Thottal Thodarum

Mar 6, 2010

அவள் பெயர் தமிழரசி – திரை விமர்சனம்

avalpeirtamizharasi_7 தமிழ் சினிமாவில் சில தலைப்புகள் மிகவும் கேட்சியாய், வித்யாசமாய் அமைவதுண்டு, அத்தோடு அம்மாதிரியான திரைப்படங்களுக்கு வித்யாசமான விளம்பரங்கள் மிக பெரிய பலமாய் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அப்படி பட்ட அழகான கவிதையான தலைப்பில் வித்யாசமான விளம்பரஙக்ளால் என்னை ஈர்த்த படம்.

காஃப் லவ் எனப்படும் சிறுவயது எதிர்பால் ஈர்ப்பின் காரணமாய் வலைய வரும், பாவைகூத்து ஆடும் குடும்பத்து பெண்ணிற்கும், ஊர் பெரிய மனிதரின் பேரனுக்கும் ஏற்படும் நட்பும், பின்னாளில் அது காதலாய் மாற, அவள் மேற்படிப்பிற்காக வெளியூர் செல்வதால், தன்னை பிரிந்து போய்விடுவாளோ என்ற பயத்தில் அவளை வன்புணர்ச்சி செய்துவிடுகிறான்.நாயகன். அந்த ஒரு சம்பவம் அவளின் மொத்த வாழ்க்கையையே மாற்றி விடுகிறது. குற்ற உணர்ச்சியில் அவளை தேடியலையும் நாயகன் அவளை கண்டானா? இவனை அவள் ஏற்றுக் கொண்டாளா? என்பதை திரையில் சொல்ல முயற்சித்திருக்கிறார்.

படம் முழுவதும் பாராட்ட பட வேண்டிய ஒருவர் ஒளிப்பதிவாளர் முத்தையா அவர்கள். துல்லியமான உறுத்தாத ஒளிப்பதிவு. அடுத்து விஜய் ஆண்டனி. அருமையான இரண்டு பாடல்களும், குறிப்பாக படம் நெடுகிலும் ஓடும் ஒரு ஆழ்ந்த சோக வயலின் பின்ணனி இசை இழை.. என்று நெகிழ வைத்திருக்கிறார்.

நாயகனாய் ஜெய் தனி ஹிரோவாக மூன்றாவது படம். மனுஷனுக்கு எங்கேயாவது படத்தில் இன்வால்மெண்ட் காட்டிவிட்டால் நடித்துவிடுவோமோ என்று பயம் போலிருக்கிறது. படம் முழுவதும் ஏற்கனவே தாடிக்குள் இருக்கும் முகத்தில், எந்தவித எக்ச்பிரஷனும், தெரியாது. அட்லீஸ்ட் டப்பிங்கிலாவது ஒரு உணர்வை கொடுத்திருக்கலாம். அதிலும் அவருக்கு நெல்லை ஸ்லாங் சுத்தமாய் வர மாட்டேன் என்கிறது. பாடி லேங்குவேஜும் ம்ஹும்.. மைல்ஸ் டு கோ.. ஜெய்.
aval இம்மாதிரியான கதைகளுக்கு மிக முக்கியம் கதாநாயகி. அவரை பார்த்தால் ஒரு இன்னொசென்ஸ் தெரிய வேண்டும். அப்படியிருந்தால் தான் அவரின் மேல் பயணப்படும் கதைகளில் அவருக்காக வருத்தப்பட முடியும், சந்தோஷப்பட முடியும், கண்ணீர் விட முடியும். இவரிடம் அது மிஸ்சிங். சோ.. ஏதும் சொல்வதற்கில்லை.

எழுதி இயக்கியிருக்கும் மீரா கதிரவனின் உழைப்பு படம் நெடுக தெரிகிறது. படத்தின் களத்தை பாவைக்கூத்தின் பின்ணனியில் வைத்து அமைத்ததற்கு அவரை பாராட்டியே ஆகவேண்டும். மற்ற வெகுஜன ஊடகங்களால் மக்களால் மறக்கப்பட்டு வரும் இக்கலையை போற்றி ஒரு தவமாய் செய்யும் ஒரு பெரியவரை கண் முன்னே உலவ விட்டிருக்கிறார்.அநியாயமாய் நேட்டிவிட்டி டயலாக்குகளும், லைவ்வாக படமெடுக்கும் எண்ணத்தில் படத்தில் க்ராஸ் செய்து போகிறவர்கள் எல்லாம் பேசுவது…எல்லாம் நிச்சயம் மனதில் லயிக்கவில்லை.
aval-peyar-tamilarasi வாய்ஸ் ஓவரில் கதை சொல்லிக் கொண்டு போகும் உத்தியில் ஒரு மிகப்பெரிய ப்ளஸ் இருக்கிறது. மிகச் சுலபமாய் கதையை ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கால கட்டத்திற்கு பார்வையாளனை கைபிடித்து அழைத்து போக முடியும். அடுத்தடுத்து வரும் காட்சிகளில் இருக்கும் சுவாரஸ்யங்களால் பார்வையாளனை கதைக்குள் உலவ வைக்க முடியும். ஆனால் அதுவே திரைக்கதையில் கோட்டைவிட்டால் கொட்டாவி விட வைத்துவிடும் ஆட்டம் பாம் அது. இரண்டாவது இதில் நடந்துவிட்டது. படம்பூராவும் ஆழமாக சொல்லப்பட வேண்டிய காதலை தேடிப்பார்த்தாலும் தெரியாதது வருத்தமே. அதனால் வெளிவரும் போது மனதை பாதிக்க வைத்திருக்க வேண்டிய படம். எந்த உணர்வையும் எழுப்பாமல் ப்ளாட்டாக வருகிறோம்.

கற்றது தமிழ் படத்தில் ஒரு வசனம் வரும் “நிசமாத்தான் சொல்றியா?” என்று கதாநாயகி சின்ன வயதிலிருந்து, வளர்ந்து குமரியாகியும், கதைகளில் வரும் பல சந்தர்பங்களில் கேட்பார். அப்போது அவர் முகத்திலும், குரலிலும் ஒரு அப்பாவித்தனமான நம்பிக்கையும், காதலும் தெரியும். அது ஒரு அருமையான உணர்வு, படம் பார்க்கும் நம்மையும் அபபெண்ணை காதலிக்க வைக்கும். வருத்தப்பட வைக்கும், சந்தோஷப்பட வைக்கும் அவளுக்காக உருக வைக்கும். அப்படி ஒரு உணர்வை தந்திருக்க வேண்டிய படம். ம்ஹும்..கேபிள் சங்கர்
Post a Comment

29 comments:

VISA said...

அவள் பெயரோ தமிழரசி....
அருகில் போனால் பச்சை அரிசி....
தொட்டு பார்த்தால் புழுங்கல் அரிசி....
அவள் எப்போது ஆவாள் என் இல்லத்தரசி....

விமர்சனம் ரொம்ப சுருக்ன்னு இருந்திச்சு

VISA said...

ரொம்ப நாளா என்டர் கவிதைகள காணோமுன்னு நாசூக்கா சுட்டி காட்டியிருக்கேன்.

சைவகொத்துப்பரோட்டா said...

விமர்சனமும், விசாவின் கவிதையும் நிறைவு.

ராம்ஜி_யாஹூ said...

how do u have patience, passion and time to watch this type of film.

ROMEO said...

ரைட். ஏன் லேட் விமர்சம் தலைவரே ??

ROMEO said...

டிஸ்கி எங்க ??

தராசு said...

ஏன் தல,

லேட்டு.....

D.R.Ashok said...

அட சூப்பர் விமர்சனம் தல... நீங்களும் வித்தயாசத்த காட்டீங்க...

KVR said...

நன்றாக வரும் என்று எதிர்ப்பார்த்து இருந்தேன். விமர்சனம் படிக்கும்போது கொஞ்சம் ஏமாற்றமா தான் இருக்கு

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

படம் நல்லாருக்கா...

இராகவன் நைஜிரியா said...

பெயரைப் பார்த்தவுடன் படம் ரொம்ப நல்லா இருக்கும் என நினைச்சேன். உங்க விமர்சனைத்தைப் பார்த்தபின் தேறாது போலிருக்கே.

naan kadavul said...

ulaga tharamana padam nu sonnanga? adapavikala...,

நிலாரசிகன் said...

டிஸ்கி எங்கே?

Venkatesh babu said...

Ippathan, Thambikku Intha Ooru parthuttu varren. Thaanga mudiyalada Samy....

Vimarasanam super, mela sonna padathayum seekirame eluthi ellaraiyum kappathunga.....

இராமசாமி கண்ணண் said...

நல்ல விமர்சனம் நா. ரொம்ப பயந்துகிட்டே இருந்தேன் எங்க இந்த பயபுள்ள ஜெய் நல்லா நடிச்சுருப்பானோன்னு.

தியாவின் பேனா said...

நல்ல விமர்சனம்

Nataraj said...

இதை உங்கள் signature விமரிசனமாக சொல்வேன் கேபிள் சார். முக்கியமாக 'கற்றது தமிழ்' படத்தை நினைவு கூரியதுக்கு நன்றி. நீங்கள் சொன்ன உணர்வுகளை அப்படத்தில் நானும் முழுமையாக உணர்ந்ததால் சொல்கிறேன்.என்னை பொறுத்தவரை அது most underestimated film. ஒரு சுப்ரமணியபுரத்துக்கான அங்கீகாரமாவது அதற்கு கிடைத்திருக்க வேண்டும்.

அக்கினிச் சித்தன் said...

ஏனுங்க, அந்தப் பக்கம் இன்னொருத்தர் நல்லாயிருக்குன்னு சொல்லியிருக்கார் ஆனா நீங்க நல்லாயில்லன்னு சொல்லுறீங்க. பதிவர்கள்கிட்ட ஒரு ஒற்றுமையே காணோமே!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

விமர்சனம் நவீனத்துவமா இருக்கே தல..!

அப்ப படம் பார்த்துடவேண்டியதுதான்.

Cable Sankar said...

@visa
எண்டர் கவிதை தானே எழுதிருவோம்.

@சைவக்கொத்துபரோட்டா
நன்றி

@ராம்ஜியாஹு

எல்லாம் ஒரு நம்பிக்கைதான் ராம்ஜி

@ரோமியோ.
:)

@தராசு
மத்தவஙக்ளூம் எழுதட்டுமேன்னுதான்

@அசோக்
நன்றி

@கேவிஆர்
ஆமாம்

@ஸ்டார்ஜான்
என்ன சொல்ல..?

@இராகவன் நைஜிரியா
:(

@நான் கடவுள்
:(

@நிலாரசிகன்
:)

@வெங்கடேஷ்பாபு

நிச்சயம் வேற வேலை

@இராமசாமி கண்ணன்
ஹா..ஹா..

@தியாவின்பேனா
நன்றி

@நட்ராஜ்
நன்றி நட்ராஜ்.. கற்றது தமிழ் மொத்த படத்தில் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும் அந்த காதல் காட்சிகள் கவிதை..

@அக்கினி சித்தன்
அதுசரி..புதுசா கிளப்பிட்டீங்களே..:)

சில்க் சதிஷ் said...

கற்றது தமிழ் காதல் காட்சிகள் கவிதை

கையேடு said...

இந்த படத்திற்கான உங்கள் விமர்சனத்திற்காக காத்திருந்தேன்.. நன்றி..

புலவன் புலிகேசி said...

அய்யய்யோ வடை போச்சா...?

கும்க்கி said...

சார்.,
வண்கம் சார்.

ரொம்ப ஆவலா இருந்தேன்.

எதுக்கும் பார்த்துட்டு சொல்றேன் சார்.

அக்பர் said...

அப்போ படம் ஓடாதா.

Lenin P said...

ஒருமுறை பாக்கலாம்.:)

மாயாவி said...

//ஏனுங்க, அந்தப் பக்கம் இன்னொருத்தர் நல்லாயிருக்குன்னு சொல்லியிருக்கார் ஆனா நீங்க நல்லாயில்லன்னு சொல்லுறீங்க.//

படத்தை தியேட்டர்ல பார்க்கலாமா, இல்லையா?

இல்லாட்டி திருட்டு டிவிடி வந்ததும் பார்க்கலாமா?

Punnakku Moottai said...

கேபிள்,

அவள் பெயர் தமிழரசி!

எனக்கு இந்த பெயர் பெரிய அலர்ஜி

கடந்த பத்து வருடங்களாக

காரணம் அது என் மாமியார் பெயர் !!!

kanagu said...

Anna... iniku kothu parotta enna aachu na??

seekram podunga :) :)