Thottal Thodarum

Feb 25, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா – திரை விமர்சனம்

vinnai-thaandi-varuvaaya-01காதலர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று அவர்களுக்குள் வருவது. இன்னொன்று, காதலர்களுக்கு மற்றவர்களால் வருவது. இதில் ரெண்டுமே இருந்தால் எப்படியிருக்கும்? எவ்வளவோ பொண்ணுங்க இருக்கும் போது நான் ஏன் சார் ஜெஸ்ஸிய காதலிச்சேன்? என்று சிம்பு படம் முழுவதும் கேட்கும் கேள்வி எல்லா இளைஞர்களும், இளைஞிகளும் அவர்களுக்குள்ளாகவோ, அலலது நெருங்கிய நண்பர்களிடமோ கேட்டிருப்பார்கள். காதலின் சுகத்தையும், குழப்பத்தையும், அதனால் ஏற்படும் வலியையும் மிக அழகாய் சொல்லியிருக்கிறார்கள்.

இஞினியரிங் படித்துவிட்டு சினிமா துறையில் அசிஸ்டெண்ட் டைரக்டராக சேர்ந்து ஒரு படைப்பாளியாக ஆசைப்படும் கார்த்திக். அவன் குடியேறும் வீட்டின் ஓனரின் மகள் ஜெஸ்ஸி. மலையாளி. polaris வேலை பார்ப்பவள். பார்த்தவுடன் கார்திக்கின் மனதில் ப்ப்பச்சக் என்று ஒட்டிவிட, வழக்கமாய் எல்லா இளைஞர்களும் செய்வதையே கார்த்திக்கும் செய்ய, ஒரு சமயம் இது எல்லாம் ஒத்து வராது. என்று சொல்லிவிட்டு, ப்ரெண்டாக மட்டுமாவது இருப்போம் என்று ஒப்பந்தம் போட்டு, ஒப்பந்தம் போடுவதே உடைப்பதற்காகத்தான் என்று காதல் வயப்பட்டு, வீட்டை நினைத்து பயந்து,குழம்பி, தானும் குழம்பி, கார்திகையும் குழப்பும் ஜெஸ்ஸி. ஒரு கட்டத்தில் வீட்டிற்கு தெரிந்து பிரச்சனையாகி வேறு ஒருவனுடன் திருமணம் நிச்சயமாகி விட, கார்த்திக்கும் ஜெஸ்ஸியும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை வெள்ளித்திரையில் பார்க்க..
vinnai-thaandi-varuvaaya-02 கார்த்திக்காக சிம்பு. விரல் வித்தை காட்டும் பையனில்லை இவர். இவருக்குள் இவ்வளவு மெச்சூர்டான நடிப்பு இருக்கிறதா..? ஜெஸ்ஸியை பார்த்தவுடனேயே காதல் வயப்படுவதாகட்டும், காதல் கைகூடுவதற்காக அலைவதாகட்டும், கே.எப்.சியில் அவர் ஜெஸ்ஸியை பாலோ செய்ய, கிட்டே வந்த ஜெஸ்ஸி ”நீ என்னை பாலோ செய்றியா.?” என்று கேட்க, இவர் இல்லையே நீங்க தான் என்று சொல்ல, என் ஆபீஸ் இங்க் இருக்கு என்று ஜெஸ்ஸி சொல்ல. கே.எப்.சியும் இங்கதான் இருக்கு என்று சொல்லிவிட்டு ஜெஸ்ஸி போவதையே பார்த்துக் கொண்டிருக்க, சேல்ஸ்மேன் ஆர்டர் கேட்க, இருய்யா.. அவ போற வரைக்குமாவது பாத்துக்கறேன் என்று சொல்வது இளைஞர்களின் மன வெளிப்பாடு. அதே நேரம் கோபப்படும் இடத்தில் கோபப்படுவதாகட்டும், பல இடங்களில் வாய்ஸ் மாடுலேஷனிலேயே காதலையும், கோபத்தையும், இயலாமையையும் வெளிபடுத்தியிருக்கும் விதமாகட்டும், முக்கியமாய் க்ளைமாக்ஸ் காட்சியில் எனக்குள் ஒரு பெண் இருக்கிறாள் என்று ஜெஸ்ஸியிடமே ஜெஸ்ஸியை பற்றி சொல்லும் காட்சியில் சிம்பு நடிப்பில் மனதை அள்ளுகிறார். சிம்பு உங்களிடம் நிறைய எதிர்பார்கிறேன். விரல் வித்தைகளைவிட..
vinnai-thaandi-varuvaaya-14-02-09 எனக்கு அவ்வளவாக திரிஷாவை பிடிக்காது. ஆனால் இந்த படத்தில் என் மனதை கொள்ளை கொண்டுவிட்டார். அவ்வளவு க்யூட். நம்பக்கத்துவீட்டு பெண்ணை போல நம் கண் முன்னே வளைய வருகிறார் ஜெஸ்ஸி சாரி திரிஷா. அவ்வளவு ஆப்ட் காஸ்டிங்க். சிம்புவை பார்வையாலேயே அளப்பதாகட்டும், கண்களின் குறுகுறுப்ப்பிலேயே பல விஷயஙக்ளை வெளிப்படுத்தும் முக பாவங்களாகட்டும், காதல வேண்டாமென மனதில் நினைத்தாலும், வேண்டுமென நினைக்கும் இன்னொரு பக்கம் அலைகழிந்து தானும் குழம்பி, அவளையே நம்பி சுத்திக் கொண்டிருக்கும் கார்த்திக்கையும் குழப்புவதாகட்டும், பெரும்பாலான காதலிகள், செய்யும் வேலையை கன கச்சிதமாய் வெளிப்படுத்தியிருக்கிறார். த்ரிஷா. க்ளைமாக்ஸிக்கு முன் சிம்புவும், இவரும் பேசும் காட்சியில் சிம்புவுடன் போட்டி போட்டு முயன்று தோற்றிருக்கிறார்.
vinnai-thaandi-varuvaya-poster இசை ஏ.ஆர்.ரஹ்மான். சொல்ல வேண்டியதில்லை ஏற்கனவே பாடல்கள் சூப்பர் ஹிட். படம் ஆரம்பத்தில் வரும் கிடார் படம் முழுவதும் விரவி நம்மை படத்தின் காட்சிகளோடு மிக இயல்பாய் ஒன்ற வைத்துவிடுகிறார். ஓமனப் பெண்ணே, பாடல், ஹோசன்னா பாடலும் படத்தில் பார்கையில் அட்டகாசம். ஆரோமலே பாடலையும், விண்ணைத்தாண்டி வருவாயா பாடலும் ஒரு ஆர்.ஆர். டிராக்காகவே உபயோகித்து மனதை அறுக்கிறார். இரண்டொரு இடத்தில் மிக நுணுக்கமான காட்சிகளில் வரும் ராக் இசை பிண்ணனி மட்டும் உறுத்துகிறது. மற்றபடி மீண்டும் ரஹமான் ஒரு இசை ராஜாங்கத்தை நடத்தியிருகிறார். நீங்கள் படம் பார்த்து விட்டு வெளி வரும் போது பாடல்களை முணுமுணுக்காமல் வந்தால் தான் அதிசயம். ஹாண்டிங் மியூசிக்.
Vinnaithandi-Varuvaaya-_5_ மனோஜின் ஓளிப்பதிவை பற்றி சொல்லவே வேண்டியதில்லை ஏற்கனவே ஈரத்தில் கண்களுக்கு ஜில்லிப்பூட்டியவர்தான். மீண்டும் தன் திறமையான ஒளிப்பதிவால் மனதில் நிற்கிறார். முக்கியமாய் அந்த கேரளா வீடும், வெளிநாட்டு லொக்கேஷன் பாடல் காட்சிகளிலும், அமெரிக்க காட்சிகளிலும் அவ்வளவு துல்லியம். பல இடங்களில் வரும் அருமையான ஸ்டெடிகேம் க்ளோசப் காட்சிகளில் இவரும், எடிட்ட்ர் ஆண்டனியும் பின்னியெடுத்திருக்கிறார்கள்.

எழுதி இயக்கியிருப்பது கெளதம் வாசுதேவ் மேனன். சாதாரணமாகவே மனுஷனுக்கு லவ் ட்ராக் என்றாலே இவர் படங்களில் உருகி வழியும், இது காதலை பற்றிய படம் கேட்க வேண்டுமா? புதுசாய் காட்சிகள் ஏதுமில்லாவிட்டாலும், மிக சுவாரஸ்யமான காட்சியமைப்பினாலும், நடிகர்களின் ஒத்துழைப்பினாலும், ஒளிப்பதிவாளரினாலும், எடிட்டரினாலும், ஷார்ட் அண்ட் ஸ்வீட்டான வசனங்களினாலும், இயல்பான கேரக்டர்களினாலும் மனதை கவருகிறார். க்ளைமாக்ஸ் காட்சி தமிழ் சினிமாவுக்கு புதுசுதான். காதலர்களின் பாடி லேங்குவேஜ் ஆகட்டும், டயலாக் டெலிவரியாகட்டும் அவ்வளவு இயல்பு. கண் முன்னே இரண்டு பேரை உலவ விட்டிருப்பது போன்ற உணர்வை கொண்டுவந்திருப்பதில் இயக்குனருக்கு வெற்றியே. சிம்பு கூடவே வரும் கேமராமேன் நண்பரின் கேரக்டரின் மூலம் பல இடங்களில் வாய்ஸ் ஓவரிலும், சில இடங்களில் நச்சென்ற வசனங்களில் மனதில் நிற்க வைத்திருக்கிறார். (படத்தயாரிப்பாளர்களில் ஒருவரான கணேஷ்)
vinnai-thandi-varuvaya6
சில இடங்களில் வசனங்களை கொண்டே அந்த காட்சிக்கான காரணங்களையோ, அல்லது முந்திய காட்சியில் எப்படி, எவ்வாறு என்கிற கேள்விகளுக்குகான பதில்களை சின்ன சின்ன வசனங்களில் வெளிப்படுத்தியிருப்பது நைஸ். அதே போல் தனிமையான ஒரு பங்களாவில் ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டு நின்று கொண்டிருக்கும் போது பேசும் வசனங்கள் அத்துனையிலும் காதல். க்ளைமாக்ஸ் காட்சியில் ஜெஸ்ஸியை பற்றி சிம்பு பேசும் வசனங்களும் சரி, அவரின் நடிப்பும் சரி.. கவுதம் சிம்புவுக்கான சரியான தீனி கொடுத்திருக்கிறார். பல காட்சிகள் இதற்கு முன் எவ்வளவோ படங்களில் பார்த்த மாதிரி இருந்தாலும் நாயகன், நாயகி இடையே உள்ள இயல்புத்தன்மையினால் ப்ரெஷ்ஷாக இருக்கிறது.
vinnai-thandi-varuvaya53 இவருக்கு மட்டும் எப்படி பாடல்கள் இவ்வளவு அருமையாய் அமைகிறது?. பாடலகளையும், அதை படமாக்கியிருக்கும் விதமும், முக்கியமாய் சில பாடல்களை பின்ன்ணி இசையாய் உபயோகபடுத்தி, க்ளைமாக்ஸ் காட்சியில் மனதை அறுக்கும் அளவிற்கு ரஹ்மான் இசையை பயன்படுத்தியிருகிறார். படத்தில் மைனஸே இல்லையா என்றால் நிச்சயம் இருக்கிறது. திடீரென சிம்பு தனக்கு பாக்ஸிங் தெரியும் என்று சொல்லி சண்டை போடும் காட்சி, ஜெஸ்ஸியின் சில காட்சிகளின் குழப்பத்துக்கான காரணங்கள், அலப்புழாவில் ஜெஸ்ஸியை எந்தவிதமான பெரிய முயற்சியில்லாமல் போய் நிற்கும் முதல் சர்சிலேயே ஜெஸ்ஸி வருவது, சில இடங்களில் இன்னும் கொஞ்சம் எமோஷன் இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் மேலோங்குவது, போன்ற சிற்சில குறைகளை தவிர. .. அவர்கள் விளம்பரங்களில் சொல்லியிருப்பது போல, க்ளைமாக்ஸினால் ஒரு வித்யாசமான காதல் கதை மீண்டும். க்யூட் & ஸ்வீட் மியூசிக்கல் லவ் ஸ்டோரி.

விண்ணைத்தாண்டி வருவாயா – A Sure Shot Feel Good, Lovable Movie



கேபிள் சங்கர்
Post a Comment

85 comments:

அகல்விளக்கு said...

ஹய்யா... பர்ஸ்ட்டு...

குறை ஒன்றும் இல்லை !!! said...

நான் தான் முதல்ல வந்து இருக்கேன்

அகல்விளக்கு said...

//எனக்குள் ஒரு பெண் இருக்கிறாள் என்று ஜெஸ்ஸியிடமே ஜெஸ்ஸியை பற்றி சொல்லும் காட்சியில் சிம்பு நடிப்பில் மனதை அள்ளுகிறார். //

இதற்க்காகவே படம் பார்க்கலாம் என்றிருக்கிறேன்....

:-)

அருமையான விமர்சனம்...

நன்றி அண்ணா...

குறை ஒன்றும் இல்லை !!! said...

அப்போ !!!! சிம்புவுக்கு முதல் ஹிட்டா ( ஹீரோயின் துணையில்லாம ( துணி இல்லேங்க !!!)

அகல்விளக்கு said...

/// குறை ஒன்றும் இல்லை !!!
12:54 AM

நான் தான் முதல்ல வந்து இருக்கேன்
///

இல்ல

இல்ல

நானு....

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

பாட்டுக்காக மட்டும் பத்துதடவ பாக்கலாம் .......

விமர்சனம் மிக அருமை

gulf-tamilan said...

இன்னைக்கே ரிலிஸ் ஆயிடுச்சா??பாஸிடிவ் விமர்ச்சனம்!!! சிம்புக்கு ஹிட் படமா?லக்தான்

Prabhu said...

ஊஃப்..... ம்ம்ம்ம்...

Thenammai Lakshmanan said...

good review Shangkarji

க ரா said...

ஒங்க விமர்சனத்துனால படத கண்டிப்பா பார்கணும்ற உணர்வ ஏற்படுத்தீட்டிங்க. படம் நல்லாருக்குமா இல்லையா தெரியாது. ஆனால் உங்க விமர்சனம் சூப்பர். யூ ஆர் ராக்கிங்னா!

பழமைபேசி said...

பொதுவாப் படங்க பாக்குறது இல்ல.... உங்களை நம்பி இதைப் பாக்கப் போறேன் சார்!

பிரபாகர் said...

எங்க பழமைபேசி அண்ணனையே படம் பார்க்க தூண்டற அளவுக்கு சங்கர் அண்ணா விமர்சனம் இருக்குங்கறத நினைக்கும்போது படத்த கண்டிப்பா பாத்துடனும்னு தோணுது. (சிம்பு படம் தியேட்டர்ல பாத்ததே இல்லன்னாலும்)...

ரொம்ப நல்லா விமர்சிச்சிருக்கீங்க... கலக்குங்கண்ணா...

பிரபாகர்.

இராகவன் நைஜிரியா said...

நல்ல இயக்குனர் கிடைத்தால் சிம்புவும் நடிப்பார் என காண்பித்துள்ள படம் என நினைக்கின்றேன்.

நல்ல கதை, திரைக்கதை, இயக்குனர் - இந்த மூவர் கூட்டணிதான் ரியல் ஹீரோ. இது இல்லை என்றால் எல்லா ஹீரோக்களும் ஜீரோதான்.

shabi said...

இன்ஃபோஸிசில்////... பொலாரிஸா இல்ல இன்ஃபோசிஸா இல்ல ரெண்டும் ஒரே கம்பெனி பேரா பஸ் கூட பொலாரிஸ்னு வரும்....

Mugilan said...

தாமரை - ரஹ்மான் கூட்டணியின் வெற்றி பாடல்கள் எப்படி படமாக்கப்பட்டுள்ளன என்றும், சிம்பு எப்படி விரலை ஆட்டாமல் நடித்துள்ளார் என்பதையும் காண ஆவலாய் இருக்கின்றது!

vijay 50 movies said...

www.superstarvijay.blogspot.com இவ் இணையத்தள முகவரிக்கு உள் நுழைந்து விஜயின் 49 படங்களில் சிறந்த படங்களுக்கு வாக்களியுங்கள்
visit now www.superstarvijay.blogspot.com for vote vijay's best 50 movies

Unknown said...

விமர்சனம் படம் பாக்கத்தூண்டுது.. இங்க ரிலீஸ் ஆகட்டும் பாத்துருவோம்..

//Written by vijay
4:10 AM
www.superstarvijay.blogspot.com இவ் இணையத்தள முகவரிக்கு உள் நுழைந்து விஜயின் 49 படங்களில் சிறந்த படங்களுக்கு வாக்களியுங்கள்
visit now www.superstarvijay.blogspot.com for vote vijay's best 50 movies//

அடுத்த படமும் வரட்டும் அதுவாவது தேறுதான்னு பாத்துட்டு ஓட்டுப் போடுறோம்.. :)

புலவன் புலிகேசி said...

தல சூப்பர் விமர்சனம்...நாளைக்குத்தான் போஓறேன்...வந்து சொல்றேன்...

செந்தில் நாதன் Senthil Nathan said...

பார்த்துருவோம்

Raghu said...

அதுக்குள்ள‌ விம‌ர்ச‌ன‌மா?........அச‌த்துறிங்க‌:)

என‌க்கு சிம்புவையும் புடிக்காது, த்ரிஷாவையும் புடிக்காது. ஆனாலும் கெள‌த‌ம்-ர‌ஹ்மான் காம்பினேஷ‌னுக்காக‌வே ஒரு த‌ட‌வ‌ பாக்க‌ணும்

Sridharan said...

அருமையான திரை விமர்சனம்...

வெற்றி said...

இந்த விமர்சனம் நீங்க பண்ணதா இல்ல உங்க பையன் பண்ணதான்னு டவுட்டு இருந்துச்சு..ஆனா த்ரிஷாவை பிடிக்காது என்று சொன்னதால் எழுதியவர் ரியல் யூத்தல்ல என்பதை உணர்ந்து கொண்டேன் :))

சைவகொத்துப்பரோட்டா said...

இந்த படம் பார்க்கும் ஆவல் அதிகரித்து விட்டது, உங்கள் விமர்சனம் படித்த பின்பு.

Paleo God said...

புது வூடா தல, கலக்குங்க:))

படம் விமர்சனம் லைட்னிங் பாஸ்ட்:))

Sukumar said...

என்ன சொல்றீங்க... சிம்பு படம் நல்லா இருக்கா... ஒ மை காட்...

மயிலாடுதுறை சிவா said...

சிம்பு தம்பி எங்க ஊர் மயிலாடுதுறை! தம்பி ஜெயிக்க வேண்டும்!

படத்தை பார்த்தே தீர வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது உங்களது விமர்சனத்தை படித்தவுடன்...

நன்றி

மயிலாடுதுறை சிவா...

vanila said...

அது எப்படி எல்லாரும் அழகான பொண்ணுன்னா.. பக்கத்து வீடு பொண்ணு மாதிரி'ன்னு சொல்லறாங்க.. நமக்கும் பக்கத்து வீட்டுல ஒன்னு வாச்சிருக்கே.. ஹ்ம்.. மத்த படி நீங்க கொடுத்துருக்குற Photo's ல இருக்கிற Fonts லையே கடைசி Font தான் ஒரு feel அ கொடுக்குது..உங்க விமர்சனம் வழக்கம் போல இந்த வாரமும் முதல் இடத்துல இருக்கு..

Tech Shankar said...

உங்கள் விமர்சனத்தைப் படித்ததும் படம் பார்த்த திருப்தி ஏற்படுகிறது.

நன்றியுடன்,
டெக்‌ஷங்கர் @ TechShankar.
முடிந்தால் ஊட்டாண்ட வாங்க..

Glorious World Record Moments – Sachin Tendulkar 200 Runs

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான விமர்சனம்

மதுரை சரவணன் said...

ungkal vimarsanam ennai padam paarkka thoondukirathu. vaalththukkal.

butterfly Surya said...

அப்போ... சிம்பு பன்ச் டைலாக் பேசலையா..?? OMG

guru said...

// படத்தில் என் மனதை கொள்ளை கொண்டுவிட்டார். அவ்வளவு க்யூட். நம்பக்கத்துவீட்டு பெண்ணை போல நம் கண் முன்னே வளைய வருகிறார்//

சரி அப்படின்னா இன்னிக்கு டிக்கெட் போட்டுட வேண்டியதுதான்....

Cable சங்கர் said...

/பொதுவாப் படங்க பாக்குறது இல்ல.... உங்களை நம்பி இதைப் பாக்கப் போறேன் சார்//

அஹா.. என்னோட படம் ரிலீஸ் ஆனாக் கூட இவ்வளவு டென்ஷன் ஆக மாட்டேன் உங்க பின்னூட்டம் பார்த்துட்டு கலங்குதே. படம் பார்த்துட்டு எனக்கு சொல்லுங்க..

Cable சங்கர் said...

மைனஸ் ஓட்டு போட்ட அனுதினனுக்கு நன்றி..

விக்னேஷ்வரி said...

என்ன, சிம்பு நடிச்சிருக்காரா... அப்போ அவசியம் பார்க்க வேண்டிய படம் தான்.

நல்ல விமர்சனம், வழக்கம் போல்.

வேங்கை said...

நல்ல விமர்சனம்
நன்றி

மணி said...

நல்ல விமர்சனம் நல்ல தெளிவான பார்வை படம் வெற்றி பெற வாழ்த்துகள்

பா.வேல்முருகன் said...

கெளதம் சார் படத்துல படம் வர்றதுக்கு முன்னால, பாட்டு அவ்ளோ ஹிட் ஆகறதில்ல(எல்லா படத்துலயும் இல்ல). படம் வந்த பிறகு பாட்டு எல்லாமே பயங்கர ஹிட் ஆயிடுது. மனுஷன் ஒவ்வொரு காட்சியையும் பீல் பண்ணி எடுப்பார் போல.

படத்தோட களம் எதுவா இருந்தாலும் லவ் பீல் மட்டும் எந்தப்படத்துலயும் குறைஞ்சதே இல்ல.

உங்கள் விமர்சனம் மிக மிக அருமை (இது எல்லாருக்குமே தெரிஞ்சதுதானே).

Ravikumar Tirupur said...

அடங்கொகமக்கா! சிம்பு “விரல் வித்தை தாண்டி” வந்துட்டாரா!!! பாத்துருவோமே.

ரெட்மகி said...

Good review

Unknown said...

ஆமா இன்னிக்கு தான படம் ரிலீஸ்

Naadodigal said...
This comment has been removed by the author.
Naadodigal said...

வசிஷ்டர் மாதிரி ரொம்ப நாள் கழிச்சு ஒரு படத்த நல்லா இருக்குன்னு சொல்லி இருக்கீங்க தலைவா....அதுக்காகவே பாத்துடலாம். :-)

Ganesan said...

கேபிள் எல்லா படங்களையும் குறை சொல்லுகிறார் என்ற சிலரின் குறளிவித்தைகளை ,மாற்றி, அழகாக, அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள், கேபிள்.

Romeoboy said...

விமர்சனம் அருமை.......... படத்தை பார்த்துடுவோம் ..

Anonymous said...

ஐயா, உங்க கால காட்டுங்க... இப்புடி ஒடச்சு ஓடு கமுத்துறீங்களே.

Anonymous said...

நான் படங்கள் பார்ப்பது மிகவும் குறைவு. ஆனாலும், பாட்டுக்காக சிம்புவின் கோவில் மற்றும் சரவணா படங்களைப் பார்த்தேன். கோவிலில் ஒரு கை வித்தையும் இல்லையே, பஞ்ச் டயலோக் கூட இல்லை. படம் ப்ளப்பா இல்லையா என்று தெரியாது. ஆனால் பார்க்கக்கூடியதாக இருந்தது. சரவணா கூட டைம் பாசுக்காக பார்க்கலாம். சிம்புவால் நடிக்க முடியும் என்று கோவிலிலேயே உறுதிபடுத்தினாரே =))

இந்த ஸ்டில்ஸ் எல்லாம் பழைய படங்களை ஞாபகப் படுத்தவில்லையா? அலைபாயுதே (அதே கலர் உடை வேற‌, காக்கக்காக்க (அதே மாதிரி உடை), வேட்டையாடு விளையாடு ???

அன்பேசிவம் said...

இதெல்லாம் சத்தியமா ஓவரு, தல. இந்த பாஸ்ட சொன்னேன். ரைட்டு எப்படியோ மறுபடியும் ஒரு ஃபீல் குட் மூவி. படம் பார்த்துட்டு வரேன்

Ganesh Babu said...

அனேகமா நாளைக்கு படம் பார்ப்பேன்னு நினைக்கிறன், உங்க பில்ட் அப் எல்லாம் உண்மையான்னு நாளைக்கு சொல்றேன்

Yasin said...

Another superb movie from Gautham.

Unknown said...

Positive review.. :-)

Thamira said...

யாரோ சிம்புவுக்கு தப்பு தப்பா சொல்லிக்குடுக்கிறாங்கன்னு நினைக்கிறேன். இப்பிடி திடீர்னு நல்லாப் பண்ணினா அதிர்ச்சியா இருக்காதா எங்களுக்கு.!

நாளையே பார்த்துடவேண்டியதுதான்.

மதி சூடி said...

விமர்சனம் அழகு! அருமை! விண்ணை தொட வாழ்த்துக்கள்!

என்.கே.அஷோக்பரன் said...

உண்மையிலேயே beautiful love story with excellent music. படத்தை அழகாக விமர்சித்திருக்கின்றீர்கள்.

க்ளைமக்ஸ் தமிழுக்குப் புதிது மட்டுமல்ல - யதார்த்தமானதும் கூட...

உங்கள் கருத்துக்களில் அட! போட வைத்தது - //இவருக்கு மட்டும் எப்படி பாடல்கள் இவ்வளவு அருமையாய் அமைகிறது?.//

கௌதமிற்கு மச்சம் இருக்குதோ என்னவோ!

vijay 50 movies said...

www.superstarvijay.blogspot.comஇவ் வழைப்பூவிற்க்குள் நுழைந்து விஜய் இது வரை நடித்த 49 திரைப்படங்களில் சிறந்த, கவர்ந்த திரைப்படங்களுக்கு வாக்களியுங்கள்,
இவ் முடிவுகள் விஜய் நடித்து வரும் 50வது படத்தை முன்னிட்டு, விஜயின் நாளைய தீர்ப்பு முதல் இன்றைய தீர்ப்பு வரையிலான மேல் பார்வை ஒன்று வெளியீட்டு நாள் அன்று பதிவிட உங்களின் வாக்குகள் மிக அவசியம்.

மேலதிக தகவல்களுக்கு :
http://superstarvijay.blogspot.com/2010/02/blog-post_20.html

visit now to www.superstarvijay.blogspot.com for vote vijay’s best 50 movies

சாமக்கோடங்கி said...

இந்த விமர்சனத்திற்க்காகவே படம் பார்க்கலாம்.. நன்றி..

ஸ்ரீ.கிருஷ்ணா said...

விமர்சனம் சூப்பர் anna ...

பெங்களுர்காரன் said...

கேபிள் சார்...விமர்சனம் அருமை...ஆனா கதாநாயகி வேலை பாக்குறது "Polaris" என்று ஞாபகம்!

இரண்டாவது பாதி கொஞ்சம் பொறுமையை சோதிப்பது போல இருக்கு என்பது என் கருத்து :)

பனித்துளி சங்கர் said...

இன்னும் படம் பார்க்கவில்லை . உங்களின் விமர்சனம் அருமை நண்பரே .வாழ்த்துக்கள் !

எவனோ ஒருவன் said...

gowtham oru copy cat . yethavuthu nalla english padatha paathu copy pannirupparu.

எவனோ ஒருவன் said...

solla poana avaroda ella nalla padangalum english padathoda copy aagathan irukkum

எவனோ ஒருவன் said...

solla poana avaroda ella nalla padangalum english padathoda copy aagathan irukkum

Unknown said...

நன்றாக இருந்தது . அருமையான விமர்சனம்..என் நண்பனும் நன்றாக இருக்குனு தான் சொன்னான்.. எல்லா படத்தையும் முதல் நாளிலேயே பாத்ருவீங்களா ?

அன்பேசிவம் said...

தல, நேத்து நைட்டு தூங்கவே முடியலை தல, பொதுவா கெளதம் வசனங்களில் சொதப்பிடுவார். இதுல சான்ஸே இல்லை. எது எனக்கு புடிச்சதுன்னு தெரியலை ஆனா கொன்னுட்டாங்க.

Unknown said...

yenna padam pa .... cha excellent marvelous ....
ten times aavathu theatrela paarpaen ...
super love feel ....
athae ninaippaa thaan irukkaen ...
rural audiencekku second half pidikkaathu ...
chennai trichy ponra A center oorgal padam kandippaa pattyya kilappum, ......

cable anna eppothumae kalakkuavaar .......

சின்னப்பயல் said...

'விரலைத்தாண்டி வருவாயா'ன்னு கெளதம்,சிம்புவை கூட்டி வந்திருக்கிறார்..

Unknown said...

படம் நல்லா இருக்கும்ன்னு மனசுக்குள்ளே இருந்த எதிர்ப்பார்ப்பை உங்க விமர்சனம் பொய்யாக்கல

yogen said...

ரஹ்மான்- கௌதம் கூட்டணியை விட கௌதம் - ஹரிஸ் கூட்டணியே சிறந்தது. வாரணம் ஆயிரம் பாடல்கள் போல் இல்லை... எந்தப் பாடலும் மனதில் ஒட்டவில்லை. நான் உண்மையிலே எந்தப் பாடலையும் முணுமுணக்காமல்தான் தியேட்டரை விட்டு வெளியே வந்தேன். ஆனால் சிம்பு இரண்டாவது முறையாக நடித்திருக்கிறார். (கோயில் படத்திற்குப் பிறகு) அதற்காக ஒருமுறை பார்க்கலாம். மற்றபடி படம் சுமார்தான்.

Muthukumara Rajan said...

Trisha working in POlaris not in Infosys

soma said...

சார் !! நீங்க ரொம்ப நாளா தமிழ்ல ஒரு நல்ல லவ் ஸ்டோரி படத்துக்காக ஏங்கி போய் இருக்கீங்கன்னு உங்க விமர்சனத்துல இருந்து தெரியுது. அதனாலதான் ஒரு சுமாரான படம் வந்ததும் கொஞ்சம் ஓவரா உணர்ச்சி வசப்பட்டு ஆஹா ஓஹோன்னு எழுதிட்டீங்க!! உண்மையில் படம் அந்த அளவுக்கு இல்ல. second half செம இழுவை. பேசிகிட்டே இருக்காங்க. உங்க மேல செம கோபத்துல இருக்கேன். next time கரெக்டா reviewகொடுங்க!!

www.bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Cable சங்கர் said...

@akalvilakku
நன்றி

@குறை ஒன்றும் இல்லை
ஓகே ரைட்டு

@குறை ஒன்றும் இல்லை
நிச்சய ஹிட்

@உலவு.காம்
நன்றி

@கல்ப் தமிழன்
நான் ரெண்டு நாள் முன்னாடியே பாத்துட்டேன்

@பப்பு
என்ன.?

@தேனம்மை லஷ்மணன்
நன்றி

@க.இராமசாமி
நன்றி

@பழமைபேசி
அதான்னே பயமா இருக்கு

@இராகவன் நைஜிரியா
நன்றி

@ஷாபி
ஓகே மாத்திடறேன்

Cable சங்கர் said...

@முகிலன்
நிச்சயம் வெற்றி கூட்டணிதான்

@விஜய்
:)

@புலவன் புலிகேசி
நன்றி

@செந்தில்நாதன்
நன்றி
@ரகு
நிச்சயம் பார்க்கணும்

@வெற்றி
நானே ஒரு யூத்து தாங்க..:0

என்னோட லேட்டஸ்ட் தமன்னா

@சைவகொத்துபரோட்டா
நன்ரி பாருங்க

@ஷங்கர்
நன்றி

Cable சங்கர் said...

@சுகுமார் சுவாமிநாதன்
நிஜமா வே ஹிட்டுதான்

@மயிலாடுதுறை சிவா
உங்க ஊர்காரன் என்பதற்காக எல்லாம் ஹிட்டாக முடியாது படம் நல்லாருக்கனும்

@வனிலா
நன்றி

2

ஏழுமலை ரங்கநாதன் said...

சார் படத்துக்கு உங்கள் விமர்சனம் ஒரு நல்ல விளம்பரம். சமீப காலமா நல்ல லவ் ஸ்டோரி படம் ஏதும் வரலைங்கிரதுக்காக இந்த படத்துக்கு நிறைய பாசிடிவ்வா எழுதியிருக்கீங்க. என்னை பொறுத்தவரை படத்துக்கு ப்ளஸ் ரெண்டு விஷயம். ஒன்று இசை, இரண்டாவது கௌதமோட தைரியம். பாடல்கள் அனைத்துமே அருமை. விண்ணைத்தாண்டி வருவாயா தீம் பாடல் அலுப்பு வகை. அதே தீம் பின்னணியில் நிறைய வருவதால் அலுப்பு தட்டுகிறது. சில காட்சிகளில் பின்னணியில் கலக்கியிருக்கிறார். பாடல்களை நீக்கிவிட்டு படத்தை பார்த்தால் தியேட்டரில் உட்கார முடியாது.

படத்தில் கதை ஒன்றும் புதிதில்லை. படத்தின் எல்லா பிரேம்களிலும் நாயகன், நாயகி நீண்ட வசனங்கள் (English Dramatical Movie type). இந்த முயற்சி, தைரியத்திற்காக கௌதம் மேனனை பாராட்டலாம். தன் காதலிக்கு போட்டுக் காட்ட வேண்டிய ,படத்தை தமிழ் மக்கள் எல்லோரிடமும் பகிர்ந்திருக்கிறார். கதாநாயகன் கூட வரும் கேமராமேன் சற்று ஆறுதல்.

சி.வேல் said...

உங்களுக்கு வயசாகவில்லை யுத்துதான் ஓகே , அதுக்காக கெளதம் இங்கிலீஷ் படத்தில் காப்பி கட் செய்த சீன் எல்லாம் வக்காலத்து வாங்ககூடாது

சுரேகா.. said...

அப்படியே பதிவை போனில் சொன்னதற்கு மிக்க நன்றி கேபிள் ஜி! இன்னிக்கு பாக்கப்போறேன். உங்கள் வார்த்தைகளால்.......!

Vediyappan M said...

படம் பாக்குற ஆர்வத்த உண்டாக்கிட்டீங்கன்னு விமர்சனம் எழுதினேன் அதகானல, அதான் திரும்பவும் சொல்ரேன்,விமர்சனம் சூப்பர்

DREAMER said...

கேபிள் சார்,
நானும் படத்தை பார்த்தேன். அந்த 'பாக்ஸிங் தெரியும்'னு சொல்ற சீன் மட்டும் உறுத்திச்சு. மத்தபடி நீங்கள் விமர்சனத்தில் குறிப்பிட்டது போல் படமும், இசையும் ஹாண்டிங்-ஆ இருந்தது.

உங்க விமர்சனம் இன்னொரு முறை படத்தை பார்க்க தூண்டுகிறது.

நல்லாயிருக்கு சார்...

-
ஹரீஷ் நாராயண்

தினேஷ் ராம் said...

சிம்பு நடித்திருப்பதாக சொன்னார்கள். எங்க விரலால் கண்ணை குத்தி விடுவாரோ என பயந்துக் கொண்டே தான் படத்திற்கு போனேன். என்ன இருந்தாலும் கெளதம் மேனன் படம் அல்லவா!!

சிம்புவை காணோம். த்ரிஷா அழகாய் தெரிகிறார். ம்ம்.. சில பல ஆச்சரியங்கள் + எதிர்பாராத முடிவுடன் http://3.ly/tVfN

tamillook said...

தங்கள் விமர்சனத்தை தமிழ்பார்வை (www.tamillook.com) தளதில் மீள்பிரசுரம் செய்துள்ளேன். நன்றி
http://www.tamillook.com/display.aspx?id=84380bf8-59ba-4237-85e2-8d6017b98d24

Ashok Kumar J said...

வழக்கமா உங்க விமர்சனம் நல்லா இருக்கும்.

ஆனா, வெள்ளிக்கிழமை சாயங்காலம் அவசரமா உங்க விமர்சனம் படிச்சிட்டு அப்படியே படம் பார்க்க போனது ரொம்ப தப்பு. $10 தண்டமா போச்சு...

என்னா படம்? என்னா படம்??
கொன்னுட்டாங்க. படம் ஆரம்பிக்கும் போது விசில், கமென்ட் எல்லாம் வந்துச்சு. ஆனா இடைவேளைக்கு அப்புறம் யாரும் வாயே திறக்கலை. எல்லம் நொந்து போய் இருந்தாங்க.

P.S. Suresh Kumar said...

Padam Arumai. Rahmanin pinnani isai patriya yen padhivu

http://backgroundscore.blogspot.com/2010/02/vinnaithaandi-varuvaaya-background.html

Unknown said...

The review of yours for the film is also GOOD like the film.

புதியவன் said...

ஏன் சார் உங்க பக்கத்து வீட்டு பொண்ணுங்கெல்லாம் இப்படித்தான் தலையை விரிச்சு போட்டுகிட்டு இருக்காங்களா??
பாக்க சகிக்கலா. இடைவேளையிலே எழுந்து ஓடிவந்துட்டேன். கண்ணை மூடிக்கிட்டு இருந்தா கவுதமுடைய முந்தைய படங்கள் தான் நினைவுக்கு வருகிறது, ஓரே மாதிரி வசனங்கள் , எப்படி இதை குறையே இல்லாத படமுனு சொல்லறீங்க??? --புதியவன்---