Thottal Thodarum

Jul 29, 2013

கொத்து பரோட்டா - 29/07/13

மஞ்சுளா விஜயகுமாரின் இறுதி ஊர்வலத்தை தேசத் தலைவரின் இறுதி ஊர்வலம் போல லைவ் கவரேஜ் எல்லாம் தன் சேனல் மூலம் செய்தும், கடைசியில் “மஞ்சுளா விஜயகுமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு நன்றி” என்று உளறியதால் செய்தததெல்லாம் வீணாய் போயிற்று. நன்றின்னு முடிச்சிட்டு, இரங்கல்கள்னு போட்டுக்கங்க என்று சொல்லி தான் டங்க் சிலிப்பானதை ஒத்துக் கொண்ட பெருந்தன்மையை கூட உணராமல் அவர் விமர்சனத்துக்குள்ளாவதை நினைக்கும் போது ரொம்பப் பாவமாத்தான் இருக்கு. கேப்டன் வாழ்க
@@@@@@@@@@@@@@@@@@@@


ரவி சுப்ரமணியனின் If God was a banker நாவலை படித்தேன். சேத்தன் பகத் போல சுவாரஸ்யமான நடை.  கதையின் களம் எனக்கு மிகவும் பிடித்தது. பேங்கிங் செக்டார். அதிலும் வெளிநாட்டு வங்கிகளின் பின்னணி. எப்படி வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவுக்குள் நுழைந்தது?. சர்வீஸ் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்டுக் கொண்டிருந்த இந்திய வங்கி துறையின் மைனசை எப்படி அவர்கள் தங்கள் சர்வீஸினால் மார்கெட்டை மாற்றியமைத்தார்கள். தங்களை நிலை நிறுத்திக் கொள்ள எப்படியெல்லாம் போராடினார்கள். அந்த போராட்ட களத்தில் இருக்கும் சந்தீப், சுவாமி ஆகியோரின் வாழ்க்கை எப்படி மாறுகிறது?. வெற்றி மட்டுமே குறிக்கோளாய், அதற்காக எல்லாவிதமான குறுக்கு வழிகளையும் பயன்படுத்த யோசிக்காத சந்தீப்பும், எதையும் நிறுத்தி நிதானமாய், யோசித்து, லாங்க் டெர்மில் செயல்படும் திட்டங்களை வைத்து காய் நகர்த்தி வெற்றி பெரும் சுவாமியும் செம இண்ட்ரஸ்டிங் கேரக்டர்கள். வெற்றியை அடைய பெண், பணம், என்று எப்படியெல்லாம் கார்பரேட் செக்டர்களில் ஊழல் மலிந்திருக்கிறது. என்பது வரை நிறைய டீடெயிலிங். மிக சுவாரஸ்யமான எழுத்து நடை. காதல், காமம், பரபரப்பு என்று எல்லாம் இருந்து மைனஸ் என்னவென்றால் என்னால் அடுத்து வரக்கூடிய எபிசோடுகளை முன் கூட்டியே க்ளைமேக்ஸ் உட்பட கணிக்க முடிந்ததுதான். இவரின் முதல் நாவல் இது. மேலும் இவர் எழுதி வெளிவந்திருக்கும் “Incredible banker" "Bankster" ஆகிய நாவல்களை வாங்கி வைத்துள்ளேன். அதிலாவது என் கணிப்புகள் உடையுமென்ற நம்பிக்கையோடு படித்துவிட்டு சொல்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@
மோடி ப.ஜா.காவின் பிரதமர் வேட்பாளர் என்றவுடன் ஃபேஸ்புக், டிவிட்டர் எங்கும் இனி இந்தியாவில் பாலும் தேனும் ஓடப் போகிறது என்று மோடி ப்ராபகண்டாவை ஆரம்பித்துவிட்டார்கள். சைனாவில் உள்ள ஒரு ரோட்டின் படத்தை எடுத்து வெட்டி ஒட்டி, அது அஹமதாபாத்தின் ரோடு என்று இது குஜராத்தின் வெற்றி. அதன் காரணம் மோடி என்று மார்கெட்டிங் பண்ணுகிறார்கள். காங்கிரஸ் அரசினால் நொந்து நூடூல் ஆன இந்திய வாக்காளர்கள் அனைவருக்கும் மோடியினால் ஏதேனும் மாற்றம் வருமா? என்ற ஒரு சின்ன நம்பாசை இருக்கத்தான் செய்கிறது. அந்த நப்பாசையை சோஷியல் மீடியாவின் மூலமாய் பொய் பிரசாரம் செய்வது மோடியின் பிரதமராக்கி பாக்கும் ஆசையில் பி.ஜே.பிக்கு டெண்ட் விழ வாய்ப்பிருக்கிறது. ஹிந்துவின் சர்வேவும் தொங்கு பாராளுமன்றம் வர வாய்ப்பிருக்கிறது என்றே சொல்லியிருக்கிறது. பார்ப்போம் இன்னும் நாளிருக்கு அதற்கு காங்கிரஸ் பெட்ரோல், டீசல், அந்நிய செலவாணி, பொருளாதாரம் என்று தொடர்ந்து சொதப்பாதா என்ன?
@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
உங்களால முடியாததை நாங்க முடிச்சிருக்கோம்.#நூறாவது நாள் திருமதி தமிழ் டீம்.:)

மறுக்கா தொங்கு பாராளுமன்றம்தான் வருமாமே.. மாமே..உசாரு..:)

என்னா ஒரு நடிகன்டா ரகுவரன் வி மிஸ் யூ

ஜெயிக்கலைன்னா மக்கு ஜெயிச்சா லக்கு முகவரி

typical hollywood template disaster action movie white house down

தங்கமீன்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தை விட பாலை நல்ல படம் என்று சொல்லிக் கொள்வதில் தான் ஆர்வம் தெரிகிறது.

அடுத்த முறையாவது தந்திடிவி ஆட்கள் நிகழ்ச்சிக்கு கூட்டி வரும் ரிச் கேர்ள்ஸ் ஏஜெண்டிடம் சொல்லி ஒரிஜினல் கூட்டி வரச் சொல்லவும்
@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாட்பாரத்தில், ரோட்டோரத்தில் கடை போடுகிறவர்களை மாநகராட்சி சொல்லிச் சொல்லிப் பார்த்து ஒரு நாள் திடீரென கடைகளை தூக்கி கடாசி எறிவதை நிறைய நண்பர்கள் பாவம் அவர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கிறார்களே.. இதே போல பணக்காரர்களிடம் செய்வார்களா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். இம்மாதிரி கடைக்காரர்களை காலி செய்யாமல் விட்டால் பின்பு அரசாங்கமே இவர்களுக்கு கடை கட்டிக் கொடுக்க வேண்டியிருக்கும். அவர்கள் இலவசமாய் அக்கடைகளை பெற்றுக் கொண்டு அதை மேல் வாடகைக்கு விட்டுவிட்டு மீண்டும் அதே இடத்தில் கடை போடுகிறார்கள். ப்ளாட்பாரத்தில் கடை நடத்து இடம் நாம் நடப்பதற்கான இடம். அவர்கள் கடை போடுவதற்கான இடமல்ல. அவ்விடங்கள் எல்லாம் எவ்வளவு ரூபாய்க்கு வாடகைக்கு விடுகிறார்கள் தெரியுமா? ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு சின்ன ப்ளாட்பார கடையின் இடத்தில் வேறு ஒருவர் கடை போட ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய் வரை வாடகை வாங்குகிறார். அரசாங்கத்தின் ப்ளாட்பாரம். என்னைப் பொறுத்தவரை இவர்களை அப்புறப்படுத்திய பிறகு மீண்டும் அங்கே கடை போட விடும் போலீஸ் காரர்களை தண்டித்தால் நிலை இன்னும் சீராகும்.
@@@@@@@@@@@@@@@
சமீபகாலத்தில் அதிக நேரம் கேட்டபாடலிது.  மூடர் கூடம் படத்திலிருந்து. ஸ்ரீனிவாசின் குரல் செய்யும் மாயமும், ஓல்ட் க்ளாசிக் ட்யூனும் மயக்குகிறது. விஷுவலும் க்யூட்.
@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
பரபரப்பான “மேட்டர்” முடிந்து  எப்படி என்று கேட்ட பாய்ப்ரெண்டை பார்த்து சலித்தபடி “உன்னோட கிட்டார் இவ்வளவு சின்னதா இருக்கும்னு நினைக்கலை” என்றாள். “நான் கூட இவ்வளவு பெரிய ஹால்ல வாசிக்கப் போறேன்னு நினைக்கலை என்றான் பாய்ப்ரெண்ட்
கேபிள் சங்கர்

Post a Comment

4 comments:

swejeni said...

கண்ணாலே பேசி பேசி கொல்லாதே பாடலை எந்த வடிவில் கேட்டாலும் இனிமைதான்

ADAM said...

இனிமைதான்

சு.கி.ஞானம் said...

காங்கிரஸ் பெட்ரோல், டீசல், அந்நிய செலவாணி, பொருளாதாரம் என்று தொடர்ந்து சொதப்பாதா என்ன? - சூப்பர்

பரபரப்பான “மேட்டர்” முடிந்து எப்படி என்று கேட்ட பாய்ப்ரெண்டை பார்த்து சலித்தபடி “உன்னோட கிட்டார் இவ்வளவு சின்னதா இருக்கும்னு நினைக்கலை” என்றாள். “நான் கூட இவ்வளவு பெரிய ஹால்ல வாசிக்கப் போறேன்னு நினைக்கலை என்றான் பாய்ப்ரெண்ட்
- ரிபீட்

'பரிவை' சே.குமார் said...

கொத்துப் பரோட்டா நன்று.