Thottal Thodarum

Jul 21, 2013

Bhaag Milka Bhaag

படத்தின் ட்ரைலரும், பர்ஹான் அக்தரின் உழைப்பும், ராகேஷின் முந்திய படமான ரங்தே பசந்தி கொடுத்த இம்பாக்டும் வேறு சேர்ந்து கொள்ள,  எதிர்பார்ப்பு எகிறித்தான் போயிருந்தது. 


ஒலிம்பிக்கில் முதல் இரண்டு இடங்களுக்குள் வந்து கொண்டிருந்தவரைப் பார்த்து அவரது பயிற்சியாளர் “பாஹ் மில்கா பாஹ்” என்று கத்திய விநாடியில் பின் தங்கி நான்காவதாய் வருகிறார். ஏன்? பாஹ் மில்கா பாஹ் என்றால் அவருக்கு ஏன் இப்படி ஒரு பயம் நிறைந்த உணர்வெழுச்சி ஏற்படுகிறது என்பது போன்ற கேள்விகளுக்கு மில்காவின் வாழ்கையிலிருந்து கதை சொல்லியிருக்கிறார்கள்.

என்ன ஒரு அசுரத்தனமான உழைப்பு. பர்ஹான் அக்தரை ஆரம்பித்த சில நிமிடங்களில் மில்காவாகத்தான் பார்க்க முடிகிறது. பாகிஸ்தானில் பிரிவினை காலத்தில் அங்கிருந்து துரத்தியடிக்கப்பட்ட ஒருவர் பின்னாளில் அதே பாகிஸ்தானின் உச்ச ஓட்டக்காரரை தோற்கடித்து பறக்கும் வீரர் என்ற பட்டத்தையும் பெற்றவரின் வாழ்கையை  ஒவ்வொரு நொடியிலும் உணர்ந்து செய்திருக்கிறார். ஹாட்ஸ் ஆப் பர்ஹான். இதற்கு மேல் இவரை எவ்வளவு பாராட்டினாலும் அது வெறும் எழுத்தாகத்தான் தெரியும். அவரின் பர்பாமென்ஸை திரையில் பாருங்கள் அப்போது புரியும் நான் ஏன் இப்படி சொல்கிறேன் என்று.

பிரிவினைக்கு பிறகு தன் மொத்த குடும்பத்தையே இழந்து ஓடி வந்து அகதியாய் நிற்கும் இடத்தில் மில்காவின் அக்கா குடும்பம் மட்டும் பிழைத்து வந்திருக்க, அவருடன் மில்கா அகதிகள் முகாமில் இருக்கும் காட்சிகள். அக்காவை முகாமில் உறவுக்கு அடித்து அழைக்கும் அக்கா புருஷனை கோபத்தில் அடிக்குமிடமாகட்டும், வயலண்டான மில்கா கொஞ்சம் கொஞ்சமாய் ரவுடியிசமாய் திரியும் போதாகட்டும் மிக இயல்பான வாழ்கையை சொல்லியிருக்கிறார்கள். சோனம் கபூரோடான காதல் செம க்யூட். அந்தக் காதல் வளரும் பாடலும், அதில் வரும் சின்னச் சின்ன மாண்டேஜுகள் செம்ம. படத்தின் முதல் பாதியை அந்த காதல் காட்சிகள் தான் சுவாரஸ்யப்படுத்துகிறது.  ப்ரகாஷ்ராஜ், யுவராஜ் சிங்கின் அப்பா யோக்ராஜ்சிங், கிராமத்து நண்பன் என குட்டிக் குட்டி கேரக்டர்கள் கூட பளிச் பளிச்சென மிளிர்கிறார்கள்.

படத்தின் பெரிய பலம் வினோத் பிரதானின் ஒளிப்பதிவு. என்னா ஒரு ப்ரீத் டேக்கிங் விஷுவல்ஸ். ஆல்மோஸ்ட் படத்தின் ஒவ்வொரு ப்ரேமிலும் உழைத்திருக்கிறார்.  அதே போல இசையமைப்பாளர்களான சங்கர் - இஷான் - லாயின் பாடல்கள். என்ன தான் நன்றாக இருந்தாலும் இந்தப்படத்திற்கு ரஹ்மான் இல்லாதது குறையே. ரஹ்மான் நிச்சயம் பட்டையை கிளப்பியிருப்பார் என்று தோன்ற வைக்கும் பின்னணியிசை.

ராணுவத்தில் போய் சேர்ந்ததிலிருந்து அவரது வாழ்கை மாறுகிறது. இந்தியாவின் கோட்டை போட்டு பார்த்ததால் திருடன் என்று அவமானப்படும் இடம்.  மில்கா காதலில் தோற்றுப் போய் எதுவும் புரியாமல் நிற்குமிடம், ஆஸ்திரேலியாவில் போட்டிக்கு போன இடத்தில் அங்கிருக்கும் கோச்சின் பேத்தியுடனான காதல், செக்ஸ், குடி என்ற நிலை தடுமாற்றம். அந்த தடுமாற்றத்தால் தான் தான் தோற்றதாய் குற்ற உணர்ச்சியில் மில்கா படும் வேதனை. அதனால் அவளை திட்டி விடுவதும் பின்பு மீண்டும் அவளை பார்க்கச் சென்று தப்பு உங்க மேல இல்லை என் மேலதான் சாரி. என்று சொல்லிவிட்டு செல்லுமிடம். க்ளைமாக்சில் மில்கா ஓடும் போது கூடவே அவரது சிறு வயது உருவமும் ஓடும் காட்சிகள் ராக்கேஷின் இயக்கத்திற்கு ஒர் சான்று. இந்தியாவின் பெரிய அத்லெட்டான மில்கா சிங்கின் வாழ்க்கையின் பிரதிபலிப்புதான் என்றாலும் ஒரு கட்டத்தின் மேல் அதிக எமோஷனில்லாத ஒரு பயோபிக் ஓட்டம் மட்டுமே மிஞ்சியிருப்பதும், க்ளைமாக்ஸ் சுவாரஸ்யத்திற்காக இந்தியா - பாகிஸ்தான் ஓட்டம், வெற்றி என முடித்திருப்பதுமாய் தெரிகிறது. பட் நாட் டு பி மிஸ்ட் ஃபிலிம்
கேபிள் சங்கர்

Post a Comment

5 comments:

Anonymous said...

/ஆஸ்திரேலியாவில் போட்டிக்கு போன இடத்தில் அங்கிருக்கும் கோச்சின் பேத்தியுடனான காதல், செக்ஸ், குடி என்ற நிலை தடுமாற்றம்/


ரசிகர்களை குஷிப்படுத்தவே இக்காட்சி சொருகப்பட்டுள்ளது. நிஜத்தில் அப்படி நடக்கவே இல்லை என சமீபத்தில் பேட்டி அளித்தார் 'அசல்' மில்கா.

Anonymous said...

உண்மையாக நடந்த சம்பவங்களில் இருந்து பல இடங்களில் மாறுபட்ட கதை. ஒரு விளையாட்டு வீரனை ஹீரோ வாக காட்ட வேண்டிய அவசியத்திற்காக உண்மையை சற்றே மாற்றி இருக்கிறார்கள். படம் ஆமை வேகத்தில் செல்வதையும் சொல்லி ஆக வேண்டும். இரண்டாம் பாதி ரொம்பவே ஸ்லோ. அதுவும் தவிர இந்திய சினிமாவில் என்ன cliche-க்களை எல்லாம் உபயோகிக்க முடியுமோ அத்தனையையும் கையாண்டுள்ளார்கள்.

மொத்தத்தில், நன்றாக வந்திருக்க வேண்டிய/கூடிய படம் என்றே எனக்கு தோன்றியது.

நன்றி,
ராம்
(http://akshayapathiram.wordpress.com)

Anonymous said...

Farhan akthtar ஒரு மிகச் சிறந்த
இயக்குனர் மற்றும் வசனகர்த்தா.

தில் சாஹ்தா ஹாய் மற்றும் ஜிந்தகீ நா மிலேகீ துபாரா அதற்குச் சிறந்த
உதாரணங்கள். இப்போது நடிப்பில்
கலக்கி இருப்பதாகச் சொல்லி
இருக்கிறீர்கள், பார்க்க வேண்டும்.
தமிழில் இவரைப் போல சொல்வதனால் பார்த்திபன் அல்லது கரு பழநியப்பனைச் சொல்லலாம்.
ஆனால் நம்மவர்களின் பிரச்சனையே, over do செய்து விடுகிறோம்.
We are not able to maintain the balance between displaying smartness vs reality, அங்கு தான் பரான் தனியாகத் தெரிவார். ஜிந்தகீ நா மிலேகீ துபாராவில்
தன் தந்தை சொல்லும் சாரியையும் தான் ஹ்ருதிக்கிடம் சொல்லும்
சொல்லும் சாரியையும் அழகாய் correlate செய்து அண்டர்ப்ளே
செய்திருப்பார்.

'பரிவை' சே.குமார் said...

விமர்சனம் படம் பார்க்கும் ஆசையைத் தூண்டுகிறது....

குரங்குபெடல் said...

" ரஹ்மான் இல்லாதது குறையே. ரஹ்மான் நிச்சயம் பட்டையை கிளப்பியிருப்பார் என்று தோன்ற வைக்கும் பின்னணியிசை. "


Sorry . . . கொஞ்சம் இல்ல நெறயவே Over