Thottal Thodarum

Aug 5, 2009

தமிழ்சினிமாவின் 30 நாட்கள்- ஜூலை09

கடந்த மாதம் தமிழ் சினிமாவின் முக்கியமான மாதமும், மோசமான மாதமும் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால் அதிகபட்சமான நேரடி தமிழ் திரைப்படங்கள் வெளியான மாதம் என்றால் அது சென்ற ஜூலை மாதம் தான்.

இருபத்தியோரு தமிழ் படங்கள் வெளியாகியிருக்கிறது.  பெரிய பட்ஜெட், பிரபல நடிகர்கள் நடித்த படங்களைவிட சின்ன பட்ஜெட், புதுமுகங்கள் நடித்த படங்கள் வெளிவந்ததுதான் அதிகம்.

சிரித்தால் ரசிப்பேன்
இந்த படம் மிக குறைந்த பட்ஜெட்டில் வெளியான ஒரு முழு நீள நகைச்சுவை படம்.  குறைந்த அளவு பிரிண்டுகளே போடப்பட்டு, விளம்பரமும் இல்லாததால் ஒரு வாரத்தில் சுருண்டது. நல்ல காமெடி இருந்தது என்று பார்த்த நண்பர்கள் சொன்னார்கள்.

2 ஞாபகங்கள்
பாடலாசிரியர் பா.விஜய் எழுதி நடித்த திரைப்படம்,  ஹிந்தி ரெயின் கோட்டை திரும்ப தமிழில் தன் நண்பரின் கதை என்று உட்டாலக்கடி விட்டாலும், செல்ப் எடுக்காத படம். பாவம் பல படஙக்ளில் பாட்டெழுதி சம்பாதிச்ச காசு.. :(

3 உன்னை கண் தேடுதே
.ஏ.எல். அழகப்பனின் மகன் உதயாவின் மறு அவதார முயற்சி..  ஒரு வாரம் கூட ஓடியதாய் தெரியவில்லை.

4 இந்திரவிழா
நமிதாவை பெரிதாய் நம்பி எடுத்த படம். படம் ஓடிய சில நாட்களூக்கான காரணமே நமிதாதான் என்பதை விநியோகஸ்தர்கள் எல்லோரும் ஒத்து கொள்கிறார்கள்.

5 வாமனன்
தான் நடிக்கும் படங்களில் இது ஒன்று தான் உருப்படி என்று சொன்னதால் பிரச்சனையில் மாட்டிக் கொண்டார் ஜெய். அவர் நினத்தபடி வந்திருக்க வேண்டிய படம்தான். செகண்ட் ஆப்பில் சொதப்பி விட்டார்கள்.

6 வைகை
புதுமுக நாயக நாயகியர் நடித்து, வெளிவந்த அபவ் ஆவரேஜ் சின்ன பட்ஜெட் படம்.  பெரிதாய் வசூல் இல்லாவிட்டாலும், இரண்டு வாரம் தாண்டியதே பெரிய விஷயம்

7 நீ உன்னை அறிந்தால்
மீண்டும் நம் காலேஜ் நாயகன் முரளியுடன் புதுமுகங்கள் நடித்த படம்,. நான் பார்கக்வில்லை.. அதனால் பெரிதாய் கருத்து எதுவுமில்லை. இதுவும் ஒரு வாரபடம் தான்

தலையெழுத்து
புதுமுக வெளிநாட்டு வாழ் இந்தியர் ரிச்சர்ட் ராஜ் நடித்து தயாரித்து வந்த படம். படத்தின் ஒரு சில விஷயஙக்ள் நன்றாக இருந்ததாய் கேள்வி..  ஒரு வாரம்

9 புதிய பயணம்
இந்த படம் வந்திச்சா? இல்லையான்னு ஒரே குழப்பமா இருக்கு.

10 வெடிகுண்டு முருகேசன்
குண்டு ஏதும் பெரிசா வெடிக்கல.. புஸ்ஸு, வடிவேலு இருந்தும்

11 காதல் கதை
பிட்டு ப்டத்துக்கு என்ன கூட்டம் வருமோ அது வந்திச்சி..

12 அச்சமுண்டு அச்சமுண்டு
படம் நலல் குவாலிட்டியான படமாயிருந்தாலும் ரொம்ப ஸ்லோவான திரைக்கதை பல பேரை படுத்தியெடுத்திருச்சு. அதனால படமும் படுத்திருச்சு

13 எங்கள் ஆசான்
இந்த படம் இந்த மட்டும் இதுவரை சென்னையில் ரிலீஸ் ஆகவேயில்லை. சென்னையை தவிர மற்ற ஏரியாக்களில் ரிலீஸ் ஆகி போய்விட்டது.

14 புதிய பார்வை
இதை பத்தியும் எந்த தகவலும் இல்லை

15 மலையன்
பர்ஸ்ட் ஆப் பரவாயில்லை. அரத பழசு கதை., திரைக்கதை,

16 ஐந்தாம் படை
கொஞ்சம் பெரிய பட்ஜெட் டிவி சிரியல் போல இருக்குன்றாஙக.. விவேக் இல்லாட்டி படம் உட்கார முடியாதுன்னு சொல்றாங்க நான் இன்னும் பாக்கல

17 மோதி விளையாடு
மோதி விளையாட வேண்டிய ஸ்கிரிப்ட், சும்மா பாத்துக்க கூட இல்ல. சரணின் மறு பிரவேசம் பெரிய லெட் டவுன் என்றுதான் சொல்ல வேண்டும்.

18 ஆறுமனமே
பெரிசா சொல்றாப்புல எதுவுமில்லன்னு சொல்றாங்க..

19 சிந்தனை செய்
சென்னையில் மட்டும் ரொம்ப சுமாரான ஓப்பனிங் இருந்த படம். அதுகூட இவர்களின் விளம்பர டிசைன்களால் வந்தது என்றால் நம்ப மாட்டீர்கள்.வந்த படங்களில் கொஞ்சம் ஸ்டப் உள்ள படம். ஒழுங்கான விளம்பரம், இருந்தால் நிச்சயமாய் நிற்கும்.

20 மலை மலை
பாவம் அருண் விஜய் இவரும் என்னனவோ செஞ்சு பாக்குறாரூ எதுவும் ஒர்க் அவுட் ஆக மாட்டேங்குது.  அவருடய மாமனார் மாப்பிள்ளைக்காக எடுத்திருக்கும் படம் கடைசியா ரிலீஸ் ஆயிருக்கு. பார்ப்போம்

21 அந்தோணி – யார்?
யார்..?/

ரிலீஸான 21 படங்களில் ஒரு படம் கூட ஹிட் ஆவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. சுமார் 6 படங்களுக்கு மேல் ஒரு வாரம் கூட ஓடவில்லை. ஒரு சிலது ஒரு வார படங்கள். இந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழ் சினிமாவின் இழப்பு மட்டும் சுமார் 60 கோடி இருக்கும். இந்த 60 கோடி தயாரிப்பு செலவு மட்டுமே. இதற்கு பிறகு உள்ள, தியேட்டர் வாடகை, டிஸ்டிரிபூஷன், விளம்பரம், என்று இன்னும் எத்தனையோ இருக்கிறது. இப்படியே போனால் நிலமை என்னவாகும்? சென்ற மாதம் வெளியான நாடோடிகள் படம் மட்டுமே ஹிட் ஆகி இந்த மாதமும் தொடர்கிறது. எங்கே தவறு செய்கிறார்கள்?  விரைவில்….



போஸ்டர் சிறுகதையை படிக்க.. இங்கே அழுத்தவும்.

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

59 comments:

பரிசல்காரன் said...

மீ த ஃபர்ஸ்டூ....

Sukumar said...

// ஒரு படம் கூட ஹிட் ஆவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை //

தினமும் திரை விமர்சனம் எழுதி நாலு நாள் ஓடுற படத்தை கூட நாலாவது ஷோவிலேயே தூக்க வச்சிட்டு..... அது எப்படிண்ணே ஒண்ணுமே தெரியாத மாதிரி இந்த கேள்விய கேக்கறீங்க.....

பரிசல்காரன் said...

21ம் புஸ்ஸாஆஆஆ?

அவ்வ்வ்வ்வ்வ்...

//செகண்ட் ஆப்பில் சொதப்பி விட்டார்கள்.//

அது ஆப்பா? ஆஃபா?

தயாரிப்பாளருக்கு ஆப்புதான் இல்ல?

பரிசல்காரன் said...

சுகுமார் ஸ்வாமிநாதனின் கேள்விக்கு பதில் சொல்ல பிரபல விமர்சகர் கேபிள் சங்கரை எங்கிருந்தாலும் மேடைக்கு அழைக்கிறேன்....

வந்தியத்தேவன் said...

இன்றைய பத்திரிகை ஒன்றிலும் இந்த மாதம் 21 படங்கள் வெளியிட்டு சாதனை என செய்தி வந்திருக்கு, ஆனால் அதில் 5 ற்க்கு மேற்பட்டவை ஒரு வாரம் கூடத் தாக்குப்பிடிக்கவில்லையாம்.

நையாண்டி நைனா said...

mee sixth.

நையாண்டி நைனா said...

appaalikkaa vaaren. vanthu vilaavaariyaa solren.

Arun Kumar said...

விரிவான தகவலுக்கு நன்றி சார்

//இப்படியே போனால் நிலமை என்னவாகும்? சென்ற மாதம் வெளியான நாடோடிகள் படம் மட்டுமே ஹிட் ஆகி இந்த மாதமும் தொடர்கிறது. எங்கே தவறு செய்கிறார்கள்? விரைவில்….//

சீக்கிரமே எழுதுங்க காத்து இருக்கிறோம்

butterfly Surya said...

சுகுமார்.

ஏதாவது நன்றாக சொல்லியிருந்தால் அதை விமர்சனத்தில் சொல்லி படம் ஒடுவதற்காக சென்று பார்க்கும் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல” என் தலைவன் படையெடுப்பதை நீ இப்படி சொல்ல கூடாது...

Cable சங்கர் said...

/தினமும் திரை விமர்சனம் எழுதி நாலு நாள் ஓடுற படத்தை கூட நாலாவது ஷோவிலேயே தூக்க வச்சிட்டு..... அது எப்படிண்ணே ஒண்ணுமே தெரியாத மாதிரி இந்த கேள்விய கேக்கறீங்க.....
//

யோவ்.. நான் நல்லாருக்குனு சொல்ற படத்த எல்லோரும் உடனே போய் பாத்துடறாமாதிரித்தான்...

Cable சங்கர் said...

/21ம் புஸ்ஸாஆஆஆ?

அவ்வ்வ்வ்வ்வ்...

//செகண்ட் ஆப்பில் சொதப்பி விட்டார்கள்.//

அது ஆப்பா? ஆஃபா?

தயாரிப்பாளருக்கு ஆப்புதான் இல்ல?
//

ஆமாம் பரிசல்.. இதற்கு ஒரு வகையில் காரணம் தயாரிப்பாளரும் கூட என்றே சொல்ல வேண்டும்.

Cable சங்கர் said...

/சுகுமார் ஸ்வாமிநாதனின் கேள்விக்கு பதில் சொல்ல பிரபல விமர்சகர் கேபிள் சங்கரை எங்கிருந்தாலும் மேடைக்கு அழைக்கிறேன்....//

நான் பிரபல விமர்சகர் இல்லீங்கோ.. இல்லீங்கோ.. இல்லீங்கோ..

Cable சங்கர் said...

/இன்றைய பத்திரிகை ஒன்றிலும் இந்த மாதம் 21 படங்கள் வெளியிட்டு சாதனை என செய்தி வந்திருக்கு, ஆனால் அதில் 5 ற்க்கு மேற்பட்டவை ஒரு வாரம் கூடத் தாக்குப்பிடிக்கவில்லையாம்.
//

ஆமாம் வந்தியத்தேவன்.

Cable சங்கர் said...

/appaalikkaa vaaren. vanthu vilaavaariyaa solren.//

வாங்க நைனா.. உங்களுக்காக காத்திருக்கிறேன்.

Sukumar said...

வண்ணத்துபூச்சியார்...

அண்ணே.. நீங்க சொல்வது சரிதான்... ஆனாலும் ஒரு நல்ல படத்தை அவர் விட்டுவிட்டார்....
எங்கள் அண்ணா கேப்டனின் "'மரியாதை" படத்திற்கு இதுவரை கேபிள் சார் விமர்சனம் எழுதவில்லை....
ஏற்கனவே இருட்டடித்து போய் இருக்கும் அவரை மேலும் இருட்டடிப்பு செய்திருக்கிறார்....இதற்கு கேபிள் சார் என்ன பதில் தருகிறார் கேட்டு சொல்லுங்கள்....

Cable சங்கர் said...

/விரிவான தகவலுக்கு நன்றி சார்

//இப்படியே போனால் நிலமை என்னவாகும்? சென்ற மாதம் வெளியான நாடோடிகள் படம் மட்டுமே ஹிட் ஆகி இந்த மாதமும் தொடர்கிறது. எங்கே தவறு செய்கிறார்கள்? விரைவில்….//

சீக்கிரமே எழுதுங்க காத்து இருக்கிறோம்
//


எழுதுகிறேன் அருண். உங்க ஆதரவுக்கு மிக்க் நன்றி

Cable சங்கர் said...

/சுகுமார்.

ஏதாவது நன்றாக சொல்லியிருந்தால் அதை விமர்சனத்தில் சொல்லி படம் ஒடுவதற்காக சென்று பார்க்கும் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல” என் தலைவன் படையெடுப்பதை நீ இப்படி சொல்ல கூடாது...
//

ம்..அப்படி சொல்லுங்க வண்ணத்துபூச்சியாரே..

Cable சங்கர் said...

/வண்ணத்துபூச்சியார்...

அண்ணே.. நீங்க சொல்வது சரிதான்... ஆனாலும் ஒரு நல்ல படத்தை அவர் விட்டுவிட்டார்....
எங்கள் அண்ணா கேப்டனின் "'மரியாதை" படத்திற்கு இதுவரை கேபிள் சார் விமர்சனம் எழுதவில்லை....
ஏற்கனவே இருட்டடித்து போய் இருக்கும் அவரை மேலும் இருட்டடிப்பு செய்திருக்கிறார்....இதற்கு கேபிள் சார் என்ன பதில் தருகிறார் கேட்டு சொல்லுங்கள்....
//

யாராவது சொந்த செலவில ஆப்புன்னு தெரிஞ்சே வச்சிப்பாங்களா சுகுமார்.

VISA said...

//ங்கே தவறு செய்கிறார்கள்? விரைவில்….//

VISA said...

காத்திருக்கிறோம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மலை மலை ஹிட்டாமே அப்படியா?

பிரபாகர் said...

சங்கர் அண்ணா,

சரியாக எழுதியிருக்கிறீர்கள்...

இருபத்தொரு படங்கள் ரிலீஸ் ஆகியும் ஒன்றும் தேறாதது கண்டிப்பாய் ரசிகர்களால் அல்ல. இன்டர்நெட் டி.வி என இப்போதிருக்கும் சூழலில் கவர்ந்திழுக்க ஒன்றல்ல, நிறைய விஷயங்கள் இருந்தால் தான் திரையரங்கிற்கு சென்று பார்க்கிறார்கள். உணர்ந்து தெளிவாக செய்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

பிரபாகர்.

தராசு said...

மீ த 21ஸ்டு

Muthu said...

Ungalidam irunthavathu oru nalla padthai ehirparkirom sankar...

Cable சங்கர் said...

/காத்திருக்கிறோம்//

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி விசா..

Cable சங்கர் said...

/மலை மலை ஹிட்டாமே அப்படியா?//]


அப்படின்னு யார் சொன்னது ரமேஷ்..?

Cable சங்கர் said...

/சங்கர் அண்ணா,

சரியாக எழுதியிருக்கிறீர்கள்...

இருபத்தொரு படங்கள் ரிலீஸ் ஆகியும் ஒன்றும் தேறாதது கண்டிப்பாய் ரசிகர்களால் அல்ல. இன்டர்நெட் டி.வி என இப்போதிருக்கும் சூழலில் கவர்ந்திழுக்க ஒன்றல்ல, நிறைய விஷயங்கள் இருந்தால் தான் திரையரங்கிற்கு சென்று பார்க்கிறார்கள். உணர்ந்து தெளிவாக செய்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.
//

அதை பற்றி தெளீவாய் எழுதலாம் என்று இருக்கிறேன் பிரபாகர்.

Cable சங்கர் said...

/மீ த 21ஸ்டு/

வேற ஏதும் சொல்றதுக்கில்லையா அண்ணே..

Cable சங்கர் said...

/Ungalidam irunthavathu oru nalla padthai ehirparkirom sankar...//

முயற்சி செய்கிறேன். முத்து..

Beski said...

நீங்க சொல்லித்தான் நெறைய படம் வந்திருக்குறதே தெரியுது.

இல்லன்னா, உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாகன்னு வரும்போதுத்தான் அந்தப் பேரே தெரியும்.

---

என்னது குத்தாலம் போயும் பார்டர் கடைக்குப் போகலையா? நீங்களே இப்படி பண்ணலாமா? அங்க மெயினே அருவியும், ‘தண்ணியும்’, பார்டர் கடையும்தானே!

பார்டர் கடையைப் பத்தி இதுக்கு முன்னாடி ஏதும் எழுதிருக்கீங்களா?

கலையரசன் said...

ஏண்ணே.. நீ மேலே லிஸ்ட்டு குடுத்தது எல்லாம் படமா?
நான் நான் நாடகமுன்னுல்ல நினைசேன்...
அதுல பாதி படம் அப்படிதான் இருந்துச்சு!

Eswari said...

இந்த படம் பேரு எல்லாம் எப்படி கலெக்ட் பண்ணுனீங்க?

Truth said...

Cable Sankar said...
//யோவ்.. நான் நல்லாருக்குனு சொல்ற படத்த எல்லோரும் உடனே போய் பாத்துடறாமாதிரித்தான்...

அண்ணாத்தே, உங்களுக்கு ஈக்வலா இல்லேன்னாலும், ஓரளவுக்கு நானும் எல்லா திரைப்படங்களும் பாத்துடுவோம் :-)
taking of pelham 123யோட திரை விமர்சனம் எதிர்பாத்துக்கிட்டு இருக்கேன். போன வாரம் தான் நான் பாத்தேன். சீக்கிறம் எழுதுங்க.

Prabhu said...

எனக்கென்னவோ ஸ்கிரிப்ட்லதான் பிரச்சனை இருக்கிறதா படுது. நம்ம ஊருல எல்லாத்தயும் இயக்குனரே செய்யனும் நினைக்கிறது பெரிய தப்பா படுது. நம்ம ஊரப் பொறுத்த வரைக்கும் கதை எழுதுறது டைரக்டரோட வேலைன்னு நினைக்கிறாங்க! சமீபத்துல சர்வம் அதுக்கு ஒரு எடுத்துக்காட்டுன்னு என் பிரண்டு சொன்னான, டைரக்ஷன் ஓ.கே. பட் ஸ்கிரிப்ட் சரியில்லன்னு, வாமனன், முத்திரைனு ஒரு பெரிய லிஸ்டே அவுட் ஆகிருக்கு. அய்யோ ஒரு பதிவுக்கான மேட்டர வேஸ்ட் பண்ணிட்டேனே! :)

Ashok D said...

6o கோடி... இப்படி வேஸ்ட் பண்ணறத விட்டு... ஒரு 6 கோடி நம்மகிட்ட கொடுத்தாங்கன்னா எப்படி ஜாலியா இருக்கும்? ;)

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

இவ்வளவு படம் பாக்க எப்படி நேரம்
கிடைக்கிறது...!வீட்ல திட்ட மாட்டாங்
களா..?

நாஞ்சில் நாதம் said...

//// இவ்வளவு படம் பாக்க எப்படி நேரம் கிடைக்கிறது...!வீட்ல திட்ட மாட்டாங்களா..? \\\

ஹா ஹா ஹா அவரு யூத்தும்மா.

Cable சங்கர் said...

/என்னது குத்தாலம் போயும் பார்டர் கடைக்குப் போகலையா? நீங்களே இப்படி பண்ணலாமா? அங்க மெயினே அருவியும், ‘தண்ணியும்’, பார்டர் கடையும்தானே!

பார்டர் கடையைப் பத்தி இதுக்கு முன்னாடி ஏதும் எழுதிருக்கீங்களா?
//

போனதேயில்ல அப்புறம் எப்படி எழுதறதாம்..?
எவனோ ஒருவன்.

Cable சங்கர் said...

/ஏண்ணே.. நீ மேலே லிஸ்ட்டு குடுத்தது எல்லாம் படமா?
நான் நான் நாடகமுன்னுல்ல நினைசேன்...
அதுல பாதி படம் அப்படிதான் இருந்துச்சு!
//

பாதி படத்தை பாத்திருக்கீங்களா..? கலையரசன்.

Cable சங்கர் said...

/இந்த படம் பேரு எல்லாம் எப்படி கலெக்ட் பண்ணுனீங்க?
//

லிஸ்டு கலெக்ட் பண்றது எல்லாம் ஒரு பெரிய விஷயமா.. இதில சில படஙக்ளை நான் தியேட்டர்ல பார்த்திருக்கேன்.

Cable சங்கர் said...

/எனக்கென்னவோ ஸ்கிரிப்ட்லதான் பிரச்சனை இருக்கிறதா படுது. நம்ம ஊருல எல்லாத்தயும் இயக்குனரே செய்யனும் நினைக்கிறது பெரிய தப்பா படுது. நம்ம ஊரப் பொறுத்த வரைக்கும் கதை எழுதுறது டைரக்டரோட வேலைன்னு நினைக்கிறாங்க! சமீபத்துல சர்வம் அதுக்கு ஒரு எடுத்துக்காட்டுன்னு என் பிரண்டு சொன்னான, டைரக்ஷன் ஓ.கே. பட் ஸ்கிரிப்ட் சரியில்லன்னு, வாமனன், முத்திரைனு ஒரு பெரிய லிஸ்டே அவுட் ஆகிருக்கு. அய்யோ ஒரு பதிவுக்கான மேட்டர வேஸ்ட் பண்ணிட்டேனே! :)
//

இதை தவிர இன்னும் நிறைய விஷயம் இருக்கு பப்பு..

Cable சங்கர் said...

/அண்ணாத்தே, உங்களுக்கு ஈக்வலா இல்லேன்னாலும், ஓரளவுக்கு நானும் எல்லா திரைப்படங்களும் பாத்துடுவோம் :-)
taking of pelham 123யோட திரை விமர்சனம் எதிர்பாத்துக்கிட்டு இருக்கேன். போன வாரம் தான் நான் பாத்தேன். சீக்கிறம் எழுதுங்க.
/

இன்னும் பாக்கல ட்ரூத் பாத்துட்டு சொல்றேன்.

Cable சங்கர் said...

/6o கோடி... இப்படி வேஸ்ட் பண்ணறத விட்டு... ஒரு 6 கோடி நம்மகிட்ட கொடுத்தாங்கன்னா எப்படி ஜாலியா இருக்கும்? ;)
//

என்கிட்ட கொடுத்தா அழகா ரெண்டு படம் எடுப்பேன்..:)

Cable சங்கர் said...

/இவ்வளவு படம் பாக்க எப்படி நேரம்
கிடைக்கிறது...!வீட்ல திட்ட மாட்டாங்
களா..?
//
இது நம்ம தொழில்ணே..

Cable சங்கர் said...

/ஹா ஹா ஹா அவரு யூத்தும்மா//


அவரு வீட்டுலன்னு சொன்னது அம்மாவை.. அது சரி இது கூட கரெக்ட்தான் நன்றி நாஞ்சில்நாதம்.

அத்திரி said...

அட போங்கண்ணே

T.V.ராதாகிருஷ்ணன் said...

உங்களின் பொறுமைக்கும்,ஈடுபாட்டிற்கும் பாராட்டுகள்

அப்துல்மாலிக் said...

அண்ணாத்தே இதுமாதிரி படங்களெல்லாம் வந்ததா?

இப்போதான் படத்தின் பெயரையே பாக்குறேன்.. அப்போ எங்கே ஓடப்போகுது

Cable சங்கர் said...

.அட போங்கண்ணே,,

எங்க போக அத்திரி..?

Cable சங்கர் said...

/உங்களின் பொறுமைக்கும்,ஈடுபாட்டிற்கும் பாராட்டுகள்
//

நன்றி ராதாகிருஷ்ணன் சார்.. இந்த லிஸ்டில் நான் பார்த்தது.. பத்து படம் தான்.:(

Cable சங்கர் said...

/அண்ணாத்தே இதுமாதிரி படங்களெல்லாம் வந்ததா?

இப்போதான் படத்தின் பெயரையே பாக்குறேன்.. அப்போ எங்கே ஓடப்போகுது
///

இங்கே தான் தயாரிப்பாளர்கள் தவறு செய்கிறார்கள் அபுஅஃப்ஸர்.

குப்பன்.யாஹூ said...

In today's internet world & reality show world who has the patience to go to theatre and sit for 2 hours.

10 years back Rajni , Kamal filsm were running 100+ days. Now even for them it is difficult to push the films.

Things are changing, so cine people should realize that.

ஜெட்லி... said...

புதிய பயணம் ???

:)
இப்படி ஒரு படமா?

kavi said...

/இந்த படம் பேரு எல்லாம் எப்படி கலெக்ட் பண்ணுனீங்க?
//

லிஸ்டு கலெக்ட் பண்றது எல்லாம் ஒரு பெரிய விஷயமா.. இதில சில படஙக்ளை நான் தியேட்டர்ல பார்த்திருக்கேன்.//

நேத்து தினத்தந்தில வந்த நியூசை கொஞ்சம் விவரமா சொல்லியிருக்கீங்க. ரொம்ப கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

ஆனால் விவரமா இல்லீயே ?

Cable சங்கர் said...

/புதிய பயணம் ???

:)
இப்படி ஒரு படமா?
//

எனக்கு தெரியவில்லை ஜெட்லி.. என் நண்பர் ஒருவர் போஸ்டர் பார்த்ததாக சொன்னார்.

Cable சங்கர் said...

/நேத்து தினத்தந்தில வந்த நியூசை கொஞ்சம் விவரமா சொல்லியிருக்கீங்க. ரொம்ப கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

ஆனால் விவரமா இல்லீயே ?
//

கவி நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேனே பெரிய கஷ்டமில்லைன்னு.. இதில் கிண்டலடிக்க என்ன இருக்கிறது.. அப்படி லிஸ்ட் எடுப்பதற்குஒன்றும் பெரிய விஷயமில்லைதான். நான் எழுதிய திரைவிமர்சனத்தை ஒவ்வொரு மாதமும் லிஸ்ட் எடுத்தாலே வெளீயான படங்கள் கிட்டதட்ட தெரிந்துவிடும். மீதி படங்களுக்கு பேப்பர் கட்டிங் மற்றும் விளமப்ரங்கள் இருக்கவே இருக்கு தலைவா..

kavi said...

நான் சொன்னத தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க, ஒரு விவரத்தை பத்தி எழுதும் போது, நாம முழுமையா அனுபவிச்சத எழுதுனால் நல்லா இருக்குமேன்னு சொல்ல வந்தேன், உங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். உங்களைப் போன்றவர்களிடமிருந்து முற்றுப் பெறாத அல்லது முழுமையடையாத பதிவுகள் வருவதை ஏற்கமுடியவில்லை, அதனால்தான் சொன்னேன், மற்ற விவரங்களை தேடிப் பிடித்து கண்டு பிடித்திருக்கிறீர்கள் என்ற தொனியில்தான் நான் பின்னூட்டம் போட்டிருந்தேன். தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நன்றி,

Thamira said...

ஞாபகங்கள், இந்திரவிழா, வாமனன் எல்லாத்துக்கும் இது தேவைதான். தகுதிக்கு மீறி ஓவரா பில்ட் அப் பண்ணினா இப்படித்தான் ஆகும், ஆவணும்.. எனக்கு சந்தோஷம்ப்பா..

இப்படி மொக்கை படங்கள்ளாம் ஒழிஞ்சாதான் நல்ல படங்கள் வர வாய்ப்பாக இருக்கும்.

மங்களூர் சிவா said...

:(