நாற்பது லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் அன்பு வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும் என் நன்றிகள் பல. சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
பார்த்திபன் வெகு காலத்திற்கு பிறகு இயக்கியிருக்கும் படம். இவர் நடித்து வெளிவரும் ஐம்பதாவது படம். ரொம்ப நாள் தயாரிப்பில் இருந்த படம். வழக்கமாய் ஏதாவது சீரியசாய் படமெடுத்துவிட்டு அது ஓடாமல், வெறுத்துப் போய் மசாலாவாக கலாய்த்து உள்ளே வெளியே ஆடியவர். இப்போதும் அதைப் போலவே யோசித்து எடுத்திருக்கும் படம். செவந்த் சேனல் மாணிக்கம் தயாரித்தும், பார்த்திபனின் இயக்கத்தில் என்று இருந்தும் பெரிய எதிர்பார்ப்பையெல்லாம் எற்படுத்தாத படம்.
ரெளத்திரன் ஒரு ஸ்ட்ரெயிட் பார்வட் போலீஸ் ஆபீசர் மட்டுமல்ல, கிரிமினலும் கூட. புத்திசாலித்தனமாய் எதிரிகளை துவம்சம் செய்யக் கூடியவன். அவனுக்கு பயம் என்பது, பாசம் என்பதும் கிடையாது. அவன் ஒரு அனாதை அதனால் தான் எதுவும் செய்ய முடியவில்லை என்று டி.சி சொல்கிறார். இப்படிப்பட்ட ஹீரோவால் பாதிக்கப்பட்ட வில்லன்களுக்கு பதில் சொல்ல முடியாமல் டிசி விழித்துக் கொண்டிருக்கும் போது ரெளத்திரனே வாய் ஸ்லிப்பாகி தன் அப்பா என்று சொல்லிவிட, அவரை பற்றி விசாரித்து அவரை வேலையை விட்டு தூக்குகிறார். ரெளத்திரன் ஏன் அப்படி பொய் சொன்னான் என்பதற்கு ஒரு ப்ளாஷ் கட் ப்ளாஷ்பேக்கில் சுருக்கமாய் சொல்லியிருக்கிறார்கள். ரெளத்திரனுக்கு போலீஸ் வேலை போகிறது. ஜெயிலில் இருந்த வந்தவர் டான் ஆகிறார். ஆனாலும் போலீஸ் வேலை பார்க்கிறார். எப்படி என்பதை தைரியமாய் தியேட்டருக்கு சென்று படம் பார்த்து தெரிந்து கொல்லலாம். (இது ஸ்பெல்லிங் மிஸ்டேக் அல்ல)
படம் முழுக்க, பார்த்திபன்.. பார்த்திபன்.. பார்த்திபன். ஒரு பக்கம் நடிகர் பார்த்திபன் ப்ரேமுக்கு ப்ரேம் வருகிறார் என்றால் இன்னொரு பக்கம் வசனகர்த்தா பார்த்திபன். இந்த கதாசிரியர், திரைக்கதையாசிரியர், இயக்குனர் பார்த்திபன்களைத் தான் காணோம். வேட்டையாடு விளையாடு போல ஒரு ஓப்பனிங் சாங்கில் தன்னை ஒரு டெரர் ஏ.சியாய் காட்டிக் கொண்டவர். தான் மாட்டிக் கொண்டோம் என்றதும், படு முட்டாள் தனமாய் செயல்பட்டு ஜெயிலுக்கு போகிறார். பாதி படம் வரைக்கும் தான் யோசித்திருப்பார் போலிருக்கிறது. மீதி பாதியை அது போற போக்கில் எடுத்திருக்கிறார். வழக்கமான பழி வாங்கும் கதை எடுத்துக் கொண்டு, அதை புதுசாய் காட்ட முயன்று தோற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். எல்லா காட்சிகளிலும் பார்த்திபன் தான் புத்திசாலித்தனமாய் காட்சிகள் வைத்திருப்பதாய் நினைத்து வைத்த காட்சிகள் எல்லாம் படு காமெடியாய் இருக்கிறது. பல இடங்களில் படம் பார்க்கும் போது சிரிப்பு கூட வருகிறது. புத்திசாலித்தனமான காட்சிகள் எங்கு சிலாகிக்கப்படுமென்றால் படு ஸ்மார்ட்டான வில்லன் இருக்கும் போது, ஆனால் இங்கே படு மொக்கை வில்லன்கள். இவர் சொல்வதை அப்படியே நம்புகிறார்கள். இவனிடத்தில் அவனை போட்டுக் கொடுப்பது என்ற பழைய ஐடியாத்தான். ஆனால் அதுவும் பல இடங்களில் ரிப்பீட்டு.
ஆரம்பக் காட்சிளில் வரும் ரெளத்திரன் ஏ.சி படு ஸ்மார்ட். பார்பதற்கு. ஒரு வில்லனை போட்டுத்தள்ளியதை பார்த்த பூர்ணாவின் கையில் ஒரு கன்னை கொடுத்துவிட்டு நீ கொலை செய்ததை நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன் என்று சொல்வது, டிவியில் நியூஸ் பார்க்கும் போது பூர்ணாவிற்கு மட்டும் அவர் மெசேஜ் சொல்வது போன்ற காட்சிகள் சுவாரஸ்யம். ஆனால் இரண்டாவது பாதியில் கவுண்டமணி ஒரு படத்தில் செந்திலின் ப்ளீச் தலையை பார்த்து யாருடா உன் தலையில வெத்தலை பாக்கு போட்டு துப்புனது என்று கேட்பாரே பார்க்கலாம் அது போல ஒரு தலையில் மிசையெல்லாம் எடுத்துவிட்டு, பார்க்க படு பயங்கரமாய் இருக்கிறார். இவர் பழியெல்லாம் வாங்க வேண்டாம் பார்த்தாலே போது எதிரி காலி.
டெக்னிக்கலாய் ஜோஸ்வா ஸ்ரீதர் தூங்கிக் கொண்டே இசையமைத்தது போல் மிக மெதுவான பாடல்கள். ஆரம்ப பாடல் மட்டும் ஓரளவுக்கு ஓகே. எம். எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு பற்றி பெரிதாய் சொல்ல ஏதுமில்லை. இரண்டு மூன்று டாப் ஆங்கிள் ஷாட்டுக்களைத் தவிர. எடிட்டிங் க்ரிஸ்பாய்த்தான் இருக்கிறது.
படத்தில் வில்லன் லிஸ்ட் என்று போட்டால் ஒரு ஏழெட்டு வில்லன்கள் வருகிறார்கள். லோக்கல் அமைச்சர் முதல் இண்டர்நேஷனல் டான் வரை படு மொக்கை பார்ட்டியாய் இருப்பது செம போரடிக்கிறது. படத்தில் வரும் ஒரே ஒரு சூப்பர் காமெடிக் காட்சி இருக்கிறது. அதுவும் படத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு இடத்தில் நினைத்து பார்த்து சந்தோஷப்பட, சிரிக்கக்கூடிய ஒரே விஷயம் இது ஒன்றுதான் இப்படத்தில். எப்படியும் டிவியில் போடுவார்கள். இன்னொரு காமெடி கடேசி கடேசி சீனில் இருக்கிறது. ரெளத்திரனை மீண்டும் போலீஸ் வேலைக்கு சேர்த்துக் கொள்ள கமிஷனர் பேசும் வசனம். அதை டிவியில் போட மாட்டார்கள் அந்த காமெடியை பார்க்க வேண்டுமானால் வெள்ளித்திரையில் தான் காண முடியும்.
வித்தகன் – 20/50
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
disclaimer: தயவு செய்து அண்ணா தியேட்டரில் படம் பார்த்துவிடாதீர்கள். தியேட்டரில் ரைட், லெப்ட் சேனல் எப்பவும் சவுண்ட் Muffle ஆகத்தான் வரும் ஏற்கனவே எட்டிப்பார்த்துதான் படம் பார்க்க வேண்டும். இந்த லட்சணத்தில் வசனம் வேறு கேட்கவில்லை என்றால் என்ன செய்வது.
Comments
விஜயை பாதித்த 'சுறா' வின் கதை என்ன ஆச்சு பாத்தீங்களா?
ஆனால் சில படங்கள்ல அவரோட புத்திசாலித்தனம் பளிச்சிடும்.
அதுதான் இம்புட்டு எழுதிட்டீங்கள்ல, அப்புறம் என்னத்துக்கு "அண்ணா", "மறுமலர்ச்சி"?
பார்த்தீபன் அண்மையில் நடித்த மலையாளப் படம் ஒன்று ஹிட் என்று கேள்வி. உண்மைதானா?
வெவ்வேறு சமய, சமுதாய, அரசியல் தலைவர்கள் உதட்டோடு உதட்டாக முத்தமிட்டுக் கொள்கிறர்கள், அதற்குள் அதிபர் ஒபாமா இரு முறை - வாழ்க அமேரிக்கா.
பதிவலை
அங்கதானே அம்பதுக்கு டிக்கெட் இருக்கு...
இது உண்மை தான்......ரொம்ப கொடுமையாக இருக்கு......
-அருண்-
// இன்னொரு காமெடி கடேசி கடேசி சீனில் இருக்கிறது. ரெளத்திரனை மீண்டும் போலீஸ் வேலைக்கு சேர்த்துக் கொள்ள கமிஷனர் பேசும் வசனம். அதை டிவியில் போட மாட்டார்கள். //
கொன்னுடீங்க!
//.இவரின் மாடுலேஷன் தான் இவரை கொண்டு வந்து ஓரத்தில் போட்டுவிட்டது// என்ன, மாடுலேஷனா - அப்படீன்னா என்ன என்று பார்த்திபன் கேட்பாரே!
-ஜெ.