நடிகர் அபிஷேக் என்றால் பல பேருக்கு தெரியாது. கோலங்கள்ல் பாஸ்கர், அபியின் கணவன் என்றால் தமிழ்நாட்டிற்க்கே பிரபலம். முதல் முதலாய் தி.ஜாவின் மோகமுள் படத்தில் கதாநாயகனாய் அறிமுகமாகி, டீவி சீரியல்களில் பிரபலம். இவர் முதல் முறையாய் இயக்கியிருக்கும் படம்.
புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளருக்கும், அவன் துரத்தி துரத்தி காதலித்த காவ்யாவுக்கும் இடையே நடக்கும் கதை. பரிசு பெற்ற விழாவில் தன் வெற்றிக்கு பின்னால், தன் கதைகளின் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் அவள் தான் காவ்யா என்று ஆரம்பிக்கும் ப்ளாஷ் பேக் காட்சிகள், மெல்ல மெல்ல மிக கிராசுவலாய் டெம்போ பல இடங்களில் ஏறி இறங்கி, கடைசி இருபது நிமிடங்கள் நிச்சயம் ஒரு எதிர்பார்க்காத ஒரு பரபரப்பை கொடுத்திருக்கிறது இந்தக் கதை. ஆரம்பக் காட்சிகளில் காவ்யாவை எரிச்சல் படுத்தி அவரை கவர முயற்சி செய்யும் காட்சிகள், கொஞ்சம் நெருக்கமாகி லேசான ரொமான்ஸ் காட்சிகள், காதல் சொன்ன பிறகு வரும் காட்சிகளில் எல்லாம் வசனங்கள் நன்றாக இருக்கிறது. பல காட்சிகளில் பாலசந்தர் ஸ்டைலை தொடர முயற்சித்திருக்கிறார். பட் நடிகர்களின் ஒத்துழைப்பு இல்லாததாலும், ப்ளாட்டான ஷாட்களினாலும் ஏறாமல் போய் விடுகிறது.
இரண்டாவது பாதியில் அபினவ் வந்ததும், நிஜமாகவே படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு ஒரு பெரிய ரிலீபாக இருக்கும். அவ்வளவு நேரம் மிக இறுக்கமான உணர்வை மட்டுமே தந்து கொண்டிருந்த முதல் பாதியிலிருந்து கொஞ்சம் வைபரண்ட்டான கலருக்கும், அமெரிக்க லொகேஷனுக்கும் மாறுவதால். ஒரு பக்கா லவ்வபிள் பெண் பித்தன் கேரக்டரை வசனங்கள் மூலமே சொல்ல முயற்சித்ததும், அதை தன் இயல்பான நடிப்பால் கொண்டு வந்த அபினவுக்கு பாராட்டுக்கள்.
கதாநாயகன் ஷானு பார்க்க ஆழகாய் இருக்கிறார். ஆனால் கண்களும், பாடி லேங்குவேஜும் ஒத்துழைக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறது. இம்மாதிரியான கேரக்டர் ஒரு நடிகனுக்கு லட்டு மாதிரியானது. கை நழுவி ஓடிவிட்டுவிட்டார் லட்டை. க்ளைமாக்ஸ் காட்சியில் அவருக்கு பதிலாய் பிண்ணனி குரல் ( அநேகமாய் இயக்குனர் அபிஷேக் என்று நினைக்கிறேன்) கொடுத்திருப்ப்வர் நடித்ததுதான் அதிகம். கதாநாயகி நிவேதிதா அறிமுகமாகும் முதல் ஷாட்டில் அழகாய் இருக்கிறார். அதன் பிறகு பல காட்சிகளில் வேறு ஒரு டோனில் இருக்கிறார். என்னதான் கதை அவரை சுற்றி நடந்தாலும், அவரின் மேல் பரிதாபம் வர மாட்டேன் என்கிறது.
அபு ஷாவின் ஒளிப்பதிவு துல்லியம். அதே போல் பால்.ஜேவின் பிண்ணனி இசை, குறிப்பிடத்தக்கது, முக்கியமாய் வயலினை ஒரு கேரக்டர் போல ப்டம் நெடுக ஓடவிடிருப்பது வாவ்.. இயக்குனர் அபிஷேக்கின் முதல் திரைப்படம், வழக்கமான ஒரு கதையை எடுக்காமல் கொஞ்சம் வித்யாசமான லைனை எடுத்ததிற்காக பாராட்ட வேண்டும். மிக பரபரப்பாய் துள்ளலாய், எடுக்க நினைத்திருந்து வசனங்கள் இருந்தாலும், அதை திரையில் தன் நடிகர்கள் மூலம் வெளிப்படுத்த தவறிவிட்டார். படத்தில் பல கேள்விகள் இருகிறது? ஏன் காவ்யா இவ்வ்ளவு பிரச்சனைகளுக்கு பின்பும் விலகாமல் இருக்கிறாள்? அபினவை எப்படி காவ்யாவின் கணவனுக்கு தெரியும்? பிரபல எழுத்தாளர் என்கிற அடையாளத்தோடு இருக்கும் நரேனை, பரிசுகளும் பாராட்டுகளும் பெற்ற எழுத்தாளரை அவரது விசிறிக்கு எப்படி பல முறை சந்தித்தும் அடையாளம் தெரியாமல் போகும்? ஏன் காவ்யா ஒரு வயலினிஸ்ட்?. ஏன் கதைக்கு ஒரு ப்ளாஷ் பேக்? ஏன் திரைக்கதையில் இவ்வளவு ஸ்லோனஸ்..? திடிரென க்ளைமாக்ஸில் தற்கொலை குறித்தான ஆதங்கம் ஏன் ஏழுத்தாளர் நரேனுக்கு என்பது போன்ற கேள்விகள் எழுந்தாலும். முதல் முயற்சியில் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
கதை – புதிய முயற்சிகளை வரவேற்பவர்களுக்கு
Comments
அப்ப நானும் வரவேற்கிறேன்.
சங்கர்
பொருளாளர்
மொ.ப.மு.க (தலைவர் - தண்டோரா)
////
books kku discount undaaa????
இப்படி ஒரு படம் வருவதே நீங்கள் சொல்லித்தான் தெரியும். நான் படிக்கும் இணைய தளங்களில், ஒரு செய்தி கூட வரவில்லையே!
நல்ல முயற்சியை வரவேற்று, அறிமுகபடுத்தும் அண்ணன் வாழ்க வாழ்க!
---
புத்தகத்திற்கு வாழ்த்துக்கள்.
நிரந்தர யுத்தே,
அஞ்சா சிங்கமே,
சொக்க தங்கமே
வாழ்த்த வயதில்லை,
வாழ்க பல்லாண்டு..
- துணை யூத்து...:))
anna.. thairiyam ennachu?? paatheengala??
நிரந்தர யுத்தே,
அஞ்சா சிங்கமே,
சொக்க தங்கமே
வாழ்த்த வயதில்லை,
வாழ்க பல்லாண்டு..
- துணை துணை யூத்து...:
விழா எங்கே நடைபெறுகிறது ?
கதையின் கதையை அறிமுகப்படுத்திய கதாநாயகன் கேபிள் அவர்கள் வாழ்க!வாழ்க!
மேலும் வளர பிரார்த்திக்கிறேன்.
- Muthu
with regards
Anusha.R