Thottal Thodarum

Jul 1, 2013

கொத்து பரோட்டா -01/07/13

சமீபத்தில் நண்பர் ஒருவருடய மகனுக்கு கவுன்சிலிங்கில் ராஜலஷ்மி இன்ஜினியரிங் காலேஜில் மெக்கானிக்கல் செலக்ட் செய்திருக்கிறார். ஸ்ரீபெரும்பதூரில் இருக்கும் அந்த காலேஜுக்கு , மெயின் ரோடிலிருந்து காலேஜ் உள்ளே போக காரெல்லாம் வைத்து பெற்றோர்களை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். காலேஜுக்கு அழைத்து போனவர்கள். அவர்கள் காலேஜில் உள்ள அத்துனை வசதிகளையும் பெற்றோர்களை கூட்டிக் கொண்டு போய் காட்டியிருக்கிறார்கள். அங்கேயிருக்கும் காண்டீனில் மாணவர்களுக்கு சலுகை விலையில் சாப்பாடு போடுகிறோம். லேப் வசதி, மற்றும் பிற வசதிகளை தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். கடைசியாய் பீஸ் கட்டும் வைபவம் வந்த போது  83 ஆயிரம் ரூபாய் பணம் கட்ட சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் கவுன்சிலிங்கில் வெறும் 43 ஆயிரம் தானே பீஸ் என்று கேள்வி கேட்க, வெறும் 43 ஆயிரத்தில் எப்படி நாங்கள் இவ்வளவு வசதிகளை மாணவர்களுக்கு செய்ய முடியும்? அரசுக்கு இதைச் சொன்னால் புரியாது. அத்தோடு நீங்கள் கூட கவுன்சிலிங்கில் இதே ஸ்ரீ பெரும்பதூரில் வேறு காலேஜ் இருந்தும் அங்கே போகாமல் ஏன் எங்கள் காலேஜை செலக்ட் செய்திருக்கிறீர்கள். நல்ல ரிசல்ட், மற்றும் வசதிகள் இருக்கின்றது என்பதால் தானே? எனவே 83 ஆயிரம் கட்டித்தான் ஆக வேண்டும் என்று ப்ரெஷர் போட்டிருக்கிறார். நண்பரிடமோ வெறும் ஐம்பதாயிரம்தான் இருக்கிறது. முன்பே இது போல சொல்லியிருந்தால் நாங்கள் தயாராக வந்திருப்போம். அது மட்டுமில்லாமல் நீங்கள் கேட்ட தொகையை கொடுத்தால் பில் தருவீர்களா? என்று கேட்க, அதெல்லாம் தர மாட்டோம். வெறும் 43 ஆயிரத்துக்குத்தான் தருவோமென்று சொல்லியிருக்கிறார்கள்.கையில் காசில்லாமல், அதிக பணம் கட்ட மனசுமில்லாமல் நண்பர் மிச்ச பணத்தை கட்ட முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அதே போல என் நண்பர் நடிகர் அவரின் பெண்ணிற்கு நல்ல பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்திருக்கிறது. அரசு நிர்ணையித்த தொகை தான் என்றாலும், அந்த பீசு, இந்த பீஸு என்று கிட்டத்தட்ட ஒன்னரை லட்ச ரூபாய் கட்ட வேண்டியிருகிறது என்று சொல்கிறார். அரசு நிர்ணையித்த தொகைவிட அதிகமாய் வாங்கக் கூடாது என்று அரசு ஒரு பக்கம் சொல்லிக் கொண்டேயிருந்தாலும் இன்னொரு பக்கம் கட்டிங்காய் பணம் வாங்கிக் கொண்டுதானிருக்கிறார்கள். இவர்களை எதிர்த்து புகார் கொடுங்களேன் என்று சொன்னால் அப்புறம் புள்ளை படிப்பையில்லை கெடுத்திருவாங்க என்று பயப்படுகிறார்கள்.
@@@@@@@@@@@@@@@




பாரிமுனை சிக்னல் அருகே ராயபுரம் திரும்பும் வளைவில் அரசியல் கட்சி விளம்பரங்கள் தொடர்ந்து வைக்கப் படுகிறது. அந்த பேனர்களை நிறுத்தி பிடித்து வைக்க, கம்பிகளால் சுவற்றில் கட்டி வைக்கிறார்கள். இரவில் அந்த பக்கமாய் ப்ளாட்பாரத்தில் நடந்து போகிறவர்களின் முகத்தில் கம்பி கிழித்து, காயமடைகிறார்கள். சமீபத்தில் இந்த போட்டோவை எடுத்த நண்பர் சபாபதியின் நண்பர் ஒருவர் அங்கே இரவில் நடந்து போய் காயம் பட்டு வந்திருக்கிறார். இந்த போட்டோவை அவர் எடுத்த அடுத்த பத்து நிமிடங்களில் அந்த பேனர் எடுக்கப்பட்டுவிட்டதாம். தமிழ்நாட்டில் இப்போதெல்லாம் நடை பாதைகளையே காண முடிவதில்லை. முக்கியமாய் மெயின் ரோடுகளில். கட்டிடக்காரர்கள் ஆக்கிரமிக்காமல் விட்டால் ப்ளாட்பார கடைகாரர்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து

போற போக்கப் பார்த்தா தே.மு.தி.கவிலேர்ந்து விஜயகாந்த தள்ளி வச்சிருவாங்க போல..:)

எத்தனை தடவை பாட்ஷாவை உட்டாலக்கடி செய்தாலும் சுவாரஸ்யமாய்த்தான் இருக்கிறது #Balupu

புலம்புறவங்க லிஸ்டப் பார்த்தா தியேட்டர் போய் பாக்குற வரைக்கும் கூட இருக்காது போலருக்கே #அன்னக்கொடி

பெற்ற தந்தையினாலேயே குழந்தை இறப்பது எவ்வளவு கொடூரம்.#தந்தை தூக்கி வந்த வாட்டர் கேன் குழந்தை மீது விழுந்து மரணம்.

நம் இதயத்தை சுக்கு நூறாக உடைக்க அனுமதி கொடுத்துவிட்டு, உடையாது, உடைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் செய்வது தான் காதல்.-ஜூலியன் மோரே

எல்லா ஊரிலும் பெய்யென பெய்யும் மழை சென்னையில் மட்டும் ஏன் சுகர்காரர்களின் மூத்திரமாய் சொட்டுகிறது.?

#@#@$%$%$#%#%$#எழுத படிக்க தெரியாதவனின் டயரிலிருந்து

என்னால் மட்டுமே உன்னை காதலிக்க முடியும் #சங்கூ

காதல் ஒரு ஏழரை

தினம் பார்க்கும் ஜோடியொன்று இன்று ஏனோ பேசிக் கொள்ளாமல் சென்றார்கள். வருத்தமாயிருக்கிறது.#வாக்கிங் அவதானிப்பூ

அரை கிலோ தக்காளி, 100கி எலுமிச்சை, 50கி ப.மிளகாய், 37 ரூபாயாம். விலைவாசி ஏறித்தான் இருக்கு.#புதுசாய் காய்கறி வாங்க போனவன் அவதானிப்பூ

யாருக்கேனும் உன் உதவி தேவைபட்டால் செய். நாளை நமக்கு உதவி எப்போது தேவைப்படும் என்று தெரியாது.

உனக்கு நிச்சயம் வேண்டுமென்று நினைத்தால் அதை நீ நிச்சயம் அடைவாய். இல்லையேல் கிடைக்காதற்கான காரணம் சொல்வாய்.

நமக்கு பிடித்தார் போல எல்லோரும் இருக்க வேண்டும் என்ற நினைப்பை விட்டால் எல்லாரையும் நாம் விரும்பலாம்.

ஒரு பிரபல பட வெளியீட்டின் போது ஏழெட்டு கிராமத்தை தத்தெடுத்தார்கள். படத்தின் வெற்றி தோல்விக்கு பிறகு அந்த கிராமங்களின் நிலை என்ன?

ஒரு பிரபல பட வெளியீட்டின் போது ஏழெட்டு கிராமத்தை தத்தெடுத்தார்கள். படத்தின் வெற்றி தோல்விக்கு பிறகு அந்த கிராமங்களின் நிலை என்ன?

அவர்கள் ஏரியா கேபிள்காரருக்கு பதிலாய் எனக்கு நிறைய தடவை கால் வருகிறது. எல்லா ஏரியாவுலேயும் கனெக்‌ஷன் இருந்தால் நான் தான் அம்பானி:)
@@@@@@@@@@@@@@@@@@
சென்னையில் தண்ணீர் ப்ரச்சனை தாண்டவமாடுகிறது. எங்களுடய ப்ளாட்டில் மொத்தம் பதினாறு குடித்தனங்கள். கடந்த ரெண்டு மாதமாகவே பூமியிலிருந்து தண்ணீர் வரத்து குறையவே மெட்ரோ வாட்டரி டாங்கர் லாரி வாங்கி அட்ஜெஸ்ட் செய்து கொண்டிருந்தோம். தினமும் வரும் குடிநீரை சம்பில் சேர்த்து வைத்து இரண்டையும் கலந்து உபயோகித்துக் கொண்டிருந்த வேளையில் குடிநீர் வருவது ரெண்டு நாளைக்கு ஒரு முறை என்றான பிறகு தண்ணீருக்காக தெருவிற்கு போக வேண்டிய கட்டாயம். ஏனென்றால் காசு  கொடுத்தால் கூட மெட்ரோ வாட்டரில் டாங்கர் கிடைக்கவில்லை. வெளி டேங்கர்களில் நாளொன்றுக்கு ஒர் விலை என்றிருப்பதாலும், அப்படியே பரவாயில்லை என்று முடிவு எடுத்து புக் செய்தால் அது வருவதற்கு ரெண்டு நாட்கள் ஆகிறது. காங்கேயம் அருகில் உள்ள சிவன்மலை கோவிலில் வருடா வருடம் நாட்டில் பஞ்சம் அல்லது விலையுர்வாகக் கூடிய விஷயங்களை வைப்பார்களாம். இந்த வருடம் தண்ணீரை வைத்திருப்பதாய் சொன்னார்கள். போன வருடம் தங்கமாம். கடவுள் இருக்காண்டா குமாரு...
@@@@@@@@@@@@@@@@@@@@@@

செவிக்கினிமை
கேட்ட மாத்திரத்தில் பிடிக்க ஆரம்பித்துவிட்டது இந்தப் பாடல். வணக்கம் சென்னை படத்திற்காக அனிருத் போட்டிருக்கும் புதிய பாடலின் டீசர். செம்ம..
@@@@@@@@@@@@@@@@@@@@
”தொட்டால் தொடரும்” 

தொட்டால் தொடரும் படத்தின் இசையமைப்பாளர் பி.சி.சிவனுடன். பி.சி.சிவன் இதற்கு முன்பு ஒரு தெலுங்கு படத்திலும், தமிழில் பயமறியான் என்கிற படத்திற்கு இசையமைத்திருக்கிறார். 
@@@@@@@@@@@@@@@@@@@@@
விஸ்வரூபம் படம் பற்றி பல் வேறு சர்சைகள் இருந்தாலும், என்னைப் பொருத்தவரை அப்படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போது புதியதாய் ஒரு விஷயம் எனக்கு புலப்படும். அது மேலும் ஒரு முறை படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தும். குறிப்பாய் காதலனுடன் சுற்றிவிட்டு, கமலின் மனைவி லேட்டாய் வரும் காட்சியில் அவர் சத்தமில்லாமல் போர்வைக்குள் நழுவும் காட்சியின் முன்பு கமல் முழித்துக் கொண்டிருப்பார். அப்போது அந்த காட்சியில் அவரின் தலைமாட்டில் ஒரு கடிகாரம் பளிச்சென்று டைமைக் காட்டும். அவரின் மனைவி உள் நுழையும் நேரத்தில் அது ஸ்லீப் மோடுக்கு போகும். இப்படியான பல காட்சிகளை  ரசிகர் ஒருவர் வீடியோவாக தொகுத்திருக்கிறார். ஒரு சிலது கொஞ்சம் ஓவராய் பட்ட்டாலும், ஒரு வேளை திரும்பப் பார்த்தால் புரிபடலாம். என்ன அவர் போட்ட ஆங்கில டைட்டில் ஃபாண்ட் விஸ்வரூபம் ஃபாண்ட் போலவே இருந்து படிக்க இம்சிக்கிறது. 
@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Horse & chicken were good friends . One day horse fell into a hole. chicken called the farmer who used his BMW car 2 lift the horse. Then 1 day d chicken fell inta d hole.the horse lowred his dick & pulled d chicken out....
Moral: If u have a horse dicks,u do not need BMW to pick up chicks....

Post a Comment

10 comments:

கவியாழி said...

கொத்துப் பரோட்டாவில் காரம் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது

Bruno said...

திருக்குறளுக்கு உரை எழுதுவது போல்

கமலின் படத்திற்கும் உரை தேவைப்படுகிறது

இந்த "கோனார் நோட்சிற்கு" பின்னால் கமல் உள்ளார் என்று உறுதியாக நம்புகிறேன்

Unknown said...

viswaroopam apdinu pera ketale annathe unaku ullukula edho pannudhu pa ... en pa adhuku mattum ipdi oru build up........

Cable சங்கர் said...

என்னைப் போன்ற சினிமா ஆர்வலர்கள் வேண்டுமானால் இருக்கலாம். டாக்டர்.

'பரிவை' சே.குமார் said...

பரோட்டா காரமாய்... சுவையாய் இருக்கிறது.

keyven said...

என்ன சங்கர்.. ஒங்க கேட்டால் கிடைக்கும் அமைப்பை use பண்ணி இந்த இன்ஜினியரிங் காலேஜ் பீஸ் கொள்ளையை தடுக்க முயற்ச்சி செய்யலாமே??

Bruno said...

//என்னைப் போன்ற சினிமா ஆர்வலர்கள் வேண்டுமானால் இருக்கலாம். டாக்டர்.
//

படப்படிப்பு குறித்த சில உள்விபரங்கள் இதில் உள்ளன தலைவரே

இது படப்படிப்பில் தொடர்புடைய நபர் கூறாமல் வெளிவர முடியாது

Swami said...

சென்னையில் உள்ள பல தனியார் கல்லூரிகளில் இதே நிலமைதான். எந்த கல்லூரியும் அரசின் கட்டணம் மட்டும் வாங்குவதில்லை . பல கல்லூரிகளில் காலை மதியம் உணவை கல்லூரி உணவகத்தில் தான் சாப்பிட வேண்டும் . அரசு கட்டணம் 40 அல்லது 43 ஆயிரம் மட்டுமே . ஆனால் போக்கு வரத்து , உணவு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி என்று பல வகைகளில் பகல் கொள்ளை அடிகின்றனர் . எப்போதும் போல் புகர் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கு என்பார்கள் . சென்னையில் விடுயில் சேர்ந்து பொறியியல் பட்டம் பெற நன்கு வருடத்திற்கு குறைந்தது 6 லட்சம் செலவாகும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் மாவட்டத்தை விடுத்து வேறு மாவட்டத்தில் பில்லிஐகலை சேர்த்தல் கட்டணத்தில் குறைந்தது 20 முதல் 30 சதவிகிதம் சேமிக்கலாம். நீங்கள் சென்ற கல்லூரியில் 100 வேலை பெற்று விட்டார்கள் என்று சொல்ல்வார்கள் . அவனவன் " appointment order " மட்டும் வைத்து கொண்டு வேலைக்காக காத்திருப்பார்கள். இதை பற்றி ஒரு தனி பதிவே நீங்கள் எழுதலாம்

Avargal Unmaigal said...

///83 ஆயிரம் கட்டித்தான் ஆக வேண்டும் என்று ப்ரெஷர் போட்டிருக்கிறார்.///
இதில் சட்டம் இயற்றும் அரசாங்க அதிகாரிகள் அந்த சட்டதை கண்காணிக்காமல் இருக்க இதில் இருந்து ஒரு பங்கு போகிறதே...

மக்கள் என்ன செய்ய வேண்ட்ட்மென்றால் இப்படி உடன் போகும் அதிகாரிகளை பொது இடங்களில் பார்க்கும் போது செருப்பால் அடிக்க வேண்டும் அதை போட்டோ வீடியோ எடுதுது நெட்டில் போட்டு அவர்கள் குடும்ப மானத்தை வாங்க வேண்டும்.

ஆனால் இப்படி எல்லாம் செய்யாமல் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு இப்படி அநியாம் பண்ணுகிறார்களே என்று குறை சொல்லுவதில் என்ன பல இருக்கிறது

ஜேகே said...

Thanks Shangar for sharing Viswaroobam insights. Wow ... amazing detailing, not sure whether I deserve to be his fan even .. Great mind.

JK