Thottal Thodarum

Jul 15, 2013

கொத்து பரோட்டா -15/07/13

  • ஃபேம் தியேட்டரில் படமே பார்க்கக் கூடாது என்று நினைத்தால் வேறு வழியேயில்லாமல் என் பட வேலைகள் முடித்துவிட்டு போக அது ஒன்றே ஆப்ஷனாக இருப்பதால் போய் தொலைக்க வேண்டியிருக்கிறது. எப்போது சென்றாலும் ஏதாவது ஒரு மோசமான அனுபவம் கிடைத்துக் கொண்டேயிருக்கும் திரையரங்கம் அது. சென்ற் வாரம் இம்சை. லூட்டேரே படம் பார்க்க டிக்கெட் வாங்க  கவுண்டரில் இருக்கும் ஆளிடம் லூட்டேரே மூன்று டிக்கெட் என்றேன். அவன் என்ன என்பது போல திரும்ப கேட்டான். நான் மீண்டும் இந்திப் படம் லூட்டேரே இரவுக் காட்சி என்று சொன்னேன். அவனும் அதையே திரும்பச் சொல்லி இந்திப் படம் லூட்டேரே மூன்று டிக்கெட் என்று கன்பர்ம் செய்து டிக்கெட் கொடுத்தார். ஸ்கீரின் நம்பர் 3க்கு போய் உட்கார்ந்தால், இங்கிலீஷ் படம் ஓடிக் கொண்டிருந்தது. டிக்கெட்டை பார்த்தால் அதில் லோன் உல்ஃப் என்று போட்டிருந்தது. தப்பு என் பேரில் தான் ஒழுங்காய் டிக்கெட்டை சரி பார்த்திருக்க வேண்டும். வெளியே வந்து ஹால் இன்சார்ஜிடம் சொன்னேன். நீங்க பார்த்திருக்கணும் என்றார். எனக்கு கோபம் வந்து கத்த ஆரம்பித்தேன். ஒண்ணுத்துக்கு பத்து வாட்டி ஹிந்தி படம் லூட்டரே என்று சொல்லி, கேட்டு வாங்கினேன் இப்ப என் சைட் குறையை மட்டும் சொல்லுறீங்களே..? என்றவுடன் வேறு ஒரு இன்சார்ஜ் மேனேஜரிடம் சென்று எங்களை லூட்டரே உள்ள அரங்கில் அனுமதித்து உட்கார சொல்லிவிட்டு “ இன்னைக்கு டிக்கெட் இருந்திச்சு கொடுத்துட்டோம் இல்லைன்னா என்ன பண்றது? எங்க சைட் தப்புத்தான் இருந்தாலும் நீங்களும் ஒரு வாட்டி செக் பண்ணிக்கங்க என்றார். அவனுங்க கொடுக்குற டிக்கெட்டை பூதக்கண்ணாடி வச்சில்ல படிக்கணும்?
    @@@@@@@@@@@@@@@@@@@@@@@ 



    என் ட்வீட்டிலிருந்து
    டிவியில் படம் பார்ப்பதை கூட ஸ்டில்லோடு ஸ்டேடஸ் போடுகிறவர்கள் எப்படி ஒழுங்காய் படம் பார்ப்பார்கள்?‎#டவுட்டு

    காலையில் காரில் வரும் போது ரேடியோவில் கேட்ட ஒரு ஜோக்குக்கு விழுந்து விழுந்து சிரித்தேன். ‎#ஆச்சர்யம்

    all the best RAJU MURUGAN'S KUKKOOO

    போலீஸ் இன்வெஸ்டிகேஷனை விட இவர்களின் புலனாய்வு திறமை ஆச்சர்யபடுத்துகிறது.# இளவரசன் மரணம்

    இடப்பக்க மணலை எல்லாம் வலப்பக்கம் எடுத்திரைத்து நகக்கண்ணெல்லாம் வலிக்கிறதடி நாளையேனும் சீக்கிரம் வா#பாலகுமாரன்

    முறை தவறிய கர்ப்பத்தை கலைக்க அடம் பிடிக்கும் மனைவியிடம் இருந்துட்டு போகட்டுமே எனும் கணவன். “வேணாம் அந்த பையன் கருப்பு” ஸ்டன்னிங்#பாலகுமாரன்

    மெளனமே காதலாக சிறுகதை தொகுப்பின் மூலமாய்த்தான் பாலாவின் அறிமுகம்#பாலகுமாரன்

    திருப்பூந்துருத்தி படித்து ஜுரமெல்லாம் வந்திருக்கிறது. #பாலகுமாரன்

    எவனொருவன் தன்னை மதிக்காமல் அதிர்ஷத்தை மதிக்கிறானோ அவனிடம் ”அது” வருவதேயில்லை.

    ஒரே ஒரு ஆள் இல்லாட்டி மொத்த டீமே ஊத்திக்குமா? ‎#டவுட்டு

    நட்சத்திரங்களை விட சுற்றி மின்னும் மின்மினிகளின் இம்சை தாங்கவில்லை.

    வர வர பேஸ்புக்கில் கவிஞர்கள் நடமாட்டும் அதிகமாயிட்டு.. நாமத்தான் சாக்குரதையா இருக்கணும்:)

    Bought Ravi subramanian's if god was a banker, the incredible banker, the bankster. from landmark 3for 2

    காதல் என்பது நம்மை இம்சிக்க தெரிந்தே ஒருவனை ஒருததியை அனுமதிப்பது

    சமயங்களில் தினத்தந்தியும் சுவாரஸ்யங்கள் இருக்கத்தான் செய்கிறது.# ஆருர்தாஸின் தொடர்.

    இணையத்தில் ஆஹா ஓஹோ என்ற படங்களை விட மொக்கை, சுமார் என்ற படங்கள் தான் அதிக வசூல் பெற்றிருக்கிறது.# ரசிகன் வெளிய இருக்கான் குமாரு :)

    எக்ஸ்பிரஸ் மாலில் உயிரை மாய்த்துக் கொண்டவன், மால்காரன் இருவருக்குமே உயிரின் மீதான மதிப்பு தெரியவில்லை

    கற்பனைதான் நம்பிக்கையின் முதல்படி
    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
    ஹிந்து பத்திரிக்கை சென்னையின் நடைபாதை பற்றி தொடர்ந்து எழுதி வருகிறது. பொதுமக்களையும் அவர்களது ஏரியவில் உள்ள நடைபாதைகளின் நிலையைப் பற்றி போட்டோக்களோடு அவர்களது ஈமெயிலுக்கு அனுப்பச் சொல்லி கேட்கிறது. சில இடங்களில் அவர்கள் போட்டோ போட்ட சில நாட்களிலேயே நடைபாதைகள் சரி செய்யப் படுகிறது. தனிமனிதன் கேட்டாலே கிடைக்கும் போது ஒரு பத்திரிக்கை மூலம் கேட்டால் நிச்சயம் கிடைக்கத்தான் செய்யும் என்பது இதன் மூலம் உறுதியாகிறது. வாழ்த்துகள் ஹிந்து. இது போல இன்னும் பல விஷயங்கள் செய்ய முடியும்.
    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
    நேற்று பதிவர்கள் சிலர் டிஸ்கவரி புக் பேலஸில் கூடியிருக்கிறார்கள். தீடீரென அங்கு வந்த டிராபிக் போலீஸ் வண்டி அங்கிருந்த வண்டிகளை அள்ளிப் போட்டுக் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள். இத்தனைக்கு அங்கு நோ பார்கிங் கிடையவே கிடையாது இது குறித்து பதிவர் ஆரூர்.மூனா செந்தில் விவாதித்து இருக்கிறார். அதற்கு அங்கே பக்கத்து தெருவில் இருந்த நோ பார்க்கிங் போர்டை காட்டியிருக்கிறார்கள்.  ரூல்ஸாம். அப்படி ரூல்ஸை பாலோ செய்தார்கள் என்றாலும் பரவாயில்லை. அந்த நோ பார்க்கிங் போர்டுக்கு கீழேயே ரெண்டு வண்டிகள் இருந்திருக்கின்றன. அதை விட்டு விட்டார்கள். இவர்கள் வண்டியை எடுத்த நேரத்தில் அங்கே ஒரு பெண் தன் வண்டியை வைத்திருக்க அதை எடுக்கவேயில்லையாம். எனக்கென்னவோ.. டிஸ்கவரி புக் பேலஸிடம் கட்டிங் வாங்குவதற்கான முதல் படி என்றே தெரிகிறது. ஏனென்றால் இங்கே நோ பார்க்கிங் இல்லாத இடத்தில் வேண்டுமென்றே வண்டிகளை தூக்குகிறார்கள் என்றால் அங்கே தொடர்ந்து நிகழ்ச்சி நடந்தும் ஆட்களுக்கு ப்ரச்சனை வரும். ப்ரச்சனை வந்தால் கட்டிங் வரும் என்பது அவர்களுக்கு தெரியும். எனக்கென்னவோ ரெண்டு நாள் முன்னால் டிஸ்கவரி புக் பேலஸுக்கு வசூலுக்கு வந்தவர்களின் கைங்கர்யமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. வாட்ச்வுட் டிஸ்கவரி வேடியப்பன்.
    @@@@@@@@@@@@@@@@@@@@@@@
    தொட்டால் தொடரும்
    தொட்டால் தொடரும் படத்திற்கான டெக்னீஷியன்கள் தேர்வு ஒரு புறமும், நடிகர்கள் தேர்வும் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு வழியாய் கதாநாயகன் தெரிவாகிவிட்டார். ஆச்சர்யங்கள், சட்டம் ஒரு இருட்டறை, சும்மா நச்சுன்னு இருக்கு ஆகிய படங்களின் நாயகன் தமன்குமார் எங்கள் குழுவில் இணைந்திருக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. தெரிவானது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 
    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
    அடல்ட் கார்னர் 
    What is the definition of a teenager? A: God's punishment for enjoying sex.




Post a Comment

11 comments:

r.v.saravanan said...

எப்ப சூட்டிங் ஆரம்பிகிறீங்க சங்கர் சார்

மாதேவி said...

வாழ்த்துகள்.

Karthikeyan Krishnan said...

பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா.. ஏன் எங்களையெல்லாம் உங்க படத்தில் நடிக்க கேட்க மாட்டீங்களா..

http://dream4sale.blogspot.in/

நாங்களும் நடிப்போம் பாஸ். வீட்டுல, ரோட்டுல, ஸ்கூல்ல, காலேஜ்ல, ஆபிஸ்ல என்று எவ்ளோ நடிச்சிருப்போம். படத்துல நடிக்க மாட்டோமா.. கூப்பிடுங்க பாஸ்.

செங்கோவி said...

//ஒரு வழியாய் கதாநாயகன் தெரிவாகிவிட்டார்.//

அடடா...வடை போச்சே!

சு.கி.ஞானம் said...

//அவனுங்க கொடுக்குற டிக்கெட்டை பூதக்கண்ணாடி வச்சில்ல படிக்கணும்?//
உண்மை உண்மை முற்றிலும் உண்மை

R. Jagannathan said...

I would like to watch a movie shooting in progress! Preferably a fight scene. Can you accommodate my request some day? - R. J.

pichaikaaran said...

காலையில் காரில் வரும் போது ரேடியோவில் கேட்ட ஒரு ஜோக்குக்கு விழுந்து விழுந்து சிரித்தேன்.'';

என்ன ஜோக்?

vanila said...

தொட்டால் தொடரும். கேபிள் சங்கரா?, சங்கர நாராயணனா! சார்.

காவேரிகணேஷ் said...

பேம் தியேட்டர் மூத்திர வாடை தியேட்டர். ஸ்கீரின் 1 ல் நான் நுழைந்தால் , டிக்கெட் கிழித்து கொடுப்பவரிடம், என் இருக்கையை சொல்லி, ரூம் ஸ்பிரே இல்லை, பினாயில் ஸ்பிரே அடிக்க சொல்லிவிட்டு தான் உள்ளேயே செல்வேன்..

டிஸ்கவரி பார்க்கிங் பிராப்ளத்திற்கு கேட்டால் கிடைக்கும் அணுகவும்..

தமன்குமார் வாழ்த்துக்கள்

Unknown said...

Fame cinema experience in mumbai also .i had same blood

குரங்குபெடல் said...


" தப்பு என் பேரில் தான் ஒழுங்காய் டிக்கெட்டை சரி பார்த்திருக்க வேண்டும். "


1999 பொங்கல் அன்று

அஜித் நடித்த

" தொடரும் " படம் பார்க்க போன போது

கவுன்டரில் " தொட்டால் தொடரும் "என்ற படத்திற்கு

டிக்கெட் கொடுத்தனர் . .

நான் கவனித்து விட்டு . .

சார் இந்த படம் 15 வருஷம் கழிச்சு தான் தொடங்கவே போறாங்க

நீங்க என்ன அதுக்குள்ள டிக்கெட் கொடுக்கறிங்க என்றவுடன்

மாற்றி கொடுத்தனர் . . .


வாழ்துக்கள்