Thottal Thodarum

Feb 3, 2012

ஜீவாவிடமிருந்து ஒரு கடிதம்.



திரு.சங்கர் நாராயண், 
வணக்கம் உங்களுக்கு... 
வாழ்த்துக்கள் பொங்கலுக்கு...


தங்களின் ‘தெர்மக்கோல் தேவதைகள்’ சிறுகதை தொகுப்பு படித்தேன் ரசித்தேன். மெக்கானிக் பையனால் ‘பொறுப்பு’ வரும் ஹீரோ, தண்ணீரில் பேப்பர் கப்பல் செஞ்சு விட்டதால் ‘கப்பல் ராக்கையா’ என்ற பெயர் வந்த குடும்பம், நேர்மையான சர்வர், ஒரு நாள் ஒட்டல் முதலாளி ஆவான் என்கின்ற ‘சுந்தர்கடை’, தனக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு வேறு ஒருவருக்கு கிடைத்த ஒருவனின் புலம்பல், தன் மகன் கேம்ஸ் விளையாடி கூறும் தத்துவ வார்த்தை “Road Rash”  நன்றாக வரவேண்டிய ஒரு பாடகர் ‘காளிதாஸ்’ ஆன கதை, பெண்களின் அழகை கேவலமான கோணத்துடன் ரசித்தவன், மனைவியை புடைவைய போத்திக்க என கூறும் ‘நேற்றுவரை’. நாலாங்கிளாஸ் படிக்கும்போது டீச்சரிடம் அடிவாங்கி கொடுத்தவளிடம், பல வருஷம் கழிச்சு காரணம் கேட்டு பிதற்றும் ‘மீனாட்சி சாமான் நிக்காலோ’ கமலின் படம் பார்த்து அழும் பெண் புரோக்கரின் ‘மகாநதி’ மாமுல் கேட்கும் டிராப்பிக் போலிஸ் மனம் இரங்கும் ‘கருணை’, ஒட்டலில் பிச்சை கேட்கும் வருவன் சாப்பிட வருபவனின் ‘வன்மம்’ பத்து ரூபாய் முதலில் கேட்டு, பிறகு படிப்படியாக பெரிய லெவலில் படி போடும், ஜோஸ்யனின் தோல் உறிக்கும் ‘ஆதிமூலகிருஷ்ணனின் செய்வினை’ சாப்பிடும் போது மீதமிருந்ததை பார்சல் செய்து யாருக்காவது கொடுக்கலாம் என தேடி, பேப்பர் பொறுக்கும் பையனுக்கு கொடுக்க அவன் காசு தர, இவன் மனம் நிறையும் அந்த ‘பிரியாணி’ பிள்ளைகளை அழைத்து நான் சாகப்போகிறேன் என கூறி மறையும் அசல் அக்ரஹாரத்து ‘சேச்சு பாட்டி’ யோட லூட்டி, தனது நட்புத்தோழி வேறு ஒருவனால் பாதிக்கப்பட்டு அழ அவளுக்கு அறிவுரை கூற,  அவள் திருந்தி ஒருவனை மணந்து சில வருடங்கள் கழித்து, அதே அறிவுரை தன் மச்சினிக்கு கூறுமாறு அழைத்து வரும் ‘ஜெயா’.

அழகில்லாத அறிவுள்ள கல்லூரி தோழி குடும்ப வாழ்வில் தோற்று தீயில் கருகி வாழ்க்கையில் அழகு முக்கியம் என கூறும் ‘ராஜலஷ்மி’ திருமணம் வேண்டாமென வெறுக்கும் கலகலப்பான தோழி, பிறகு மனம் மாறி திருமண நாள் முன்பு ஹார்ட் அட்டாக்கில் மரணிக்கும் ‘ராஜி’. அப்புறம் கடைசி கதையாக இப்பல்லாம் தெய்வம் நின்னு கொல்றதில்லை. உடனே உடனே கொடுத்திடுது என புலம்பும் ‘பிரியா (எ) பிரியதர்ஷனி. இப்படி தங்களின் ஒவ்வொரு சிறுகதையும் முத்தாய்பு. அத்தனையும் பொங்கலின் தித்திப்பாய் மனதிற்கு இனிதாய், மயிலிறகாய் நெஞ்சைவருடியது; 

தங்களின் பல சிறுகதைகள் குறும்படத்திற்கு பரிந்துரைக்கலாம், அருமையாய் இருந்தது. தங்களின் அனுபவமாய் தெரிந்தது, புரிந்தது. கேச்சு பாட்டியும், ராஜலஷ்மியும், ஜெயாவும், ராஜியும், பிரியா என்ற பிரியதர்ஷினியும் நெஞ்சைவிட்டு நீங்காமல் பக்கத்து வீட்டில், எதிர்த்த வீட்டில் நடந்த சம்பவமாய் மனதை வருடியது. சுந்தர் கடையின் தொழிலாளியும், பிராயாணி வாங்கி காசு தரும் அந்த குப்பை பொறுக்கும் சிறுவனும் ஏதோ நேரில் பார்த்தது போல் இருந்தது. கவர்ந்தது. 

தங்களின் எழுத்து நடையின் வீரியமா! அல்லது அனைத்தும் உண்மை சம்பவங்களா! னு தெரியவில்லை. ஏனென்றால் அத்தனை சிறுகதைகளும் உண்மையான எதார்த்தமான வாழ்வியலை பிரதிபலித்தது. 

‘ஜன்னல்’ பற்றி நான் ஏன் கதவு திறக்கவில்லை எனக் கேட்கலாம். ஜன்னலில் அதிதூக்கலான காமரச வர்ணனைகள் என்னால் ஏற்க முடியவில்லை. மணிரத்னம் சார் படத்தில் ராமநாராயணன் சார் படம் போல் காட்சிகள் இருந்தால் வரும் வலி எப்படியோ... அப்படி சங்கர் நாராயணன் வரியால் வலியானது. இயக்குனர் ஷங்கர் படத்தில் ஷகிலா காட்சிகள் வந்தால் வரும் கோபம். எங்கள் சங்கர் நாராயணின் கதை வரிகள் ஏற்படுத்தியது.  இந்த ஒரு கதையை மட்டும்தான் சொல்கிறேன். 

சொப்பன ஸ்கலிதம்,கைதுறுதுறுக்கும் முலைகளோடு,ஸ்வப்னம் இல்லாமலேயே ஸ்கலிதம், பெருமூச்சு சுயதிருப்தி, பிருஷ்டம், ஒவ்வொரு பெண் ஒவ்வொரு விதமாய், இறுக்கமாய், உள்ளங்கை அளவாய், அளவுக்கு அதிகமாய், அபரிதமாய், டென்னிஸ் பந்தாய், தளர்வாய், சரிந்து சாய்ந்தாய், இருக்கா இல்லையா எனக்காட்டும் சிலதுவாய், டென்னிஸ் கோர்ட்டாய்.... இப்படிப்பட்ட வரிகளை தங்களிடம் எதிர்பார்க்கவில்லை. அப்படி எழுதுபவர்கள் இருந்துட்டு போகட்டும். நீங்கள் அப்படி எழுதவேண்டாம். தங்கள் எழுத்து படித்தவர் முதல் பாமரர் வரை ஆண், பெண். ஸ்டூடண்ஸ்... என அனைவரையும் ரீச்செய்யணும். அதற்குண்டான மிகமிக தகுதியான ரைட்டர் தாங்கள் என்பது எனக்கு நன்றாய் தெரியும். 

தங்கள் கதை சுரங்கள், தங்களிடம் அமுதசுரபி போல அள்ள அள்ள கதைக்கு பஞ்சம் இருக்காது. மடைத் திறந்த வெள்ளம் போன்ற தங்களின் கதை ஆற்றலை நான் நன்கறிவேன்.  அப்படியொரு அருமையான படைப்பாளி, சுஜாதாவின் இளவல் என தங்களை நன்கு அறிந்தவர் கூறும் வார்த்தைக்கு சொந்தக்காரரான தங்கள் திறமை ஊரெங்கும் உலகெங்கும் பறைசாற்றணும் என்ற ஆதங்கத்தில் கூறுகிறேன் தப்பாக நினைக்க வேண்டாம். 

என் மகள், என் சகோதரி, என் மனைவி போன்றவரிடம் ‘ஜன்னல்’ கதை கிழித்து விட்டு கொடுக்கணும் எனத் தோன்றியது. அப்படியொரு நிலைமை இனி வேண்டாம். தங்கள் கதை புத்தகத்தை மகள், மனைவி, சகோதரி, தோழிக்கும் பரிசாக தரவேண்டும். என்மேல் கோபம் வேண்டாம். தங்களின் கதை ஆற்றலும், கற்பனைதிறனும், அசரவைக்கும் திரைக்கதை அமைக்கும் அழகும், எல்லா டாப்பிக் பற்றியும் நுனிவிரலில் வைத்து பேசும் திறமையும், தாங்கள் கூடிய விரைவில் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராகவும், எழுத்துலகில் வெற்றிகரமான எழுத்தாளராகவும் வலம் வந்து வெற்றிவாகை சூடுவீர்கள் என்று உறுதியுடன் கூறி வாழ்த்துகின்றேன். 2012 கர வருடம் சங்கர வருடம். 
இப்படிக்கு 

D.ஜீவா
இயக்குனர்
9489314799

Post a Comment

19 comments:

Unknown said...

மகிழ்ச்சி..

CS. Mohan Kumar said...

Unbiased & good review.

Cable: Pl. consider his suggestions also.

சுரேகா said...

உள்ளதை உள்ளபடி வெளியிடும்..

உங்க நேர்மையை மெச்சுகிறேன்..!!


சங்’கர’ வருட வாழ்த்துக்கள் !

விமர்சனம் மிக அற்புதமாக , அக்கறையுடன் எழுதப்பட்டுள்ளது.

வாழ்த்துக்கள் ஜீவா சார்!

Cable சங்கர் said...

பல பெரிய எழுத்தாளர்கள், இயக்குனர்களிடமிருந்து ஜன்னலுக்கு பெரும் பாராட்டும் கிடைத்திருக்கிறது. கதைக்கு எது தேவையோ அது வரும் என்று தோன்றுகிறது. இருந்தாலும் கவனித்து எழுதுகிறேன். நன்றி மோகன்குமார்.

Vijayashankar said...

Well done Sankar.

Jannal should be made a short film!

Raj Muthu Kumar said...

ஜீவா சொன்ன புகார் உண்மைதான். அப்படி எழுதி வாசகர்களை சேர்க்க வேண்டிய நிலை உங்களுக்கு இல்லை. அப்படி எழுதுவது உங்கள் உரிமை என்று கருதினால் அதை தனியாக ஒரு புத்தகமாக போடவும். எங்களுக்கு ஏற்படும் தர்ம சங்கடம் தீரும்.

Cable சங்கர் said...

raj muthukumar..

நீங்க படிக்காமயே பின்னூட்டம் போட்டுட்டீங்கன்னு நினைக்கிறேன். இது புக்கு விமர்சனம்தான்.

Rajan said...

நானும் உங்கள் புத்தகத்தை இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் வாசித்த்தேன்..99 % மனிதர்களிடம் உள்ள இயல்பான குணங்களை ஜன்னல் மற்றும் நேற்றுவரை கதைகள் காட்டின. அப்படி கதைகள் எழுதினால் ஒரு சிலரால் மட்டுமே நீங்கள் கவனிக்கப்படுவீர்கள்.. நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளராக. அனைவராலும் பாராட்டும்படி இருக்கவேண்டுமானால்.. திரு. ஜீவா சொன்னதுபோல் அந்த சில வார்த்தை பிரயோகங்களை தவிர்த்தல் நன்று என கருதுகிறேன்..

Unknown said...

நல்ல விமர்சனம் :))

Anonymous said...

தலைவா..யூ ஆர் க்ரேட்!! ((நண்பன்) ஜீவா மாதிரி செய்ய முடியாது...)

Anonymous said...

//Cable: Pl. consider his suggestions also.//

I am also repeating the same sir. Even if i did not read the book.

Hari said...

arumayana vimarsanam. I'm not comfortable about the fact, that somebody advising the write to write in this way. Writer can write in anyway. How you see it depends on your individual perception. Take it or Leave it on your own discretion. Don't restrict the writers.

ராஜ் said...

சார்,
உங்க புக்கை நான் படிக்கவில்லை....அதனால் ஜன்னல் பற்றி நோ கமெண்ட்ஸ்......
ஆனா அவரோட விமர்சனத்தை கொஞ்சம் கூட எடிட் செய்யாமல் நீங்க போட்டதுக்கு ஒரு சல்யூட்....... பெரிய மனசு சார் உங்களுக்கு....
+/- ரெண்டையுமே போட்டதுக்கு....

Unknown said...

//சார்,
உங்க புக்கை நான் படிக்கவில்லை....அதனால் ஜன்னல் பற்றி நோ கமெண்ட்ஸ்......
ஆனா அவரோட விமர்சனத்தை கொஞ்சம் கூட எடிட் செய்யாமல் நீங்க போட்டதுக்கு ஒரு சல்யூட்....... பெரிய மனசு சார் உங்களுக்கு....
+/- ரெண்டையுமே போட்டதுக்கு...//
enna koduma saravana-1/3

Unknown said...

////I'm not comfortable about the fact, that somebody advising the write to write in this way. Writer can write in anyway. ////I second this. YOu write as you like---that is originality.

தமிழ் பையன் said...

உங்கள் புத்தகங்களை மின் புத்தகங்களாக உங்கள் தளத்தில் விற்கலாமே? என்னைப் போன்ற வெளிநாட்டு தமிழர்கள் பெற வசதியாக இருக்கும். சினிமா வியாபாரம் படித்தேன். நன்று.

The Chennai Pages said...

http://faceofchennai.blogspot.in/2012/02/chennai-traffic-police-spot-fine-system.html

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நான் தெர்மோகோல் தேவதைகள் படிக்கவில்லை.காரணம் நீங்கள் பதிவிட்ட நான் ஷர்மி,வைரம் கதையின் ஒரு பகுதி படு ஆபாசமாக இருந்தது. மற்ற கதைகளும் அதுபோலவே இருக்கும் என்றுதான் நினைத்துத்தான் வாங்கவில்லை

வாஷிருகு said...

வணக்கம் கேபிள் சங்கர் அவர்களே.......உங்கள் கதைகளில் காமத்தை புகுத்துவதன் நோக்கத்தை அடியேன் அரிந்து கொள்ளலாமா????