Thottal Thodarum

Apr 16, 2011

பொன்னர் சங்கர்

Ponnar-Shankar-stills-and-news-3 இளைஞன் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்த என் மன உறுதியை சதி செய்து கெடுத்த லக்கியை எவ்வளவு திட்டினாலும் தகும். பார்க்கவே கூடாது என்றிருந்த படத்திற்கு லக்கி சத்யத்தில் டிக்கெட்டிருக்கிறது என்று “எலி”க்கு வடை காட்டுவது போல காட்டி பார்க்க வைத்துவிட்டார். இதனால் வரும் பழி பாவங்களுக்கெல்லாம் லக்கியே காரணம்.


பிரசாந்துக்கு லார்ட் ஆப்த ரிங்க்ஸ் படத்தை எடுக்கணும்னு தோணியிருக்கு.. அதுக்கு ஏத்தாப்போல ஒரு மிக்ஸுடு கதை வேணும், உடனே எடுத்தாங்க பொன்னர் சஙக்ர் கதையை. ஒரிஜினல் கதையின் இருந்த விறுவிறுப்பு மண்ணுக்குக்கு கூட இல்லை என்பதை சொல்லிக் கொள்கிறேன் சோழ மன்னா..

கதை திரைக்கதை, வசனம் கலைஞர். அவர் எழுதிய சுவாரஸ்யமான கதையை அவரே கொத்து பரோட்டா போட்டிருப்பது கொடுமை. இந்த ஒரு கொடுமைக்குத்தான் இவர் அடுத்த முறை செயித்து வந்துவிடக்கூடாது என்று பயமாய் இருக்கிறது. ஆங்காங்கே பளிச்சிடும் வசனங்களைத் தவிர ஸ்பெஷலாய் இல்லை. “தாடியை பார்த்ததும் ஈரோட்டுக்காரர் என்று நினைத்தாயோ? என்றெல்லாம் டபுள் மீனீங் டயலாக் பேசினாலும், கதை நடக்கும் காலத்தை வைத்து பார்க்கும் போது, ஒத்து வரவில்லை. என்ன செந்தமிழாய் பேசி கொல்லாமல் சகஜ நடையில் வசனங்கள் ஆறுதல். ஆனால் அதுவே பல இடங்களில் கொடுமையாய் இருக்கிறது.

படத்தில் பாராட்ட வேண்டிய அம்சங்கள் என்றால், அது இரண்டு பேர்களைத்தான், ஒளிப்பதிவாளரும், ஆர்ட் டைரக்டரையும், சி.ஜி டீமையும்தான். எல்லோரும் கை கோர்த்து வேலை செய்திருக்கிறார்கள். சில செட்டுகள் அருமை. அவற்றின் பின்னணி சிஜி ஒர்க் அதை விட அட்டகாசம்.

தயாரித்து இயக்கியவர் தியாகராஜன். கடைசி நேரத்தில் இவருக்கு தயாரிப்பில் உதவ மார்ட்டினை தலைவர் இறக்கிவிட்டிருந்ததால் தப்பித்து வெளியிட்டுவிட்டார்கள்.  கண்களுக்கு குளிர்ச்சியாய் இரண்டு ஹிரோயின்கள், எப்போது அவிழ்ந்து விடுமோ என்று பதட்டத்துடன் கட்டப்பட்ட கச்சைகளுடன், ஆலிலை வயிற்றைக் காட்டிக் கொண்டு நடக்கிறார்கள். பாராட்டப் பட வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் பின்னால் நிற்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டிகளைக் கூட பொறுக்கியெடுத்து சும்மா கிழங்கு கணக்காய் நிறுத்தியிருக்கிறார் இயக்குனர். நல்ல ரசனைக்காரர். மகனின் லார்ட் ஆப் த ரிங்க்ஸ் ஆசையை செவ்வனே பூர்த்தி செய்திருகிறார் தந்தை.
பொன்னர்- சங்கர்- அரைவேக்காட்டு வரலாறு

Post a Comment

25 comments:

K.MURALI said...

நச்.

சுரேகா.. said...

லக்கி சொன்னா....

நீங்க சிந்திக்க வேணாம்.?

அப்புறம் மூளை வலிக்குது..முட்டி வலிக்குதுன்னு புலம்பக்கூடாது!! :)

குரங்குபெடல் said...

"இந்த ஒரு கொடுமைக்குத்தான் இவர் அடுத்த முறை செயித்து வந்துவிடக்கூடாது என்று பயமாய் இருக்கிறது."

Good Attack

செங்கோவி said...

அண்ணனை சிதைச்சு அனுப்பிட்டாங்க போலிருக்கே!

பிரபல பதிவர் said...

தல தீன்மார் பாத்தீங்களா????

பாத்தா சொல்லுங்க.... வெயிட்டிங் ஃபார் யுவர் அப்டேட்.....

லக்கி... 2ஜி லயே ஊழல் இல்லே... ராசாவ போல சொக்கதங்கம் உண்டான்னு சொன்னவரு... அவரு கூப்டாருன்னா உங்க புத்தி எங்க போச்சி....

பிரபல பதிவர் said...

அப்றம் நேத்து நடுநிசி நாய்கள் பாத்தேன்.... பதிவர்கள் கூவுன மாதிரி ஒண்ணும் பெரிசா இல்லை... அந்தந்த காலகட்டத்துக்கான சைக்கோ படம்... அவ்ளோதான்.... மத்தபடி கெளதம் இன்னும் பெட்டரா பண்ணிருக்கலாம்

பிரபல பதிவர் said...

//கண்களுக்கு குளிர்ச்சியாய் இரண்டு ஹிரோயின்கள், எப்போது அவிழ்ந்து விடுமோ என்று பதட்டத்துடன் கட்டப்பட்ட கச்சைகளுடன், ஆலிலை வயிற்றைக் காட்டிக் கொண்டு நடக்கிறார்கள்//

அப்ப பாக்கலாமா???

பிரபல பதிவர் said...

//அவர் எழுதிய சுவாரஸ்யமான கதையை அவரே கொத்து பரோட்டா போட்டிருப்பது கொடுமை. //

கொத்து புரோட்டா சுவையாக இருக்கும்... அதை இனி உவமையாக உபயோக படுத்த வேண்டாம்....

சங்கரின் கொத்து புரோட்டா ரசிகர் மன்றம்...
மும்பை கிளை (வேறு எங்கும் கிளைக‌ள் இல்லை.. உறுப்பினர்களும் இல்லை)
ம‌காராஷ்டிரா மாநில‌ம்

CS. Mohan Kumar said...

//"இந்த ஒரு கொடுமைக்குத்தான் இவர் அடுத்த முறை செயித்து வந்துவிடக்கூடாது என்று பயமாய் இருக்கிறது."//

அல்லோ... தோத்துட்டா புல் டைம் கலை சேவை தான். அது பரவால்லியா?

எப்டியோ.. உங்களுக்கு பிடிச்ச விஷயங்களை பாத்துட்டு வந்துட்டீங்க

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

கலைஞரை நல்லாவே வாரியிருக்கீங்க.

பெசொவி said...

//எப்டியோ.. உங்களுக்கு பிடிச்ச விஷயங்களை பாத்துட்டு வந்துட்டீங்க
//

repeeeeettu!

Sivakumar said...

//கடைசி நேரத்தில் இவருக்கு தயாரிப்பில் உதவ மார்ட்டினை தலைவர் இறக்கிவிட்டிருந்ததால் தப்பித்து வெளியிட்டுவிட்டார்கள்.//

லக்கி... லக்கி... ரொம்ப லக்கி..

//அவர் எழுதிய சுவாரஸ்யமான கதையை அவரே "கொத்து பரோட்டா" போட்டிருப்பது கொடுமை.//

உங்க புத்தக விளம்பரம் வித்யாசமா இருக்கு...

Anand said...

இளையராஜா பற்றி எதுவும் சொல்லவில்லையே !

சக்தி கல்வி மையம் said...

அப்ப படத்துக்கு போக வேணாம்ன்னு சொல்றீங்க..

ஜோசப் பால்ராஜ் said...

ஜெயிச்சு வந்தா வருசத்துக்கு 4 படம்
ஜெயிக்கலன்னா மாசத்துக்கு 4 படம் . எப்டி வசதி ?

taaru said...

ராஜா சார் பத்தி ஒண்ணுமே சொல்லல??

/படத்தில் பாராட்ட வேண்டிய அம்சங்கள் என்றால், அது இரண்டு பேர்களைத்தான், ஒளிப்பதிவாளரும், ஆர்ட் டைரக்டரையும், சி.ஜி டீமையும்தான்.////

ரெண்டுனு சொல்லிட்டு மூணு சொல்லி இருக்கீங்க? இன்னும் படம் பார்த்த எபக்ட் போகலையா அண்ணா?

அருள் said...

அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html

(இது TIME கணிப்பு அல்ல)

Suthershan said...

என்ன கட்சி மாறிட்டிங்களா???

மனோவி said...

படம் கலைஞர் டிவி யில் சீக்கிரம் போட்டுருவாங்க இல்ல?

மனோவி said...

படம் கலைஞர் டிவி யில் சீக்கிரம் போட்டுருவாங்க இல்ல?

மனசாலி said...

Blogger ஜோசப் பால்ராஜ் said...

ஜெயிச்சு வந்தா வருசத்துக்கு 4 படம்
ஜெயிக்கலன்னா மாசத்துக்கு 4 படம் . எப்டி வசதி ?

ரிலீஸ் பண்ண தியேட்டர் கிடைக்காதே

Bullet said...

லக்கி என்ன பெ‌‌ரிய சினிமா விமர்சகரா?

San said...

நீங்க நெசமாவே தில்லு துரை தான்!!!

raghul said...

// “தாடியை பார்த்ததும் ஈரோட்டுக்காரர் என்று நினைத்தாயோ? என்றெல்லாம் டபுள் மீனீங் டயலாக் பேசினாலும், கதை நடக்கும் காலத்தை வைத்து பார்க்கும் போது, ஒத்து வரவில்லை. //

இதை விமர்சகர் யாராவது எழுத வேண்டும் என்று நினைத்தேன் .நீங்கள் எழுதிவிடீர்கள்

விக்னேஷ்வரி said...

திரைப்பட விமர்சனம் எழுதற ஆர்வத்துல வெளிவர்ற எல்லாப் படத்தையும் பார்க்கற உங்களை நினைச்சா பாவமா இருக்கு கேபிள். யூ ஆர் க்ரேட்.