
வாரணம் ஆயிரம். தமிழ் சினிமா ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்த படம் ஓரு வழியாய் நேற்று வெளியாகிவிட்டது.. ஹாரிஸின் பாடல்கள் ஏற்படுத்திய பாதிப்பை படம் ஏற்படுத்தியதா? என்று கேட்டால்.. மற்றவர்களின் உழைப்பெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
ராபர்ட் ஜெமிஸ்கிஸ்ஸின் “Forrest Gump"பின் பாதிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் படம்.கெளதம் என்ன தான் தன் தந்தையை பற்றிய ஓரு ஆட்டோ பயாகிராபி என்று சொன்னாலும், கதை சொன்ன விதம், திரைக்கதை அமைப்பு, என்று பலதும் அந்த படத்தை ஞாபக படுத்தாமல் இல்லை.

வயதான் சூரியா ஹேர்கட் ஷாப்பிலிருந்து வீடு வந்து இற்ந்து போவதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. அந்த செய்தி ராணுவத்தில் மேஜராய் பணிபுரியும் சூர்யாவிடம் சொல்லப்பட, அவர் ஓரு முக்கியமான ஆப்ரேஷனில் வானில் இருக்க, தன் தந்தையின் பற்றிய அவர் நினைத்து சொல்ல ஆரம்பிக்க, அவர் தந்தை கிருஷ்ணனுக்கும், சிம்ரனுக்கும் ஏற்பட்ட காதல் கதையில் தொடங்கி, சூர்யா பிற்ந்து, அவருக்கு தங்கை பிறந்து, சூர்யா காலேஜூக்கு போவது ஆவ்வ்வ்வ்வ்.....

அதன் பிற்கு சூர்யாவின் காலேஜ் வாழ்கை, டிரையினில் பார்த்தவுடனேயே காதலிக்க ஆரம்பிக்கும் சமிரா ரெட்டி வந்ததும் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. அந்த ராத்திரி ரயிலில் தன் காதலை சொல்ல.. “பனிவிழும் மலர்வனம்” பாட்டை கிடாருடன் பாடுவது, இளமை. ஆனால் இந்த காட்சிகளில் எல்லாம் சமிராவின் மேக்கப் படு கேவலம். ஆனால் அதற்கு அப்புறம் சூர்யாவின் அப்பாவுக்கு உடம்புக்கு வருவது, சூர்யா திடீரென என்ன கம்பெனி ஆரம்பிக்கிறார் என்றே தெரியவில்லை. அப்பாவின் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவிட்டு, தன் காதலியை தேடி அமெரிக்கா போகிறார். தன் பெற்றோர்கள் ஆசியுடன்.. அங்கே ஓரு குண்டு வெடிப்பில் சமிராவை இழக்க, என்று அதற்கு அப்புறம் இலக்கில்லாமல் போகிறது கதை..

ஓரு தந்தைக்கும், மகனுக்கும் இடையே ஏற்படும் நெருக்கத்தை, “ஹாய்..” “டேக் கேர்...” “டோண்ட் வொரி” போன்ற வசனங்களீனால் புரிந்துவிடும் என்றால் அதுமிகப் பெரிய காமெடி.. ஆழமான் காட்சியமைப்புகள் இல்லை.. சமிராவுக்கும், சூர்யாவுக்கும் ஏற்படும் காதல் காட்சிகளிலும் ரொம்பவே வறட்சி..ஓரு பாடல் முடிந்தவுடன் “ ஐ.லவ்..யூ..” என்றுவிடுகிறார். அடுத்த சீனில் சாகப்போகிற அவசரம்.?
வழக்கமாய் கவுதம் படங்களில் வரும் ஷார்ப் வசனங்கள் எங்கே..? ஓரே சவ..சவ..
சூர்யாவின் மனைவியாய் வரும் திவ்யாவின் கேரக்டரும் அப்படிதான்.. பாரஸ்ட் கம்பில், ஹீரோவின் ஸ்கூல் மேட்டாய் வரும் பெண்ணைப் போல.. அந்த கேரக்டரையும் அவர் அவ்வள்வாக முக்கியத்துவம் கொடுக்காமல் வீணடித்திருக்கிறார்.
எதற்காக சூர்யா தன் போதை பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காக, ஊர் ஊராக சுற்ற வேண்டும், அங்கே ஓரு பணக்கார குழந்தையை கட்த்தல் கும்பலிடமிருந்து காப்பாற்ற வேண்டும், எதற்காக அவர் ஆர்மியில் சேர வேண்டும் என்று எதற்காக என்ற கேள்விகள் நிறைய இருந்தாலும் அந்த மாதிரியான் காட்சிகள் “Forrest gump"ல் இருப்பதால், அதை மீறி யோசிக்க முடியாமல் கஷ்டப்பட்டிருப்பது தெரிகிறது. ப்ளாஷ்பேக் முடிந்தவுடன் க்ளைமாக்ஸில் நடக்கும் தீவிரவாதிகளுக்கும், ராணுவதினருக்கும் நடக்கும் போராட்டம் என்ன தான் நன்றாய் எடுத்திருந்தாலும் வேஸ்ட்..

இதில் முக்கியமாய் பாராட்ட படவேண்டியவர் சூர்யா. அவரின் உழைப்பு காட்சிக்கு காட்சி தெரிகிறது.. ஆனால் அந்த அப்பா கேரக்டரை அவர் செய்யாமல் வேறு யாராவது செய்திருந்தால் அப்பா, மகனுக்கு இருக்கும் நெருக்கத்தை மிக அழகாய் வெளிபடுத்தியிருக்க முடிமென்று தோன்றுகிறது.. அந்த அப்பா எந்தவித்தில் தன் மகனின் முன்னேறறத்துக்கு உதவினார். பாரஸ்ட் கம்பில் படத்தில் வரும் ஹீரோ போலியோ கால்களூம், லேசான முளை வளர்ச்சி குன்றிய ஓருவன் எப்படி தன் வாழ்கையில் போராடி ஜெயித்து, அமெரிக்க அதிபரின் பரிசை அடைந்து, தன் காதலியை அடைகிறான் என்று ஓரு கேரக்டருக்கான கதை இருந்தது.. இதில் அதெல்லாம் தெரியக்கூடாது என்று நினைத்து மாற்றியதால் எதிலும் ஓட்டாமல் போய்விட்டது.
பாடல் காட்சிகள் படம் பிடித்த விதம் மிக அழகு. அதிலும் ‘முன் தினம் பார்தேனே..”வில் ஓரு கிளாசிக் டச் இருப்பதை கவனிக்காமல் இருக்க முடியாது. அதே போல் அந்த அஞ்சலை பாடல்.. சூர்யாவின் காதலி இறந்த துக்கத்தை படத்தில் காட்சிகளில் சொல்ல முடியாத உணர்வுகளையெல்லாம் கார்திக் தன் குரலில் தெரிவித்திருக்கிறார். அந்த பாடலின் வரிகளும் அருமை..
படத்தின் டைட்டில் காட்சிகளில் பிண்ணனியில் வரும் இளையராஜாவின் பாடல்கள் நம்மை ஏகத்துக்கு எதிர்பார்க வைக்கிறது. ஹாரிஸின் பாடல்களை பற்றி சொல்ல தேவையில்லை. மனுசன் சும்மா பின்னிட்டார். இனிமே கெள்தம் படத்துக்கு அவர் இசையமைக்க போற்தில்லையாம். கிரேட் லாஸ். ரத்னவேலுவின் ஓளிப்பதிவு அதை பற்றியும் சொல்ல என்ன இருக்கிறது படத்தில் வரும் ப்ரேம்கள் சொல்லும். இப்படி எல்லாவிததிலும் சிறந்த கலைஞர்களின் உழைபபை பெற்றிருக்கும் கவுதம், தன் சைடில் செய்ய வேண்டிய உழைப்பை செய்ய தவறியதால் மிக பெரிய சரிவை சந்தித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
வாரணம் ஆயிரம்.. இருபது தாண்டாது..
Comments
இன்னிக்கு காலைலயே விமர்சனமா....
நடத்துங்க... நடத்துங்க...
:-(((((((((
இன்னிக்கு காலைலயே விமர்சனமா....
நடத்துங்க... நடத்துங்க...//
நன்றி நவநீதன்..உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
:-(((((((((//
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்.. என்ன செய்வது முரளிகண்ணன்.
ஆமா..ஜூர்கேன்.. வடை போச்சு..
நீங்க குறிப்பிட்டுள்ள பாடல் மற்றும் காட்சியமைப்பை ரசிப்பதற்காகவே நேத்து இரண்டாவது முறையா பார்த்தாச்சு....
iyo ethum copy ya
ஓரு தந்தைக்கும், மகனுக்கும் இடையே ஏற்படும் நெருக்கத்தை, “ஹாய்..” “டேக் கேர்...” “டோண்ட் வொரி” போன்ற வசனங்களீனால் புரிந்துவிடும் என்றால் அதுமிகப் பெரிய காமெடி..
iyo eppti padama oru velai melthattu makkalukka edutha padama??
இதில் முக்கியமாய் பாராட்ட படவேண்டியவர் சூர்யா. அவரின் உழைப்பு காட்சிக்கு காட்சி தெரிகிறது
weldone surya.
இனிமே கெள்தம் படத்துக்கு அவர் இசையமைக்க போற்தில்லையாம்
athu enam??
வாரணம் ஆயிரம்.. இருபது தாண்டாது..
sankara sankara;;
atha vidunga namma blog la oru pullantan pathhi potruken, parthudu commenta podunga.
kaveriganesh.blogspot.com
ஆனாலும் நீங்க ரொம்ப பொறுமைசாலிதான் சிம்பா.
//வரும் ஷார்ப் வசனங்கள் எங்கே..? // நானும் தேடினேன்....
எனக்கு மட்டும் மில்லை என் நண்கஎகளுக்கும் படம் பிடிக்க வில்லை....இந்த படம் பாக்க போலம்னு சொன்ன நண்பனுக்கு செம கட்ட வர்த்தை அர்ச்சனை......
The overacting of Simran & Old Surya was unbearable. God Save "Tamil Cinema"
These idiotic directors think that because of their banner, they can sell any rubbish.
People like Gowtham Menon think too much of themselves: that's the problem.
Anyway thanks for exposing the following:
1.Surya is not that calibre enough to do two roles... maybe atleast in this film.
This one film by Surya will not bring audience for atleast another 5 -6 films.
2.The fame Siran got with her acting over the years has been decimated with this one particular overacting movie.
3.For that heroine, sammeera, even a beggar wont travel outside of chennai to chase her.
4.The audience wont encourage these useless movies and fans can esape from another gowtham's movie for atleast another 2-3 years.
Also, pity on our senseless fans. For ex, Some useless fellows told that the second half is not as good as the first half: I could not control my laughter for the fact that except for the second part the films would have been a direct TV release.
These idiotic directors think that because of their banner, they can sell any rubbish.
People like Gowtham Menon think too much of themselves & maybe that’s the problem.
Anyway thanks for exposing the following:
1. Surya is not that calibre enough to do two roles... maybe atleast in this film.
This one film by Surya will not bring audience for atleast another 5 -6 films.
2. The fame Simran got with her acting over the years has been decimated with this one particular overacting movie.
3. For that heroine, Sammeera, even a beggar won’t travel outside of Chennai to chase her.
4. The audience won’t encourage these useless movies and fans can escape from another Gowtham's movie for atleast another 2-3 years.
5. Black money is converted into white for the film producers.
But, useless fellows will still continue to rate this film high.