Thottal Thodarum

Feb 17, 2012

அம்புலி 3டி

ambuli-3d ஓர் இரவு என்றொரு படம். தமிழ் சினிமாவின் முதல் பாயிண்டாப் வியூ படம். டிஜிட்டல் சினிமாவை சரியாய் புரிந்து கொண்டு, அருமையாய் சொல்லப்பட்ட த்ரில்லர் கம் ஹாரர் படம். சென்னையில் நடந்த உலக திரைப்பட விழாவில் சிறந்த படமாய் தெரிந்தெடுக்கப்பட்ட திரைப்படம். இவ்வளவு பெருமைகள் இருந்தும் மக்களிடையே தெரியாத படமாய், இன்றளவில் பைரஸியாய் கூட மார்கெட்டிலோ, இண்டெர்நெட்டிலோ, இல்லாத படமாய்  போனதற்கு காரணம். பெரிய படங்களுடன் மோதுவதற்கு திராணியில்லாமல், தியேட்டர்கள் கிடைக்காமல், சரியான மார்கெட்டிங் இல்லாமல், அதற்கான பட்ஜெட் இல்லாமல் அடிபட்ட புலியாய் பதுங்கியவர்கள், இம்முறை சினிமா வியாபாரத்தை புரிந்து கொண்டு, சிங்கமாய் களமிறங்கியிருக்கிறார்கள்.


ambuli-movie-003 அமுதனும்,வேந்தனும் கல்லூரி தோழர்கள். தன் காதலி பூங்காவனத்தை பார்க்க பக்கத்து ஊருக்குள்  போகும், பல வருடங்களாய் யாருமே புழங்காத ஒரு வழியில் போகிறான். அங்கே போய் உயிருடன் வந்தவர்கள் இல்லை. ஏனென்றால் அங்கே அம்புலி என்றொரு மனித ரூபத்தில் உள்ள மிருகமிருப்பதாகவும், அது எல்லாரையும் அடித்து சாப்பிட்டு விடுவதாகவும் சொல்கிறார்கள். இதை நம்பாத நண்பர்கள் அது ஒரு கட்டுக்கதை என்று நிருபிக்க முயல்கிறார்கள். அதற்கேற்றார் போல் காட்டில் வாழும் பார்த்திபன் கேரக்டரை சந்திக்க, அவன் தான் அம்புலி என்று முடிவெடுக்கும் நேரத்தில் ப்ரச்சனை பூதாகரமாகி அம்புலியை சந்திக்கிறார்கள். பின்பு என்ன நடந்தது என்பதுதான் கதை.
ambuli-movie-023
ஓர் இரவு எப்படி தமிழின் முதல் ஃபாயிண்டாப் வியூ படமோ, அம்புலி தமிழின் முதல் ஸ்ட்ரீயோபோனிக் டிஜிட்டல் 3டி படம். பாதி திரைப்படங்கள் 2டியில் எடுக்கப்பட்டு, அதை சாப்ட்வேர் மூலம் 3டி என்று உட்டாலக்கடி அடித்துக் கொண்டிருக்கும் காலத்தில், ஒரு முழு ஸ்ட்ரீயோபோனிக் 3டியை நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். கதை என்று பார்த்தால் நம் பாட்டி காலத்திலிருந்து சொல்லப்படும் ‘அந்தப்பக்கம் போகாதே.. பேய் இருக்கு” என்ற கதைதான் என்றாலும் அதை சுவாரஸ்யமாக சொல்லியவிதத்தில் ஜெயித்திருக்கிறார்கள். அதை விட சுவாரஸ்யமாய் 3டியின் மூலம் நம்மை அந்த சோளக்காட்டுக்குள்ளேயே உலவ விட்டிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். ஓப்பனிங் பத்து நிமிடங்கள் விஷுவல்கள் அட்டகாசம். நல்ல மர்மக்கதையை படிப்பது போல படு சுவாரஸ்யமாய், அம்புலியைப் பற்றிய செய்திகளும், அது இல்லை என்று நம்பவைப்பதும், பல கொலைகள் தொடர்ந்து அரங்கேறுவதுமாய் சும்மா பரபரவென போகிறது.

புதிய நடிகர்களான அஜய், ஸ்ரீஜித், சனம் ஆகியோரின் நடிப்பு ஆப்டாக இருக்கிறது. ஒரு சின்ன கேமியோ ரோலில் வரும் பார்த்திபனின் கேரக்டர் இம்ப்ரசிவ். படத்துக்கு கொடுக்க வேண்டிய இம்பாக்டை சரியாக கொடுத்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, நண்டு ஜெகன், கலைராணி, பாலாசிங், பாஸ்கி, கோகுல் ஆகியோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். கோகுல் என்ன கேரக்டரில் வருகிறார் என்பதை கடைசி சீனில் தான் தெரிகிறது.
ambuli-movie-021 ஒளிப்பதிவாளர் சதீஷ்தான் படத்தின் நாயகன் என்று சொல்லலாம். ஆரம்பக் காட்சியிலிருந்து கடைசி வரை 3டி டெக்னாலஜியின் மூலம் கதை நடக்குமிடத்திற்கே கொண்டு சென்று உலவிட்டிருக்கிறார். பாராட்டப்பட வேண்டிய உழைப்பு. நான்கைந்து இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள். பின்னணி இசையில் நல்ல உழைப்பு தெரிகிறது. எடிட்டிங் மற்றும் ஆடியோகிராபியும் பாராட்டும்படியாக உள்ளது.

ambuli-movie-018
எழுதி இயக்கியவர்கள் ஹரீஷ், ஹரி என்ற இரட்டையர்கள். இதில் ஹரீஷ் பதிவரும் கூட டிரீமர்ஸ் என்கிற பெயரில் எழுதி வருபவர். இவரது கேணிவனம் தொடர் படு பிரசித்தம்.  முதல் பட அனுபவத்திலிருந்து கொஞ்சம் பெரிய பட்ஜெட், நல்ல டெக்னாலஜி, ஷூயூர் ஷாட் த்ரில்லர் என்ற வெற்றிப்பட பார்முலாவிற்குள் வந்திருந்தாலும், தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை டெக்னிக்கல் புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும். அமேசிங் ஒர்க். புதிய நடிகர்களை வைத்துக் கொண்டு இந்த பட்ஜெட்டில் ஒரு நல்ல த்ரில்லரை கொடுக்க ஆதரவு கொடுத்த தயாரிப்பாளருக்கு ஒரு “ஓ” போட வேண்டும். நல்ல மர்ம நாவலை திரையில் பார்த்த திருப்தியை இவர்களது திரைக்கதை கொடுத்திருக்கிறது. அம்புலியின் ப்ளாஷ் பேக்கை டைட்டிலிலேயே விஷூவலாய் இல்லாமல் Graphical Shadow முறையில் காட்டிய உத்தி, அம்புலி உருவாவதற்கான காரணத்தை அழகாய், ஷார்ட்டாய் சொன்ன விதம் சுவாரஸ்யம். மிரட்டலான ஆரம்ப பத்து நிமிடங்கள். மைனஸ் என்று பார்த்தால்  சுவாரஸ்யத்தைக் கெடுக்கும் பாடல்களும், க்ளைமாக்ஸ் லாஜிக் ஓட்டைகளும் என்று சொல்லலாம். ஆனால் பெரும்பாலான படங்கள் சிஜியிலும், அனிமேட்ரானிக்சிலும் செய்து மிரட்டியதை, லைவாக செய்து அற்புதமான டெக்னிக்கல் அனுபவத்தை நமக்கு அளித்திருகும் இந்த டீமை பாராட்டியே தீர வேண்டும்.

அம்புலி 3டி – நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு அனுபவம்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

18 comments:

Jayaprakash said...

appo kodukkura kasukku puriyosanam irukkum nu chollunga! indha padam bangalore la vandha kandippa parkanum!

குரங்குபெடல் said...

வாழ்த்துக்கள் . . .

Mohammed Arafath @ AAA said...

sir... nice review in this movie.but i m really eager to watch or iravu movie from this team.but it cant released in our town and i even dont get any torrents for it.please tell me where can i get it?

முரளிகண்ணன் said...

நல்ல அறிமுகப்படுத்தல் விமர்சனம்

kalil said...

appo padam super ah...
avanga marketing ellam super thala..

Thava said...

உண்மையாகவே தங்களது பதிவின் வழியே இந்த படத்தை இப்பொழுதுதான் அறிகிறேன்.. அருமையான விமர்சனம்..படமும் நன்றாக உள்ளது என்பதை தங்களது எழுத்துக்களே சொல்கின்றன..இணையத்தில் கிடைப்பின் பார்க்கிறேன்.நன்றி.

சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

shortfilmindia.com said...

குமரன் இணையத்தில் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. 3டியில் மட்டுமே வெளியிட்டிருக்கிறார்கள்.

ரஹீம் கஸ்ஸாலி said...

சுடச்சுட உங்களது விமர்சனம் பார்க்கவேண்டும் ஆவலை தூண்டுகிறது.

ரஹீம் கஸ்ஸாலி said...

Kumaran said...

உண்மையாகவே தங்களது பதிவின் வழியே இந்த படத்தை இப்பொழுதுதான் அறிகிறேன்.. அருமையான விமர்சனம்..படமும் நன்றாக உள்ளது என்பதை தங்களது எழுத்துக்களே சொல்கின்றன..இணையத்தில் கிடைப்பின் பார்க்கிறேன்.நன்றி. ////

நண்பரே...3D படங்களை திருட்டு வீசிடியிலோ இணையத்திலோ பார்ப்பது நன்றாக இருக்காது, அந்த திரிலும் கிடைக்காது அத்துடம் பயங்கரமாக தலைவலியும் வந்துவிடும். நிச்சயம் தியேட்டரில் பார்ப்பதுதான் உத்தமம்.

பிரபல பதிவர் said...

no release in mumbai

Anonymous said...

Going this weekend. Thanks for the review Thala!

muthu123 said...

இங்கு திருச்சியில் படம் ரிலீஸ் ஆகவில்லை. விமர்சனத்திற்கு நன்றி.

ஹாலிவுட்ரசிகன் said...

எப்படியும் தியேட்டர்ல பார்த்தா தான் இந்த மாதிரி படங்களுக்கு கிக்கு.

நமக்கு தியேட்டர் இல்ல. அதனால இந்தப் படமும் ஸ்கிப் தான். ஓர் இரவு படம் டீவீடி எங்காவது கிடைக்குமா எனத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

Alaguraja said...

இந்த படம் மதுரையில் ரிலீஸ் ஆகவில்லை

karthikeyan.kg. said...

இன்று மதியம் செல்கிறேன் . நேற்று நான் கல்லூரிக்கு வந்த பின்பு படம் பழனியிலும் திண்டுக்கல்லிலும் வெளியாகி உள்ளதென அறிந்தேன். இன்று மதியம் செல்லவிருக்கிறேன் . என் விமர்சனம் விரைவில் get2kg.blogspot.com

N.H. Narasimma Prasad said...

கலக்கல் விமர்சனம் Cable அண்ணே. பகிர்வுக்கு நன்றி.

sugi said...

பசங்க review superb! இப்பவே நல்லா உங்களைபோலவே பிரிச்சு மேயறாங்க போங்க!கண்டிப்பாக நல்லா வருவாங்க! All the best pasangala!:-0

Unknown said...

Just Before watched the movie in Sathyam... A very Good Attempt.... Very interesting story flow is the Big plus of this movie. Songs are very Big minus of this movie. 3D is another plus.. But comparing to the Hollywood standard, watching movie experience is pain full,, Too much 3D effects. lot of powerful lights very near to our eye... too much of fast moving objects very near to our eye. So its results headache and pain for me.. i dont know these kind of movies needs any health measure before releasing the movies... Anyway.. This is first attempt.. Only negatives are songs and too much of "near to eye 3D effects". Verdict : Two thumps up.. Please encourage this movie.. then only more standard movies will come after this... My rating : 3.5/5