க முயற்சித்திருக்கிறார். என்ன அவருடய குரலும், பாடி லேங்குவேஜூம், தான் ஒத்து வரமாட்டேன்கிறது. புது முகம் ஷரவனாந்த நல்ல அறிமுகம், கமலினி முகர்ஜியை பற்றி சொல்ல பெரிசாய் ஒன்றுமில்லை என்றாலும், அவரின் முகம் தான படத்தின் டிரைவிங் போர்ஸாய் இருப்பது மிகப் பெரிய ப்ளஸ்.

மூன்று இசையமைப்பாளர்கள், என்னமோ செய்தாய் நீ என்கிற பாடல் ஏற்கனவே ஹிட்.. தெலுங்கில் வேறு படத்தில் இருந்து பாடல்களை மட்டும் ரிப்பீட்டிருக்கிறார்கள். தெலுங்கு படத்தில்லிருந்து கொஞ்ச்ம் கூட மாறறாமல் அப்படியே எடுத்திருக்கிறார்கள். தெலுங்கு படத்தில் மிகப் பெரிய பலம் வசனங்கள். அதை அப்படியே தமிழில் மொழிமாற்றம் செய்திருப்பதால் அவ்வளவு எபக்டிவாக இல்லை. உதாரணமாய்.. ‘அபி.. நி வாழ்கையை கார்ல உட்காந்துகிட்டு டிவி பாக்கிறப்புல பாக்கிற.. கொஞ்சம் கீழே இறங்கி கூட வ்ந்து பாரு வாழ்கைன்னா என்ன்னு புரியும்” என்பது போன்ற வசனங்கள் தவிர்ந்து பெரிதாய் தமிழில் பாதிக்கவில்லை.

இயக்குனர் தனியாய் எதையும் பெரிசாய் செய்யாததால் பெரிசாய் பாராட்ட முடியவில்லை. இருந்தாலும் தமிழுக்காக மாற்றுகிறேன் பேர்விழி என்று எதையும் சொதப்பாமல் இருந்ததுக்கே.. பெரிய கப் கொடுக்க வேண்டும்.

தெலுங்கில் படம் பார்த்தவர்கள், தயவு செய்து தமிழில் பார்க்கும்போது ரவிகிருஷ்ணாவையும், அல்லரி நரேஷையும் கம்பேர் செய்யாதீர்கள்.. நரேஷ் ”காலி சீனுவாக்” வாழ்ந்திருப்பார்.

ராஜ்டிவிக்கு என்ன முடை.. நல்ல படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தால் மட்டும் போதாது அதை சரியான முறையில் தர தயாரிப்பு மிக முக்கியம். பணம் செலவ்ழிக்க முடியாவிட்டால் அந்த படத்தை வாங்கி டப்பிங் செய்து வெளியிட்டிருக்கலாமே.. கமலினி, ஷரவானந்த, சம்பந்தபட்ட காட்சிகள் எல்லாமே, தெலுங்கு படத்தின் காட்சிகளை டப்பிங் செய்திருக்கிறார்கள். ஓரு பாடல் காட்சி, ஒரு சில இன்சர்ட் காட்சிகளுக்கு மட்டும் கமலினியிடம் டேட் வாங்கி இணைத்திருக்கிறார்கள். ஷரவானந்த, ரவிகிருஷ்ணா காட்சிகளை மட்டுமே தமிழில் எடுத்திருக்கிறார்கள். படத்தில் பல இடங்களில் லிப் சிங்க் மிக அபத்தம். பொம்மலாட்டம் படத்திலும் இதே பிரச்சனைதான். இவர்கள் தமிழில் எடுப்பதாய் சீன் போட்டு, ஒட்டி, வெட்டி படமெடுக்கிறார்கள்.. எடுக்கணும்னு முடிவு செஞ்சப்புறம் அதுல தடம் மாறக்கூடாது..

படத்தின் தலைப்பு டப்பிங் பட டைட்டில் போல் தொனிப்பது படத்தின் ஒப்பனிங்கை மிக பெரிய அளவில் பாதித்திருக்கிறது என்பதை நேற்று மொத்தம் 40 பேருடன் இரவு காட்சி பார்த்தபோது தெரிந்தது.

காதல்னா சும்மா இல்ல.. சும்மா இல்லதான் என்னங்கிற..?

டிஸ்கி

இந்த விமர்சனத்துக்கு நான் உபயோகபடுத்தியிருக்கும் படங்கள் எல்லாமே.. தெலுங்கு படத்தின் ஸ்டில்களைத்தான். ரவிகிருஷ்ணா, ஷரவானந்த சம்பந்தபட்ட ஸ்டில் மட்டுமே தமிழிலிருந்து எடுத்தது..Blogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

23 comments:

Raj said...

//கமலினி, ஷரவானந்த, சம்பந்தபட்ட காட்சிகள் எல்லாமே, தெலுங்கு படத்தின் காட்சிகளை டப்பிங் செய்திருக்கிறார்கள். ஓரு பாடல் காட்சி, ஒரு சில இன்சர்ட் காட்சிகளுக்கு மட்டும் கமலினியிடம் டேட் வாங்கி இணைத்திருக்கிறார்கள்//

நாங்கதான் சொன்னோமில்ல.....!

Cable Sankar said...

//நாங்கதான் சொன்னோமில்ல.....!//

இந்த படம் ஆரம்பிக்கபட்ட போதே நாம் பேசியதுதான் ராஜ்.. ராஜ்டிவி இந்த மாதிரி உட்டாலக்கடி வேலை செய்யும் என்று.. அதை மக்களுக்கு சொல்ல வேண்டுமில்லையா..?

குப்பன்_யாஹூ said...

இந்த மாதிரி சினிமாக்கு எல்லாம் விமர்சனம் எழுதி தமிழ் மனம் சர்வர் இடத்தை அdaiக்கலாமா.

ஆமாம் எப்படி நேரம் , பொறுமை, ஆர்வம் உள்ளது இந்த மாதிரி படத்தையும் பார்க்க. எனக்கு வியப்பாக மலைப்பாக இருக்கிறது.

குப்பன்_யாஹூ

Cable Sankar said...

//இந்த மாதிரி சினிமாக்கு எல்லாம் விமர்சனம் எழுதி தமிழ் மனம் சர்வர் இடத்தை அdaiக்கலாமா.//

அவ்வளவு மொக்கையாவா இருக்கு விமர்சனம்..?

//ஆமாம் எப்படி நேரம் , பொறுமை, ஆர்வம் உள்ளது இந்த மாதிரி படத்தையும் பார்க்க. எனக்கு வியப்பாக மலைப்பாக இருக்கிறது.//

எல்லாம் சினிமாவின் மீதுள்ள தீராக் காதலினால்தான். குப்பன்..

Cable Sankar said...

//இந்த மாதிரி சினிமாக்கு எல்லாம் விமர்சனம் எழுதி தமிழ் மனம் சர்வர் இடத்தை அdaiக்கலாமா.//

அவ்வளவு மொக்கையாவா இருக்கு விமர்சனம்..?

//ஆமாம் எப்படி நேரம் , பொறுமை, ஆர்வம் உள்ளது இந்த மாதிரி படத்தையும் பார்க்க. எனக்கு வியப்பாக மலைப்பாக இருக்கிறது.//

எல்லாம் சினிமாவின் மீதுள்ள தீராக் காதலினால்தான். குப்பன்..

குவாட்டர் கோயிந்தன் said...

90 உட்டுகினு போய் பார்க்கவா இல்லை குவாட்டர் அடிச்சிக்கினு போவவா..

முரளிகண்ணன் said...

இந்தப் படம் தப்பிச்சுரும் போலிருக்கே

SUREஷ் said...

ஐயோ .. பாவம்.. வில்லு படத்தை ஹிட் ஆக்க முயற்சி செய்யும் வலைஞர்கள் இந்தப் படத்தையும் ஓட வைக்க ஏதாவது முயற்சி செய்ய வேண்டும்

ஷாஜி said...

பொங்கள் ரிலிசில் இத்வும் புட்டிகிச்சா?

இராகவன் நைஜிரியா said...

சங்கர் மிகப் பொறுமையானவராக இருக்கவேண்டும்.

காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள், அது இந்த சினிமா காதலுக்கும் பொருந்தும் என்பது இப்போதான் புரிந்தது

Hollywood Bala said...

வில்லு-வே இங்க ரிலீஸ் ஆகல. இதுல இந்த படம் எல்லாம் எங்க வரப்போகுது...??!!!

உங்க விமர்சனம் படிச்சிட்டு... ‘பார்த்த’ ஃபீலிங்-ஐ கொண்டு வந்துக்க வேண்டியதுதான்..!

இருக்கவே இருக்கு... நம்ப ‘torrent'-உம், DVD-யும்.

அக்னி பார்வை said...

நம்ம தெலுகு ரீமெக் கண்மணி ‘ஜெயம் ராஜா’ பார்வையில் பட்டிருந்தால் படத்துக்கு விமோசனம் கிடத்திருக்கும் என்ன ஒரு குத்து பாட்டோடா!

Cable Sankar said...

//90 உட்டுகினு போய் பார்க்கவா இல்லை குவாட்டர் அடிச்சிக்கினு போவவா..//

90 வுட்டா..போதும் தல..

Cable Sankar said...

//இந்தப் படம் தப்பிச்சுரும் போலிருக்கே//

படம் தெலுங்கிலேயே உட்டிருந்தா கண்டிப்பான்னு சொல்வேன்.. பார்ப்போம் முரளி..

Cable Sankar said...

//ஐயோ .. பாவம்.. வில்லு படத்தை ஹிட் ஆக்க முயற்சி செய்யும் வலைஞர்கள் இந்தப் படத்தையும் ஓட வைக்க ஏதாவது முயற்சி செய்ய வேண்டும்//

வில்லு படம் ஹிட்டாகறதுக்கு மற்ற படஙகள் மோசமா எடுத்தாவே போதும்..

Cable Sankar said...

//காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள், அது இந்த சினிமா காதலுக்கும் பொருந்தும் என்பது இப்போதான் புரிந்தது//

ஆமாம் ராகவன்.. நிஜத்தைத்தான் சொல்லியிருக்கீங்க..

Cable Sankar said...

//இருக்கவே இருக்கு... நம்ப ‘torrent'-உம், DVD-யும்.//

பாலா.. முடிஞ்சா தெலுங்குல பாருங்க.. இதவிட அசத்தும்..

Cable Sankar said...

//நம்ம தெலுகு ரீமெக் கண்மணி ‘ஜெயம் ராஜா’ பார்வையில் பட்டிருந்தால் படத்துக்கு விமோசனம் கிடத்திருக்கும் என்ன ஒரு குத்து பாட்டோடா!//

ராஜாவுக்கெல்லாம் இந்த படம் எடுக்க தெம்பு கிடையாது.. இது ஒரு டைரக்டர் படம்.. அதை எடுக்கிறதுக்கு நிஜமாவே ஒரு நல்ல டைரக்டர் வேணும். ராஜா டைரக்டர் இல்லை.. கட் அண்ட் பேஸ்ட் மாஸ்டர். நான் இதை சூட்டிங்கில் பார்த்திருக்கிறேன்.

அக்னி பார்வை said...

உங்களுக்கு ஒரு மினஞ்சல் அனுப்பியுள்ளேன்... படிக்கவும் ரகசியம் யாருக்கும் சொல்லிடாதீங்க...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ரொம்பப் பொறாமையா இருக்குங்க.. உங்களைப் பார்த்தா.. எப்படித்தான் நேரம் கிடைக்குதோ..? இப்படிப் படம் பார்க்க பொறுமையும் கொஞ்சம் வேணும்.. கூடுதலா சகிப்புத்தன்மையும் வேணும்..

நீங்க ரொம்ப நல்லவருங்க..

Cable Sankar said...

//நீங்க ரொம்ப நல்லவருங்க..//

நெம்ப தேங்ஸ்..

நான் ஆதவன் said...

காதல்ன்னா சும்மா இல்ல...அது போல
படம் எடுக்கறதுன்னா சும்மா இல்லைன்னு யாராவது ராஜ் டி.விக்கு சொல்லுங்கப்பா

Rafiq Raja said...

ரொம்ப நாள் கழிச்சு தென்படும் "கமலினி" காக படத்தை பார்த்து விட்டு கருத்து பதிகிறேன் :)

ரஃபிக் ராஜா
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்