Thottal Thodarum

Aug 26, 2013

கொத்து பரோட்டா -26/08/13

தானே அப்டேட் செய்ய வேண்டிய ஒரு வேலை. மக்களும், பத்திரிக்கைகளும், கோர்ட்டும் தலையிட்டு செய்கிறாயா இல்லையா? என்று செய்ய வைத்திருக்கிறது. ஆட்டோ கட்டணத்தை நிர்ணையிக்கும் விஷயத்தைத்தான் சொல்கிறேன்.முதல் 1.8கிமிட்டருக்கு 25 ரூபாயும் அதிகபட்ச கிலோமீட்டருக்கு 12 ரூபாயும் நிர்ணையித்திருக்கிறார்கள். பேரம் பேசியே வருடங்களாய் பழக்கப்பட்டவர்கள் இனி நிர்ணையித்த கட்டணத்தை வாங்க பழக வேண்டும். அப்படி வாங்காத பட்சத்தில் அவர்களின் மீது புகார் செய்தால் நடவடிக்கை எடுக்க எல்லாவிதமான உதவிகளையும் பயணிகளுக்கு அரசு அளிக்க வேண்டும். பெட்ரோல் விலையை காரணம் காட்டி விலையேற்றும் ஆட்டோக்கள் பெரும்பாலும் ஆட்டோ கேஸில் தான் போகிறது. எனவே இவர்கள் பெட்ரோல் விலையேற்றத்தை காரணம் காட்டி கொள்ளையடித்தது என்றைக்குமே செல்லாத போது, இனி மீண்டும் அதை காரணம் காட்டி விலையேற்ற சொல்வது போன்ற இம்சைகளை அரசு தடுக்க வேண்டும். பார்ப்போம். நம்ம ஊரு சட்டமும், அதை செயல்படுத்தும் காவல்துறையின் லட்சணங்களை பற்றி தெரிந்து எல்லாம் நல்லா நடக்கும் என்று நம்பிக்கை வைப்பது எவ்வளவு பெரிய அதீதம் என்பது புரிந்தும் நம்புகிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@


தந்தி டிவியில் நித்யானந்தா ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார். அந்த விளம்பரத்தை பார்த்த நண்பர் என்னாங்க இது அநியாயம்? இவனெல்லாம் நாட்டாமை பண்ணுற மாதிரி நிகழ்ச்சி நடத்துறான். அவனோட காம லீலைன்னு செய்தி போட்ட பத்திரிக்கை சார்ந்த டிவி நிகழ்ச்சி நடத்துது? என்று புலம்பினார். டி.ஆர்.பி எனும் பெரும் அரிப்பு ஒன்றுதான் டிவிக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் சிரங்கு. இதோ நீங்க இப்ப கேக்குறீங்க இல்லை? இந்த நிகழ்ச்சியை ஒரு வாட்டியாவது பாப்பீங்க இல்லை? இவரை போடாம வேற யாரையாச்சும் போட்டு நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தியிருந்தாங்கன்னா நீங்க கவனிச்சிருப்பீங்களா? அதுக்குத்தான் என்றேன். “ஙே” 
@@@@@@@@@@@@@@@@@@@@
மெட்ராஸ் கபே படத்தை தடை செய் என்று போராட்டம் தொடங்கியதன் காரணமாய் தமிழ் வர்ஷன் ரிலீஸ் ஆகவில்லை. எங்கே இந்தி வர்ஷன் போட்டாலும் ப்ரச்சனை ஆகுமோ என்று அதுவும் தமிழகத்தில் ரிலீஸ் ஆகவில்லை. என்னைப் பொறுத்தவரை இம்மாதிரி தடை செய்வது அநியாயமான விஷயம். தமிழ் உணர்வு, இலங்கை தமிழர்கள், அதன் தலைவர்கள் பற்றி அவமதிப்பு போன்ற காரணங்கள் இருந்தாலும் இம்மாதிரி போராட்டங்களினால் அப்படத்திற்கு சாதாரணமாய் கிடைக்கும் அங்கீகாரத்தை விட நான்கு மடங்கு அதிகமாய்த்தான் கிடைக்கப் போகிறது. ஆனால் இதுவே நீ படத்தை ரிலீஸ் செய் நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று சொல்லிப் பாருங்கள். தானாகவே மக்கள் தங்களுக்கு  ஒவ்வாத விஷயங்கள் ஒதுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அங்கீகாரம் கிடைக்காத விஷயங்களை பணம் செலவு செய்து அவர்களும் தயாரிக்க மாட்டார்கள். ஆஃப்டர் ஆல் இவர்கள் யாரும் சமுதாய் சேவை செய்ய படம் தயாரிக்கவில்லை.  தயவு செய்து  நம்மை புண்படுத்தும் விஷயங்களை செய்பவர்களை வெளிச்சப்படுத்தி அவர்களுக்கு புகழ் சேர்க்காதீர்கள்.
@@@@@@@@@@@@@@@@@@
எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டுக்கு பணம் செலுத்த அந்த பேங்கின் ஏடிஎம்மில் ஒரு செக் டெபாசிட் மிஷின் வைத்திருக்கிறார்கள். அதில் செக் டெப்பாஸிட் செய்ய நுணுக்கமான பார்வையும், கூரிய நகங்களும் அவசியம். பெரும்பாலான நேரங்களில் இந்த மிஷின்கள் வேலை செய்வது இல்லை. செக்கை அங்கிருக்கும் ட்ராப் பாக்ஸிலும் போட முடியாது. க்ரெடிட் கார்டுக்கு என்று ஒரு சில ப்ராஞ்சுகளில் மட்டுமே ட்ராப் பாக்ஸ் வைத்திருக்கிறார்கள். ஏரியாவுக்கு ஒரு எஸ்.பி.ஐ பேங்க் இருந்தாலும் ட்ராப் பாக்ஸ் மட்டும் மாவட்டத்திற்கு ஒன்று தான் வைத்திருப்பார்கள் போல. இம்பூட்டு அவலநிலையையும் மீறி தேடிப் பிடித்து செக்கை டெபாசிட் செய்வதற்குள் நாக்கு தள்ளிவிடும். ஏன்யா  ஒரு டப்பா ஒவ்வொரு பேங்கிலும் வைக்க வேண்டியதுதானே? என்று கேட்டதற்கு “நீங்க கம்ப்ளெயிண்ட் பண்ணிக்கங்க சார்”என்று பொறுப்பாய் பதில் சொன்னார் May I Help You வில் உட்கார்ந்திருந்தவர். வாழ்க அவரின் சர்வீஸ்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா
வலைப்பதிவு எழுத ஆரம்பித்து மெல்ல ஃபேஸ்புக், டிவிட்டர் என்று தடம் மாறி எழுதுவது சுருங்கி, ப்ளாக் எல்லாம் இப்ப யார் எழுதுறாங்க என்று வீட்டிலிருக்கும் பெருசுகள் அந்த காலத்தில என்று அங்கலாய்ப்பது போல பழைய ப்ளாகர்கள் பேசிக் கொண்டிருக்கும் காலத்தில் புதிதாய் வலைப்பூ எழுத நிறைய பேர் வந்து கொண்டுதானிருக்கிறார்கள். அவர்களும் ஒரு கட்டத்திற்கு பிறகு மேற்ச் சொன்ன சோஷியல் நெட்வொர்க்குக்கு போய் அதே அங்கலாப்புகளை அள்ளிவிட்டுக் கொண்டிருப்பார்கள். சரி.. விஷயத்துக்கு வருவோம்.  வருகிற செப் 1 ஆம் தேதி தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா இரண்டாம் ஆண்டாய் தொடர்கிறது.  இம்முறை சினி மியூசிஷியன் ஹாலில் நடைபெறுகிறது.  வடபழனி கமலா தியேட்டருக்கு அடுத்த கட்டிடம் தான் இந்த அரங்கம். காலை முதல் மாலை வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பழைய,புதிய, இளைய, வலைப்பூ நண்பர்கள் அனைவரும் வந்திருந்து விழாவை சிறப்பிக்க இன்னமும் யூத்தாய் வலம் வரும் என் போன்றவர்களின் சார்பாக வரவேற்கிறேன். (என்னைய மட்டும் தனியா யூத்துன்னு சொன்னா..)
@@@@@@@@@@@@@@@@@@@
செவிக்கினிமை
ராஜாவின் இசையில் மேகா என்றொரு படம் விரைவில் வெளியாக இருக்கிறது.  முகிலோ மேகமோ, செல்லம் கொஞ்சம் பூவே ஆகிய பாடல்கள் கேட்ட மாத்திரத்தில் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. ரொம்பவும் சிம்பிளான ஆர்கெஸ்ட்ரேஷன். பட் ஸூத்திங் மெலடி.  இந்த ஆல்பத்தில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம் பெறாத புத்தம் புது காலை பாடலை மீண்டும் இப்படத்தில் உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். வாவ்.. எனக்கென்னவோ தலைவன் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார்னு தோணுது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
சென்னை டூ கும்பகோணம்.
செப் முதல் தொட்டால் தொடரும் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது என்பதால் குலதெய்வத்தை ஒரு நடை பார்த்து அன்பை பெறலாம் என்று நா. முத்துகுமாரின் சந்திப்பை தள்ளிப் போனதால் திடீரென கார்க்கி, கே.ஆர்.பி. ஆகியோருடன் அதிகாலை  5 மணிக்கு கிளம்பினோம். உளூந்தூர்பேட்டை டோல் வரை சுகமான பயணம். அங்கிருந்து கும்பகோணம் போக ஊருக்கு போனதிலிருந்து மகா மட்டமான ரோடு ஜெயங்கொண்டம் வரை. அதன் பிறகு பரவாயில்லை. மூன்று மாதங்களுக்கு முன் போனதை விட படு மோசமாய்த்தான் இருக்கிறது ரோட்.  டோல்கள் வருவதற்கு முன் கட்டண சாலை என்ற அறிவிப்பை பார்த்திருக்கிறேன். உளூந்தூர் பேட்டை டோலின் முன் மட்டும் உபயோகிப்போர் கட்டணம் வசூலிக்குமிடம் என்று போட்டிருக்கிறார்கள்.  தலைவன் விஜயகாந்தின் பிற்ந்தநாள் போகிற இடமெல்லாம் வெகு விமரிசையாய் கொண்டாபப்படுகிறது. எல்லா ஊர் லோக்கல் சேனலிலும் விஜயகாந்த் படம் தான் ஓடிக் கொண்டிருந்தது. ஹைவே முழுக்க கும்பகோணம் டிகிரி காப்பியாய் இருக்க, கும்பகோணத்திலேயே காப்பி சாப்பிடுவோம் என்று சாப்பிட்ட காப்பி படு கேவலம். எவர்சில்வர் டபராவுக்கு பித்தளை கோட்டிங் போட்டிருந்தார்கள் அநியாய பளிச்சென்று இருந்தது.  மதிய சாப்பாடு வழக்கம் போல மங்களாம்பிகாவில். திவ்யம். நன்றாக சாப்பிட்டு விட்டு கொஞ்சம் அதிகமா போயிருச்சோ என யோசித்து எதுக்கு வெயிட் பார்போம் என்று அங்கிருக்கும் வெய்யிங் மிஷினில் ஏறி நின்றால் சந்தோஷத்தில் மூர்ச்சையாவது உத்தரவாதம். மைனஸில் காட்டுகிறது. வழி நெடுக மொட்டையின் தெய்வீக இசையுடன் அற்புதமான பயணம். குலதெய்வத்தின் ஆசியுடன் நல்ல படியாய் முடிந்தது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
தமிழின் முதல் ரேகே புத்தம் புது காலை #Ilayaraja]

அவனுங்களா எதையும் செய்வாங்கன்னு தோணலை. நாம செய்வோம். அட்லீஸ்ட் தங்கத்தையும் பெட்ரோலையும் தேவைக்கு யூஸ் பண்ணுவோம். 

ஒரு படத்துக்காக ஒரு சீன் கூடவா யோசிக்க மாட்டாங்க.. அவ்வ்வ்#Thalaivaa Time to Escape

நாயக்கரய்யா.. வெளிய வராதீங்க.. போலீஸ் வராங்க.. இங்க அண்ணா வெளிய வராதீங்க.. போலீஸ் வராங்க.. #Thalaivaa Time to escape

ம்ஹும்... என்னத்த சொல்ல.. முடியலை..#Thalaivaa Time to Escape
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Johnny noticed that Jimmy was wearing a brand new, shiny watch. “Did you get that for your birthday?” – asked Johnny.  “Nope.” – replied Jimmy. “Well, did you get it for Christmas then?”
Again Jimmy said “Nope.” “You didn’t steal it, did you?” – asked Johnny.“No,” said Jimmy. “I went into Mom and Dad’s bedroom the other night when they were ‘doing the nasty’. Dad gave me his watch to get rid of me.”Johnny was extremely impressed with this idea, and extremely jealous of Jimmy’s new watch. He vowed to get one for himself. That night, he waited outside his parents’ bedroom until he heard the unmistakable noises of lovemaking. Just then, he swung the door wide open and boldly strode into the bedroom. His father, caught in mid stroke, turned and said angrily. “What do you want now?” “I wanna watch,” Johnny replied.Without missing a stroke, his father said, “Fine. Stand in the corner and watch, but keep quiet.”
 கேபிள் சங்கர்

Post a Comment

9 comments:

kalil said...

thala, kothula taste ah illa

குரங்குபெடல் said...

"எனக்கென்னவோ தலைவன் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார்னு தோணுது. "




ஏண்ணே . .

தலைவன்னு . .

சொல்லி ராஜாவுக்கு


அரசால பிராப்ளத்தை உண்டு பண்றீங்க

அதிலை said...

//தயவு செய்து நம்மை புண்படுத்தும் விஷயங்களை செய்பவர்களை வெளிச்சப்படுத்தி அவர்களுக்கு புகழ் சேர்க்காதீர்கள்.//
விஸ்வரூப தடைக்கு உங்க tone வேறே மாதிரி இருந்ததே ... hypocrite!! வேறே என்ன சொல்ல?

vijayaragavan said...

Waiting for Megha audio to be released. Just bought 3 songs from iTunes store. Brilliant songs. Real melody songs.

MSKUMAR said...

I donno purposefully you are paying ur credit card bill over cheque or not. Just fyi; u can use this following link to pay ur credit card bill through online net banking from any bank account. https://www.billdesk.com/pgidsk/pgijsp/sbicard/index.jsp

Saravanakumar said...

thanthi TV's image is tampered.

If a person like nithyananda is allowed in a programme after his filty acts, How COME people can trust your Channel's NEWS ?

Totally screwed up.

'பரிவை' சே.குமார் said...

கொத்து... எப்பவும் போல.

Unknown said...

தந்தி டிவிக்கு போட்டியா ரஞ்சிதாவை வச்சு காம்பியரிங் பண்ணா டி.ஆர்.பி கண்டிப்பா ஏறும்.

திவ்யாஹரி said...

Now am kumbakonam sir. Where is mangalambika hotel? Address please..