கோடீஸ்வரி ராஜலஷ்மியின் மகன் தன் தங்கையை காதலித்து கர்பமாக்கியதால் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க, ராஜலஷ்மியின் மகளை காதலித்து, கல்யாணம் செய்து, ராஜலஷ்மியின் கொட்டத்தை அடக்க முயல்வதுதான் கதையே. இதே பெயரில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளிவந்த, சூப்பர் ஹிட் படத்தை ஆங்காங்கே பட்டி, டிங்கரிங் செய்கிறேன் பேர்விழி என்று நசுங்கிய சொம்பாய் ஆக்கியிருக்கிறார்கள்.
படம் ஆரம்பித்து முதல் பத்து நிமிஷம் விவேக் தான் முழுக்க, முழுக்க வருகிறார். அப்புறம் தான் தனுஷ் அறிமுகம். அடுத்த ஐந்து நிமிஷத்தில் கதாநாயகி அறிமுகம். அடுத்த பத்தாவது நிமிஷத்தில் காதல் ஆரம்பமாகி, இண்டர்வெல் ப்ளாக் வந்து விடுகிறார்கள். விவேக், சத்யன், பாலாஜி கோஷ்டியின் காமெடி காட்சிகள் சிரிக்க வைப்பதற்கு பதிலாய் கிச்சு, கிச்சுக்கூட ஏற்ப்படுத்தவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம்.
ஹன்சிகா நல்ல கொழு,கொழு பார்பி டால் போலிருக்கிறார். சில காட்சிகளில் நமீதாவிற்கு போட்டியாய் இருக்கிறார். நடிப்பு கிலோ என்ன என்று கேட்கிறார். கொஞ்சம் கூட லிப் சிங்க் இல்லாத டப்பிங்..
மாமியாராய் நம்ம மனிஷா கொய்ராலா.. கொடுமைடா சாமி. இவரும்.. இவரது பாடி லேங்குவேஜும். டப்பிங் படு மோசம் இவரது லிப் சிங்கும் படு கொடுமை. மிக தவறான காஸ்டிங். கொஞ்சம் கூட எடுபடவில்லை. மாமியார் என்று ஒத்துக் கொள்ள முடியாத உடலமைப்பு. ஒரு கல்யாண மண்டபக்காட்சியில் ஓடி வரும் போது பம்பாய் பாடல் காட்சி ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. மற்றபடி அஷிஷ் வித்யார்த்தி, போன்ற நடிகர்கள் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
எழுதி இயக்கியவர் சுராஜ். ஒரே ஒரு சந்தோஷ விஷயம் என்னவென்றால் படத்தை மற்றவர்கள் கிண்டல் செய்யும் முன்பே இவரே பல இடங்களில் கிண்டலாய் காட்சி வைத்து, நகைச்சுவையாக்கியதுதான். முக்கியமாய் க்ளைமாக்ஸில் வில்லன் பெண் அடியாள் ஜிம்பாய் ஜெமினி கணேசனுடன் ஓடிப் போய்விடுவதும், அவனை பிடிக்க மறுக்கும் மற்ற ஜிம்பாய்சின் ஹெட் கோபி.. தாங்கள் திருந்திவிட்டதாகவும், இனிமேல் நைட்ஷிப்ட் கால்செண்ட்ரில் வேலை செய்யப் போவதாய் சொல்லி வருந்துவதும். அதற்கு வில்லன் ஆஷிஷ்.. இதெல்லாம் உங்களுக்கு இப்ப புரியாதுடா.. நீங்க வில்லனா இருந்து உங்க கிட்ட வேலை செய்யிற ஜிம் பாய்ஸ் இப்படி செஞ்சா புரியும் என்று சொல்லி கிளம்புவது சரி காமெடி. மற்றபடி படமே நோகவைக்கும் காமெடியாய் இருக்கிறது. இயக்குனருக்கு நன்றி சொல்ல வேண்டும். மீண்டும் பழைய ரஜினியையும், மாப்பிள்ளையையும் பார்க்க தூண்டியதற்காகவும், ஏற்கனவே பார்த்தவர்கள் நொந்து போய் மீண்டும் டிவிடியை தேட வைத்ததற்கும்.
மாப்பிள்ளை – சன் டிவிக்கு மட்டுமான சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
ரைட்டு....
நான்தான் first//
இல்லை கண்ணா நான்தான் பர்ஸ்ட் ஹி ஹி ஹி ஹி....
ஹைலைட் ஹைலைட் ஹைலைட்...
பாத்திட்டு அப்புறம் தான் வருவன்... சரியா ?
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது
.....செம பஞ்ச்!
அதுவே மொக்கையாக இருந்தது என்று நினைவு. இருபது வருசம் கழிச்சு யாராவது தனுஷோட மாப்பிள்ளை ஒரு கிளாசிக்னு சொல்லிடுவாங்களோ? :))
பூவா தலையா தான் அந்த பழைய படம். அதை கம்பேர் பண்ணினால் மாப்பிள்ளை சொதப்பல். நீங்கள் சொல்வதை பார்த்தால் இது பயங்கர மொக்கை போல இருக்கிறது. மாப்பிள்ளைக்கு பதில் பூவா தலையா பாருங்க. அப்ப தெரியும் இவனுங்க எப்படி கொலை பண்ணியிருக்காங்கன்னு!
இங்க PVR ல எழுபது ரூபா டிக்கட். பார்க்கிங்க்கு காசு கிடையாது....
பாக்கலாமா? வேணாமா?...
"படிக்காதவனை விட இது பத்து மடங்கு நல்ல இருக்கும்"ன்னு தனுஷ் பேட்டி தந்த போதே உஷார் ஆகிருக்கணும் , ம்ம் விதி வலியது
//அதுவே மொக்கையாக இருந்தது என்று நினைவு//
ஆமாம்,எனக்கும் ரஜினி படங்களில் பிடிக்காத சில படங்களில் மாப்பிள்ளையும் ஒன்று. இதே படம் ஹிந்தியில் அனில் கபூர்,மாதுரி தீட்ஷித் நடிப்பில் பார்த்தாகவும் நினைவு.
//வரலட்சுமி ஜெய்சங்கர் நடித்த (பெயர் எனக்கு நினைவுக்கு வரவில்லை), அந்தப் படம் தான் மூலம்.//
பூவா தலையா, செம்ம இண்ட்ரஸ்டிங்கான படம்.
பிட் படம் தவிர்த்து மத்த எல்லா படத்திலும் 'லிப்' சிங்க் பற்றி குறை சொல்வதே வேலையா போச்சி..
அது என்ன காட்சி? விளக்கமாக சொல்லி இருக்கலாம்..
பார்வையாளனின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாவிடில் ‘கேபிள்’ அரசுடமை ஆக்கப்படும்!!//
*******
சிவகுமார்.... ரசித்தேன்...
ஆமாம், அரசுடைமைன்னா, ரேஷன்ல தர்ற மாதிரி வெறும் “ஆஃப்” மட்டும் தான் தருவீங்களா??
சுறா பிடிக்காதவனுக்கு அசல் - பிடிச்சு இருக்கு....
மேல சொன்ன எதுவுமே பிடிக்காதவங்களுக்கும் பிடிச்சவங்களுக்கும் ரொம்ப பிடிச்ச படம் எது? என்று தேசிய அளவில் ஆராய்ச்சி பண்ணி இருக்காங்க...
அது நம்ம வீராசாமி தான் என்று நேற்று அதிகாரபூர்வமாக அறிவிச்சு இருக்காங்க... # TR rockz... :)
என்றும் உங்கள் அருண் பிரசங்கி