Thottal Thodarum

Jan 18, 2009

அழுகை


அழுகை.. மனிதனின் உணர்வு பூர்வமான ஒரு வெளிப்பாடு. சந்தோஷமோ.. துக்கமோ.. உச்சக்கட்டம் அழுகை.. சந்தோஷத்தில் கூட ஆனந்த கண்ணீர் வரும்.. அதுவும் கண்ணீர்தான்.

செத்த வீட்டில் அழுகிறவர்கள் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். அவர்களுடய உறவின் நெருக்கத்தை, இழப்பின் சோகத்தை, எதிர்கால கவலைகளை அவர்கள் அழும் நிலையை முன்னிருத்தி தங்களுக்கும், இறந்த நபரிடம் உள்ள ஆழமான உறவை அவர்களின் அழுகை வெளிப்படுத்தும். இதற்கு பல போட்டிகள் வேறு நடக்கும்.

இறந்தவரின் மனைவியோ, கணவரோ.. உடலின் மீது விழுந்து அழுவது, ஒரு வகை. அப்படி அழுதவரை மிஞ்ச அந்த நபரின் தங்கையோ, தம்பியோ.. போட்டிக்கு இறந்தவரின் மீது விழுந்து அழுவதும் உண்டு, சமயத்தில் இறந்தவர் ஆணாயிருந்து அவர் எங்கேயாவது செட்டப் செய்திருந்தால், அந்த பெண்மணி சந்தடி சாக்கில் இது போல் செய்து தனக்கும், இறந்தவருக்கு உள்ள உரிமையை நிலைநிறுத்த முயற்சிப்பவர்களும் உண்டு.

பார்த்தவுடன் மடேர்..ம்டேரென்று மார்பிலடித்து எங்கே அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயத்தை ஏற்படுத்தும்படி அழுபவர்கள் உண்டு. இவர்களின் அழுகை முக்கியமாய் உள்ளே நுழைந்து ஒரு பத்து நிமிடங்களுக்கும், உடலை எடுக்க போகும் முன்பும் தான் வெளிப்படுத்துகிறார்கள். இது ஒரு விதமான டிராயிங் அட்டென்ஷன் விஷயம்.

சிலருக்கு வெளியே இருக்கும் வரை ஒன்றுமில்லாமல், உள்ளே நுழைந்தவுடன் அங்கிருக்கும் நிலைமையை பார்த்து துணுக்கென்று கண்களில் கண்ணீர் விடும் கேரக்டர்கள். இவர்கள் ஒரு நிமிடத்துக்கு மேல் அங்கிருக்க மாட்டார்கள் எஸ்கேப்பாகிவிடுவார்கள்.

நெருங்கிய் உறவுகள்,மகள், மகன், மனைவி, போன்றவர்கள் ரொம்பவும் ஆற்றாமையில் ‘ எழுந்திருங்க.. எழுந்திருங்க.. நான் உங்க் .. வந்திருக்கேன்.. எழுந்து பாருங்க..’ என்று அஞ்சலி பாப்பா ரேஞ்சுக்கு, அழுபவர்களூம் இருக்கிறார்கள். இவர்களை பார்த்து, இன்னும் சில நெருங்கியவர்கள், வெட்கத்தை விட்டு அம்மாதிரி கத்தி அழ தெரியாமல், பக்கத்தில் நின்றபடி சத்தமில்லாமல் முணுமுணுப்பவர்களும் உண்டு.

சில வயதான பாட்டிகள் எல்லோரும் பார்க்க வேண்டுமென்பதற்காகவே ஊரே ரெண்டு படும்படி அழுவார்கள். அதிலும் முக்கியமாய் நெருக்கமானவர்கள் வெளியே இருந்தால் உள்ளே அழைத்து வந்து ‘வாடா.. நான் அழப்போறேன் என்று சொல்லிவிட்டு அழுவார்கள்.
சிலர் ஒரு பாட்டம் அழுதுவிட்டு, வெளியே போய் நெடுநாள் கழித்து பார்த்த உறவினர்களிடம் பேசிவிட்டு, ஒரு வாய் காபியை உள்ளுக்குள் இறக்கி,சரியான் இண்டர்வெலில் திரும்பவும் உள்ளே போய், அழுபவர்களும் உண்டு.

இம்மாதிரியான சமயங்களில் ஒரு சிலர் மட்டும் ரொம்பவும் தீவிரமாய் காப்பி கொடுப்பதிலும், அவனைபார்.. இவனை பார்.. வண்டி வந்திடுச்சா என்று குரல் மட்டும் எழுப்பி கொண்டு தன்னை முன்னிலை படுத்தி கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏவலில் காரியம் நடப்பதாய் எண்ணம். இல்லாவிட்டால் உள்ளே இருப்பவர் எப்படி இறந்தார் என்று உரத்த குரலில் நேரிலிருந்து பார்த்த தினத்தந்தி நிருபர் போல் விவரித்து கொண்டிருப்பார்.

ஒரு சிலர் பாடி வரும் வரை காத்திருக்க முடியாமல் எதிர்பக்கம், உள்ள டிபன் கடைகளில் டீ, காபி,தம் என்று ஒதுங்கியபடி நின்றிருப்பார்கள். வந்தவர்களில் பல பேர் சுடுகாடுவரை வருவதில்லை.

துக்கத்தின் உச்சத்தில் இருப்பவர்கள்.. இந்த மாதிரி சமயங்களில் அழுவதே இல்லை.

இறந்தவரின் உடலுக்கு கொள்ளி வைக்கபடும்போது அடிவயிற்றிலிருந்து துக்கம் பீறிட, இந்நாள் வரை அவருடனான சந்தோஷம், சண்டை, துக்கம், பொறாமை, எல்லாம் நிமிட நேரத்தில் மனதில் ஓட, உள்ளிருந்து ஒரு பெரிய அலறல் வெடிக்க.. அழுகை..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

20 comments:

நட்புடன் ஜமால் said...

அழுகை

உண்மையே

பல நேரங்களில் அழ முடிவதில்லை ...

A N A N T H E N said...

கட்டுரை அருமை, இறப்புக்கான கண்ணீரைப் பற்றிய வர்ணனையா?

தோல்வியால், பாசத்தால் வரும் கண்ணீரைப் பற்றி சொல்லலையே?

Anonymous said...

உங்களிடமிருந்து இந்த மாதிரி ஒரு பதிவா.. ? அனுபவம் என்றிருக்கிறீர்கள்.. என்னுடய வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் உணர்வுகளின் பதிவும் அருமை.

அப்துல்மாலிக் said...

அழுகை..!
துக்கம், மனக்குழப்பம், மனபாரம் இவைகளின் வெளிப்பாடு
அழுகையை பற்றி அழகாக அலசியிருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்

Cable சங்கர் said...

//தோல்வியால், பாசத்தால் வரும் கண்ணீரைப் பற்றி சொல்லலையே?//

என்னுடய தற்போதை மன பாதிப்பை பற்றி சுழன்றதனால்.. அதை விட்டு விட்டேன்.. நிச்சயமாய் ஒரு முறை எழுதுகிறேன்.

Cable சங்கர் said...

//உங்களிடமிருந்து இந்த மாதிரி ஒரு பதிவா.. ? அனுபவம் என்றிருக்கிறீர்கள்.. என்னுடய வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் உணர்வுகளின் பதிவும் அருமை.//

மிக்க நன்றி சான்சுவாஸ்.. ஏன் நான் இதைவிட சீரியஸான விஷயங்களை பற்றி எழுதியிருக்கேனே..?

Cable சங்கர் said...

//அழுகை..!
துக்கம், மனக்குழப்பம், மனபாரம் இவைகளின் வெளிப்பாடு
அழுகையை பற்றி அழகாக அலசியிருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்//

நன்றி.. அபு அஃப்ஸர்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

narsim said...

//‘வாடா.. நான் அழப்போறேன் என்று சொல்லிவிட்டு அழுவார்கள்//

அழுகையிலும் சிரிப்பு.. நல்ல பதிவு /வித்தியாசமானதும் கூட‌

கூட்ஸ் வண்டி said...

பாருங்க பதிவர்களே... அண்ணன் சங்கர் அவர்களை இரண்டு மொக்கை படங்கள் எப்படி! பதிவு எழுத வச்சிட்டு....

கூட்ஸ் வண்டி said...

/*துக்கம், மனக்குழப்பம், மனபாரம் இவைகளின் வெளிப்பாடு
அழுகையை பற்றி அழகாக அலசியிருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்*/

'வில்லு' பார்த்தாச்சு.. 'படிக்காதவன்' பார்த்தாச்சு... அப்புறம் அந்த பாதிப்பு இருக்க தானே செய்யும்

ஷாஜி said...

நல்ல அலசல் சார்.

தோல்வியால், பிரிவால் (farewell time) அப்போ வருகிற அழுகை பற்றி இன்னும் விவரித்திருக்கலாம்..

Anonymous said...

இன்னும் ஆழமாக அலசலாம் சங்கர்
உங்களால் முடியும்

சமீபத்தில் என் மாமா இறந்த தருணம் பல அதிர்வுகளை நினைவு படுத்துகிறது

Focus Lanka said...

Focus Lanka திரட்டியிலும் இணைந்து கொள்ளுங்கள்.
http://www.focuslanka.com

அத்திரி said...

//துக்கத்தின் உச்சத்தில் இருப்பவர்கள்.. இந்த மாதிரி சமயங்களில் அழுவதே இல்லை.//

சரியாசொன்னீங்க சார்.... இதை அனுபவித்து இருக்கிறேன்.....................

அழுகையுடன்.................

Unknown said...

இதெல்லாம், எல்லா உறவும் பணத்தால் தீர்மானிக்கப்படுவதாலேயா?

உண்மைத்தமிழன் said...

அண்ணே..

இந்தக் கோணத்தில் இதுவரையில் எந்த ஒரு கட்டுரையையும் வலையுலகில் நான் படித்ததில்லை.. இதுவே முதல் முறை..

உங்களுடைய துக்கத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்..

பதிவு போட்டு 8 நாட்களாகியும் நான் இதுவரையில் பார்க்கவில்லை. இப்போதுதான் பார்க்கிறேன்..

தாமதத்திற்கு மன்னிக்கவும்.

இறப்பு என்பதும் பிறப்பு போலவே ஒரு கொண்டாட்டமாகத்தான் இருக்க வேண்டும்.

ஒரு பிறப்பால் உணர வைக்க முடியாத விஷயங்களை ஒரு இறப்பு உணர வைக்கும். வாழ்க்கையில் நான் சந்தித்த மூன்று இறப்புகளுமே எனக்கு வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கங்களை அடையாளம் காட்டின.

அழுகை என்பது மனிதர்களிடத்தில் உள்ள கடைசி சொத்து.. அது ஒன்றை மட்டும்தான் அவனிடமிருந்து பறிக்க முடியாது..

உணர்வுகளை எழுப்பி விட்டீர்கள் அண்ணா..

Cable சங்கர் said...

//இந்தக் கோணத்தில் இதுவரையில் எந்த ஒரு கட்டுரையையும் வலையுலகில் நான் படித்ததில்லை.. இதுவே முதல் முறை..//

நிஜமாவாண்ணே..

Cable சங்கர் said...

//உணர்வுகளை எழுப்பி விட்டீர்கள் அண்ணா..//

மிக்க நன்றி உண்மைதமிழன் அவர்களே.. உஙக்ள் வருகைக்கும், உள்ளார்ந்த கருத்துக்கும்

Anonymous said...

Shankar,

Very good article. Please continue your writing so that our soceity can be proud of having such a wonderful writer.

There is a touch of Sujatha in your style.

Keep it up

ரோகிணிசிவா said...

// அடிவயிற்றிலிருந்து துக்கம் பீறிட, இந்நாள் வரை அவருடனான சந்தோஷம், சண்டை, துக்கம், பொறாமை, எல்லாம் நிமிட நேரத்தில் மனதில் ஓட, உள்ளிருந்து ஒரு பெரிய அலறல் வெடிக்க.. அழுகை..//
உண்மையான வார்த்தைகள்,