Thottal Thodarum

Apr 4, 2011

கொத்து பரோட்டா-04/04/11

உலகக் கோப்பை பைனலை கோலாகலமாய் டக்கீலாவோடு மணிஜியின் அலுவலகத்தில் முடித்துவிட்டு, நான் மணி, ஓ.ஆர்.பி ராஜா மூவரும் ஒரு கடையின் வாசலில் நின்று கொண்டிருந்தபோது, எங்களைச் சுற்றி மின்சாரமாய் இளைஞர்கள் அடித்தொண்டையில் “ஹே.. என்று கத்திக் கொண்டுப் போக, அப்போது அங்கே வந்த இரண்டு இளைஞர்கள் ஸ்ரீவத்ஸன், வசந்த் கோவிந்த் ஆகியோர் சட்டென என்னை பார்த்து அடையாளம் கண்டு, சந்தோஷமாய் அளவளாவிட்டு போட்டோ எடுத்துக் கொண்டு கிளம்ப, அப்போது ஒரு இளைஞன் மீண்டும் கத்திக் கொண்டே வர, மணிஜி அவனை அழைத்து “ என்ன என்னா ஆச்சுங்க? எல்லாரும்  இப்படி கத்திட்டே போறாங்க?” என்று கேட்க, அதற்கு அவன் கருமசிரத்தையாய் “இந்தியா ஜெயிச்சிருச்சுங்க” என்றவுடன், “ அட அப்படியா” என்றார்.
IMG_20110402_235722 IMG_20110402_235749
###################################


நேற்று செட் மேக்ஸில் இந்தி எந்திரன் க்ளைமாக்ஸுக்கு முன்னால் பார்த்தேன். ரோபோ ரஜினி அசத்தல் அப்படியே உட்காரவைத்துவிட்டார்.  உலகக் கோப்பைக்கு ந்டுநடுவே ஷாருக்கின் ரா ஒன்னை பார்த்ததிலிருந்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டார்கள். எனக்கெனவோ ட்ரைலரே பிரம்மிப்பாக இருக்கிறது. நிச்சயமாய் டெக்னிக்கலி பின்னி பெடலெடுக்கும் என்பது இரண்டு ரயில் பெட்டிகளுக்கிடையே குதித்து உட்காரும் காட்சியில் தெரிகிறது.
#####################################
விஜய்காந்தின் பிரசாரம் படு தீவிரமாய் இருக்கிறது. ஆனால் ஒரு குறை மீண்டும், மீண்டும் பேசின விஷயத்தையே சொல்லி வருகிறார். அதில் ஒரு விஷயம் “மக்களே. நானெல்லாம் பணத்தை பார்த்துட்டுத்தான் அரசியலுக்கு வந்தேன். ஆனால் கலைஞர் எல்லாம் அரசியலுக்கு வந்துதான் பணத்தை பார்த்தாரு..” அதே போல் முரசொலிய மொத்தமே நாலு பேர் தான் படிப்பாங்கன்னு சொல்றதை விடமாட்டேன்கிறாரு..
####################################
வடிவேலுவுக்கு போட்டியா சிங்கமுத்தை இறக்கி விட்டிருக்காங்க. கேட்டா அவரு 20 வருஷமா அதிமுகவாம். வடிவேலு விஜய்காந்தை மட்டுமெ திட்டுறாரு. ஏன்னா எப்படியும் அம்மா ஆட்சிதான் வரப் போது அதனால அம்மாவை பகைச்சிக்க விரும்பலைன்னு சொல்லி இந்த காமெடி பீஸு பம்மாத்தெல்லாம் ஆவாது என்று பிரசாரம் செய்து வருகிறார். இவரும் உசாராத்தான் இருக்காரு. விஜய்காந்துக்கு ஆதரவா, வடிவேலுவுக்கு எதிரா மட்டுமே பேசுறாரே தவிர, திமுகவை பத்தியோ, கலைஞரை பத்தியோ இவர் ஒரு வார்த்தை பேசுறது இல்லை. அப்ப இந்த காமெடி பீஸுக்கு தெரியுமோ அடுத்து தாத்த ஆட்சிக்கு வந்துட்டாருன்னா நமக்கு அப்பாயிரும்னு. எது எப்படியோ காமெடி பீஸுங்க ரெண்டும் உஷாராத்தான் இருக்காங்க.
###############################################
சத்யராஜை தொடர்ந்து ப்ரகாஷ்ராஜும் டிவிக்கு வருகிறார். தமிழில் அல்ல தெலுங்கில். மா டிவியில் நாளை யுகாதி திருநாள் முதல் வரவிருக்கிறது புதிய கேம் ஷோவான It's My Show. இந்தப் புதிய நிகழ்ச்சியில் பல திரையுலக, இலக்கிய ப்ரமுகர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். வாழ்த்துகக்ள் ப்ரகாஷ்ராஜ்.
####################################################.
இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றியை டெண்டுல்கருக்கு சமர்ப்பிக்கிறோம் என்று மொத்த டீமே சொன்னதும்,  கோப்பை டெண்டுல்கர் ஏந்திக் கொண்டு வந்ததும் பார்பதற்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது. இம்மாதிரியான ஒருமித்த எண்ணம் டீம் மெம்பர்கள் அனைவரிடமும் ஏற்பட ஒரு சிறந்த தலைமை தான் காரணமாயிருக்க வேண்டும். ஹாட்ஸ் ஆப் டோனி. you deserve this victory.

அதே போல இந்தியா வெற்றியடைந்த பிறகு போடப்பட்ட பாடல் ரஹ்மானின் “வந்தே மாதரம்” ஒரு பாட்டு பண்ணினாலும் அடுத்த ஜெனரேஷன் வரைக்குமான ஒரு பாடலாய் அமைந்துவிட்டது ரஹ்மானின் புண்ணியம் என்றே சொல்ல வேண்டும்.
#######################################
உங்கள் காதலி உங்களுக்கு ரொமாண்டிக்கான மெசேஜ் அனுப்பினா.. உடனே சந்தோஷப்படாதீங்க. அந்த மாதிரி ரொமாண்டிக்கான மெசேஜை அவங்களுக்கு யார் அனுப்பியிருப்பான்னு யோசிங்க.. ஏதோ சொல்லணுமின்னு தோணிச்சு சொல்லிட்டேன்.
நீ கனவு காண்பதை நிறுத்தினால் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும், நம்பிக்கை குறைந்தால் எதிர்பார்பு முடிவுக்கு வந்துவிடும், நாம் அன்பை கொடுப்பதை நிறுத்தினால் காதல் முடிவுக்கு வந்துவிடும். பகிர்தலை நிறுத்தினால் நட்பு முடிவுக்கு வந்துவிடும்.
#####################################
செவிக்கினிமை
ச்மீபத்தில் கேட்டதில் அழகர்சாமியின் குதிரையில் “குதிக்கிற குதிக்கிற குதிரைக்குட்டி” பாடல் ஒரு இண்ட்ரஸ்டிங்கான காம்போசிஷன. ஏற்கனவே ராஜாவின் பல பாடல்களின் கேட்ட கலவையாய் இருந்தாலும் , இளையாராஜாவின் குரலில் புதுசாய் இருக்கிறது. என்னா ஒரு இன்னொசென்ஸ், சந்தோஷம், குதியாடட்ம் அந்தக் குரலில். இன்னும் எவ்வளவுதான் உள்ளுக்குள்ளேயிருக்கோ.. மொட்டை..மொட்டைதான்.
#####################################
குறும்படம்
வாழ்க்கையில் நாம் விரும்புவது எல்லாம் கிடைப்பதில்லை. அதே போல மற்றவர்களின் விருப்பங்களை நாம் உணர்வதுமில்லை. இப்படி கண்டு கொள்ளப்படாமல் கிடைக்காததை தேடி அலையும் பல விஷயங்களை நம் வாழ்க்கையில் சந்திக்கத்தான் செய்கிறோம். அதன் வெளிப்பாடுதான் இந்தக் குறும்படம்.
########################################
ப்ளாஷ்பேக்
இளையராஜா இசையமைத்து சூப்பர் ஹிட்டான பாடல்களை கொண்ட படங்களில் இந்தி மூன்றாம் பிறையான ‘சத்மா’வும் ஒன்று. அதில் வரும் ஏ ஜிந்தகி என்கிற இந்த சுரேஷ் வட்கரின் குரலில் மயக்கும் மெலடி. இதே பாடல் தமிழில் “என் வானிலே” என்று தம்பிக்கு எந்த ஊரில் எஸ்.பி.பி பாடியிருப்பார். அது ஒரு விதமான சுகம் என்றால் ஹிந்தி வேறு விதமான ஒரு சுகானுபவம்.

###################################
அடல்ட் கார்னர்
தேனிலவுக்கு சென்ற இடத்தில புது மாப்பிள்ளையும் பொண்ணும் ஒரு நாள் முழுக்க இடைவிடாமல் ஓவரா மேட்டர் பண்ணித் தள்ளியதில் புது மாபிள்ளைக்கு பக்க வாதம் வந்து ஆஸ்பித்திரியில் சேர்க்க பட்டான். மாப்பிள்ளை உயிரை காப்பாற்ற ஒரு பாதத்தை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்று டாக்டர் சொன்னார். வேறு வழில்லாமல் பொண்ணு சம்மதிக்க மாப்பிள்ளையின் பாதம் அகற்றப்பட்டது.

பெண்ணின் அம்மாக்காரி ஹனிமூன் போன தன் பொண்ணு எப்படி இருக்கா என்று செல்போனில் நலம் விசாரித்தாள். புது பொண்ணு போனில் அழுவ தொடங்க அம்மாக்காரி என்ன ஏது என்று புரியாமல் என்னாச்சு என்று கேட்க, பெண் சொன்னாள், 'உன் மாப்பிள்ளைக்கு இப்போ oru feet தான் இருக்கும்மா' என்று அழுதாள்.

அதுக்கு அவ அம்மாக்காரி, 'oru feet போதும்டி அதை விட பெருசா ஆசைபடாதே, உன் அப்பாவுக்கு half feet கூட இருக்காது, கொடுத்து வச்சவ நீ,' என்று சொன்னாள்.
########################################
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

15 comments:

Sukumar said...

நைஸ் கொத்து பாஸ்...
மீ த பர்ஸ்ட்டு.. சொல்லி எம்புட்டு நாளாச்சு-..

செ.சரவணக்குமார் said...

//அப்போது ஒரு இளைஞன் மீண்டும் கத்திக் கொண்டே வர, மணிஜி அவனை அழைத்து “ என்ன என்னா ஆச்சுங்க? எல்லாரும் இப்படி கத்திட்டே போறாங்க?” என்று கேட்க, அதற்கு அவன் கருமசிரத்தையாய் “இந்தியா ஜெயிச்சிருச்சுங்க” என்றவுடன், “ அட அப்படியா” என்றார். //

மணிஜீ ராக்ஸ்.. அவர் எப்பவுமே அப்பிடித்தான தலைவரே..

கொத்து செமயா இருக்கு.

பா.ராஜாராம் said...

// உலகக் கோப்பை பைனலை கோலகலமாய் டக்கீலாவோடு மணிஜியின் அலுவலகத்தில் முடித்துவிட்டு//

நல்லாருங்கய்யா.. :-)

குறும்படம் நல்லாருக்கு தல.

vinthaimanithan said...

டக்கீலாவெல்லாம் சரிதான். அந்த பிரியாணி வாங்குன கதையையும் சேத்து எழுதி இருக்கலாம்ல?! :)))

a said...

குறும்படம் அருமை...
ஆனா... கொத்து கொஞ்சம் பிரச்சார ஸ்பெசல் ரேஞ்சிக்கு போகுது....

மேவி... said...

இரண்டு காமெடி பீஸ்ன்னு யாரை சொல்லுறீங்க ...விஜயகாந்தையும் வடிவேலையுமா ???

விஜயகாந்தின் "இதோ பாருங்க மக்களே ..."பேச்சு எனது ஆபீஸ் ல செம ஹிட் .....

"வடிவேலு பதினோரு ஆச்சுன்ன என்ன பண்ணுவான்னு எனக்கு மட்டும் தான் தெரியும்"ன்னு சிங்கமுத்து சொல்லுறாரு.... ஆனா அது என்னன்னு விளக்கமா அவர் சொன்ன நல்ல இருக்கும் :)))

Sivakumar said...

//அதே போல் முரசொலிய மொத்தமே நாலு பேர் தான் படிப்பாங்கன்னு சொல்றதை விடமாட்டேன்கிறாரு..//

கேப்டன் கட்சியோட 'முரசு' ஒலி எப்படி இருக்கப்போதுன்னு பாப்போம்..!!

Paleo God said...

பா.ராஜாராம் said...
// உலகக் கோப்பை பைனலை கோலகலமாய் டக்கீலாவோடு மணிஜியின் அலுவலகத்தில் முடித்துவிட்டு//

நல்லாருங்கய்யா.. :-)
/////

வயித்தெறிச்சல் (ரிப்)பீட்டு :))

சக்தி கல்வி மையம் said...

சுவாரஸ்யமான விஷயங்களின் தொகுப்பு..

Srivathsan GK said...

Nice meeting you boss :)

siva said...

one foot... not feet

Cable சங்கர் said...

சிவா ஜோக்குக்கெல்லாம் கூடவா ஆராய்ச்சி பண்ணுவீங்க..:)

Suthershan said...

//மொட்டை..மொட்டைதான்// கொஞ்சல் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு

taaru said...

மொட்..ட்..ட்...ட்....ட்....ட்.....ட்............ட்..................டை..... உம்ம்ம்மாஆ.........வாய்ப்பே இல்ல தல......!!!!

anbudan amalg said...

Kalakitinga Vasanth Govindh,, Looks so smart with Cable Sankar