Thottal Thodarum

Nov 5, 2011

Revolution 2020

revolution 2020 ஏதோ ஆங்கில படத்தின் விமர்சனம் என்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. டைட்டிலைப் பார்த்ததும் எனக்கு அப்படித்தான் தோன்றியது. ஆனால் எழுதியது சேத்தன் பகத் என்றதும் ஓகே.. இன்னொரு ஹிந்தி ஃபீல் குட் கதை ரெடி என்று தோன்றியது. சேத்தன் பகத்தை பற்றி ஆளாளுக்கு 3 இடியட்ஸ் படம் வந்த போது பேசினார்கள். அவரின் கதையைத்தான் இவர்கள் எடுத்தார்கள் என்று. ஆனால் அவருக்கு க்ரெடிட் கொடுக்கவில்லை என்றெல்லாம் கூட சொன்னார்கள். படத்தின் ஆரம்பத்தில் நன்றி போட்டததோடு சரி. ஆனால் முழுக்க, முழுக்க அவரின் நாவலை அடிப்படையாக வைத்துத்தான் எடுக்கப்பட்டது என்றும் சொல்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எனக்கு உடனே அவரின் புத்தகத்தை படிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அந்த படத்தின் மூலமான Five Points to Someone ஐ படிக்க பெரிதாய் ஆர்வமில்லை. அப்போதுதான் 3 idiots படத்தை பார்த்ததினால் வேறு ஏதாவது புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம் என்று One night @ call centre ஐ வாங்கி படிக்க ஆரம்பித்தேன். அப்புறம் தான் புரிந்தது இவர் ஏன் இவ்வளவு பிரபலமான எழுத்தாளராக இருக்கிறார் என்று.

மிகச் சுலபமான ஆங்கிலத்தில் நம் இந்திய கேரக்டர்களுடனான கதையை சுவாரஸ்யம் குன்றாமல் எழுதுவதில் இவர் மன்னன் என்று படிக்க, படிக்க புரிந்தது. அகராதியை வைத்துக் கொண்டு படிக்க வேண்டிய கட்டாயமில்லாத ஆங்கிலம். சட்டென கதைக்குள் நம்மை கொண்டு போகும் லாவகம். ஒரு சின்ன ப்ரச்சனை, கொஞ்சம் செக்ஸ், எமோஷன், செண்டிமெண்ட் எல்லாவற்றையும் சரியான விகிதத்தில் கலப்பதில் இவர் மன்னன். கால்செண்டர் கதை எனக்கு மிகவும் பிடித்தது. க்ளைமாக்ஸை தவிர, கொஞ்சம் சினிமாட்டிக்கான க்ளைமாக்ஸ் ஆனால் படு சுவாரஸ்யம். இந்த நாவலையும் ஹிந்தியில் திரைப்படமாய் எடுத்திருப்பதாய் கேள்வி நான் பார்க்கவில்லை.


பின்பு அடுத்த நாவலாய் நான் படித்தது 2 States of Marraige சாதாரண கதை தான். ஒரு வட இந்திய ஆணுக்கும், சவுத் இந்திய பெண்ணுக்குமான காதல். அதற்கான ப்ரச்சனைதான்.  இதிலும் அதே விதமான ஒரு ஃபார்முலாவில் தான் எழுதியிருந்தார். பட். இண்ட்ரஸ்டிங்.. அதுவும் அந்த பெண்ணுக்கும், ஹீரோவுக்குமான ரிலேஷன்ஷிப் சூப்பர்பாக இருக்கும். இதிலும் க்ளைமாக்ஸ் சினிமாத்தனமானது தான்.

ஏற்கனவே இவரை இந்திய ஆங்கில எழுத்தாளர்களின் சூப்பர் ஸ்டார் என்றழைத்துக் கொண்டிருந்த நேரத்தில் வெளிவருவதற்கு முன்பே சுமார் ஐந்து லட்சம் புத்தகங்கள் விற்பனையாகிய இந்த ரெவ்வல்யூஷன் 2020 ஐ உடன் படிக்க வேண்டும் என்று ஆவல் எழுந்ததில் அச்சர்யமேதுமில்லை. வாங்கிய சூட்டில் படிக்க ஆரம்பித்தேன். இதுவும் சிம்பிளான கதைதான். கோபால், ராகவ், ஆர்த்தி இவர்களின் குழந்தைக்கால பருவத்திலிருந்து ஆரம்பிக்கிறது கதை. கோபால் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவன், அப்பா வியாதியஸ்தர், அம்மா கிடையாது. ராகவ பணக்கார குடும்பத்திலிருந்து வந்தவன். கொஞ்சம் சீரியசான ஆள். ஆர்த்தி அழகி, கொஞ்சம் அசட்டுத்தனம் கொண்ட சினிமா ஹீரோயின் போன்றவள். அவளுக்கு ஏர்ஹோஸ்டஸ் ஆக வேண்டும் என்று ஆசை. ஐஐடி எண்ட்ரன்ஸ் எழுதி இன்ஞினியர் ஆக வேண்டும் என்பதுதான் கோபால், ராகவின் கனவு. ஆனால் கோபால் எண்ட்ரன்சில் தோற்கிறான். ராகவ் பெரிய ராங்கில் ஐஐடி சேருகிறான். கோபாலின் அப்பா கடன் பட்டு இவனை அடுத்த வருஷம் கோச்சிங்க் க்ளாஸுக்கு சேர்க்கிறார். அவரது நிலத்தை அவரின் சொந்த தம்பியே ஏமாற்றி கொடுக்க மறுக்கும் கேஸ் ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. கோபாலுக்கு ஆர்த்தியின் மேல் மிதமிஞ்சிய காதல். ஆனால் ஆர்த்திக்கோ அவனை நண்பனாக மட்டுமே பார்க்கமுடிகிறது என்கிறாள். கோபால் வாரணாசிக்கு கோச்சிங் க்ளாஸில் சேர கோபால் போன நேரத்தில், ராகவ்க்கும், ஆர்த்திக்கும் நெருக்கம் வந்து காதலாய் மாறுகிறது. ஐஐடியில் முதல் வகுப்பில் தேறினாலும், ராகவ்க்கோ பத்திரிக்கையாளர் ஆவது தான் லட்சியம். இதற்கிடையில் கோபாலின் தந்தை மண்டையை போடுகிறார். இருந்த ஒரு ஆதர்வும் போய்,காதலும், போய் நட்டாற்றில் நிற்கும் நேரத்தில் கடன் காரர்கள் வேறு துரத்த ஆர்ம்பித்திருக்க, ஒரு அமைச்சரின் ஆதரவில் அவனின் சித்தப்பா ஏமாற்றி வந்த நிலத்தை வைத்து ஒரு இன்ஞினியரிங் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார்கள். ஒரே நாள் ராத்திரியில் கோபாலின் நிலை மாறுகிறது. ஆர்த்தி, ராகவ் உறவில் ராகவின் பத்திரிக்கை ஆர்வத்தால் கேப் விழ, கோபால், ஆர்த்தியின் நட்பு மீண்டும் இறுக்கமாக வளர, ஒரு கட்டத்தில் கோபாலின் வளர்ச்சியை பற்றி ராகவின் பத்திரிக்கை எழுத ப்ரச்சனை ஆரம்பமாகிறது. ராகவை வேலையை விட்டு தூக்குகிறான் கோபால். ஆர்த்திக்கும் ராகவுக்கும் பிரிவு உண்டாகிறது.  கோபால் ஆர்த்திக்கும்  காதல் மலர்ந்து கல்யாணம் வரைக்கும் போகிறது. பின்பு என்ன நடந்தது என்பதை புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேலே உள்ள கதையை படித்தால் ஏதோ ஹிந்தி சினிமாவின் கதைப் போல தோன்றுகிறது இல்லையா? ஆம் அப்படித்தான் இருக்கும். ஆனாலும் கீழே வைக்க முடியாத அளவிற்கு சுவாரஸ்யமாய் இருந்து தொலைப்பதால் படிக்காமல் இருக்க முடியவில்லை. வழக்கம் போல க்ளைமாஸில் சினிமாத்தனமாய் இருந்தாலும் மனதின் ஒரு ஓரத்தில் ஓடிக் கொண்டுதானிருக்கிறது இந்த நாவல். அந்த வகையில் சேத்தன் பகத்இந்நாவலிலும் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

ஆங்கில நாவல்கள் படிக்கும் போது வாய் சுளுக்கிக் கொள்ளூம் அளவிற்கு புரியாத பெயர்களை படிக்கும் போது இருக்கும் அந்நியத்தனம் இவரின் நாவல்களில் இருப்பதில்லை. சுலப ஆங்கிலம். பாய் நெக்ஸ்ட் டோர் போன்ற கேரக்டர்கள். பெரும்பாலும் நாம் நம் சினிமாவில் பார்த்து ரசித்த க்ளிஷே காட்சிகள் இருந்தாலும், சுவாரஸ்யம் குறையாத எழுத்து நடை. ஒரு லவ், ஒரு கிஸ், ஒரு ப்ரீ மேரிட்டல் செக்ஸ், கொஞ்சம் சினிமாட்டிக்கான க்ளைமாக்ஸ் என்பதுதான் இவரது ஸ்டைல் என்று புரிந்தாலும் படிக்காமல் இருக்க முடிவதில்லை.  ஒரு சுவாரஸ்யமான ரீடிங்கிற்கு  I Recommend this..


இதைத்தவிர ஏகப்பட்ட டிவி பேட்டிகள், இண்டர்வியூக்கள் யூ டியூபில் கொட்டிக் கிடக்கிறது. ஒரு புத்தகம் விற்க என்னவெல்லாம் செய்கிறார்கள். தெரியுமா? சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்


Post a Comment

16 comments:

pichaikaaran said...

உங்களுக்கு தெரியாதது அல்ல. சினிமா என்பது வேறு. எழுத்து என்பது வேறு, சினிமாவின் வெற்றி தோல்விகளுக்கு இயக்குனரே பொறுப்பு.

ஆனால் ஒரு படம் வெற்றி பெற்றால் தனக்கு கிரடிட் தரவில்லை என அங்கலாய்க்கும் எழுத்தாளர்கள், தோல்வி அடையும் படங்களுக்கு எந்த பொறுப்பையும் ஏற்பதில்லை

பொதினியிலிருந்து... கிருபாகரன் said...

வசிகரிக்கும் எழுத்துக்கள்! இதுவும் சினிமாவாக எடுக்கப்படலாம். 2 STATES படமாக வரப்போகிறதா? தெரிந்தால் பகிரவும்.

http://pothinimalai.blogspot.com/2011/11/revolution-2020.html

Bruno said...

//I Recommand this..//

எழுத்து பிழை இருந்தால் தான் பிரபல பதிவர் என்பதாலா அல்லது தட்டச்சு தவறா ??

சிங். செயகுமார். said...

the politician minister or MLA? :-)

Cable சங்கர் said...

@bruno

ஹா.ஹா.. கரெக்டட்

மதுரை அழகு said...

தமிழில் பிரபல எழுத்தாளர்களின் புத்தகம் அதிகபட்சமாக எவ்வளவு விற்பனையாகும்?. (உ.ம். : கேபிள்சங்கர் போன்றோர்...)

மதுரை அழகு said...

தமிழில் பிரபல எழுத்தாளர்களின் புத்தகம் அதிகபட்சமாக எவ்வளவு விற்பனையாகும்?. (உ.ம். : கேபிள்சங்கர் போன்றோர்...)

Cinema Virumbi said...

கேபிள் சார்,

'3 Idiots' இல் அவருக்கு செய்யப் பட்டது அப்பட்டமான துரோகம்! இவருடைய கதையின் வெற்றிக்கான முக்கிய பாயிண்டுகளை எல்லாம் எடுத்துக் கொண்டு தங்கள் 'முன்னாபாய்' பார்முலாப்படி மாற்றி விட்டு, பகத் சினிமா பீல்டு பற்றித் தெரியாத ஆள் என்பதால் படக் கடைசியில் பொடி எழுத்துக்களில் ரன்னிங் கிரெடிட்சில் போட்டு ஏமாற்றி விட்டார்கள்! அதன் பிறகு சளைக்காமல் நடந்த அவார்ட் விழாக்களில் இவருக்குத் துக்கடா கிரெடிட் கூடக் கிடையாது! இதற்கு முந்தைய ' 5 Point Someone', ' Hello' என்ற பெயரில் சல்மான் கானின் குடும்பத்தாரின் படமாக வந்து உருப்படாமல் போயிற்று! இப்போது ' 2 States' ஐயும் எடுப்பதாகக் கேள்வி! (தமிழில் வந்தால் சூப்பராக இருக்கும், லேசான 'ஏக் தூஜே கே லியே' வாசனையுடன் !). இந்தியாவின் இளைய தலைமுறையின் நாடித்துடிப்பைத் துல்லியமாக அறிந்தவர் இவர்! ' The Three Mistakes of My Life' என்ற பெயரில் குஜராத் பூகம்பம், அதன் பிறகு நடந்த மதக் கலவரம், கிரிக்கெட் மூன்றையும் வைத்துக் கலக்கலான ஒரு நாவலைக் கொடுத்தார்! ஏதோ ஒரு சில அறிவு ஜீவிகளைப் போல் அல்லாமல் ஆங்கிலம் தவிர ஹிந்தி தினசரியிலும் இளைஞர்களுக்கு உபயோகமான விஷயங்களை எழுதுகிறார்! புத்தகங்களை மிகக் குறைந்த விலையில் விற்கும் இவருடைய மார்க்கெடிங் மூளையும் அசாத்தியம்!
http://cinemavirumbi.blogspot.com/2010/01/five-point-someone-vs-3-idiots.html
நன்றி!
சினிமா விரும்பி

Cable சங்கர் said...

ஆமாம் சினிமா விரும்பி.. இவரது ஆர்ப்பாட்டமில்லாத எழுத்தும், விலை குறைந்த புத்தகமும் இவரது ப்ள்ஸ் பாயிண்ட். இவரது புத்தகங்கள் எல்லாவற்றையும் நான் உடன் வாங்கியதற்கான காரணம் வெறும் 90 ரூபாயில் இருப்பது தான். தற்போதுதான் பேப்பர் விலை ஏற்றம் காரணமாய் 140 ரூபாய்கு வந்திருக்கிறது.

arul said...

arumayana vimarsanam (www.astrologicalscience.blogspot.com)

IlayaDhasan said...

தகவுலுக்கு நன்றி, படிக்க முயற்சிக்கிறேன்!

என்னை ஏதோ செய்கிறாள் - கிரைம் தொடர் - பாகம் 1

நிவாஸ் said...

சேட்டன் பகத்,

உண்மையில் மிக சிறந்த எழுத்தாளர், நீங்கள் சொல்வது போல் அணித்து உணர்ச்சிகளையும் கதையோடு கலப்பதில் வல்லவர். அவரது அணித்து புத்தமும் மிக அருமையாக இருக்கும்

நான் முதன் முதலில் படித்து என்னவோ அவரது மூன்றாவது புத்தகமான

The 3 Mistakes of my Life

அதில் இருந்த கதை சுவாரசியம் அனைத்தும் என்னை கவர்ந்ததால் அதன் பிறகு அவர் எழுதிய முந்தைய புத்தகங்கலாகிய

Five Point Someone
One Night @ the Call Center

ஆகியவற்றை ஒரே மூச்சில் படித்து முடித்தேன், என்னை மிகவும் கவர்ந்தவை அவை. அடுத்து வந்த

2 STATES

தவமிருந்து வெளியான அதே நாள் வங்கி படித்து முடித்தேன், ஏனோ முந்தைய மூன்று புத்தகங்களில் இருந்த சேட்டன் பகத் இதில் எனக்கு தெரியாமல் போனார், ஒருவேளை தமிழ்நாட்டை பற்றி கொஞ்சம் வக்கிரமாக எழுதிய காரணமோ என்னவோ? மற்றபடி நல்ல கதை அருமையான எழுத்தோட்டம்

இப்பொழுது வந்திருக்கும்

Revolution 2020

கிடைக்கும் வாய்ப்பு எனக்கு இல்லை, குறைந்தது இரண்டு மாதங்களாவது காத்திருக்க வேண்டும், அதற்க்கு முன் நீங்கள் விமர்சனம் கொடுத்திருப்பது என் ஆவலை இன்னும் அதிகப் படுத்தியுள்ளது. மிக்க நன்றி

R. Jagannathan said...

விறுவிறுப்புக்கு முக்கிய காரணம் உண்மை சம்பவங்கள் கலந்த கற்பனைதான். நிறைய ஆங்கில புத்தகங்களும் இந்த யுத்தியில் தான் எழுதப்படுகின்றன. நீங்களும் முயலலாமே? முழு கற்பனைகள் எல்லாம் குடும்பசூழலும் வெறும் காதலுமாக போவதால் சலித்துவிடுகின்றன.
சரி, விளம்பர யுத்தி கற்றுக்கொண்டீரா? இனிமேல் உங்கள் புத்தகம் 10,100 காபி விற்றாலும் 5000,10000 என்றே போடவும்! 50,50 காபிக்கு ஒரு பதிவு என்று வைத்துக் கொண்டால் விரைவில் 10-ஆம், 15-ஆம் பதிப்பு என்று போடமுடியும்! - ஜெ.

முஹம்மது யூசுப் said...

One night at the call centre நாவல் Hello என்ற பெயரில் எடுக்கப்பட்டது. நாவலில் இருந்த விறுவிறுப்பு திரைப்படத்தில் அமையவில்லை. Five point some one நாவல்தான் இதுவரை எழுதியவற்றில் இவருடைய சிறந்த படைப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனை 3 idiots என அருமையானதொரு சினிமாவாக மாற்றியவர்கள் சேத்தனுக்கு செய்ததென்னவோ அப்பட்டமான துரோகம்.



flipkart ல் மிகச் சல்லிசாகக் கிடைக்கின்றன இவரது புத்தகங்கள். தேவையுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Arun Kumar said...

2states விட இந்த நாவல் சுவாரஸ்யம் குறைவு தான். அது என்ன இந்தி படம் போல என்ற ஒரு செருகல். இந்த கதையை எந்த மொழியிலும் எடுக்கலாம்.

என்ன வாரணாசி அப்புறம் குஜராத் பேக் க்ரவுண்ட் இருப்பதால் சொல்லி இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

ஐஐடி நுழைவு தேர்வு முறையை இந்த நாவலை விட வேறு யாரும் சுலபமாக சொல்லி விட முடியாது.

Unknown said...

இந்த சேதன் பகத்தோட நாவல்களைப் படித்தவன் என்ற முறையில் என்னோட தனிப்பட்ட கருத்து - இந்தாள் சரியான மொக்கைசாமி. சத்தியமா இவரோட நாவல்களை முழுசா படிக்குறதுக்குள்ள தூக்கம் கண்ணை அழுத்தும் :-). மிக சாதாரணமான, பல்ப்பின் ஆரம்ப நிலையில் உள்ள எழுத்தாளர். ஓவர் விளம்பரத்தால் பொழைப்பு ஓடுது. எனிவே, நான் மொதல்லையே சொன்ன மாதிரி, இது என் தனிப்பட்ட விமர்சனம் மட்டுமே :-). . .