Thottal Thodarum

Nov 9, 2011

தமிழ் சினிமா ரிப்போர்ட் – அக்டோபர்-2011

செப்டம்பர் மாதம் வெளியான படங்களில் பெரும் வெற்றிப் பெற்ற படமாய் அமைந்தது ஏ.ஆர்.முருகதாஸின் “எங்கேயும் எப்போதும்” திரைப்படம் மட்டுமே. விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் ஒருமித்த பாராட்டை சமீபத்தில் பெற்ற படமென்றால் இது ஒன்று தான். வசூல் ரீதியாய் ஆரம்பித்த ரெண்டொரு நாள் தடுமாறினாலும் மக்களின் மவுத் பப்ளிசிட்டியினாலும், மீடியா ப்ரோமஷனக்ளினாலும் பெரிய அளவிற்கு ரீச்சானது என்றே சொல்ல வேண்டும். சிட்டி மட்டுமில்லாது தமிழகமெங்கும் பெரும் வெற்றியை பெற்றது இப்படம். திரையிட்ட சில நாட்களிலேயே ஒரு தியேட்டரில் வெளியாகியிருந்த படத்தை இன்னொரு தியேட்டரிலும் போடப்பட்ட அரிதான படங்களில் இதுவும் ஒன்று. வசூல் ரீதியாக சுமார் பதினெட்டிலிருந்து, இருபது கோடியை தொடும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். ஐம்பது நாளை கடந்திருக்கும்  இம்மாதிரியான ஆவரேஜ் பட்ஜெட் படங்களின் வெற்றி தமிழ் சினிமாவிற்கு கிடைக்கும் புத்துணர்ச்சியான சுவாசம் என்றே சொல்ல வேண்டும்.


இம்மாதம் தீபாவளி மாதம் என்பதால் நிறைய படங்கள் வெளியாகவில்லை. ஏனென்றால் அப்படியே ரிலீஸ் செய்தாலும் தீபாவளிக்கு வரும் பெரிய படங்களுக்காக தியேட்டரக்ள் ஏற்கனவே புக் செய்திருப்பதால் நன்றாக ஓடினாலும் எடுக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்பதால் வெளியிட மாட்டார்கள். இது பற்றி மேலும் அறிய சினிமா வியாபாரம் புத்தகம் படியுங்கள்.*விளம்பரம்*. முதல் இருபது நாட்கள் ஃபீரியாக இருந்ததால் தைரியமாய் சில படங்கள் வெளியாகத்தான் செய்தது. அதில் முக்கியமானது களவாணி வெற்றிப் படத்திற்கு பிறகு இயக்குனர் சர்குணத்திடமிருந்து வெளிவந்த...

1. வாகை சூடவா

மிகுந்த எதிர்பார்ப்போடு வந்த படம். அதற்கு காரணம்  இயக்குனர் சர்குணத்தின்  முந்தைய ஹிட் படமான களவாணியும், இப்படத்தின் பாடல்களும் முக்கிய காரணமாய் அமைந்தது. பீரியட் பிலிமாக எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் மந்தமான திரைக்கதையோடு, முடிவில் அழுத்தமான குழந்தை தொழிலாளர் பிரச்சனையை எடுத்திருந்தார் இயக்குனர். இப்படத்தின் ஏஸ்தடிக் ஒளிப்பதிவினாலும், நலல் இசை, மற்றும் க்ளைமாக்ஸ் கருத்துக்காக பெரும்பாலான பத்திரிக்கையாளர்களிடமும்,  இலக்கியவாதிகளாலும், ஒலகப் படம் பார்பவர்களாலும் பாராட்டு பெற்றாலும். அழுத்தமில்லாத. மிக மெதுவாய் செல்லும் திரைக்கதையினால் கமர்ஷியலாய் வெற்றி பெற முடியவில்லை என்பது வருத்தமே. சுமார் ஏழு கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் விலையாய் யாரும் வாங்கவில்லை. அதனால் விநியோகம் முறையிலேயே வெளியிட்டார்கள். படத்தின் தோல்வியின் காரணமாய் கதாநாயகனாய் நடித்த விமல் தன்னுடய சம்பளமான ஐம்பது லட்சத்தை தயாரிப்பாளருக்கு திரும்பித் தந்து உதவிய செய்தியே படத்தின் வெற்றி பற்றிய செய்திக்கான ரிசல்ட். அழகான கதாநாயகி, நல்ல பாடல்கள், சிறப்பான சினிமாட்டோகிராபி, மெசேஜ் சொல்லும் க்ளைமாக்ஸ் எல்லாம் இருந்தும் அசுவாரஸ்யமான திரைக்கதையில் கோட்டை விட்டதால் கமர்ஷியல் வெற்றி தவறிப் போனது வருந்ததக்க விஷயமே. பட் குட் ஷோ.. சர்குணம். விமர்சனம் படிக்க

2.முரண்
சேரன், ப்ரசன்னாவின் நடிப்பில் சேரனின் தயாரிப்பில் ஆரம்பித்து பின்பு யுடிவியின்பால் தயாரிப்பு மாற்றப்பட்டு, சேரனின் கம்பெனி லைன் ப்ரொடியூசராய் இருந்து தயாரித்த படம். Strangers on a train என்கிற ஹாலிவுட்டின் த்ரில்லர் பிதாமகன் ஹிட்காக்கின் படத்தை இன்ஸ்பயர் செய்து எடுக்கப்பட்ட படம். இப்படம் ஏற்கனவே விசாகா எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் தெலுங்கில் கூட எடுக்கப் பட்டிருக்கிறது. தமிழில் இதை இயக்கிய ராஜன் மாதவ் சிறப்பாகவே எடுத்திருந்தார். இருந்தாலும் மிக மோசமான ஓப்பனிங் கிடைத்தற்கு காரணம் சேரன் தான் என்றால் அது மிகையாகாது. வழக்கமாய் அழுது வடிந்து கொண்டிருக்கும் இவரை பெரும்பாலான இளைஞர்களுக்கு பிடிக்காது. ஆனால் இம்மாதிரியான படங்கள் இளைஞர்கள் அதிகம் புழங்கும் மல்ட்டிப்ளெக்ஸ் படம். அப்படியிருக்க சேரனின் ப்ரெசென்ஸ் யோசிக்க வைத்தது ஒரு மைனசாக இருந்தாலும், இப்படத்திற்கு இவரை தவிர வேறொரு நடிகர் மனதில் தோன்றா வண்ணம் சிறப்பாகவே செய்திருந்தார் சேரன். மிக மோசமான ஓப்பனிங்கால், பெரிதாய் சொல்லிக் கொள்கிறார் போன்ற வசூலும் இப்படத்திற்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். என்ன தான் இன்ஸ்பிரேஷன், பாராட்டத்தகுந்த முயற்சி என்று விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் கவனிக்கப்பட்ட படம். யூடிவிக்கு இது ஒரு தோல்விப் படம் என்றே சொலல் வேண்டும். இரண்டாவது நாளே சில ஊர்களில் எடுக்கப்பட்டுவிட்டது என்று தகவல். சென்னை போன்ற பெரிய ஊர்களில் மட்டும் இரண்டு வாரம் ஓடியது. விமர்சனம் படிக்க..

3. சதுரங்கம்
கரு.
பழனியப்பன் இயக்கத்தில், ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால் நடித்த படம். ஆறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே வந்திருக்க வேண்டிய படமான இது, தயாரிப்பாளரின் ஃபைனான்ஸியல் ப்ரச்சனை காரணமாய் படம் முழுக்க முடிந்து வெளியிட முடியாமல் இத்தனை வருடங்கள் பெட்டிக்குள் இருந்ததை வேறொரு தயாரிப்பாளர் கையிலெடுத்து வெளியிட்டார். நிச்சயமாய் இப்படம் அப்போதைக்கு வெளியாகியிருந்தால் ஒரு சிறந்த ஹிட் படமாய் அமைந்திருக்கும். ஆனால் இப்போது கோ போன்ற ரேசி பத்திரிக்கையாளர் கதையெல்லாம் பார்த்த பிறகு இது ஒரு மட்டு குறைவுதான். ரிலீஸானதே பெரிய விஷயம் ஆதலால் இதன் வசூல் பற்றியெல்லாம் பேச ஏதுமில்லை. விமர்சனம் படிக்க

4.வர்ணம்
மோனிகா, சம்பத் போன்றவர்களை தவிர முற்றிலும் புதிய டெக்னீஷியன்கள்,நடிகர்களை கொண்டு வெளிவந்த படம். ஆட்கள் புதுசாய் இருந்தாலும் கண்டெண்ட் நச்சென இருந்ததால் பார்த்த மக்களுக்கு பிடிக்கவே செய்தது. ஆனால் போதிய விளம்பரமின்மையாலும், அடுத்து வந்த தீபாவளி படங்களாலும் காணாமல் போனது. விமர்சனம் படிக்க

5. உயிரின் எடை 24 அயிரி
பேர் கொஞ்சம் சுவாரஸ்யத்தை கொடுத்தது என்றாலும் படம் யாரையும் கவரவில்லை. சிறு முதலீட்டு படம். புதிய்வர்கள் என்ற வகையில் நல்ல முயற்சி. என்ன அதே ரவுடி தாதாயிசம் என்று சொல்லாமல் கொஞ்சம் வேற மாதிரியான விஷயங்களை சொல்லியிருந்தால் ஜெயித்திருப்பார்களோ என்று தோன்றியது. விமர்சனம் படிக்க

6 வேலாயுதம்
தீபாவளிக்கு வருமா? வராதா? என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். அந்த அளவுக்கு ஏழாம் அறிவுக்கு தியேட்டர்காரர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு எம்.ஜி கொடுத்துக் கொண்டிருக்க, ஆஸ்கர் ரவிசந்திரன் தான் யார் என்பதை எந்த வித பதட்டமும் இல்லாமல் நச்சென நிருபித்துக் காட்டிய படம். விஜய்யின் இறங்குமுகத்தை கொஞ்சம் தூக்கி வைத்த படம் என்றும் சொல்லலாம். படம் வெளியான அன்று படத்தை பற்றிய பேச்சு பெரிதாய் இல்லாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாய் படத்தை பற்றிய மவுத்டாக் ஏற ஆரம்பித்துவிட, ஒரு நிலையான வசூலை பெற்று விட்டது என்றே சொல்ல வேண்டும். சென்னை, மற்றும் செங்கல்பட்டு ஏரியா பார்டரை தவிர மற்ற ஏரியாகக்ளில் நிதானமான வசூலை பெற்றுக் கொண்டிருப்பதாய் தகவல். அநேகமாய் இந்த தீபாவளிக்கு வந்த ரெண்டு படங்களில் நிதானமாய் ரேஸில் முந்தும் என்று சொல்லப் படுகிற படம். அதற்கு காரணம் படத்தின் பட்ஜெட். சுமார் 30 கோடியில் தயாரிக்கப்பட்ட படம். ஆஸ்கர் யாருக்கும் விற்கவில்லை. உலகம் முழுவதும் தானே ரிலீஸ் செய்தார். அந்த வகையில் அவருக்கு இப்படம் அறுவடைதான். எப்படி தசாவதாரத்தில் ஒரு பெரிய அறுவடையை செய்தாரோ அதே போல் இதிலும் வெற்றி பெற்று இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். வேலாயுதம் படத்திற்கு இது வரை ஒரே ஒரு ப்ரஸ் மீட் அதுவும் படம் ஹிட் என்று பிரகடனப் படுத்த வைத்தார்கள். அவ்வளவுதான். படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணம் முதல் பாதி காமெடி, மற்றும் பாடல்கள். ஒரு வெகுஜன ரசிகனின் எதிர்பார்ப்பை சரியான விகிதத்தில் கலக்காவிட்டாலும் போன விஜய் படங்களை பார்த்தால் ஒரு எரிச்சல் வருமே அது வராமல் இருந்ததே இப்படத்திற்கு ஒரு ப்ள்ஸாக அமைந்துவிட்டது என்று சொல்ல வேண்டும். போட்ட முதலை முதல் வாரத்திலே கவர் செய்துவிட்டாரக்ள் என்று கூறுகிறார்கள்.  விமர்சனம் படிக்க

7. ஏழாம் அறிவுபடம் வருவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு. அதற்கேற்றார் போல் பப்ளிசிட்டி, சூர்யாவின் தொடர் வெற்றி, ஆறு ஆண்டுகளுக்கு பின்னால் ஏ.ஆர்.முருகதாஸும், சூர்யாவும் சேரும் ப்டம் என்று ஏகத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்க, வியாபாரமும் எகிறியது. சுமார் 85 கோடிக்கு விற்பனையானதாக சொல்லப் படுகிறது. தயாரிப்பு செலவு சுமார் 60-65 என்கிற பட்சத்தில்  தயாரிப்பாளராக ரெட்ஜெயண்டுக்கு பெரிய லாபம் தான். இம்மாதிரியான படங்களுக்கு ஓப்பனிங் பற்றி சொல்ல வேண்டாம். அதிலும் தொடர் ப்ரஸ் மீட்டில் தமிழுணர்வை வியாபாரம் செய்ததால் இன்னும் பெரும் எதிர்பார்ப்பு கூட, மூன்னூறுக்கு, ஐந்நூறுக்குமாய் டிக்கெட் விற்பனை முதல் மூன்று நாட்களுக்கு. அதற்கு காரணம் தியேட்டர்காரர்கள் கொடுத்த அபரிமிதமான எம்.ஜி. அதை கவர் செய்ய வேற் வழியேயில்லை. அவ்வளவு எம்.ஜிக்கு காரணம் தியேட்டர்கள் இல்லாமை என்றும் கூறலாம். உதாரணமாய் சமீபத்தில் வெளியான மங்காத்தாவின் வெற்றிக்கு காரணம் நிறைய தியேட்டர்களில் வெளியிட்டதும், பெரிய எம்.ஜி என்று இல்லாமல் சில தியேட்டர்களில் அட்வான்ஸில் கூட போட்டார்கள். எனவே நூறு முதல் நூற்றைம்பதுக்கு மேல் டிக்கெட் விலை விற்கபடவில்லை. சரியான வசூலை பெற்றது. ஆனால் இங்கே இரண்டு பெரிய படங்கள். இரண்டுக்கு தியேட்டர்கள் பிடிக்க போட்டா போட்டி என்கிற நிலையில் கிடைத்த கேப்பில் எல்லாம் ஆடு வெட்டினார்கள். அதனால் தான் பெரிய எம்.ஜி. ஒரு தயாரிப்பாளராய் ரெட்ஜெயண்டுக்கு பெரிய வெற்றி. ஆனால் நிச்சயம் நிறைய விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் லாஸ் வரும் என்று சொல்கிறார்கள். அதை தடுப்பதற்குத்தான் படம் வெளியான இருபது நாட்களுக்குள் ஐந்து சக்சஸ் மீட் நடத்தப்பட்டிருக்கிறது. தினம் பேப்பரில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்று திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. இன்னொரு பெரிய மைனஸ் படத்தின் பாடல்கள். பாடல்கள் சொதப்பிவிட்டதால் ஈஸியாய் கிடைக்க வேண்டிய பப்ளிசிட்டி கிடைக்கவில்லை என்பது வருத்தமே. இந்த போதிதர்மர் தமிழர் ஜல்லி. தெலுங்கில் நாங்கள் போதிதர்மர் தமிழ்நாட்டில்தான் பிறந்தார் என்று சொல்லியிருக்கிறோம் என்று சொல்வதெல்லாம், நான் இதைப் பற்றி தெலுங்கு பட க்ளைமாக்ஸில் இங்கே தமிழர்களுக்கு ஏத்திவிட சொன்ன டயலாக்குகள் எல்லாம் இந்தியன் என்றும் மன தேசம் என்றும் பொதுவாய் சொல்லியிருந்ததை மேலும் கிளற போகிறார்களோ? என்று இவர்களாகவே எங்கப்பன் குதிருக்கு இல்லை என்பதை போல வேற விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கல்ள். போதிதர்மரை பற்றிய எபிசோட், சூர்யா, ஸ்ருதியை  தவிர யூகிக்க கூடிய திரைக்கதை, லாஜிக்கில்லா நோக்கு வர்மம். என்று ஜவ்வாய் போனதால் படத்தின் ஓட்டத்தை கூட்ட இன்னும் கூவிக் கொண்டேயிருக்கிறார்கள். இப்படத்தை வரை விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கு கூட்டி,கழிச்சு பார்த்துதான் ஹிட்டுன்னு சொல்ல வேண்டியிருக்கும் என்பதுதான் இன்றைய நிலை. விமர்சனம் படிக்க

8. ரா.ஒன்
இந்த தீபாவளிக்கு வந்த ஒரே ஒரு ஹிந்தி படம். அதே படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. இன்றைய தேதிக்கு இந்தியாவின் அதிக பொருட்செலவு செய்து தயாரிக்கப்பட்ட படம். நம் மக்களை கவர்வதற்காக பத்து செகண்ட் ரஜினி தரிசனம் என்று வேறு விளம்பரம் செய்தார்கள். ஷாருக், கரீனா, பெரும் பொருட்செலவு, டெக்னாலஜி, 3டி, கூடவே ரஜினி  என்று எல்லாம் இருந்தும் படு மொக்கையான கதை மற்றும் திரைக்கதையால் ஆல்மோஸ்ட் ஊத்தி மூடப்பட்டது என்றே சொல்ல வேண்டும். ஏழாம் அறிவு போலவே ஒரு தயாரிப்பாளராய் ஷாருக்குக்கு லாபகரமான படமாய் இருந்தாலும் வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டத்தை கொடுக்கக் கூடிய படம் என்றே சொல்ல வேண்டும். முதல் நாளில் 22 கோடி வசூல் என்றெல்லாம் அறிவித்தார்கள். இப்படத்தின் ப்ரொமோஷன், தயாரிப்பு செலவுக்கு இது கால் தூசு. விமர்சனம் படிக்க


சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

20 comments:

CS. Mohan Kumar said...

You are writing review for all films twice in a month.

Good to read this report.

SENTHIL MURUAGN said...
This comment has been removed by the author.
அருண் said...

"சதுரங்கம்" நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஒரு ப்ரேக்கா அமைஞ்சிருக்க வேண்டியது,மிஸ் ஆகிடுச்சினு நினைக்கிறேன்,வாகை சூட வாவின் தோல்வி கொஞ்சம் கஷ்டமா இருக்கு.தீபாவளி ரேஸ்ல எது பர்ஸ்ட்னும் சொல்லிடிங்க,அப்புறம் என்ன? ரிபோர்ட் கலக்கல்.
-அருண்-

rajamelaiyur said...

வாகை சூட வா நல்ல படம் ..

rajamelaiyur said...

இன்று என் வலையில்

விஜய் ரசிகர்கள் – சிரியுங்கள் ஆனால் சீரியஸா எடுத்துகாதீர்கள்

rajamelaiyur said...

முரண் படத்தில் பிரசன்னா நடிப்பு அருமை

'பரிவை' சே.குமார் said...

கலக்கல் ரிப்போர்ட்.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

@cable Jee.. :

Report Supper .. ;)
Vaagai Soodava Nallla irunthathu but publickutty pothathunnu ninaikkuren.. !
but Velayutham Supper .!
enakku velayutha songs a vida 7th sense song nalla irukkunnu thonuthu .. but ella songs um ketta mettu .. aanaalum .. !
Sri Lankala .. Velayutham Team ku JAI Ho..!!

Nice Review .. :D

Regards
M.Gazzaly

Free Hacking Articles

SathyaPriyan said...

//இந்த போதிதர்மர் தமிழர் ஜல்லி.//

ஒரு கருத்தை ஒரு முறை சொன்னால் போதாதா? எத்தனை முறை அதையே சொல்வீர்கள்?

இவர்கள் என்ன? சுமார் மூன்று லட்சம் கோடி சொத்து வைத்திருக்கும் பில் கேட்ஸ் தமிழராக இருந்தாலும் தமிழ் உணர்வை தூண்டுவதற்காக என்பது கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுக்க மாட்டார்.

அதெல்லாம் வியாபாரத்திற்கு என்பது கூடவா மக்களுக்கு தெரியாது?

இப்படி வைத்துக் கொள்வோம், ஒரு வேளை மசாலா கஃபே படம் ஃபர்ஸ்ட் காபி பார்க்கும் பொழுது உங்களுக்கு படு மொக்கையாக தெரிகிறது. ஆனால் படம் எடுக்கும் பொழுது இது தெரியவில்லை. உங்கள் டீம் ப்ரெஸ் மீட் வைத்து படம் அருமையாக வந்துள்ளதாக சுற்றுகிறார்கள். நீங்கள் உடனே படம் மொக்கை என்று கூறுவீர்களா? குறைந்தபட்சம் அதனை பதிவிலாவது எழுதுவீர்களா? இல்லை வியாபாரத்திற்காக ஒன்றும் சொல்லாமலோ இல்லை படம் நன்றாக உள்ளதாகவோ கூறுவீர்களா?

ஒருவேளை உங்களுக்கு அப்படி செய்யும் நேர்மையும் தைரியமும் இருக்கலாம். ஆனால் என்னை போன்ற சராசரி மனிதர்களிடமும் அதனை எதிர்பார்ப்பது நியாயமே கிடையாது.

நான் ஏழாம் அறிவு படத்தில் பங்கு கொண்டிருந்தால் நானும் தமிழ்! தமிழ்! என்று தான் ஜல்லி அடித்திருப்பேன். ஜெயிக்கும் குதிரையில் தான் பணம் கட்ட முடியும்.

N.H. Narasimma Prasad said...

Cinema Report is very Nice.

prasannakumar said...

Do you have any Official collecion reports to Support ur claim/Article? I would be nice if you mention the source as well

rajasundararajan said...

ஏதோ அரசியல் பண்றீங்கன்னு தெரியுது, ஆனா என்னத்துக்குன்னு தெரியலை.

நியாயமா, 'காவலன்' படத்தில்தான் நீங்கள் விஜய்க்குக் கை கொடுத்திருக்க வேண்டும், ஆனால் காலம்தாழ்த்தி 'வேலாயுதம்' படத்தில் கொடுக்கிறீர்கள். வேலாயுதம் மோசம் என்று நானும் சொல்லமாட்டேன், ஆனால் படம் அந்த ரயில் ஸீக்யுவென்ஸோடு முடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது எனது கருத்து. சண்டைகள் சிறப்பாக வ்ந்திருக்கிறது என்றுதான் கணிக்கிறேன்.

'ஏழாம் அறிவு' படம் அதன் இன்னர் லாஜிக்குக்குள்தானே இயங்குகிறது? அதை ஏன் இப்படி வாரினீர்கள்? நானும் குப்பைப் படமாக இருக்குமோ என்று அஞ்சி இன்றுவரை தள்ளிப்போட்டுவிட்டேன். 'தமிழர்' பற்றிய ஆராய்ச்சி என்னத்துக்கு? காஞ்சி சந்திரசேகர சுவாமிகள் தன் 'கடவுளின் குரல்' நூலில் சொல்கிறார்: ஆதிசங்கரர் தமிழராம்; மராட்டியர் ஏன் நர்மதைக்கு இந்தப்பக்கம் உள்ளவர்கள் எல்லாரும் திரவிடர்கள்தாமாம். சிலர் சிந்துவெளி மக்கள் திராவிடர்கள் என்றும் சொல்கிறார்கள். தமிழைத்தான் ஸம்ஸ்க்ருதத்தில் திராவிடம் என்று சொல்வார்கள்: தமிழ் -> தமிழம் -> த்ரமிளம் -> த்ராவிடம். ஆகவே, தெலுங்கனாக இருந்தாலும் பொருந்தாமற் போகாது. மற்றபடி, தெலுங்கருக்காகவும் சிங்களவருக்காகவும் திருத்தங்கள் செய்யப்பட்டன என்றால், வியாபாரத்துக்காகவும் சட்டதிடங்களுக்காகவும் அப்படித்தானே நடக்கும். அரபிய நாடுகளுக்காகத் திருத்தங்கள் செய்ய மாட்டோமா?

அதுதான் சொன்னேனே, அரசியல் பண்றீங்கன்னு தெரியுது, ஆனா என்னத்துக்குன்னு தெரியலை.

Vijay said...

//இரண்டாவது நாளே சில ஊர்களில் எடுக்கப்பட்டுவிட்டது என்று தகவல்.//

சும்மா அடிச்சு விடாதீங்க.. எந்த ஒரு படமும் இரண்டாவது நளே எடுப்பது இல்லை. குறைந்தது 5 நாளவது பார்த்து விட்டு தான் எடுப்பார்கள்.

வவ்வால் said...

//ஏதோ அரசியல் பண்றீங்கன்னு தெரியுது, ஆனா என்னத்துக்குன்னு தெரியலை.//

ராஜா சுந்தரராஜன், இதெல்லாம் இன்னுமா நம்புறிங்க, சும்மா வந்தமா , சூப்பர்னு போட்டமானு போகனும், நம்பிக்கை இல்லாம , பேசிகிட்டு இருக்கலாமா?

அதாவது தசவதாரம் மூலம் அறுவடைனு சொன்னதும் நீங்க நம்பிட்டிங்களா? இல்லை வேலாயுததுக்கு 30 கோடி தான் பட்ஜெட், ஆனால் 7 ஆம் அறிவுக்கு 60-65 கோடி பட்ஜெட் என்றதும் நம்பிட்டிங்களா?

60-65 கோடி பட்ஜெட் படம் 85 கோடிக்கு தான் சேல்ஸ் ஆகுமா? என்றூ கேட்க மாட்டிங்களா? 70:30 என்பது தான் சினிமா வியாபாரம், அவர் சொல்ல மாட்டார்.,நீங்களும் கேட்க மாட்டிங்க, 7 ஆம் அறிவு, வேலாயுதம் எல்லாமே நஷ்ட படங்களே! கடைசியா தியேட்டர்களில் போட்டவங்க தான் இதை சொல்வாங்க!

மல்டிபிளெக்ஸ் சென்னைக்கு வெளில எத்தனை இருக்கு சென்னைல எத்தனை இருக்கு? இதுல இதெல்லாம் மல்டி பிளெக்ஸ்ல மட்டும் ஓடும் னு சொல்றதூ!

rajasundararajan said...

/7 ஆம் அறிவு, வேலாயுதம் எல்லாமே நஷ்ட படங்களே!/

இது ஏற்றுக் கொள்கிறாற் போல இருக்கிறது.

shortfilmindia.com said...

vavvall

உங்களுக்கு எவ்வளவு வியாபாரம் தெரியும் என்று எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு சினிமாவில் உள்ள வியாபாரம் தெரியும். எத்தனை தியேட்டர்கள் எவ்வளவு எம்.ஜி கொடுத்தார்கள் என்பது வரை தெரியும். வெறும் சூப்பர்.. ஆஹா..என்கிற பின்னூட்டங்கள் மட்டுமெ இங்கே வரும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு என்பதற்கு உங்கள் பின்னூட்டம் இங்கிருபதையே உதாரணமாய் சொல்வேன்.

70:30 ஆ.. ஒரு விஷயம் தெரியுமா? 100 கோடிக்கு மேல் செலவு செய்து தயாரிக்கப்பட்ட எந்திரனின் வியாபாரம் என்ன வென்று உங்களுக்கு தெரியுமா?

கடைசியில் தியேட்டர்காரன் லாஸ் ஆவான் என்பது உண்மை. ஆனால் அத்ன் பின் ஆயிரம் வியாபார சூட்சமங்கள் இருக்கிறது. ஸோ.. அது பற்றி என்னிடம் பேச வேண்டுமென்றால் போனில் கூப்பிடுங்கள் க்ளாஸ் எடுக்கிறேன்.:)

shortfilmindia.com said...

விஜய். ஒரு நாள் ஒரு ஷோவில் எடுக்கப்படுகிற படமெல்லாம் இருக்கிறது.. உங்களுக்கு தெரியாது.

shortfilmindia.com said...

@ராஜ சுந்தரராஜன்

நமக்கு எது விருப்பமோ அதற்கேற்றார் போல் வச்சிக்க வேண்டியதுதானோ..

வவ்வால் said...

கேபிள்,

கூல் ...கூல் நீங்க சனநாயகவாதி தான் இல்லைனா சொன்னேன், சூப்பர்னு பின்னூட்டம் போடனும்னு சொல்றது பொதுவா அப்படி சொன்னா தான் மக்களுக்கு பிடிக்கும்னு அர்த்தத்தில சொன்னேன்.

//கடைசியில் தியேட்டர்காரன் லாஸ் ஆவான் என்பது உண்மை. ஆனால் அத்ன் பின் ஆயிரம் வியாபார சூட்சமங்கள் இருக்கிறது. //

தியேட்டருக்கு நஷ்டம் வராத படம் தான் லாபம் அடைந்ததாக சொல்லவேண்டும். மல்டிபிளெக்ஸ்கள் பெரும்பாலும் நஷ்டம் அடைவதில்லை. ஆனால் சென்னைக்கு வெளில நிலமை அப்படி இல்லை.

நீங்க பார்த்திருப்பிங்களா என்னனு தெரியலை, எங்க ஊர்ல படம் சரிய ஒடலைனா இன்று முதல் டிகெட் 20 ரூபாய்னு போஸ்டர் ஒட்டுவங்க ,அப்படியும் சரியா ஓடலைனா 10 ரூபாய்னு ஒட்டுவாங்க.அப்புறமா தான் தூக்குவாங்க. இதெல்லாம் ஏதொ 50 நாள் ஓடினப்பிறகு நினைக்காதிங்க, முதல் வாரத்திலயே நடக்கும்.காவலன் எல்லாம் அப்படி ஓட்டினாங்க.

நீங்க தசவதாரத்தில்ல அறுவடைனு சொன்னிங்க, அப்புறம் எந்திரனுக்கு என்ன ஆச்சுனு கேட்கறிங்க? ஹி..ஹி அப்போ தசாவதாரம் மெக ஹிட் ஆஹ்? மேலும் பிரிண்ட் அடிப்படையில அவுட் ரைட்டா தான் பலப்படங்கள் தராங்க, அப்படி வாங்கின தியேட்டர் எல்லாம் பெரும்பாலும் நஷ்டம் ஆகிறாங்க.(எந்திரன்,சிவாஜி வெளியிட்டு நஷ்டம் ஆன தியேட்டர்களும் இருக்கு)

//ஆனால் அத்ன் பின் ஆயிரம் வியாபார சூட்சமங்கள் இருக்கிறது. //


உங்களுக்கு தெரியாதுனு என்று சொல்லவில்லை வெளில சொல்ல மாட்டிங்க அந்த சூட்சமங்களை.

எனக்கு தெரியாது தான், நான் தியேட்டர்காரங்க கிட்டே பேசுறது வச்சு தான் சொன்னேன். எனக்கு அவங்க சிலரைத்தான் தெரியும்.