Thottal Thodarum

Oct 18, 2011

Sahib.. Biwi.. Aur Gangster

Saheb-Biwi-Aur-Gangster-Review-01 குருதத்தின் சாஹிப், பீவி, அவுர் குலாம் படத்தின் பெயரை உங்களுக்கு இது ஞாபகப்படுத்தலாம். ஆனால் இது வேறு. சமீபத்தில் வெளியான பல தமிழ், தெலுங்கு பட ரீமெக் ஹிந்தி படங்களை  பார்க்கவே இஷ்டமில்லாமல் இருந்தேன். சரி பெயரளவில் ஏதோ நன்றாக இருக்கும் போலிருக்கிறதே என்று பார்த்த படம். ஆனால் படம் பார்த்து மூன்று நாட்களாகியும் மனதினுள் ஓடிக் கொண்டேயிருக்கிறது.
கதை என்று பார்த்தால் மிக சிம்பிள். அதிகாரமும், அதை அடைய துடிக்கும் நபர்களும், அவர்களின் நம்பிக்கைகளும் அதனை உடைக்கும் துரோகங்களும் தான். ஆனால் அதை சொன்ன விதத்திலும், கேரக்டர்களை உருவாக்கி உலவ விட்டிருக்கும் பர்பெக்‌ஷனில் நம்மை ஆணியடித்தார் போல உட்கார வைத்துவிடுகிறார்கள். சாஹிப் உத்திரபிரதேச மாநிலத்தின் ஒரு கிராமத்தின்  முன்னாள் ஜமீந்தார். ஜமீந்தார் வாழ்க்கையை இன்னமும் அதே பந்தாவோடு வாழ முயன்றுக் கொண்டிருப்பவர். ஊருக்கு இன்னொரு மூலையில் இன்னொரு பெண்ணுடன் சல்லாபிப்பவன். அவளை காதலிப்பவன். பீவி அவரது மனைவி. கணவனால் செக்ஸுவலாய் மட்டுமில்லாமல் எல்லாவிதத்திலும் தனிமைபடுத்தப்பட்டு, குடிகாரியாய், நிலையான மனநிலையில் இல்லாதவளாய் இருப்பவள். கேங்ஸ்டர். தான் விரும்பிய பெண் வேறு ஒருவனுடன் போனதை தாங்க முடியாமல் அவனை ஹாக்கி பேட்டால் அடித்ததில் கோமாவிற்கு போனதால் அவன் மீது கேஸ் வர இருக்க, அதிலிருந்து தப்பிக்க லோக்கல் அரசியல்வாதியின் சம்சா சிங்கிடம் அடைக்கலம் கேட்கிறான். அவனுக்கு உதவ வேண்டுமானால் சாஹிப்பை கொலை செய்ய சரியான தருணத்தை கண்டறிந்து தங்களுக்கு உதவ வேண்டும் என்றும், அப்படி செய்தால் அவனுக்கு உதவுவதாய் சொல்கிறான். ஏற்கனவே அதிகார வெறியும், துரோகத்தினாலும் வெந்து கொண்டிருப்பவன் இன்னும் சூடாகி, சாஹிப்பின் மனைவிக்கு ட்ரைவராய் போகிறான். அவர்களுக்கு காதல் முற்றி காமம் மோலோங்குகிறது. சாஹிப்பின் எதிரியான சிங் தன் நண்பரான மந்திரியின் மூலம் சாஹிப்பின் காண்ட்ரேக்டை மாற்றி வேறொருவருக்கு கொடுக்க, இருவருக்குமான வன்மம் ஏறி யார் யாரை அழிக்க போகிறோம் என்று வன்மம் கொண்டு அலைகிறார்கள். ஒரு பக்கம் பீவிக்கும் கேங்ஸ்டருக்குமான காமம் கலந்த காதல். இன்னொரு பக்கம் சாஹிப்பிற்கும் அவனுடய காதலிக்குமான உறவு. இன்னொரு பக்கம் தன் சம்ராஜ்யத்தை அரசியல் ரீதியாய் தனக்கெதிராய் திருப்பி மோசமாக்கும் சிங்கின் சூழ்ச்சி, இப்படி ஒவ்வொரு காட்சியிலும் ந்ம்மை அவர்களோடே பயணிக்க வைத்திருக்கிறார்கள்.
sahib சாஹிப்பாக ஜெர்மி ஷெர்கில். இதுவரை ஹிந்தி சினிமாவில் பெரிய ப்ரேக் இல்லாமல் இருந்த நல்ல நடிகர். வாழ்ந்து கெட்ட பழைய ஜமீன்தார் ஹோதாவை மெயிண்டெயின் செய்வதும், தன் மீது பயமும், தன்னுடய அதிகாரத்தை இழக்க விரும்பாமல் அதற்காக எவ்வளவு தூரம் வேண்டுமானலும் போவதும், காதல் மனைவியை விட, காதலியிடம் இருக்கும் காமம். அவசர தேவைகளுக்காக தன் அம்மா ராணியம்மாவிடம் நிற்பதை கேவலமாய் நினைப்பது, எதிரிகளை தன் வலது கையாக இருப்பவரை வைத்து துவம்சம் செய்யும் போது படம் பார்க்கும் நம் முதுகில் சின்ன சிலிர்ப்பு ஓடுவதை தவிர்க்க முடியவில்லை. ஜமீந்தாரக வாழ்ந்திருக்கிறார்.

பீவியாக மகி கில். என்னா பர்பாமென்ஸ்.. என்னா ஒரு பர்பாமென்ஸ். சாஹிப் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்க, அனுமதியில்லாமல் உள்நுழைந்து வந்திருக்கும் விருந்தாளியை குசலம் விசாரிப்பதில் ஆரம்பித்து, தண்ணியடித்துவிட்டு சிகரெட் பிடிக்கும் ஸ்டைலாகட்டும், தன் டிரைவரை காரில் இடித்து தள்ளிய வண்டிக்காரனை துப்பாக்கியால் சுட்டு துரத்தும்போதாகட்டும், புது ட்ரைவர் பப்லுவுடனான காமம் மிகுந்த காதல் செய்வதாகட்டும், நிலையில்லாத மனநிலையில் இருக்கும் கொஞ்சம் டிப்ரஷனில் பிழன்றிருக்கும் பெண் கேரக்டரை அவ்வளவு ஸ்ட்ராங்க செய்திருக்கிறார். என்ன கண்கள். எவ்வளவு எக்ஸ்பிரஷன்கள். ட்ரைவருடன் திருட்டுத்தனமாய் காமம் கொள்ளும் போது தெரியும் காமம். என்று மிரட்டியிருக்கிறார்.

கேங்ஸ்டராக ரந்தீப் ஹோடா. இதுவரை சரியான படம் கிடைக்காமல் இருந்தவர். கிடைத்த வாய்ப்பை இம்முறை தவறவிடவில்லை. தனக்கு துரோகம் செய்யும் காதலியுடன் இருப்பவனை அடிக்கும் காட்சியிலிருந்து மெல்ல அதிகாரமும், ராணியின் காதலும், காமமும் கிடைத்தவுடன் அதை பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்து, பின்பு அதே ராணியின் காதலும் காமமும் அவனை ஆட்கொள்ள பொறாமையால் வெம்புவதும், என்று இலக்கில்லாத ஒர் அடங்கமறுக்கிற இளைஞனை கண் முன் நிறுத்துகிறார். செம பர்பாமென்ஸ்.

Sahib-Biwi-Aur-Gangster-475x708
இவர்கள் இல்லாமல் சாஹிப்பின் தளபதியாய் வலம் வருபவர், அவருடய லொடலொட மகள். பீவியின் பழைய ட்ரைவர், எதிர்கோஷ்டி கும்பல் சிங். அந்த அமைச்சர். என்று ஒவ்வொரு கேரக்டரும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள். முக்கியமாய் வசனங்கள் செம ஷார்ப். “மிகவும் நம்பிக்கைக்குரியவர்கள் மட்டுமே இந்த அரண்மனையில் தங்க முடியும்?” “நீ நம்பிக்கைக்குரியவன் தானே?” என்று பீவி தன் ட்ரைவர் பப்லுவிடம் கேட்கும் டயலாக். சட்டென பார்த்தால் சாதாரண டயலாக்காய் தோன்றும். ஆனால் இந்த டயலாக் அவர்களுக்குள்ளான கள்ளக்காதலுக்கு முன் பேசப்படுகிறது. இப்படி படம் பூராவும் செம ஷார்ப் கட்டிங் வசனங்களால் நிரம்பியிருக்கிறது. இயக்குனர் திமங்ஷு துலியா. முக்கியமான நான்கைந்து கேரக்டர்களை வைத்துக் கொண்டு இவர் ஆடும் ஆட்டமிருக்கிறதே.. சூப்பர்ப். நமக்கு நன்கு தெரிந்த் கதைதான். ஆனாலும் அதில் எதிர்பாராத த்ரில்களையும், ட்விஸ்டுகளை வைத்து திடுக்கிட வைக்கிறார். மகிக்கும் ரந்தீப்புக்குமிடையே நடக்கும் காமம் சார்ந்த காட்சிகள் அட்டகாசம். கொஞ்சம் கூட விரசமில்லாமல் ஆனால் அதே நேரத்தில் அவர்கள் இருவருக்குள் இருக்கும் காமமும், காதலும் அதை வெளிப்படுத்தும் திமிர் கலந்த, த்ரில் கலந்த சுதந்திரம் எல்லாவற்றையும் அந்தக் காட்சிகளில் அருமையாய் வெளிப்படுத்த வைத்திருக்கிறார். அதே போல திரைக்கதையில் அங்கிங்கே நம்மை திரும்பவிடாமல் கட்டிப் போட்டு வைத்திருக்கும் நுட்பம். இப்படி பார்த்து பார்த்து செய்திருக்கிறார். டெக்னிக்கலாய் படம் ஒளிப்பதிவாகட்டும், பின்னணியிசையாகட்டும், பாடல்கள் ஆகட்டும் படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டுகிறதே தவிர குறைக்கவில்லை. சாஹிப்பின் கீப்பாக வரும் பெண்ணின் கண்களில் தெரியும் காதல், அவளின் நெருக்கம் என்று அவளின் எபிசோடுகளில் காமத்தை விட ரஸனையான காதல் மோலோங்கியதாய் காட்டியது. அட்டகாசம். பார்த்தால் தான் புரியும்.

Saheb Biwi Aur Gangster – Must watch. 
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

5 comments:

Philosophy Prabhakaran said...

baguth acha...

ரைட்டர் நட்சத்திரா said...

பார்க்கலாம் போல

IlayaDhasan said...

ஒரு படத்தையும் விட மாட்றீங்களே ...எப்படி சார் டைம் கெடைக்குது?

தமிழ் மணத்திற்கு பதிவனாகிய என் கேள்விகள்

MANO நாஞ்சில் மனோ said...

படம் பார்க்க ஆவலை தூண்டுகிறது...!!!

ஒரு வாசகன் said...

வெடி இன்னும் பார்க்கவில்லையா?