Thottal Thodarum

Jan 20, 2009

பட வரிசை “பத்து”

10 திருவண்ணாமலை


சாமி கண்ணை குத்திருச்சுன்னு சொல்றாங்க..

9 பஞ்சாமிர்தம்


குழந்தைகள் படம்னு சொன்னாலும் தியேட்டர் பக்கம் குழந்தைங்க யாரையும் காணோம். வசூலும் ஒண்ணுமில்லைன்னு சொல்றாங்க..

8.பொம்மலாட்டம்மல்டி ப்ளக்ஸுகல் மட்டும் சொல்லிக்கிற மாதிரி வசூல்.7 திண்டுக்கல் சாரதி


பி அண்ட் சி செண்டர்களில் மட்டும் சொல்லிக் கொள்ளும்படியான வசூல். சன் டிவியில் மட்டுமே நெ.1ல் வரும் படம்.

6 சிலம்பாட்டம்


லிஸ்டுல இருக்கிறதுக்கு ஒரே காரணம் யுவன் சங்கர் ராஜா.

5.அ.ஆ..இ...ஈ..


அ.ஆ..இ...ஈ.. எலிமெண்டரி.. ஒண்ணும் சொல்லிக்கிறபடியா இல்ல..

4அபியும் நானும்

மல்டிப்ளக்ஸில் கூட ஒண்ணும் முடியலையாம்.3.காதல்னா சும்மா இல்ல..படமெடுக்கிறதுன்னா சும்மா இல்லைன்னு ராஜ் டிவிக்கு தெரியபடுத்தியிருக்கும் படம்.. என்ன தான் படம் சுமாரா இருந்தாலும்.. வசூல் ரொம்பவே மோசம்.. பொறுத்திருந்து பார்ப்போம்.

2.படிக்காதவன்

மற்றுமொரு சன் டிவி படம். போட்டியில்லாததால் சரியான ஓப்பனிங்.. இருக்கவே இருக்கு சன் டிவி.. ஆனால் ரொம்ப நாள் தாங்காது.

1.வில்லுபொங்கலுக்கு ரெண்டு நாள் முன்னமே வந்து வசூலை அள்ளிட்டாங்க.. பொங்கலுக்கு அப்புறம் படங்கள் வந்தும் ஒன்ணும் சொல்றதுகில்ல.. வில்லு.. டார்கெட் இல்லாதது.Blogger Tips - மஸ்கா தெலுங்கு திரைவிமர்சனத்தை படிக்க இங்கெ அழுத்தவும்உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

11 comments:

நையாண்டி நைனா said...

/*சாமி கண்ணை குத்திருச்சுன்னு சொல்றாங்க..*/

பார்த்தவங்க கண்ணை குத்தின மாதிரி, கொஞ்சம் படம் எடுத்தவங்க கண்ணையும் குத்தினா.. இனி வரப்போற ரசிக கண்மணீங்க கண்ணாவது தப்பிக்கும்

/*குழந்தைகள் படம்னு சொன்னாலும் தியேட்டர் பக்கம் குழந்தைங்க யாரையும் காணோம். வசூலும் ஒண்ணுமில்லைன்னு சொல்றாங்க..*/

அதுக்காக குழந்தைத் தனமா எடுத்தா எவன் உக்காந்து பார்ப்பான்.

/*லிஸ்டுல இருக்கிறதுக்கு ஒரே காரணம் யுவன் சங்கர் ராஜா.*/

என்னோட லிஸ்ட்ல இருக்கிறததுக்கு ஒரே காரணம் சிம்பு.... அதாங்க எவன் படம்லாம் பார்க்க கூடாதுன்னு நெனச்சிருக்கனோ அந்த லிஸ்ட்ல.

/*அ.ஆ..இ...ஈ.. எலிமெண்டரி.. ஒண்ணும் சொல்லிக்கிறபடியா இல்ல..*/

நையாண்டி நைனா பதிவு மாதிரி தலைப்பிலேயே மொக்கைய வச்சா எவன் வருவான்?

/*படமெடுக்கிறதுன்னா சும்மா இல்லைன்னு ராஜ் டிவிக்கு தெரியபடுத்தியிருக்கும் படம்.. என்ன தான் படம் சுமாரா இருந்தாலும்.. வசூல் ரொம்பவே மோசம்.. பொறுத்திருந்து பார்ப்போம்.*/

ஒரு வேளை, ராஜ் டீவி படமா....! என்று. விளம்பரங்களுக்கு பயந்து போகலியோ என்னமோ?

படத்தின் நடுவே விளம்பரமே வராது என்று விளம்பரப்படுத்த சொல்லுங்கள்

/*பொங்கலுக்கு ரெண்டு நாள் முன்னமே வந்து வசூலை அள்ளிட்டாங்க.. பொங்கலுக்கு அப்புறம் படங்கள் வந்தும் ஒன்ணும் சொல்றதுகில்ல.. வில்லு.. டார்கெட் இல்லாதது.*/

ஏற்கனவே ரொம்ப கும்மீயாச்சு...


ஒரு சின்ன ஐடியா.
இந்த "பட வரிசை பத்தை". வெள்ளி கிழமை போடுங்கள். அதனை பார்த்து சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் படத்திற்கு செல்ல வசதியாக இருக்கும்.

அத்திரி said...

சன் பிக்சர்ஸின் படிக்காதவனுக்கு இரண்டாம் இடம் கொடுக்கும் உங்களின் நுண்ணரசியலை கண்டிக்கிறேன்.

வில்லு முதல் இடமா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

கார்க்கி கேபிள் சாரை நல்லா கவனி

Cable சங்கர் said...

நையாண்டி நைனா.. என்னுடய் கமெண்டைவிட உங்களுடயது சூப்பர். நீங்களே கமெண்ட் எழுதலாம் போலருக்கே..

Cable சங்கர் said...

//சன் பிக்சர்ஸின் படிக்காதவனுக்கு இரண்டாம் இடம் கொடுக்கும் உங்களின் நுண்ணரசியலை கண்டிக்கிறேன்.
//

அதெல்லாம் சரி.. நுண்ணரசியல்னா என்ன..?

M.Rishan Shareef said...

'வில்லு' முதலிடமா ?

சங்கர், விஜய்யை வச்சுக் காமெடி,கீமெடி பண்ணலியே ? :)

bullet said...
This comment has been removed by the author.
Cable சங்கர் said...

//'வில்லு' முதலிடமா ?

சங்கர், விஜய்யை வச்சுக் காமெடி,கீமெடி பண்ணலியே ? :)//

இது இந்த வார நிலைமை..ரிஷான்.. வெயிட் அண்டு சீ..

Raj said...

பத்துல ஒன்னு கூட தேறலியே

Cable சங்கர் said...

ஆமாம்.. ராஜ்..

நையாண்டி நைனா said...

/*ஒரு சின்ன ஐடியா.
இந்த "பட வரிசை பத்தை". வெள்ளி கிழமை போடுங்கள். அதனை பார்த்து சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் படத்திற்கு செல்ல வசதியாக இருக்கும்.*/

அண்ணே... அந்த ஐடியா பத்தி ஒண்ணும் சொல்லவே இல்லையே....

Rafiq Raja said...

பட வரிசை 10 ன்னு சொல்றதுக்கு பதிலா சொத்தை 10 ன்னு தலைப்பு வச்சு இருக்கலாம்..... அந்த விதத்தில் வில்லு 1 ம் நம்பர் பிடிச்சதும், படிக்காதவன் 2 ம் இடம் பிடிச்சதும் மிக சரி... என்ன அவை இடம் மாறி இருக்கலாம்.

இந்த படங்களை வரிசை படிதியதற்கு பதிலாக 2008 ன் நல்ல 5 படங்களை நீங்கள் வரிசைப்படுத்தி இருக்கலாமே ?

ரஃபிக் ராஜா
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்