தமிழ் சினிமா அரையாண்டு ரிப்போர்ட் -2013
முதல் மூன்று மாதங்களில் பெரும் வெற்றி பெற்ற படங்கள் வரிசை படுத்தினால் கண்ணா லட்டு தின்ன ஆசையா?, விஸ்வரூபம், கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்கள் மட்டுமே வெற்றி பெற்றது. அடுத்த மூன்று மாதங்களைப் பார்ப்போம்.
ஏப்ரல்
சேட்டை, கெளரவம், என்.ஹெச்.4, நான் ராஜாவாக போகிறேன், யாருடா மகேஷ் ஆகிய படங்கள் வெளியான மாதம். ஹிந்தி டெல்லிபெல்லியின் சைவ உட்டாலக்கடியாய் வெளிவந்தது சேட்டை. ஆர்யா, ஹன்சிகா, சந்தானம், பிரேம்ஜி என நட்சத்திர பட்டாளங்கள் இருந்தும் காமெடி எடுபடாமல் போனது. டெல்லி பெல்லியின் ப்ளஸ் பாயிண்டே அதன் நான்=வெஜ் காமெடிதான். அது இல்லாத படம் சாதாரண ஓல்ட் ஸ்டைல் காமெடிபடம் மட்டுமே. மெனக்கெட்டு அடல்ட் கார்னரை எடுத்துவிட்டு ரிலீஸ் செய்ததில் பெரும் அடி வாங்கியது. கெளரவம் இதுவரை ப்ரகாஷ்ராஜ், ராதாமோகன் பெற்றிருந்த நல்ல பெயரை கவிழ்த்துப் போட்டது. நகுலிற்கு வெகு நாளைக்கு பிறகு ஒரு பெரிய படமாய் வெளிவந்தது. நகுல் தன்னால் முடிந்த அளவிற்கு சிறந்த நடிப்பை கொடுக்க முயற்சித்தும், ஓல்ட் ஸ்கூல் திரைக்கதையால் வந்த சுவடு தெரியாமல் போனது. சுமார் எட்டு கோடியில் தயாரான இப்படம். தயாரிப்பாளர்களினால் ஓன் ரிலீஸ் செய்யப்பட்டது. பெரும் நஷ்டத்தை அடைந்தது. ட்ரைலர் வெளியானதிலிருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய யாருடா மகேஷ் ரிலீசானது இதுக்குத்தானா இவ்வளவு பில்டப்பூ என்று பூ என்று ஊதிவிட்டார்ப் போல ஆனது. என்.ஹெச்.4 சித்தார்திற்கு வெகு நாளைக்கு பிறகு தமிழில் வெளி வந்த படம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு சில பத்திரிக்கைகள் ஆவரேஜ் படம் என்று சொல்லிவிட்டு ஹிட் லிஸ்டில் சேர்த்தாலும் மார்கெட்டை பொறுத்தவரை ஆவரேஜ் படமே.
ஆவரேஜ் : என்.ஹெச். 4
மே
சூது கவ்வும், எதிர்நீச்சல், மூன்று பேர் மூன்று காதல், நாகராஜ சோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ, நேரம், குட்டிப்புலி ஆகிய படங்கள் வெளியான மாதம். அட்டகத்தி, பிட்சா, ஆகிய படங்களை அளித்த சி.வி.குமாரின் தயாரிப்பில் வெளியான இன்னொரு கருப்பு குதிரை சூது கவ்வும். பெரும்பாலான மல்ட்டிப்ளெக்ஸ் மற்றும் ஏ செண்டர்களில் நல்ல வசூலை பெற்றது. சுமார் 2.50 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் தியேட்டர் மூலமாய் மட்டும் சுமார் 11 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாய் சொல்கிறார்கள். இதைத் தவிர மற்ற உரிமைகள் விற்பனை எல்லாம் சேர்த்து 16 கோடி ரூபாய்க்கு வியாபாரம் என்கிறது மார்கெட். இதனுடன் வெளியான எதிர்நீச்சலுக்கும் பெரிய ஓப்பனிங் முதல் நாளிலேயே சுமார் மூன்று கோடிக்கு மேல் வசூல் செய்தது. முதல் வாரத்திலேயே பத்து கோடிக்கு ரீச் ஆகி சுமார் 15 கோடி வசூல் செய்த படம். அனிருத்தின் இசை, தனுஷின் தயாரிப்பு, சிவகார்த்திகேயனின் நடிப்பு, காமெடி எல்லாம் வெகு ஜன ரசிகர்களை கட்டிப் போட்டது என்றாலும் இரண்டாவது வாரங்களுக்கு மேல் சட்டென வீழ்ந்து போனது கொஞ்சம் இணைப்பில்லாத இரண்டாவது பாதியினால் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். மூத்த இயக்குனர்கள் வசந்த், மறைந்த மணிவண்ணன் ஆகியோரின் ப்டங்கள் அவர்கள் இதுவரை பெற்ற பெயரை தக்க வைக்காத படங்களாய் அமைந்தது. மாத கடைசியில் வெளிவந்த குட்டிப்புலி வழக்கம் போல முதல் காட்சிக்கு முன்னாலேயே சூப்பர் ஹிட் என விளம்பரப்படுத்தினர் சன் டிவியினர். பெரிய ஓப்பனிங்கை சென்னை தவிர மற்ற பி, சி ஏரியாக்களில் கொடுத்தாலும், இவர்கள் வாங்கிய விலைக்கும் செய்த பப்ளிசிட்டிக்கு போட்ட காசில் கொஞ்சம் அடித்துப் பிடித்துத்தான் வசூல் என்கிறது ட்ரேட்.
மே ஹிட் : சூது கவ்வும், எதிர்நீச்சல்
ஜூன்
ஜூன் மாதத்தில் தில்லு முல்லு, தீயா வேலை செய்யணும் குமாரு, ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியானது. மேலும் சில சின்னப் படங்களும் வெளியான மாதம். மே மாதத்தில் ஒரே நாளில் சூதுகவ்வும், எதிர்நீச்சல் ஆகிய படங்கள் வெளியானாலும் இரண்டும் வேறு வேறு ஜெனர்கள் என்பதால் இரண்டுமே வெற்றிகரமாய் ஓடியது. ஆனால் இம்முறை இரண்டு படங்களூமே காமெடி படங்களாய் அமைந்துவிட்டதினால் ஆப்ஷன் என்று வரும் போது முழுக்க, முழுக்க சந்தானம் மட்டுமே வரும் தீயா வேலை செய்யணும் குமாருக்கு ஓட்டு அதிகமாகி வெற்றி பெற்றது. இரண்டு படங்களும் தனித்தனியே வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.
ஹிட் : தீயா வேலை செய்யணும் குமாரு
மொத்தத்தில் இந்த ஆறு மாதங்களில் 80 படங்களுக்கு மேல் வெளிவந்திருக்கும் நிலையில் சூப்பர் ஹிட் லிஸ்டில்
1) கண்ணா லட்டு தின்ன ஆசையா?
2) விஸ்வரூபம்,
ஹிட் வரிசையில்
3) கேடி பில்லா கில்லாடி ரங்கா
4) சூது கவ்வும்
5) எதிர்நீச்சல்
6) தீயா வேலை செய்யணும் குமாரு.
1) கண்ணா லட்டு தின்ன ஆசையா?
2) விஸ்வரூபம்,
ஹிட் வரிசையில்
3) கேடி பில்லா கில்லாடி ரங்கா
4) சூது கவ்வும்
5) எதிர்நீச்சல்
6) தீயா வேலை செய்யணும் குமாரு.
ஆவரேஜ் வரிசையில்
1) சென்னையில் ஒரு நாள்,
2) N.H.4 உதயம்,
3) குட்டிப்புலி
2) N.H.4 உதயம்,
3) குட்டிப்புலி
கேபிள் சங்கர்
Comments
Did you missed the NERAM in report?
It agreeable that Thillu Mullu is below average. But you should definitely mis-judged Neram
Regards
Kumar