Thottal Thodarum

Nov 7, 2008

''PIRATES'' OF THE CHENNAI



நிச்சயமாய் சென்னையின் பைரேட்ஸ் யார் என்று கேட்டால் அது சென்னை ஆட்டோ டிரைவர்கள்தான்.. எவ்வளவு கொடுத்தாலும் திருப்தியில்லாதவர்கள்.. நான் வழக்கமாய் சென்னையில் ஆட்டோவில் ஏறுவதில்லை.. ஏன் என்றால் அவர்கள் கேட்கும் ரேட்டை கேட்டதும், ஆட்டோ மீட்டரை விட எனக்கு ஈஸியாய் சூடு ஏறிடும். அதிலும் அவர்கள் போடும் விலைவாசி ஏற்ற பேச்சு இருக்கிறதே அது நமது நிதியமைச்சரின் பேச்சைவிட அதிகம்.

இந்த முறை அர்ஜெண்டாய் ஹைதராபாத் கிளம்ப வேண்டியிருந்தது.. கேஸினேனியில் ஸ்லீப்பர் புக் செய்துவிட்டு.. என் ஆபீஸ் உதவியாளரிடம் என்னை கோயம்பேடில் டிராப் செய்யும்படி கேட்டிருந்தேன்.. என் நேரம் அது அசோக் நகர் 5இ பஸ் ஸ்டாப் அருகே.. நின்று விட வேறு வழியில்லாமல்.. ஆட்டோ பிடிக்க நேர்ந்தது..கூசாமல் 150ரூபாய் கேட்டார்.. மிகுந்த போராட்டத்துக்கு பிறகு 120 ரூபாய்க்கு வந்தார்.. மேக்ஸிமம் 7லிருந்து 8 கிலோமீட்டர் தான் இருக்கும்.. அதற்கு 120 ரூபாய்..கேட்டால் பெட்ரோல் விலை..ஆயில் என்று கதைவிட்டார்க்ள்..மேலும் பேசினால் நாம் அப்படி பேசுவதே அவர்களின் வாழ்வாதரத்தை கெடுப்பது போல நம்மை நினைக்க வைத்து விடுவார்கள் போலிருக்கிறது.
நான் மேலும் அவனிடம் ஆர்க்க்யூ செய்யாமல் வண்டியில் ஏறி நேரத்துக்கு சென்றால் போதும் என்று ஏறி சென்றேன்..

ஆனால் இந்தியாவில் 750 கிலோ மீட்டர் தூரத்தில், ஹைதராபாத்தில், பெட்ரோல் விலை ஒன்றும் குறைவு கிடையாது.. அதே விலைதான்..ஆல்மோஸ்ட் மிகவும் ஏறு முகமான ரோட்டுகள் அதிகம்.. ஆனால் யாருமே மீட்டருக்கு அதிகமாய் கேட்கவில்லை..எங்கே போக வேண்டும் என்று கேட்கவில்லை.. நாம் ஏறி சொன்னவுடன் மீட்டர் போட்டுவிட்டுதான் கிள்ம்புகிறார்கள்.. இரவில் கொஞ்சம் லேட்டாய் வரும் போது கூட மீட்டர் போடுகிறார்கள்.. சில பேர் “ராத்திரி டைம்” என்று தலையை சொறிந்தாலும் 5 ரூபாய்க்கு மேல் எதிர்பார்பதில்லை..
“பாத்தா டீசெண்டா இருக்க..100ரூபாய்க்கு பால் மாறியே..”
” பட்சவன் மாரிகிறே.. விலவாசி என்ன விக்க சொல்ல.எப்டி மீட்டர்ல ஓட்றது..?”

என்று நீங்கள் கொடுக்காமல் இருந்தாலும் உங்களை கிண்டலோ, கேலியோ பண்ணுவதில்லை..

இதிலிலும் அவர்களின் மினிமம் சார்ஜ் 12 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது.. ஓவ்வொரு முறையும் நான் பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து, அமீர்பெட் வருவதற்கு சரியாய் 27.50 தான் ஆகும் இது எந்த ஆட்டோவில் வந்தாலும்.. நம்ம ஆட்களூக்கு மட்டும் தான் குறை எல்லாம்.. அங்கேயும் சிலர் மீட்டர் போடாமல் வருகிறார்கள்.. அப்படி கேட்பவர்கள் முக்கால் வாசி இஸ்லாமிய ஆட்டோ டிரைவர்கள்.. அதுவும் 27.50 ஆகிற இடத்துக்கு..35 ரூபாய் கேட்கிறார்கள்.. மிக மட்டமான டிராபிக் சென்ஸ் உள்ள ஊர் நான் பார்த்து ஹைதராபாத்தான்..எங்கேயும் நான் டிராபிக் கான்ஸ்டபிளை பார்ததில்லை.. யார் வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் திரும்பலாம்.. ஓன்வே பற்றியெல்லாம் அவ்வளவாக கவலை படுவதில்லை..

நான் மூன்று நாட்கள் முழுவதும் ஹைதராபாத்தில் ஆட்டோவிலேயே சுற்றி வந்ததில் 350 ரூபாய்க்கு மேல் செலவாகவில்லை.. ஆனால் ஹைதராபாத் மக்கள் 12 ரூபாய் மினிமம் ஆனதையே அதிகம் என்கிறார்கள்.. மீட்டர் போடாத ஆட்டோக்களில் யாரும் ஏற் மாட்டேன் என்கிறார்கள்..

சார்மினாரிலிருந்து காலை வந்திறங்கி வெளியே வந்த போது பல ஆட்டோ டிரைவர்கள் என்னை சூழ்ந்து கொள்ள..

நான் “ஆட்டோ வேணாம்பா.. “ என்றேன்.

“சார்.. சைதாபபேட்டைதானே சார்.. வாங்க சார். நான் கூட்டிட்டு போறேன்..” என்றான்..

”வேணாம்பா.. நீ சீப்பா ரெண்டாயிரம் ரூபாய் கூட கேட்பே..”

“ சேச்சே.. அவ்வளவு வேணாம் சார்.. ஓரு 1800 ரூபாய் டிஸ்கவுண்ட் போக.. 200 கொடுங்க போதும்” என்றான்..

PIRATES OF THE CHENNAI...

டிஸ்கி

தனியாரால் நடத்தபடும் பார்கள்.. லோக்கல் பார்கள் எல்லாமே.. எம்.ஆர்.பி.. விலையை விட குறைவாகவே விற்கிறார்கள்.. பட்வைஸ்ர் பீர் எம்.ஆர்.பி..80 ரூபாய்.. அவர்க்ள் கடையில் விற்பதோ.. 75 ரூபாய்.. இத்தனைக்கும் அந்த ஏரியாவில் நான் தேடிய வரையில் போட்டிக்கு கடைகள் இல்லை.. சொந்த காசு போட்டு, தொழில் செய்யும் அவர்களே குறைந்த விலையில் விற்று லாபம் பார்க்கும்போது.. அரசாங்க பணத்தில் முதல் போட்டு ஆரம்பித்திருக்கும் நமது டாஸ்மாக்கில் எம்.ஆர்.பிக்கு அதிகமாய் பணம் வாங்குகிறார்கள்.. அதையெல்லாம் யாரும் கேட்கவே மாட்டேன் என்கிறார்கள்.. ம் என்னத்த சொல்ல..

படித்த்தில் பிடித்தது
பெண்ணின்
பின்னப்பட்ட
கூந்தலுக்கு
மணம் இருக்கலாம்!
அதோடு
அவிழ்க்கப்படத
பொய்களும்
இருக்கலாம்!

பெண்ணின்
கன்னங்கள்
ரோஜா இதழ்களைப்
போல
இருக்கலாம்!
அதனுள்
முட்களும்
இருக்கலாம்!

பெண்ணின்
குங்குமம்
மங்களகரமாக
இருக்கலாம்!
அதுவே
ஆபத்தின்
அறிகுறியாகவும்
இருகலாம்!

ஆகவே
இளைஞனே!
காதலிக்கும் முன்...
கொஞ்சம்
யோசித்துப் பார்!

காதல்
கண்களைப்
பார்த்துச்
செய்வது!
கல்யாணம்
பணத்தை மட்டுமே
பார்த்துச்
செய்யப்படுவது...!

என்றெல்லாம்
கிறுக்கிக் கொண்டே
எப்போது
உறங்கிப் போனேன்
என்பதே
தெரியவில்லை!

கலையில்
கண் விழித்த போது
எதிர் வீடுப் பெண்
தண்ணீர் குடம்
சுமந்து
ஜன்னலில்
புன்னகைத்தாள்!

முந்தய நாள்
எழுதிய கவிதை
காற்றில்
பறப்பதைக் கூட
அறியாமல்
அவளையே
பார்த்துக்
கொண்டிருந்தேன்!
நண்பர் நவநீதன் பக்கங்களிலிருந்து.. மேலும் படிக்க..


"கொத்த பங்காரு லோகம்” திரைவிமர்சனம்
Post a Comment

29 comments:

யூர்கன் க்ருகியர் said...

கலக்கல்

Robin said...

//மீட்டர் போடாத ஆட்டோக்களில் யாரும் ஏற் மாட்டேன் என்கிறார்கள்..// இதை போல சென்னையிலும் மக்கள் இருந்துவிட்டால் ஆட்டோகாரர்கள் தானாக மாறிவிடுவார்கள். சென்னைக்கு கெட்ட பேர் வாங்கிதருவதில் ஆட்டோகாரர்கள்தான் முன்னிலை. கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாதவர்கள்.

Cable சங்கர் said...

//கலக்கல்//

நன்றி ஜூர்கேன் க்ருகேர்..

Cable சங்கர் said...

//இதை போல சென்னையிலும் மக்கள் இருந்துவிட்டால் ஆட்டோகாரர்கள் தானாக மாறிவிடுவார்கள்.//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்...

Raj said...

"Pirates" ன்னா...கொள்ளைக்காரர்கள் ன்னு அர்த்தமா...இல்ல வழிப்பறிக்காரர்கள்ன்னு அர்த்தமா?

Cable சங்கர் said...

என்னை பொறுத்தவரை என்னிடமிருந்து பணம் பிடுங்குபவர்கள் எல்லோரும் கொளளைகாரர்கள்தான்.. எனக்க்கு தெரிந்து கொள்ளைகாரர்கள் என்று தான் நினைதிருக்கிறேன்..ராஜ்.. தப்பா..

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

சங்கர் , படம் ரொம்ப ஆபாசமாய் இருக்கு ! குழந்தைகள் எதிரே உங்கள் சைட்டை திறக்க வர வர பயமாய் உள்ளது !

Cable சங்கர் said...

//சங்கர் , படம் ரொம்ப ஆபாசமாய் இருக்கு ! குழந்தைகள் எதிரே உங்கள் சைட்டை திறக்க வர வர பயமாய் உள்ளது !//

நாளை மாற்றி விடுகிறேன்..

Unknown said...

இங்கு மும்பையிலும் ஆட்டோ டாக்ஸி எல்லாம் ரொம்ப சீப்...என்ன நீங்கள் கொஞ்சம் கவனமாக மீட்டர் அட்டையை பார்த்து காசு தரவேண்டும்...இல்லை என்றால் அவர்கள் ஒரு 10, 20 அதிகம் வாங்கிவிடுவார்கள்...எல்லா ஆட்டோ, டாக்சியும் பெட்ரோல் டீசலில் இருந்து CNG கு மாறிவிட்டால் இந்த கொள்ளை குறையும் என்று நினைக்கிறேன்???
இங்கு அனைத்து வண்டியும் CNG தான்.உங்கள் படம் கொஞ்சம் அதிரடியாகத்தான் உள்ளது :)))

நவநீதன் said...

ஆட்டோ பத்தி நல்லாவே ஆட்டோ ஓட்டிருகீங்க...

இணைப்புக்கு நன்றி தல....

Cable சங்கர் said...

//எல்லா ஆட்டோ, டாக்சியும் பெட்ரோல் டீசலில் இருந்து CNG கு மாறிவிட்டால் இந்த கொள்ளை குறையும் என்று நினைக்கிறேன்???
இங்கு அனைத்து வண்டியும் CNG தான்.//

இங்கும் எல்லா இடங்களிலும் எல்.பி.ஜிக்கு மாறி ரொம்ப நாளாயிற்று.. ஆனாலும் கொள்ளை குறைந்தபாடில்லை..

பரிசல்காரன் said...

ஆட்டோக்காரர்களைக் குறித்து நீங்கள் எழுதியதை எந்த மறுப்புமின்றி வழிமொழிகிறேன்!

பாபு said...

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.சென்னை ஆட்டோ காரங்க மாதிரி நீங்க இந்தியா முழுக்க தேடினாலும் கிடைக்க மாட்டார்கள்.
ஆனால் ஒன்று அதை தருவதற்கும் மக்கள் தயாராயிருக்கிறார்கள்.
நாம் எப்போது அவர்கள் கேட்கும் பணத்தை தர மறுக்கிறோமோ அப்போதுதான் அவர்களும் திருந்துவார்கள்.
இரண்டு கிலோ மீட்டர் தூரம் என்றாலும் நான் தனிப்பட்ட முறையில் ஆட்டோ la போக மாட்டேன்.ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஐம்பத்து ரூபாய் தந்து போற ஆட்கள் எல்லாம் உண்டு ,புறநகர் பகுதியில்

பாபு said...

ஒரு நாளில் மிக குறைவான நேரம் வேலை செய்து மிக அதிகமாக சம்பாரிப்பவர்கள் அவர்களாகத்தான் இருக்க முடியும்

ambi said...

அருமை. பெங்களூரும் மாறி வருகிறது. முன்னாடி எல்லாம் மீட்டர் போட்டு வந்தார்கள். இப்ப பகலில் கூட மீட்டர் போட யோசனை பண்றாங்க. டிராபிக் அதிகமா இருக்கற இடங்களுக்கு வர மாட்டங்க.

சென்னையில யாரும் மீட்டரே போடறதில்லைன்னு நினைக்கிறேன். :))

பைரேட்ஸ் என்றால் கடற்கொள்ளையர்கள் என பொருள்படும்.
(Someone who robs at sea or plunders the land from the sea without having a commission from any sovereign nation)

Anonymous said...

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.. இதுதான் இன்றைய நிலைமை. ஆட்டோ ஓட்டுபவர்களாக திருந்தினால் தான் உண்டு.

தமிழ் அமுதன் said...

டாஸ்மாக்கில் எம்.ஆர்.பிக்கு அதிகமாய் பணம் வாங்குகிறார்கள்.. அதையெல்லாம் யாரும் கேட்கவே மாட்டேன் என்கிறார்கள்.. ம் என்னத்த சொல்ல..

வாங்க நாம ஒரு சங்கம்
ஆரம்பிச்சு இதையெல்லாம்
தட்டிகேப்போம்!

Cable சங்கர் said...

//இணைப்புக்கு நன்றி தல....//

எதுக்கு நன்றியெல்லாம்.. அப்பன்னா.. நானும் நன்றி உங்கள் வருகைகும், கருத்துக்கும்..நவநீதன்..

Cable சங்கர் said...

//ஆட்டோக்காரர்களைக் குறித்து நீங்கள் எழுதியதை எந்த மறுப்புமின்றி வழிமொழிகிறேன்//
நன்றி பரிசல்..

Cable சங்கர் said...

//நாம் எப்போது அவர்கள் கேட்கும் பணத்தை தர மறுக்கிறோமோ அப்போதுதான் அவர்களும் திருந்துவார்கள்.//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்...

Cable சங்கர் said...

//ஒரு நாளில் மிக குறைவான நேரம் வேலை செய்து மிக அதிகமாக சம்பாரிப்பவர்கள் அவர்களாகத்தான் இருக்க முடியும்//

எனக்கு தெரிந்து ஓரு நாள் ஆட்டோ வாடகை..150 ரூபாய்.. பெட்ரோல் ஓரு நூறு ரூபாய்..மொத்த செலவு..250 ருபாய்.. அதை ஓரே டிரிப்பில் சம்பாதிக்க மினிமம் 25 திலிருந்து 50க்கு ரெண்டு லோக்கல் ச்வாரி.. ஓரு லாங் சவாரி 100 ரூபாய்க்கு.. வீட்டிக்கு 50 ருபாய் கொடுத்தது போக.. மிச்சம்.. சாயங்காலம்..குவாட்டருக்கும், பிரியாணிக்கும் போக.. அவர்கள் அதற்கு மேல் வேலை செய்வதாய் தெரியவில்லை..

Cable சங்கர் said...

//இப்ப பகலில் கூட மீட்டர் போட யோசனை பண்றாங்க. டிராபிக் அதிகமா இருக்கற இடங்களுக்கு வர மாட்டங்க.//

அப்படியா.. ஓத்துக்காதீங்க...
//பைரேட்ஸ் என்றால் கடற்கொள்ளையர்கள் என பொருள்படும்.
(Someone who robs at sea or plunders the land from the sea without having a commission from any sovereign nation)//

என்ன இவங்க..கடல்ல கொள்ளையடிக்கல..தலைப்பு வித்யாசமாய் இருக்கடுமே என்று வைத்துவிட்டேன்.. நன்றி அம்பி.. உங்கள் விளக்கத்துக்கு.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்தான் அம்பி சார்.

Cable சங்கர் said...

//திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.. //

அதில்லை தலைவா.. திருடனை நாம் தான் வளர்க்கிறோம்.. நாம் எதிர்த்தால் கண்டிப்பாய் ஓரு மாற்றம் வரும்.. நாம் ஓருத்தனால என்ன நடந்திரும்னு நினக்க்கதீங்க.. எனக்கு நான் எதிர்கிறதுனால நடக்குது.. அது போல உங்களுக்கு,, உங்கள பாத்து மத்தவங்களும்.. ஆல் த பெஸ்ட்

Cable சங்கர் said...

//வாங்க நாம ஒரு சங்கம்
ஆரம்பிச்சு இதையெல்லாம்
தட்டிகேப்போம்!//

அப்பாடா.. எனக்கு துணை கிடைச்சிருச்சு.. வாங்க கிளம்பலாம்.. முடிஞ்சா லக்கி, அதிஷா போன்றவர்கள் சேர்ந்தால் இன்னும் ரொம்ப நல்லாயிருக்கும்..

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

ஆட்டோ காரர்கள் இவ்வாறு மாறியதற்கான மூல காரணங்களில் முக்கியமானது , IT துறையினர் எவ்வளவு கேட்டாலும் மறு பேச்சு கேட்காமல் கொடுப்பது .
சீட்டை துடைக்க கூட மாட்டார்கள் . நம்மில் எத்தனை பேர் சீட்டை தொடைக்க சொல்லி அதன் பின் ஆட்டோவில் ஏறுகிறோம் ?

Cable சங்கர் said...

//, IT துறையினர் எவ்வளவு கேட்டாலும் மறு பேச்சு கேட்காமல் கொடுப்பது .//

எனக்கு தெரிந்து இதுவரை எந்த ஆட்டோகாரரும் மீட்டர் போட்டதாய் சரித்தரமில்லை. ஐ.டி காரர்கள் எல்லாம் இப்போது தானே.. அவர்களுக்கும் ஆல்ரெடி பைனான்ஸியல் க்ரைசிஸ் வர ஆரம்பித்துவிட்டது நண்பரே..

விஜய்கோபால்சாமி said...
This comment has been removed by the author.
விஜய்கோபால்சாமி said...

இங்கே ஒரு ஆட்டோ காரரிடம் கேட்டேன், ”சென்னைல ஆட்டோ சார்ஜ் ரொம்ப அதிகமாச்சே, நீங்க எப்படி இவ்வளவு கம்மி சார்ஜ்ல ஓட்றீங்க என்றேன்?” “சார், எல்.பி.ஜி. வெலைக்குத் தக்கபடி தான் ஓட்டுறோம். நீங்க சொல்ற மாதிரி அங்க அதிகம் வாங்குறாங்கன்னா அது அவுங்க இஷ்டம். எங்களால அன்னன்னிக்கி சாப்பாட்டத் தான் சாப்பிட முடியும். பத்து நாளைக்கி சேத்து வச்சு ஒரே நாள்ள சாப்பிட முடியாது சார்” என்று சொன்னார்.

இவர்கள் யோசிப்பது இப்படி இருக்கிறது. சென்னை ஆட்டொ டிரைவர்களுக்கோ வேறு யோசனை. நியாயமாக பத்து சவாரி ஓட்டி சம்பாதிப்பதை, நாலே சவாரியில் எப்படி தேத்துவது என்பது அவர்களின் கவலை. இங்கே ஒரு ஆட்டோ டிரைவர் அதிக கட்டணம் கேட்டால் அதே ஆட்டோவில் உட்கார்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று புகார் தரலாம். நம்ம ஆளுங்க, நீ என்ன கிழிப்பியோ கிழி, நாளைக்கு இதே நேரம் நான் இங்க இருப்பேன் பாக்குறீயா என்று சவால் தான் விடுவார்கள்.

சென்னையில் ஓடும் பெரும்பாலான ஆட்டோக்கள் மார்வாடிகளுக்கும், போலீசுக்கும் சொந்தமானவை. எனக்கு என்ன ஆனாலும் சேட்டு பாத்துக்குவாரு என்கிற தைரியம் தான் நம்ம சென்னை ஆட்டோகாரர்களை எதையும் செய்ய வைக்கிறது. இவர்களை போலீசில் ஒப்படைக்கலாம் என்றால் “ஒரு திருடனை இன்னோரு திருடனிடம் எப்படி ஒப்படைப்பது” என்கிற சிந்தனை வருகிறது.

எனது சொ(நொ)ந்த அனுபவத்தில் ஒரு ஆட்டோகாரரால் கொலை முயற்சிக்கு ஆளான கதையும் உண்டு. மேற்கு வங்கத்தைச் சொந்த ஊராகக் கொண்ட என் மேலதிகாரி ஒருவருக்கும் அதே மாதிரியான அனுபவம் (சென்னையில்) உண்டு. சொன்னால் பின்னூட்டம் ரொம்ப நீண்டு விடும், பட்டுப்புடவையில் கோமணம் கட்டிய மாதிரி :)

வருகிறேன்....

Cable சங்கர் said...

//”சென்னைல ஆட்டோ சார்ஜ் ரொம்ப அதிகமாச்சே, நீங்க எப்படி இவ்வளவு கம்மி சார்ஜ்ல ஓட்றீங்க என்றேன்?” “சார், எல்.பி.ஜி. வெலைக்குத் தக்கபடி தான் ஓட்டுறோம். நீங்க சொல்ற மாதிரி அங்க அதிகம் வாங்குறாங்கன்னா அது அவுங்க இஷ்டம். எங்களால அன்னன்னிக்கி சாப்பாட்டத் தான் சாப்பிட முடியும். பத்து நாளைக்கி சேத்து வச்சு ஒரே நாள்ள சாப்பிட முடியாது சார்” என்று சொன்னார்.//

இங்கேயும் எல்லா ஆட்டோக்களையும் எல்.பி.ஜிக்கு மாறியாகிவிட்டது.. ஆனாலும் அவர்களின் கொள்ளை குறையவில்லை.