Thottal Thodarum

Oct 14, 2011

உயிரின் எடை 21 அயிரி

 uyirin-edai-21-gram-1 தமிழில் பெயர் வைத்தால் தான் வரி விலக்கு என்றிருந்த காலத்தில்  வேறு வழியேயில்லாமல் கட்டாயத்தினால் கிராம் என்பதற்கு அயிரி என்று தமிழில் தேடிக் கண்டுபிடித்து வைக்கப்பட்ட பெயர். சுமார் ஒரு வருடம் கழித்து வருகிறது. பிரபல மலையாள நடிகர் திலகன் நடித்த தமிழ் படம். வெகு காலத்திற்கு பிறகு பிலிம் இன்ஸ்டிடூயூட் மாணவர்களால் எடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

பலபேரின் உயிரை வாங்கி, ஊ‌ரையே நடுங்க வைத்த தாதா ஒருவன், ஒரு கட்டத்தில் படுத்த படுக்கையாகி கிடக்கும்போது அந்த உயிரின் மதிப்பை உணர்கிறான் என்பதை சொல்வது தான் இப்படத்தின் கதை.
uyirin-yedai-21-ayiri-300 ஊரில் ஒரு பெரிய தாதா. அவர் பெயர் அச்சா. அவரின் வலது கை ஈஸ்வர். கொஞ்சம் கூட ஈவு இரக்கமற்றவன். அவன் கூட சுற்றியலையும் அச்சாவின் மகன். ஈஸ்வரிடம் தன் நண்பன் ஒருவனின் காதலுக்காக உதவ கேட்கிறான். அவன் செய்யாததால் நண்பன் இறக்கிறான். இதனால் அச்சாவிற்கு பிறது அவர் மகனானதான் தான் வரவேண்டும் என்று முடிவு செய்து ஈஸ்வரை எதிர்கோஷ்டி மாட்டு ரவியின் தம்பியுடன் சேர்ந்து முடிக்கிறான். ஆனால் அவன் சாவதில்லை. ஒரு மலை வாழ் மக்களினால் காப்பாற்றப்பட்டு பிழைக்கிறான். ஏற்கனவே குற்றுயுரும் கொலையுருமாய் இருப்பவனை அச்சா கண்டெடுத்து கூட்டி வருகிறார். ஆனால் அவனோ தனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம் என்று திருப்ப போக, அவன் வாழ்க்கை நிம்மதியாய் கழிந்ததா? இல்லையா? எனபதை கொஞ்சம் ரத்தமும் சதையுமாய் காட்டியிருக்கிறார்கள்.
uyirin-edai-21-gram கேங், பொறாமை, எதிர் க்ரூப், காட்டுத்தனமான வக்கிரமான கேரக்டர், துரோகங்கள் என்று நாம் பார்த்து சலித்த விஷயம் என்றாலும் திலகன் போன்ற நடிகரின் ஸ்கீரின் ப்ரெசென்ஸ் கொடுக்கும் சுவாரஸ்யங்கள் அட்டகாசம். அச்சா என்கிற கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார். நிறுத்தி நிதானமாய் தன் காய்களை நகர்த்துவதும், அதற்கான டயலாக்குகளை ஆணி அடித்தார் போன்ற மாடுலேஷனில் பேசும் போது நமக்கே கொஞ்சம் லேசாய் முதுகு சில்லிடுகிறது. அதே போல் ஈஸ்வராய் நடித்தவரின் தாடி முகத்திற்குள் தெரியும் வெறி நன்றாகவேயிருக்கிறது. ஆனால் இரண்டாவது பாதியில் அவரை காப்பாற்றி வைத்தியம் செய்யும் வைத்தியர், அவரின் ஷோலே படம் போன்ற விதவை பெண், அவளின் குழந்தை என்று செண்டிமெண்ட் வழுக்கல்கள் சுறுசுறுவென போன படத்தை தடுத்து நிறுத்துகிறது.
uyirin-yedai-21-ayiri _47_ டெக்னிக்கலாய் சொல்லப் போனால் பெரிய அளவில் இம்ப்ரஸிவான ஒளிப்பதிவோ, அல்லது மேக்கிங்கோ இல்லை என்றே சொல்ல வேண்டும். பட்ஜெட் ஒவ்வொரு ப்ரேமிலும் தெரிகிறது. இரவு நேர சேஸிங் மற்றும் சண்டைக்காட்சிகளை மட்டும் குறிப்பிட்டு சொல்லலாம். பின்னணியிசையும் பெரிதாய் ஸ்கோர் செய்யவில்லை. ஆனால் முடிந்த நேரத்தில் மெளனம் காத்தது சிறப்பு. எடிட்டிங் கிருத்திகா. பெண் எடிட்டர்கள் பெயரை திரையில் பார்ப்பது அபூர்வமான ஒன்று. கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். நிறைய இடங்களில் ஜம்ப் தெரிந்தது. பின்புதான் தெரிந்தது சென்சாரில் 41 கட் வாங்கி அதை மீண்டும் சரி பண்ணியிருக்கிறார்கள் என்று. அப்படிப் பார்த்தால் நல்ல ஒர்க் தான்.
uyirin-edai-21-gram-3 எழுதி இயக்கி இசையமைத்து தயாரித்திருப்பவர் ஏகன். திரைப்படக் கல்லூரி மாணவராம். வழக்கமான கதையை முதல் பாதி முழுவதும் திலகனின் கேரக்டரை வைத்தும், வழக்கமான காதல் அது இது என்று ஜல்லியடிக்காமல் விறுவிறுப்பாய் கொண்டு சென்றதற்கு ஒரு சபாஷ். ஒரு குத்து பாடல் போட வேண்டிய இடத்தில் கூட பல பட பாடல்களை போட்டு சுவராஸ்யமாக்கியது இண்ட்ரஸ்டிங்.  இரண்டாவது பாதியில் அடிபட்டு குற்றுயிராய் கிடப்பவனின் காயம் ஆற மெனக்கெடும் காட்சிகள், அந்த காயம் கொஞ்சம் கொஞ்சமாய் ஆறும் வடுக்கள் எல்லாம் த்ரூபமாய் காட்ட முயற்சித்திருப்பது பாராட்டக்கூடியது. ஆனால் மைனஸ் என்றால் அந்த காயம் ஆற எவ்வளவு நாள் எடுக்குமோ அந்த அளவிற்கு திரைக்கதையும் மெதுவாகப் போவதுதான். கடைசியில் ஒரு மெசேஜ் சொல்லியிருக்கிறார்கள்.வழக்கமான செண்டிமெண்ட், பாட்டு வலைகளில் சிக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

15 comments:

aotspr said...

நல்ல விமர்சனம்.........

தொடர்ந்து எழுதுங்கள்....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Ravikumar Tirupur said...

திரைப்படக்கல்லுரி மாணவர்களாக இருந்தும் மேக்கிங் சிறப்பாக இல்லாது போனது ஏன்? பட்ஜெட் காரணமா

ரா.சு said...

திலகன் இன்னும் மறையவில்லை சார், உயிரோடுதான் இருக்கார்.

ரா.சு said...

திலகன் இன்னும் மறையவில்லை சார், உயிரோடுதான் இருக்கார்.

mani sundaram said...

என்னது திலகன் செத்துட்டாரா

R. Jagannathan said...

திலகன் மறைந்துவிட்டாரா? ஆஹா என்ன மாதிரி நடிகர்! தோஹாவில் இருந்தபோது நிறைய மலையாளப் படங்களில் அவரின் நடிப்பை வியந்து ரசித்ததுண்டு. ஏந்தப் படமானாலும் அவர் வரும் காட்சியில் அவர் தான் ப்ரதானமாகத் தெரிவார். மலையாள சூப்பர் ஸ்டார்கள் அவரின் கடைசிக் காலத்தை ரொம்பவும் வருத்தி விட்டார்கள். அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். - ஜெ.

CS. Mohan Kumar said...

திலகன் இன்னும் உயிரோடு தான் இருக்கார் கேபிள். இங்கே படிச்சு பாருங்க

http://en.wikipedia.org/wiki/Thilakan

அஞ்சா சிங்கம் said...

தல அது உயிரின் எடை ..............

உயிரின் விலை அல்ல ..............

N.H. Narasimma Prasad said...

//மறைந்த மலையாள நடிகர் திலகன் கடைசியாய்//


மலையாள நடிகர் திலகன் இன்னும் சாகவில்லை. உயிரோடு தான் இருக்கிறார்.

jith said...

mika sirappana vimarsanam ,thavarugal thruthapadum -yegan

MANO நாஞ்சில் மனோ said...

திலகன் உயிரோடுதான் இருக்கிறார், மலையாள நடிகர்களோடு சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்...

Muthuvel Sivaraman said...

நல்ல விமர்சனம்

இவை கவிதை அல்ல

Cable சங்கர் said...

sorry for the new ive posted about thilagan..:((

www.rasanai.blogspot.com said...

Dear Cable
vimarsananam arumai. aanaal padaththin thalaippu yean appadi ?? is it a tribute to the Famous Director Gonzalez innaritu who made a film "21 Grams" which speaks the weight of the body loses 21 grams after death. anything relevant to that film (or may be the director inspired by innaritu's works ??? )
anbudan
sundar g

Thozhirkalam Channel said...

தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

உங்கள் தளம் தரமானதா..?

இணையுங்கள் எங்களுடன்..

http://cpedelive.blogspot.com