குறுகிய காலத்தில் 75,000 ஹிட்ஸுகளை கொடுத்து, மேலும் ஆதரிக்கும் வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும் நன்றிகள் பல கோடி..

தெலுங்கில் 'நேநு மீக்கு தெலுசா" என்கிற பெயரில் 2008 அக்டோபரில் வெளிவந்த படம். தெலுங்கில் பிரபல நடிகர் மோகன் பாபுவின் மகன் மனோஜ் நடிதது தமிழிலும், தெலுங்கிலும் ஒரு சேர எடுக்கப்பட்ட படம்.
கதை ஒன்றும் பெரிசாக இல்லை. வழ்க்கம போல கஜினி மெமரி லாஸ் கதைதான். என்ன கஜினியில் 15 நிமிடம் என்றால் இதில் ராத்திரி தூங்கி எழுந்தால் முதல் நாள் நடந்தது தெரியாது. தினமும் அன்றைய நிகழ்ச்சிகளை, அவனை பற்றிய விவரங்களை டேப் ரிக்கார்டரில் போட்டு கேட்டு வாழ்கையை நடத்துபவ்ன், மிகப் பெரிய கோடீஸ்வரன். அவனுடய காதலி ரியா சென். அவனுக்கு ஞாபக சக்தி வரும் வரை தன் கண் எதிரே வைத்து பார்த்து கொள்ள அவனுக்கு ஒரு மேனேஜர் வேலையில் அமர்த்தில் தன் கண்காணிப்பில் கவனித்து வருபவர் சித்தப்பா நாசர். அவர் ஒரு நாள் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலைபழி மனோஜ் மீது விழுகிறது. சினேகா உல்லால்.. ஐ.பி.எஸ் ஆபீசராக வருகிறார்.
ப்ளாஷ் பேக்கில் மனோஜும், சினேகா உல்லாலும் காதலர்கள். மனோஜுக்கு ஞாபக சக்தி போனது எப்படி? மீண்டும் ஞாபகசக்தி திரும்பியதா..? கொலை பழியிலிருந்து தப்பித்தானா..? சித்தப்பா நாசரை கொன்றவர் யார்..? மனோஜ் எந்த காதலியுடன் சேர்ந்தான்..? என்ற பல கேள்விகளூக்கு போரடிக்காமல் விடை சொல்கிறார்கள்.

மிக ஸ்டைலிஷாக படமெடுத்திருக்கிறார்கள். மனோஜின் நடிப்பு ஒன்றும் குறை சொல்ல முடியாது. நன்றாக ஆடுகிறார், ஆக்ரோஷமாக சண்டை போடுகிறார், படம் நெடுகிலும் சல்மான்கான் போல தன் முறுக்கேறிய உடம்பை காட்டி கொண்டேயிருக்கிறார். படம் பூராவும் அவர் தன்னை பற்றியும், கூட நடிப்பவர்களை பற்றியும் அடிக்கும் கமெண்டுகள் இன்ட்ரஸ்டிங்.. ஆதி என்கிற அவரது கேரக்டருக்கு குரல் கொடுத்தவர் யாரோ.. நல்ல வாய்ஸ்
அருமையான ஒளிப்பதிவு.. அதிலும் மனோஜை ரவுடிகள் துரத்தி வரும் சேஸிங் காட்சியில் ஒளிப்பதிவு, எடிட்டிங், எல்லாமே சூப்பரோ சூப்பர். அந்த சேஸிங் காட்சியை ஏதோ ஒரு ப்ரஞ்சு படத்தில் அப்படியே பார்த்ததாய் ஞாபகம். பெயர்தான் நினைவுக்கு வரவில்லை. இருந்தாலும் சூப்பர்.. அதை அப்படியே எடுப்பதற்காக நிறைய உழைத்திருக்கிறார்கள்.
பிரமானந்தத்தின் காமெடியில் ஒரே தெலுங்கு வாடை. ஒன்றும் எடுபடவில்லை. பல இடங்களில் புரியவில்லை..

தரனின் இசையில் மூன்று பாடல்கள் நன்றாய் இருக்கிறது. தண்ணி கருத்துருக்கு ரீமிக்ஸ் பாடலில் உள்ள சரக்கு அளவிற்கு விஷூவலாய் சரக்கு இல்லை. சிநேகா உல்லால், மனோஜின் லவ் ட்ராக்கில் அவர்களது பிரிவுக்கு வலுவான சம்பவஙகள் இருந்திருந்தால் திரைக்கதையில் ஒரு உற்சாகம் ஏற்பட்டிருக்கும். மிகவும் அமெச்சூர் தனமான காரணங்கள். இயக்குனர் அனில் சாஸ்திரி ஸ்டைலாய் படமெடுக்க முனைந்த முனைப்பில் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் படத்துக்கு மெருகு கூடியிருக்கும்
என்னை தெரியுமா - அறிந்தவன்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Comments
இது இங்கலிஷ் படமான "50 First Dates"ன் கதை. என்னடா இந்த படத்தை விட்டு வைத்திருக்கீரார்களே என பலமுறை யோசித்திருக்கீறேன் ..... இப்போது அதையும் எடுத்தாகிவிட்டது. அந்த படத்தை பற்றி மேலும் விபரம் இங்கே.
நிலோபர்.. பர்ஸ்ட் 50 டேட்ஸை ஏற்கனவே தமிழில் தீபாவளி என்றும், தெலுங்கிலும், ஹிந்தியிலும் எடுத்தாகிவிட்டது. இந்த படம் clean slate என்கிற படத்தின் தாக்கத்தில் எடுக்கப்பட்டது.. அந்தபடமே ஒரிஜினல் மொமெண்டோவின் இன்ஸ்ப்ரேஷந்தான்.
//இது இங்கலிஷ் படமான "50 First Dates"ன் கதை. என்னடா இந்த படத்தை விட்டு வைத்திருக்கீரார்களே என பலமுறை யோசித்திருக்கீறேன் ..... இப்போது அதையும் எடுத்தாகிவிட்டது.//
நிலோபர்.. பர்ஸ்ட் 50 டேட்ஸை ஏற்கனவே தமிழில் தீபாவளி என்றும், தெலுங்கிலும், ஹிந்தியிலும் எடுத்தாகிவிட்டது. இந்த படம் clean slate என்கிற படத்தின் தாக்கத்தில் எடுக்கப்பட்டது.. அந்தபடமே ஒரிஜினல் மொமெண்டோவின் இன்ஸ்ப்ரேஷந்தான்.//
கேபிள் ஸார்.. நீங்கள் எழுதியிருக்கும் விதத்தில் பார்க்கும்போது இக்கதை 50 First Dates படத்தின் கதைதான். படத்தை நீங்களும் பார்த்திருப்பீர்கள்..
நீங்கள் சொல்லும் clean slate படத்தின் கதை என்ன..?
அதையும் கொஞ்சம் சொல்லுங்கள்.. பின்பு எதன் தாக்கம் இப்படத்தில் அதிகம் என்று யோசிக்கலாம்..
நீங்கள் சொல்லும் clean slate படத்தின் கதை என்ன..?//
சார்.. clean slateல் நாயகன் தினமும் நடக்கும், நடந்த விஷயங்களை டேப்ரிக்கார்டரில் போட்டு கேட்டு தன்னுடய் மெமரியை ரிசார்ஜ் செய்து கொள்வான். ஆனால் அதை மட்டுமே இவர்கள் எடுத்தாண்டு இருக்கிறார்கள். மொமெண்டோவுக்கு அப்புறம் பல படங்கல் மெமரி லாஸை வைத்து பல விதமான கதைகளை செய்துவிட்டார்கள். இதை தான் அந்த காலத்தில் அம்னீஷியா என்று உட்டாலக்கடி செய்து கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொரும் முறையும் படம் பார்க்கத்தூண்டுகிறது தங்களது விமர்சணம்.
சிறுகதை போல சொல்லி மீதம் ‘வெந்திரையில் காண்க’ அப்படின்னு டீவி அதிகம் வரும் முன்பு ரேடியோவில் சொல்லுவார்கள்.
அது போல நேர்த்தியாக(ச்) சொல்லி முடிவினை அறிவிக்காமல் சொல்லியுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள் சங்கர்.
நன்றி ஜமால். உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்துக்கும்..
I attached this post an Thatstamil Bookmark's. Continue bookmark in this site.
Your post link - http://thatstamil.oneindia.in/bookmarks/29765/showthread.html
Url - http://thatstamil.oneindia.in/bookmarks/
I hope You can get more pageviews on this site.
Thank You!
1. Memory loss heroine
2. Climax-ல heroine சொல்லுற டயலாக்.
=============
ஃப்ரெஞ்ச் பட சேஸிங் சீன் -ன்னு சொல்லியிருக்கீங்க..!!! அதனால.. அது "District B13"- ன்னு நினைக்கிறேன். இந்த படத்தை பார்த்தா.. எதுல இருந்து சுட்டு இருக்காங்கன்னு தெரியும்.
===========
அதெல்லாம்.. சரி...!!! நாங்ககெல்லாம் ‘திருட்டு டிவிடி’ பார்த்தா.. நம்ம சினிமாகாரங்க ‘உழைப்பை திருடுறோம்’-ன்னு கத்துறாங்களே....!!
இவங்க மட்டும் 10 படத்துல இருந்து scene திருடி படம் எடுக்கலாமா???
:):):)
I attached this post an Thatstamil Bookmark's. Continue bookmark in this site.//
மிக்க நன்றி ஷங்கர்.. உங்களின் இணைப்புக்கும், வருகைக்கும், கருத்துக்கும்.
மிக்க நன்றி ராம சுப்ரமணியம். ஏதோ நம்மால முடிஞ்சது..
அங்க தான் இருக்கு நம்ம ஆளுங்களோட திறைமை.. கொஞ்ச்சூண்டை எடுத்துகிட்டு சும்மா பின்னுபிடுவாங்கள்லே..
எனக்கு இன்னும் சரியா ஞாபகம் வரலை. பாலா.. நீங்க படம் பார்த்துட்டு சொல்லுங்க..
இவங்க மட்டும் 10 படத்துல இருந்து scene திருடி படம் எடுக்கலாமா???//
நீங்க ஏன் இப்படி நினைக்கிறீங்க..? நாலு நல்ல படம் பார்த்து அதையெல்லாம் அந்த அந்த மொழி தெரியாத தமிழ் ஆளுங்களுக்கு எப்படித்தான் அறிமுகப்படுத்தறதாம்?
சீனை திருடறது இல்லை பாலா. ஒரு இன்ஸ்பிரேஷந்தான். அதை வச்சு டெவலப் பண்ணி புதுசா வேற ஒண்ணை தர்றாங்க.. பாருங்க.. மொமெண்டோவோட இன்ஸ்ப்ரேஷந்தான் க்ளீன் ஸ்லேட். அது போலதான் கஜினி பேசிக் ஐடியா மட்டும் தான் மொமெண்டோ.. மத்தபடி கதை வேற.. தலைவா.
எனக்கு தெரிந்து உலகம் பூராவும் யாருமே சொந்தமா யோசிச்சு பண்ணினதா சரித்திரமே கிடையாது.. எல்லா புது விசயத்துக்கும் ஏதோ ஓரு பழைய விஷயத்தோட இன்ஸ்பரேஷன் கண்டிப்பாக இருக்கும் என்பது என்னுடய கருத்து.
என்ன கொடுமை சரவணன் இது??!!!
District B13-ஐ விட இது ‘The Protector' (ஜாக்கி நடிச்சது இல்ல...!! டோனி ஜா நடிச்சது) படத்தோட சேஸிங் சீன் மாதிரி இருக்கு.
=============
District B13 - சேஸிங் முழுக்க தரைக்கு மேல (கட்டிடம் to கட்டிடம்) நடக்கும். ‘The Protector' சேஸிங், இந்த படத்துல மாதிரி பெரும்பாலும் தரையில நடக்கும்.
ஆனா ஒன்னு.. டோனி ஜா-வோ.. இல்ல, டேவிட் பெல்லெ-வோ இத பார்த்தா... நிச்சயம் தற்கொலை பண்ணிக்குவாங்க..!!!
http://www.youtube.com/watch?v=vToKQ5QwTD0
-----------------
The Protector - சேஸிங் வீடியோ
http://www.youtube.com/watch?v=p310Y0tctr8
=============
The Protector- படத்தை பார்க்கலைன்னா ஒரு முறை DVD கிடைச்சா பாருங்க.!! அந்த படத்துல ஒரு 6 நிமிட சண்டை, கட் இல்லாம ஒரே ஷாட்-ல நடக்கும். அதுக்கு அவங்க எடுத்துக்கிட்டது வெறும் 4 டேக்-தான். இத்தனைக்கும் அந்த 4 டேக்கும் ஓகே ஆனதுதான்.
Special Feature-la காண்பிச்சி இருப்பாங்க.
வீடியோ இங்கே..!!!
http://www.youtube.com/watch?v=yXIGP6_fNZk
தாராளமா.. செய்யலாம் தல..!!! ஆனா கடன் கொடுத்த Bank, கருமாரி ஆத்தா, சாய்பாபா-ன்னு எல்லாருக்கும் “நன்றி”-ன்னு டைட்டில் கார்டுக்கு முன்னாடி 1-2 நிமிஷதுக்கு ஸ்லைட் போடுறாங்களே.. அந்த “நன்றி”-ஐ காப்பி அடிச்ச படத்துக்கும் போடலாமே..!!!
போட மாட்டாங்க..!! 2 பிரச்சனை ஆய்டும்..!!
1. டைட்டில் கார்டை விட இந்த லிஸ்ட் பெரிசா இருக்கும்.
2. இவங்களுக்கு சொந்தமா யோசிக்க தெரியலன்னு எல்லாருக்கும் தெரிஞ்சுடும்.
==================
இந்த பதிவுக்கு இது off topic-ங்கறனால இதை பத்தி ஒரு பதிவு போடுங்க...!! நாம அங்க பேசுவோம்.
ஒரு திருத்தம்...!! க்ளீன் ஸ்லேட்-டோட இன்ஸ்ப்ரேஷந்தான் மொமெண்டோ.
Clean Slate Release Year (1994)
Memento Release Year (2000)
அதான் சொன்னேன் இல்ல.. ஏதோ நம்மாள முடிஞ்சது.. டிரை பண்ணியிருக்காஙக.. அவ்வளவு தான்.
ஹி.. ஹி.. இது என்ன பள்ளிக்கூட பாட புத்தகமா.. மறக்கறதுக்கு..!!! திரைப்படமாச்சே..!!!!
:-)))))))
நீநீநீநீங்ங்ங்ங்ககககக என்னை ரொம்ப புகழுறீங்க..!!! (பாருய்யா... புகழ்ச்சி பிடிக்காத ஆளு)
//இதில் ராத்திரி தூங்கி எழுந்தால் முதல் நாள் நடந்தது தெரியாது.//
இது இங்கலிஷ் படமான "50 First Dates"ன் கதை. என்னடா இந்த படத்தை விட்டு வைத்திருக்கீரார்களே என பலமுறை யோசித்திருக்கீறேன் ..... இப்போது அதையும் எடுத்தாகிவிட்டது. அந்த படத்தை பற்றி மேலும் விபரம் இங்கே.//
நான் சொல்ல வந்தேன் இவர் சொல்லிட்டார். என்ன அது காமெடி படம். இதுல கொஞ்சம் ஆகசன்
//
Mee to thought of "District 13" movie. Why? The pose of the hero and being over the building. Haven't seen Protector nor this Telugu movie yet.
BTW, District 13 is available in isohunt.
படங்களின் ஹைலைட் கண்டிப்பாக, ரிய சென் மற்றும் ஸ்னேஹா உள்ளல்.... டோடல்லி ஒரு குஜால் சஸ்பென்ஸ் த்ரில்லர் .... உங்கள் பொறை படியா விமர்சனத்திற்கு நன்றி சங்கரே...
ரஃபிக் ராஜா
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்