
ரொம்ப நாள் ஆயிற்று ஆங்கில படங்களை ரீலீஸின் போதே பார்த்து.இந்த வாரம் பெரிதாய் சொல்லுமளவுக்கு தமிழில் படங்கள் வராததால் வேறு வழியில்லாமல் ஏற்கனவே கேட்ட, பார்த்த கதையாய் இருந்தாலும் பார்க்கலாம் என்று போனேன். இதில் 3டி வேறு.
அலெக்ஸாண்டர் டூமாஸின் புகழ் பெற்ற நாவல் இது. ஆர்தோஸ், போர்த்தோஸ், அராமிஸ் ஆகிய மூவரும் தான் மூன்று மஸ்கட்டீர்கள். இவர்களைத் தவிர கதையின் இளவயது நாயகன் ஒருவன் இருக்கிறான் அவன் பெயரை தமிழில் எழுதும் போதே சுளூக்கிக் கொள்ளூம் அபாயமிருப்பதால் விட்டுவிடுங்கள். அவன் தான் ஹீரோ. பழைய மஸ்கட்டீர்களை மிலேடி ஒரு முக்கியமான சமயத்தில் ஏமாற்றிவிட்டு எஸ்கேப்பாக, அதன் பிறகு ஹீரோ தானும் மஸ்கட்டீராவேன் என்று கிளம்புகிறான். ஒரு சமயம் மூன்று மஸ்கட்டீர்களோடு அரசிற்கு எதிரான ஆட்களுடன் சண்டையிட்டு அவர்களுடன் ஒட்டிக் கொள்கிறான். அதன் பிறகு ராணியில் வேலைக்காரியாக இருக்கும் சூப்பர் பிகர் கான்ஸ்டன்ஸை கண்டதும் காதலிக்க ஆரம்பிக்கிறான். ப்ரான்ஸ் ராணிக்கும் பக்கிங்ஹாம் ராஜாவுக்கும் காதல் அவர் ராணிக்கு பரிசாய் ஒரு வைர அட்டிகையை கொடுக்க, அதை மிலேடி கும்பல் கடத்திப் போய்விடுகிறது. அதன் பின்னணி பக்கிங்ஹாமுக்கும், ப்ரான்ஸுக்குமிடையே சண்டை மூட்டுவதற்காக. ராணி பதறிப் போய் மூன்று மஸ்கட்டீர்களை கூப்பிட்டு அதை திரும்ப காப்பாற்றி வர சொல்லுகிறாள். அவர்கள் காப்பாற்றினார்களா? இல்லையா என்பதுதான் கதை. இக்கதையை பள்ளிக்கூடத்தில் படித்ததாய் ஞாபகம்.

கதை ஆரம்பித்து முதல் பத்து நிமிடங்களுக்கு பிறகு அனாயசமாய் தூக்கம் சுழட்டி, சுழட்டி அடிக்கிறது. அவ்வளவு மொக்கையாய் போனது திரைக்கதை. மூன்று மஸ்கட்டீர்கள் இல்லாது புது ஹீரோ வந்தவுடன் தான் கொஞ்சம் சுறுசுறுப்பு பிடிக்கிறது. அதற்கு பிறகு பறக்கும் கப்பல், அது இதுவென ஏதோ செய்ய முயன்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பார்த்ததையே மீண்டும் கருமம் பிடித்த 3டியில் பார்த்து தொலைக்க வேண்டியிருக்கிறது. ஆங்காங்கே கத்தியின் முனைகளும், அகண்ட ப்ரம்மாண்ட பெண்களின் மார்பும் கண் முன் நிற்பதை தவிர வேறெதுக்கும் பிரயோஜனமில்லை. 2டியிலேயே பார்க்கலாம்.

அபாரமான ஒளிப்பதிவு. சிஜி ஒர்க், ப்ரம்மாண்டமான மாளிகைகள், செம ரிச்சான ப்ரொடக்ஷன் வேல்யூ, சத்யமில் ஆங்காங்கே தன் இரண்டு மூன்று வயது குழந்தைகளோடு வந்திருந்த இளம் அம்மாக்கள், மற்றும் ஆங்காங்கே வரும் சில சுவாரஸ்யங்களை தவிர, அநியாயமாய் பல படங்களில் பார்த்த அதே டெம்ப்ளேட் படங்களின் காட்சிகள் வந்து படு மொக்கையாய் போகிறது. புதிதாய் அலெக்ஸாண்டர் டூமாவின் நாவலை படிக்காதவர்களுக்கு வேண்டுமானால் கொஞ்சமே கொஞ்சம் சுவாரஸ்யம் இருக்கக்கூடும்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
ஹ...ஹ...
அப்படீண்ணா அரணாச்சம் மாதிரி 30 கோடி கொடுத்து படம் எடுக்கச் சொன்னாங்களோ...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்
என்ற தளத்திற்கான தொடுப்பிற்குச் செல்ல வைரஸ் என குரோம் உலாவியும், ஏவிஜீ அண்டி வைரசும் தடுக்கிறது.. கவனத்திலெடுங்கள்.. தள வாசகர்கள் திரும்பிச் செல்லக் கூடும்..
தொடர்ந்து எழுதுங்கள்.....
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
கதாநாயகன் பெயர் டார்டானன்! இது மொத்தம் நான்கு பகுதிகளாக வந்தது. படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ, ஒரிஜினல் கதையை இப்போதும் படித்தால் சுவாரசியத்துக்கு நான் காரண்டீ! இதை த்ரீ-டீயில் பார்த்தால் எப்படிப் புதுமையான அனுபவம் கிடைக்கும் என்று எனக்குப் புரியவில்லை. ஒரிஜினல் புத்தகங்கள் Project Gutenberg தளத்தில் இருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்! புத்தகம் புத்தகம் தான்
கத ஒன்னு தான் ... அந்த படத்திலேயும் ஹீரோ கூட மூணு பேரு வருவாங்க ... இவங்க எல்லாரும் ஹீரோயினை காப்பாத்த போவாங்க ..கடைசியில ஹீரோயின் செத்துருவா...