Thottal Thodarum

Jun 5, 2012

FeTNA: அமெரிக்கதமிழ்த்திருவிழா 2012



தமிழ்க்கலை, இலக்கியம், பண்பாடு முதலானவற்றைப் பேணவும்,  ஒழுகிப்போற்றவும் அமெரிக்காவில்செயல்பட்டுவரும்ஓர்அமைப்புதான் வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை (FeTNA) என்பதாகும்



வடஅமெரிக்கக்கண்டத்திலுள்ளகனடாமற்றும்அமெரிக்காவில்இயங்கிவரும்தமிழ்ச்சங்கங்களையும்தமிழ்அமைப்புகளையும்தன்னுள்கொண்டுஒருகுடையின்கீழ், நடுவண் அரசின் வரிவிலக்குப் பெற்ற அமைப்பாகப் பேரவையானது கடந்த இருபத்துஐந்து ஆண்டுகளாக இயங்கிவருகிறது.

ஆண்டுதோறும் நாடளாவிய தமிழ்த் திருவிழாவையும் கொண்டாடி வருகிறது பேரவை. இவ்வாண்டு அதன் 25 ஆண்டுகாலப் பணியையும் நிறைவு செய்யும் பொருட்டு, அமெரிக்கதமிழ்த் திருவிழாவினை தனது வெள்ளிவிழாவாக வெகுப்பிரமாண்டமானமுறையில், மேரிலாந்துமாகாணத்தில் உள்ள பால்ட்டிமோர்நகரில், ஜூலை 6, 7 மற்றும் 8 ஆகியநாட்களில் நடத்த ஏற்பாடுகளை மேற் கொண்டுவருகிறது. இம்மூன்றுநாள் பெருவிழாவுக்கு கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா எனப் பலநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூடவுள்ளார்கள்.

ஒவ்வோர்ஆண்டும், அமெரிக்கதமிழ்த் திருவிழாவினை தமிழறிஞர் ஒருவருக்குச் சிறப்புச் செய்யும்விதத்தில் அவர்தம் பெயர் சூட்டி பெருமைப்படுத்தி வருகிறது பேரவை. சென்றஆண்டு பெருமழைப்புலவர் பொ.வெ.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவாகப் பரிணமித்தது. அவ்விதத்தில் இவ்வாண்டு, பேரவையின் வெள்ளிவிழாவானது முனைவர்.மு.வரதராசனார் நூற்றாண்டு விழாவாகப் போற்றப்பட்டு அவர் தம் பணிகளை 
அமெரிக்க தமிழர்களுக்குக் கொண்டு சேர்க்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.

தமிழால்இணைவோம்! செயலால்வெல்வோம்!!” எனும் இயன்மொழியைக் கொண்ட அமெரிக்க தமிழ்த் திருவிழாவில், தமிழ்க்கலை, இலக்கியம், பண்பாடு போற்று முகமாகப் பலநிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. வாழும் கலைப்பயிற்சி ஸ்ரீஸ்ரீஇரவிசங்கர்ஜி அவர்களின் உரையுடன் கூடிய பட்டறை, மூத்ததமிழறிஞர் மறைமலை இலக்குவனார் சொற்பொழிவு, கவனகக் கலைவித்தகர்கலை.செழியன்பயிற்சி, மாவட்ட ஆட்சியர் சகாயம் அவர்களின் எழுச்சியுரை, வீரத்தாய் வேலுநாச்சியார் நாடகநாட்டியம், ‘விஜய்டிவிசிவகார்த்திகேயன் பல்சுவை நிகழ்ச்சி, இயக்குநர் சசி, முன்னணி நடிகர் பரத் முன்னணி நடிகை அமலாபால் மேடைநிகழ்ச்சி, கன்னடப் பைங்கிளி சரோஜாதேவி, நாட்டுப்புறக்கலை ஆராய்ச்சியாளர் டாக்டர் பிரெண்டாபெக், எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் இலக்கியப்பாசறை, கவிஞர் தமிழச்சிதங்கபாண்டியன் அவர்களது கவியரங்கம், TKS கலைவாணன் தமிழிசை நிகழ்ச்சி, சின்னக்குயில்சித்ரா, ஐங்கரன் குழுவினர் வழங்கும் மெல்லிசை நிகழ்ச்சி, உள்ளூர்க் கலைஞர்களின் கண்கவர் நாடகநாட்டியங்கள் என ஏராளமான பண்பாட்டுப் பொருண்மியங்கள் தாங்கிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன.

இணையரங்குகளில் இணை அமர்வுகளாக, தமிழ்த் தேனீப் போட்டிகள், தமிழிசைப் போட்டிகள், தமிழன்தமிழச்சி 2012, முன்னாள் மாணவர் சங்கம், தொழில்முனைவோர் அரங்கம், மென்பொருள் கட்டமைப்பாளர் அரங்கம், அமெரிக்க தமிழ் இளையோர் சங்கமம், கவனகக் கலை நினைவாற்றல் பயிற்சி, தமிழ்மணம் இணையப்பட்டறை, வலைஞர் சங்கமம் முதலானவையும் இடம் பெறவுள்ளன.

2012 ஆம்ஆண்டிற்கான அமெரிக்க தமிழ்த் திருவிழாவானது, பேரவையின் வெள்ளிவிழாவாகவும் அமைந்திருப்பதால் அமெரிக்காவின் பல பாகங்களிலிருந்தும் ஏராளமான தமிழர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். விழா ஏற்பாடுகளை,  வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கம் சிற்ப்பாகச் செய்து வருகிறது. ஜூலை ஐந்தாம் தேதி மாலை தமிழிசைவிழா, விருந்தினர் மாலை எனத் துவங்கும் தமிழ்த் திருவிழா, ஜூலை 6, 7 ஆகிய நாட்களில் முழுநாள் விழாவாக நடைபெறும். ஜூலை 8ம் நாள் காலை, இலக்கியக் கலைந்துரையாடலுடன் நிறைவுக்குவரும்.

விழாவுக்கு பேரவை இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்வது அவசியமாகும்.முன்பதிவுசெய்துகொள்ளவும், பேரவை விழா குறித்த கூடுதல் தகவல்களைப் பெறவும் நாட வேண்டிய இணையதளமுகவரி: www.fetna.org

பிரபல பதிவர்கள் புதுகைஅப்துல்லா, கேபிள்சங்கர், ORB இராஜாமுதலானோர் கலந்து கொள்ளும் பேசுபுக், ட்விட்டர், கூகுள்பிளசு, மின்னஞ்சல் குழுமப் பயனீட்டாளர்கள், வலைப்பதிவர்களுக்கானவலைஞர்சங்கமம்நிகழ்ச்சியில் பங்கேற்க அதன் ஒருங்கிணைப்பாளர் பதிவர்பழமைபேசி: 980 322 7370.

தமிழிசைவிழாவிலும், மாணவர்களுக்கான தமிழ்த் தேனீ போட்டிகளில் பங்கேற்க அதன் ஒருங்கிணைப்பாளர்திரு.பொற்செழியன் 314 249 0706

கவிஞர் தமிழச்சிதங்கபாண்டியன் தலைமையிலான கவியரங்க ஒருங்கிணைப்பாளர்

திரு.கார்த்திகேயன் தெய்வீகராசன். கவியரங்கத்தில் பங்கேற்க விழைவோர் அவரைத் தொடர்புகொள்ள: 860 212 2398

விஜய்டிவிபுகழ்சிவகார்த்திகேயன் நடத்தும் விவாத மேடையில் பங்கேற்றுக்  கலாய்க்க, அதன் ஒருங்கிணைப்பாளரான இரா.மனோகரன் அவர்களைத்தொடர்புகொள்ள: 267-421-2891

கூடுதல்தகவல்களைப்பெறவும், இதர செய்திகளுக்கும் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொண்டு பேசலாம்.முனைவர்தண்டபாணிகுப்புசாமி, தலைவர், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை, 843-814-7581  திரு.பாலகன்ஆறுமுகசாமி, வெள்ளிவிழா ஒருங்கிணைப்பாளர், 301-237-1747

அமெரிக்காவின்நாட்டுப்பண்(national anthem) உயிர்த்த நகரமாம் பால்ட்டிமோர் நகரில் கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கத் தமிழர்கள் ஒன்று கூடி, இவ்வாண்டுக்கான தமிழ்த் திருவிழாவினைத் தங்களது பேரவையின் வெள்ளிவிழாவாகக் கொண்டாடுப் பொருட்டு பேரவை முன்னணியினர் முனைப்பாகக் களப்பணியாற்றி வருகிறார்கள்.

பழமைபேசி,
செயலர் (2012-2014), FeTNA.



Post a Comment

13 comments:

Unknown said...

வாழ்த்துக்கள் தலைவரே:))

CS. Mohan Kumar said...

வாழ்த்துக்கள் Cable !

மணிஜி said...

வாழ்த்துக்கள் இணைய நண்பர்களே!!

a said...

வாழ்த்துக்கள் தல...

போன வருடம் அப்துல்லா அண்ணன்,பழமைபேசி, நான் எல்லாரும் விடிய விடிய சிரிச்சி பேசி வயிறு வலி வந்துவிட்டது...

பழமைபேசி அண்ணே : எனக்கும் சேர்த்து இந்த தடவை ஜமாய்ச்சிடுக...

Appaji said...

வாழ்த்துக்கள் கேபிள் சார்..

குரங்குபெடல் said...

கன்னடப் பைங்கிளி சரோஜாதேவி,


முன்னணி நடிகை அமலாபால்

ஸ்ரீஸ்ரீஇரவிசங்கர்ஜி

‘விஜய்டிவி’


”தமிழால்இணைவோம்! செயலால்வெல்வோம்!!”

rajasundararajan said...

வாழ்கிறோம் தமிழால். வாழ்த்துகிறேன்!

கொங்கு நாடோடி said...

கேபிலரே.. அப்போ அமெரிக்க வரிங்க, அப்துல்லா அன்னசிகும், உங்களுக்கும் ஒரு டிக்கெட் போட்டுட்டா? எங்கே வீட்டுக்கு...

Vijayashankar said...

வாழ்த்துக்கள். எப்போ பயணம்? எனக்கும் ஒரு டிக்கட் போட்டா ( கொங்கு நாடோடி ) நானும் வருவேன். :-)

வவ்வால் said...

வாழ்த்துகள் கேபிள்ஜி,

தமிழச்சி தங்கப்பாண்டியன் கவிதாயினி தான் தமிழ் நாட்டின் பெண் கவிஞர்களின் அடையாளம் என அமெரிக்கா வரைக்கும் தெரிஞ்சு போச்சே :-))

இதுக்கு பின்னாடி என்ன அரசியலோ :-))

-------

ஓய் கு.பெ,

//குரங்குபெடல் said...
கன்னடப் பைங்கிளி சரோஜாதேவி,


முன்னணி நடிகை அமலாபால்

ஸ்ரீஸ்ரீஇரவிசங்கர்ஜி

‘விஜய்டிவி’


”தமிழால்இணைவோம்! செயலால்வெல்வோம்!!”//

கன்னடமும், மலையாளமும் கண்ணை உறுத்திடுச்சுனு ஓடி வந்தீரா...விடுய்யா எல்லாம் திராவிடமாம் :-))

ஆனால் தண்ணீர் கேட்டால் தான் தரமாட்டாங்க மத்தபடி ரொம்ப நல்லவங்க :-))

முரளிகண்ணன் said...

Congrats Cableji

கல்விக்கோயில் said...

விழா சிறப்புடன் நடைபெறவும், விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்குபெற உள்ள நம்மவர்கள் சிறப்பு பெறவும் வாழ்த்துக்கள்.

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

வாங்க தல!! FETNAல சிந்திப்போம்... :)