Thottal Thodarum

Sep 27, 2008

காதலில் விழுந்தேன் - விமர்சனம்காதலில் விழுந்தேன் என்கிற படத்தின் தலைப்பை பார்த்த்துவிட்டு ஓரு அழகிய காதல் கதையை எதிர்பார்த்தீர்களானால...உங்களுக்கு ஏமாற்றமே. குணா, 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன், ஒண்டரி(தெலுங்கு) போன்ற பல படங்களின் பட்டறையே காதலில் விழுந்தேன்.

சபாபதி வீல்சேரில் மீராவை வைத்துக் இருளில் தள்ளிக் கொண்டு தப்பி ஓடி ஊட்டிக்கு போகும் ரயிலில் வித்அவுட்டில் அந்த வீல் சேருடன் காதலியை தூக்கிக் கொண்டு ஏறும்போதே அட என்று நாமும் ஏறுகிறோம். சபாபதி மீராவை டிரையினில் படுக்க வைத்துவிட்டு தன்னுடய காதல் கதையை டி.டி.ஆர். லிவிங்ஸ்டனிடம் சொல்ல ஆரம்பிக்கிறார்.

எவ்வளவு அமெச்சூர் தனமான காதல் காட்சிகள். நடிகர்கள் நடிக்க முடியாமல் இருக்கும் இடத்தில் எல்லாம் எடிட்டர் வி.டி.விஜயன் தன் திறமையை காட்டியிருக்கிறார். ப்ளாஷ்பேக் சொல்ல ஆரம்பித்து 6வது காட்சியில் காதல் வந்துவிடுகிறது. சரி அடுத்து என்ன என்ற கேள்வி எழும் முன்னே மீராவிடம், சபாபதி முத்தம் கேட்க, நீ புட்பால் மேட்ச் பைனல் விண் செய்தால் தருவேன் என்று சொல்லிவிட்டு பஸ் ஓடும் முன்பு ஓரு கிஸ் அடிக்கிறார். (அப்படி ஓண்றும் சொல்லிக்கொள்ளும்படியான கிஸ் இல்லை).

புட்பால் மேட்ச் ஜெயித்து வரும் போது அவருக்கு ஓரு விஷயம் சொல்லப்படுகிறது. (அதை நான் என்னவென்று சொன்னால் படம் பார்பவர்களுக்கு சப்பென்று ஆகிவிடும் ஆகையால் தியேட்ட்ரில் பார்கவும்) அவர் அதை நம்பாமல் அடுத்தடுத்து அவர் செய்யும் செயல்கள் எல்லாம் குணா.. அதே போல் மலை கொடைக்கானலுக்கு பதிலாக ஊட்டி, பின்னாலேயே துறத்துற எ.பி.பிக்கு பதிலா இன்னொரு போலீஸ் ஆபிஸர். குகை போல் உள்ள இடங்களில் “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல”ன்னு சொல்ற மாதிரி, சபாவும் “மனிதன் என்பதால் காதலிக்கிறேன்” ன்னு பாடறார். இடைவேளைக்கு அப்புறம் ஓரே ரத்தக்களறி. ஸ்கிரீன் பூராவும் ஓரே ரத்தமா தெரியுது.

சபாவாக வரும் நகுலுக்கு ஆரம்ப காட்சிகளில் கொஞ்சம் கஷ்டப்பட்டிருந்தாலும், போக, போக வெறி கொண்டவனின் வேகத்தை சரியாக செய்திருக்கிறார். மீராவாக வரும் சுனைனா எப்போதும் படுத்துக் கொண்டே இருப்பதால் பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை.. (அடடா.. சொல்லக்கூடாதுன்னு நினைச்சேன்.. சொல்லிட்டேனே..).காதல் சோகம், விரகம், எல்லாவற்றுக்கும் இஞ்சி தின்ன குரங்கு போல முகத்தை வைத்துக் கொள்கிறார்.

ஊட்டி விஞ்ச் சண்டைகாட்சியிலும், ஓரே ஷாட்டில் வரும் நீளமான சண்டைக்காட்சியிலும் ஓளிப்பதிவாளர் விஜய் மில்டன் தெரிகிறார்.

படத்தை காப்பாற்றியிருப்வர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிதான். “நாக்க மூக்க, உனக்கெனநான்,உன் தலைமுடி” போன்ற பாடல்களிலும், செகண்ட் ஹாப்பில் ரிரிக்காடிங்கிலும் விஜய ஆண்டனியின் உழைப்பு தெரிகிறது.

ரொம்ப எதிர்பார்த “நாக்க மூக்க” அந்த அளவுக்கு “கேலப்பாக” இல்லை. ஓகே. இரண்டாவது முறையாக வரும்போது பரவாயில்லை.

மொத்தத்தில் “நாக்க மூக்க” காதலில் விழுந்தேன் “நாக்க மொக்க” என்று சொல்லலாம் என்று நினைத்தால் இண்டர்வெல்லுக்கு அப்புறம் ஏதோ தட்டுத்தடுமாறி தப்பிவிடுகிறது. இவ்வளவு வயலிண்டிக்கான உணர்வுகளை நியாயப்படுத்த வேண்டும் என்றால் முன்பாதியில் மிக அற்புதமான காதல் காட்சிகள் வேண்டும் அது இல்லாததால் படம் விட்டு வெளிவரும்போது குமட்டும் மார்சுவரியிலிருந்து வெளிவரும் உணர்வு உங்களுக்கு வராமல் இருந்தால் ஆச்சர்யம்தான்.

Post a Comment

8 comments:

tamil cinema said...

தங்களின் இந்த படைப்பை நெல்லை தமிழ் டாட் காம் இணையத்தில் மறுபிரசுரம் செய்துள்ளோம். நன்றி.

வலை முகவரி
http://nellaitamil.com

cable sankar said...

நன்றி தமிழ் சினிமா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

புதுவை சிவா :-) said...

Hi Sankar

Thz for your comment that film

I"m escape to watch that.

And the top one lady she is very beatiful but you put it is only 1/2 side picture publish her full face... ( I said your cable sankar pakkam photo)

puduvai siva

ஜுர்கேன் க்ருகேர் said...

படம் சரியில்லை என்று நினைக்கிறேன்.

கேள்வி ஒன்று.

“நாக்க மூக்க” பாடல் மிக பிரபலமானவுடன் அதற்காகவே இரண்டாவது முறை ஷூட்டிங் பண்ணாங்களாம். அதனால் “நாக்க மூக்க” பாடல் காட்சியின் டான்ஸ் எப்படி இருக்கிறது?

கேள்வி இரண்டு:

தீபாவளி வரை படம் தியேட்டர் -இல் ஓடுமா?

நன்றி !

cable sankar said...

//Hi Sankar

Thz for your comment that film

I"m escape to watch that.

And the top one lady she is very beatiful but you put it is only 1/2 side picture publish her full face... ( I said your cable sankar pakkam photo)
/
puduvai siva//

நிச்சயமாய் சிவா.. விரைவில்

cable sankar said...

//படம் சரியில்லை என்று நினைக்கிறேன். //

சக்கரகட்டிய பாக்கும் போது இது பரவாயில்லையோன்னு தோணுது

//“நாக்க மூக்க” பாடல் மிக பிரபலமானவுடன் அதற்காகவே இரண்டாவது முறை ஷூட்டிங் பண்ணாங்களாம். அதனால் “நாக்க மூக்க” பாடல் காட்சியின் டான்ஸ் எப்படி இருக்கிறது?//

அப்படி ஓண்ணும் சொல்லிக் கொள்ளும்படியா பெரிசச இல்ல.

//தீபாவளி வரை படம் தியேட்டர் -இல் ஓடுமா?//

கஷ்டம்தானு நினைக்கிறேன். ஜூர்கேன் நன்றி உங்கள் வருகைக்கும் கேள்விகளுக்கும்

வெண்பூ said...

//சக்கரகட்டிய பாக்கும் போது இது பரவாயில்லையோன்னு தோணுது//

அடப்பாவிகளா!! அதையும் பாத்துட்டீங்களா?? :))))

cable sankar said...

//அடப்பாவிகளா!! அதையும் பாத்துட்டீங்களா?? :))))//

விதி வலியது..சமீபத்தில் நான் தப்பிய படம் பந்தயம் ஏன்னா எனக்கு அந்த கதை முன்னாடியே தெரியும் அதனால தான்.