Thottal Thodarum

Aug 20, 2009

இசையெனும் ”ராஜ” வெள்ளம்

ilaiyaraja001-249x300

நேற்று ஒரு படம் பார்த்து கொண்டிருந்தேன். மிக முக்கியமான கட்டம் க்ளைமாக்ஸ், பிண்ணனி இசையினாலேயே நம்மை அள்ளி இழுத்து கொள்ள வேண்டிய இடம்,  அங்கே தன் ஆளுமையை காட்டவில்லை அந்த படத்தின்  இசையமைப்பாளர்,

அதே போல் காமராஜர் படத்தின் டபுள் பாஸிடிவ் பார்க்க சென்றிருந்தேன். அப்போது படத்தில் இயக்குனர் சில புட்டேஜுகளை விட்டிருந்தார்.  அவர் ஏன் விட்டிருந்தார் என்று எனக்கு புரிந்தது. அது பிண்ணனி இசை கோர்வைக்காக விடப்பட்டிருந்தது. இசை கோர்ப்பு முடிந்ததும் அது எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும் ஏனென்றால் அந்த படத்தின் இசையமைப்பாளர் “இசைஞானி’ இளையராஜா.

எத்தனையோ இசையமைப்பாள்ர்கள் கோலோச்சியுள்ள தமிழ் சினிமாவில், ஆர்.ஆர்னா அது ராஜா தான் என்று இன்றளவும் பேசப்படும் ஒரு மாபெரும் கலைஞன் இளையராஜா மட்டும்தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

அவரது பிண்ணனி இசை படத்தில் இயக்குனர் சொல்லாமல் விட்ட விஷயங்களை கூட சொல்லிவிடும், இவரது பிண்ணனி இசையால் சாதாரணமான க்ளைமாக்ஸ் காட்சிகள், படம் பார்க்கும் பார்வையாளனின் உணர்வுகளை தூண்டப்பட்டு மிக சிறந்த க்ளைமாக்ஸாக மாறிய படங்கள் எத்தனையோ. இன்றளவில் என்னுடய அனுபவத்தில் சந்தோஷம், துக்கம், காதல், ரொமான்ஸ், துரோகம், என்று மனித உணர்வுகள் அத்தனையையும் இசையால் திரையில் கொண்டு வந்த ஒரு மேதை நம்ம இசை ஞானி.

இளையராஜாவின் ஆரம்ப கால படங்களில் அவரது பிண்ணனி இசை பற்றி பேசபடாவிட்டாலும் மனுசன் கொஞ்சம், கொஞ்சமா ரசிகர்களை ட்யூன் ஆக்கிட்டேதான் வந்தாரு. குறிப்பாக சொல்லணுமின்னா,  சாய்தாடம்மா சாய்ந்தாடு, பத்ரகாளி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள்
nram

பாரதிராஜாவும், இளையராஜாவும் சேர்ந்து படம் கொடுக்க ஆரம்பிச்சதும்தான் பிண்ணனி இசைன்னா என்னன்னு மக்களும், விமர்சகர்களும்  கவனிக்க ஆரம்பித்தார்கள். குறிப்பாய் நிறம் மாறாத பூக்கள் படத்திலிருந்து சொல்லலாம். படம் முழுவதும் கிடாரும், வயலினும், கதையில் ஒரு கேரக்டர் போல கூடவே எல்லா உணர்வுகளுக்கு பதில் சொல்லும். படத்தின் வெற்றிக்கு பாடலகள் ஒருபுறம் உதவ, உறுத்தாத பிண்ணனி இசை நம்மை படத்துடன் ஒன்றச் செய்தது நம்ம மொட்டை தான்.

ராஜாவின் பிண்ணனி இசை பற்றி மிகவும் பேசப்பட்ட படம் சிகப்பு ரோஜாக்கள். படம் முழுவது தீம் மீயூசிக் போல கமலனின் ப்ளாஷ்பேக் கட்சிகளுக்கு  “டுடுன், டுடுன்,டுடுன், டுடுன்” ஒரு விதயாசமான இசையை  அளித்திருப்பார். அது  கமலின் குழம்பிய மனதின் வெளிப்பாடாகவே இருக்கும், முக்கியமாய் கதவு திறக்கும் சப்தம், பூனையின் மியாவ், காலடி ஓசைகள், கமல் டேபிளின் மேல் நத்திங் நத்திங் என்று கோபத்துடன் எழுதும்போது வரும் உடல் கூசும் அந்த ஒலி, என்று  எஃபக்ட்ஸுக்கும், முக்யத்துவம் கொடுத்து அதையே பிண்ணனி இசையாய் பயன்படுத்தியதில் தமிழ் திரையுலகில் முதன்மையானவர் இளையராஜா. க்ளைமாக்ஸ் காட்சியில் பூனையை பார்த்து ஸ்ரீதேவி பயப்பட ஆரம்பித்து, ஓட ஆரம்பிப்பதிலிருந்து ஒரு படம் முடியும் வரை சுமார் இருபது நிமிடம் மயிர்கூச்செரிய வைக்கும் பிண்ணனி இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார்.

அதே போல் முதல் மரியாதையில் ரஞ்சனும், ரஞ்சனியும் நிலாவை பிடிக்க, ஓடுவது போன்ற ஒரு காட்சி, உங்களுக்கு அந்த படத்தின் டிவிடி எங்காவது கிடைத்தால், அந்த காட்சியை முதல் முறை மியூட்டில் வைத்து பாருங்கள், வெறுமையாய் இருக்கும்,  பிறகு அதே காட்சியை ராஜாவின் பிண்ணனியோடு பாருங்கள புல்லாங்குழலும், வயலினும் ஒரு சேர அவர்களுடனே ஓடும், சிரிக்கும், மூச்சு வாங்கும், அவர்களின் சந்தோஷம் உங்க்ளுக்கும் தொற்றி கொள்ளும். அதே போல் ராதா, சிவாஜிக்கு ஒரு புல்லாங்குழலை வைத்தே அவர்களின் பாசம், காதல், சோகம், பரிவு, பிரிவு என்று ஒவ்வொரு உணர்வுகளுக்கு பாரதிராஜா எடுத்த ஷாட்டுகளை, உணர்வாய் மாற்றி மகக்ளிடையே சேர்த்தது ராஜாவின் இசைதான்.

நாடோடி தென்றல் படத்தில்  ஒரு காட்சி கார்த்திக், ரஞ்சிதா இருவரும் காதல் வயப்பட்டு கூடும் நேரம் அதை பாரதிராஜா விஷூவலாய் காட்ட, மூங்கில் காடுகள் உரவுவதும், ஓடுகிற் அ ஆற்று தண்ணீரில் எதிர் போக முயற்சித்து தத்தளித்து திமிரும் வாத்துகளையும், விஷூவலாய் கொடுக்க,  அதற்கு  ஒரு பிண்ணனி இசை அமைத்திருப்பார் பாருங்கள்.  வாவ். அவர்க்ளீன் கூடலின் இன்பமும், முயக்க்மும், உணர்வுகளின் உந்துதலால் தத்தளிக்கும் வாத்துகளின்  தவிப்பையும்,  தன் இசையால் இளையராஜாவும், விஷூவலால் பாரதிராஜாவும் கவிதையாய் சொல்லியிருப்பார்கள்.

டிஸ்கி:

இசையை வார்தைகளால் விவரிப்பதென்பது முடியாத காரியம், நான் இங்கே கொடுத்திருக்கும் படங்களை பார்தவர்களுக்கு நான் சொன்ன காட்சிகள் மீண்டும் மனதில் ஓடினாலோ, மீண்டும் படம் பார்க்க தூண்டி, அந்த காட்சிகளை உணர்தாலே நான் எழுதியது வெற்றியே என்று கொள்ளவேண்டும்,  நம்ம மொட்டையுடன் இணைந்து வெற்றி பெற்ற இயக்குனர்களின் படங்களை பற்றி இன்னும் எழுதலாம் என்று நினைக்கிறேன் நீங்கள்???


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

154 comments:

shabi said...

entha mottaiyudan ilayarajavaya

shabi said...

me the firstaa

shabi said...

ilayarajava naangallam mottannuthan kooppittukuvom

shabi said...

first respect(mudhal mariyadhai)super

shabi said...

red rose nalla thrill

shabi said...

naadodi thendral oru flop movie songs are superb (maniyae,sandhana marbile)

shabi said...

ihdhu podhuma

shabi said...

mani-ilayarajaa(director spl)

kamal-raja/rajuni-raja/mohan-raja/ramarajan-raja/rajkiran-raja ippadi combination patthi ezhuthalamee

Cable சங்கர் said...

/entha mottaiyudan ilayarajavaya/

மொட்டையின்னா வேற யாரு உலகத்திலேயே நம்ம இளையராஜாதான்.

Prabu M said...

I have seen "Kaadhalukku mariyadhai" climax in mute...
Raja speaks....!!

Your post is simply awesome and registers a royal salute to Mottai the great :)

Raj said...

நீங்க செஞ்ச பாவத்துக்கு ( என் கூட போன்ல பேசும்போது....ராஜா சாரை திட்டினதத்தான் சொல்றேன்)....பிராயச்சித்தம் தேடிகிட்டீங்க!

கடலோர கவிதைகள் படத்துல...ரேகாவை தன் காதலை ஏத்துக்க வைக்க சத்யராஜ் ஒத்தக்கால்ல தவம் இருக்கற மாதிரி ஒரு சீன் வரும்...ஊர் மக்களோட ரேகாவும் ஓடி வந்து பார்ப்பாங்க....அப்போ பாரதிராஜா சில சூப்பரான விஷூவல்ஸ் வச்சிருப்பார்...அதுக்கு ராஜா ஒரு பிட் song போட்டிருப்பார்...தாஸ் தாஸ்..நீ இப்போ பாஸ் பாஸ் ன்னு...தட் வாஸ் க்ரேட் ஒன்...பாரதிராஜாவே எதிர் பார்க்கல்லயாம்...அந்த விஷூவல்சுக்கு அவ்ளோ பாந்தமா இருக்கும் அந்த பிட் சாங்.

பாரதிராஜா...பாலுமகேந்திரா...மகேந்திரன்...இவங்க மூணு பேர் படங்களுக்கு இசை அமிக்கும்போது மட்டும் ராஜாவுக்கு தனியா ரெண்டு சிறகு முளைச்சிடும்ன்னு நினைக்கிறேன்....என்ன க்ரியேட்டிவிட்டி....என்ன பீலிங்ஸு...என்ன க்வாலிட்டி....எங்க ராஜா ராஜாதான்!


முதல்ல...பாரதிராஜா வோட ராஜா சாரோட காம்பினேஷன் பத்தி இன்னும் விலாவரியா எழுதுங்க

கார்க்கிபவா said...

//அதற்கு ஒரு பிண்ணனி இசை அமைத்திருப்பார் பாருங்கள்.//

இசையை எப்படி பார்க்க முடியும்? கேட்கத்தான் முடியும்

பிரபாகர் said...

அண்ணா,

பிண்ணனி இசையப்பற்றி அவ்வளவாக தெரியாத நிலையில் வில்லனின் என்ட்ரி, காமெடி செய்யும்போடு வரும் வினோத வாத்தியக்கருவிகளின் இசை மட்டும் தான் தெரியும்.
கொஞ்சம் ஆழ்ந்து படித்து, கேட்டு ரசிக்க ஆரம்பித்தபின், ராஜாதான் அதில் தலைச்சிறந்தவர் என்பதை அறிந்து கொண்டேன்.

இன்றளவும், ராஜவினைப்பற்றி பிண்ணனி இசைக்காக குறை கூறிய எந்த ஒரு வளரும், வளர்ந்த, வரப்போகும் இயக்குனர்களை சந்தித்ததில்லை, கேட்டதில்லை.

பழைய படங்களில் மட்டுமல்ல, புதிய படங்களிலும் நிறைய கோலேச்சியிருக்கிறார், உதாரணம் காதலுக்கு மரியாதை.

கண்டிப்பாய் இதனைப்பற்றி நிறைய எழுத தம்பி எதிர் பார்க்கிறான்.

பிரபாகர்.

shortfilmindia.com said...

/இசையை எப்படி பார்க்க முடியும்? கேட்கத்தான் முடியும்
//
தப்புத்தான் மன்னிக்கனும்..கார்க்கி

Raj said...

ஆமாம்...என்ன திடீர்ன்னு ராஜா சாரை புகழ்ந்து எழுத ஆரம்பிச்சுட்டீங்க.....சோழியன் குடுமி சும்மா ஆடாதே!

ஒரு வேளை என் சந்தேகம் சரியோ!

உண்மையா இருந்தால் செல்பேசியில சொல்லுங்க

வரதராஜலு .பூ said...

எனக்கும் முதல் மரியாதை படத்தின் பின்னனி இசை ரொம்ப பிடிக்கும்.

அதே போல காதலுக்கு மரியாதை படத்தின் க்ளைமேகஸில் இ.ரா.வின் பின்னனி இசை ரொம்ப பிடிக்கும்.

நல்ல பதிவு.

Raju said...

நல்லா படங்களை கவனிச்சு எழுதியிருக்கீங்க.!
சூப்பர்.
80களின் முடிசூடா மன்னன் ராஜா....!

\\நீங்கள்???\\

எழுதுங்க பாஸூ..!
இது என்ன கேள்வி.?

பிரேம்ஜி said...

அருமையான அலசல்.கண்டிப்பாக உங்கள் பதிவு வெற்றி தான்.

Raju said...

\\கார்க்கி said...
//அதற்கு ஒரு பிண்ணனி இசை அமைத்திருப்பார் பாருங்கள்.//
இசையை எப்படி பார்க்க முடியும்? கேட்கத்தான் முடியும்\\

மூனத் தொட்டது யாரு..?
நீங்கதான் அமிர்தராஜா..?
:)

வந்தியத்தேவன் said...

பின்னணி இசை என்றால் அது இசைஞானிதான். காதலுக்கு மரியாதை பின்னணி இசை அதிலும் கிளைமாக்ஸ் பின்னணி இசையில் ஞானி கலக்கியிருப்பார். இதேபோல் வெற்றிவிழா பின்னணி இசை ஜிந்தாவும் கமலும் கப்பலில் சண்டைபோடும் காட்சியில் ஆங்கிலப்படங்களுக்கு நிகரான இசை ராஜாவின் இசை.

அருமையான பதிவு சங்கர் அண்ணாச்சி.

இரும்புத்திரை said...

தம் தனனம் தம் தனனம்

இந்த மெட்ட விட்டுடீங்க

இது பாட்டுக்கு தான் அந்த படத்திலே ரொம்ப நேரம் எடுத்தார் இளையராஜா

வந்தியத்தேவன் said...

மறந்துபோன இன்னொரு விடயம் கரகாட்டக்காரனில் கவுண்டமணி செந்தில் காட்சிகளுக்கு ஒரு பின்னணி இசை அமைத்திருப்பார். இன்றைக்குப் பலரின் செல்லிடப்பேசி ரிங்க் டோன் அதுதான்.

பிரசன்னா கண்ணன் said...

எனக்கு ரொம்பவும் பிடிச்ச ரெண்டு பின்னணி இசைக்கோர்ப்பு:

1. முள்ளும் மலரும் படத்துல கிளைமாக்ஸ் மியூசிக்.. ரொம்ப வித்தியாசமா ஒரு மாதிரியான தப்பாட்ட இசையை வைத்தே மிரட்டிருப்பார் நம்ம ராஜா..
2. ரமணா படத்துல, விஜயகாந்த் பெயில்-ல வெளிய வந்து (தூக்கு தண்டனைக்கு முன்னால) தன்னோட குழந்தைகள் தூங்குறத பாத்துட்டுப் போவாரு.. அப்போ நம்ம ராஜாவோட பின்னணி இசை நம்மள கண் கலங்க வச்சுரும்..

பிரசன்னா கண்ணன் said...

எழுத்துப்பிழை, மன்னிக்கவும் -> ** இசைக்கோர்ப்புக்கள்

நர்சிம் said...

நல்ல பதிவு..மிக நல்ல பதிவு.

பின்னனி இசைக்கு மிக முக்கிய படம்..சிறைச்சாலை.

அப்புறம்..பிரசன்னா..நல்ல ரசனைக்காரர்..

முள்ளும் மலரும் படத்தில் கிளைமாக்ஸ் மட்டும் இல்லை..அண்ணன் தங்கை பாசம் வரும் எல்லா சீன்களிலும் அந்த ’தப்பட்டம்’வரும்..மனது அதிரும்..ஏனெனில் சிறுவயதில் தங்கை கீழேயும் அண்ணன் கழியின் உயரத்தில் இருக்கும்பொழுது..அந்தத் தப்பட்டம் அதிரும்..தங்கைக்காக என்பதன் அர்த்தம் படம் முழுதும் அது இளையராஜா செய்த ஜாலம்.

Unknown said...

//எத்தனையோ இசையமைப்பாள்ர்கள் கோலோச்சியுள்ள தமிழ் சினிமாவில், ஆர்.ஆர்னா அது ராஜா தான் என்று இன்றளவும் பேசப்படும் ஒரு மாபெரும் கலைஞன் இளையராஜா மட்டும்தான் என்று சொன்னால் அது மிகையாகாது//

உண்மைதான்.அதே சமயத்தில் சில பழைய பழைய (ராஜா அல்லாத) படங்களில் பின்னணி இசையைப் பாருங்கள்.அற்புதம்.மென்மையான சங்கீதம்.உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

கேடிவியின் “கிளாசிக் மேட்னி”(1p.m.) படம் ஆரம்பிக்கும்போது பின்னணியில் ஒரு சிக்னேச்சர் இசை வரும், அது ”நாம் இருவர்” படத்தின் ஒரு காட்சியின் பி.இசை.
சுட்டது?

அதே மாதிரி என்னைப் பொறுத்தவரையில் தமிழ் திரைஇசை இளையராஜாவுடன் முடிகிறது.தன் முன் இருந்த ஜாம்பவான்களிடம் இருந்து அடுத்தக் கட்டத்திற்கு அதை மேம்படுத்தி கொண்டுவந்து
இசையின் சகல பரிமாணமும் காட்டியாகிவிட்டது.

புதுசாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

manasu said...

who wrote lyrics to kadaloarakavithaikal? vairamuthu??

kavi said...

இளையராஜாவின் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்தத் தயாராகவே இருக்கிறோம். தினசரி ஒரு பதிவு போட்டால் கூட அது நீ.......................ண்டு கொண்டே போகும். நல்ல பதிவு, தொடருங்கள்...

kavi said...

//நம்ம மொட்டையுடன் இணைந்து வெற்றி பெற்ற இயக்குனர்களின் படங்களை பற்றி இன்னும் எழுதலாம் என்று நினைக்கிறேன் நீங்கள்???
//


அப்படியே அவருடன் இணைந்து வெற்றியை ருசித்து விட்டு, அவரை மறந்து விட்ட இயக்குனர்களைப் பற்றியும் எழுதுங்கள்.

thamizhparavai said...

உங்கள் மவுன வாசகனைக்கூட பின்னூட்ட வைத்த பதிவு...
//நம்ம மொட்டையுடன் இணைந்து வெற்றி பெற்ற இயக்குனர்களின் படங்களை பற்றி இன்னும் எழுதலாம் என்று நினைக்கிறேன் நீங்கள்???//
eagerly waiting...

GHOST said...

ராஜா ராஜாதி ராஜன் இந்த இளையராஜா

முடிசூடா மன்னன் ராஜா

சிவகுமார் said...

Yaraa pa annaga , Hot Spot . Enna padam ithu. Change imm....,

polam writeeee.................

இராகவன் நைஜிரியா said...

ராஜா இசை - இதைப் பற்றி பேசக் கூட எனக்கு அருகதை கிடையாது. ஒரு அருமையான கலைஞன்.

பல மறக்க முடியாதப் பாடல்கள் கொடுத்தவர்.

Jawahar said...

நல்ல திறனாய்வு. ரொம்ப ரசித்தேன்.

இளையராஜாவை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படங்கள் நிறைய உண்டு. ஆர்.சுந்தரராஜன் படங்கள் எல்லாவற்றுக்கும் முதுகெலும்பே ராஜாவின் இசைதான். இசையமைப்பாளர்களுக்கு நன்றாகத் தெரிய வேண்டிய இன்னொரு விஷயம் எங்கே இசை வரக்கூடாது என்பது. அதை ரொம்ப நன்றாகத் தெரிந்தவர் ராஜா.

இசை விஷயத்தில் அவர் கிட்டே நமக்குப் பிடிக்காத ஒரு விஷயம், பாடகர்கள் இம்ப்ரோவைஸ் செய்வதை அவர் விரும்புவதில்லை. 'என்னைத் தாலாட்ட வருவாளோ' பாட்டு கேளுங்கள்... ஹரிஹரனை இவ்வளவு அண்டர்ப்ளே செய்ய வைத்தவர்கள் யாருமே கிடையாது!

http://kgjawarlal.wordpress.com

உண்மைத்தமிழன் said...

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்று பிடிக்கிறது..!

பின்னணி இசை என்பது முக்கியம்தானா என்பது வலையுலகில் சினிமா தொடர்பில் இருப்பவர்களுக்குத் தெரிகிறது..

ரசிப்புத் தன்மை உள்ளவர்களுக்குப் புரிகிறது..

சாதாரண பொது ஜனங்களுக்கு..?

அது ஏதோ ஒண்ணு..!!!

உங்கள் ராட் மாதவ் said...

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்...

இளையாராஜாவின் பின்னணி இசை மகத்துவம் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்.


அக்னி நட்சத்திரம் படத்தில், வி கே ராமசாமியும் ஜனகராஜும் 'டிஸ்கோ சாந்தியை தள்ளிக்கொண்டு வரும் ஒரு சீன்.. சுலோ மோஷனில் 'டிஸ்கோ சாந்தி' நடந்து வரும் போது
இருவரும் வாய் பிளந்து நிற்பார்கள். அப்போது ஒரு பின்னணி இசை.... அதை கேட்டுப்பாருங்கள்...

தமிழ் அமுதன் said...

gunaa padaththin pinnani isai ..........!!! solla vaarthai illai .....!!!

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே காதலுக்கு மரியாதை படத்தின் கிளைமாக்ஸில் ஸ்ரீவித்யா என் மருமகளை குடுத்திடுங்கன்னு கேக்கும்போது அந்த அம்மா பதிலுக்கு எடுத்துக்கங்கன்னு சொல்லும்பொது டிரம்ஸில் ஓரு ஓத்தை அடி அடித்து இருப்பாரே நினைவிருக்கின்றதா?? அந்த ஓத்தை அடி இல்லாவிட்டால் படம் டோட்டல் ஃபிளாப் ஆகி இருக்கும்.

யோ வொய்ஸ் (யோகா) said...

கேபிள் சார் கேபிள் சார், இந்த நட்சத்திர வாரத்தில நம்ம ஏ.ஆர். ரகுமான் பத்தியும் ஒரு பதிவு எழுங்களேன்.

இளையராஜாக்கு பின்னால் இசையை அடுத்த தளத்திற்கு கொண்டு போனது இசைப்புயல்தான்

Writer Prabhu Rajan said...

remove "Mottai".Its disgusting.Use this name.Thus you can show ur respect on a Legend.

சிவக்குமரன் said...

super.. i always remember raja for BGM only.

பரிசல்காரன் said...

தல..

ராஜா பேர்ல தனி வலைப்பூ தொடங்கி தினமும் ஆளாளுக்கு அவரோட பாடல்களைப் பகிர்ந்துக்குவோமா?

எம்.எம்.அப்துல்லா said...

/ "Mottai". //

நண்பரே அது கிண்டலுக்குச் சொல்லும் வார்த்தை அல்ல. நான் அறிந்தவரை ராஜாசாரின் தீவிர வெறியர்கள் அவர் மேல் கொண்ட காதலின் உச்சமாக அவரை “மொட்டை” என்று அழைப்பதை பல இடங்களில் பார்த்தும் இருக்கின்றேன்...சொல்லியும் இருக்கின்றேன். எப்படி ஆண்டவனை அவன் இவன் என சொல்கின்றோமோ அதுபோலத்தான் அவரை மொட்டை என்று அழைப்பதும்.(அதற்காக அவரை இறைவன் என்று சொல்கின்றேன் என தப்பர்த்தம் எடுக்க வேண்டாம்)

எம்.எம்.அப்துல்லா said...

// பரிசல்காரன் said...
தல..

ராஜா பேர்ல தனி வலைப்பூ தொடங்கி தினமும் ஆளாளுக்கு அவரோட பாடல்களைப் பகிர்ந்துக்குவோமா?

//

சூப்பர்ணே. நானெல்லாம் அப்படி ஏதாவது எழுதுனாத்தான் உண்டு.

Unknown said...

எம்.எம்.அப்துல்லா said..
//நண்பரே அது கிண்டலுக்குச் சொல்லும் வார்த்தை அல்ல. நான் அறிந்தவரை ராஜாசாரின் தீவிர வெறியர்கள்//

உண்மைதான் நாங்கள் கூட தீவிர ரசனையால் “மொட்டை”என்றுதான் சொல்லுவோம்.

Unknown said...

//இசை விஷயத்தில் அவர் கிட்டே நமக்குப் பிடிக்காத ஒரு விஷயம், பாடகர்கள் இம்ப்ரோவைஸ் செய்வதை அவர் விரும்புவதில்லை//

நீங்கள் சொல்வது கர்நாடக இசைப் பாடகர்களுக்குப் பொருந்தும்?

அவரே நோட்ஸ் எழுதும் போது இம்புரவைஸ் பண்ணித்தானேக் கொடுக்கிறார்.அதற்குமேல் என்ன இருக்கிறது பாட?

கேட்டுப்பாருங்கள்:
”சின்ன கண்ணன் அழைக்கிறான்”
பாலமுரளி கிருஷ்ணா

“எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ” படம்: ”இது எப்படி இருக்கு”- ஜேசுதாஸ்.

”என்னுள்ளில் எங்கோ....” வாணிஜெயராம்.

பாடகர்களின் scopeக்கு ஏற்றார் போல் பாடல் இருக்கும்.

க.பாலாசி said...

இன்றும் பலருடைய மறக்க முடியாத பாடல்கள் இளையராஜா எனும் மகானால் படைக்கப்பட்டதுதான்.

நல்ல பதிவு...

kavi said...

//சாதாரண பொது ஜனங்களுக்கு..?

அது ஏதோ ஒண்ணு..!!!//

ஹலோ தமிழன், நீங்க எந்த காலத்துல இருக்கீங்க. நம்ம மக்கள் முன்னேறி எவ்வளவோ நாளாகுது, பின்னணி இசை பத்தி தெரியாம இந்த காலத்துல யார் இருக்காங்க. நம்ம மக்களை சாதாரணமா எடை போடாதீங்க ?

kavi said...

//இளையராஜாக்கு பின்னால் இசையை அடுத்த தளத்திற்கு கொண்டு போனது இசைப்புயல்தான்//

இளையராஜாவின் சகாப்தம் இன்னும் முடியவில்லை, அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. முடியவும் முடியாது. தயவு செய்து இளையராஜாவிற்குப் பின் ரகுமான் என சொல்லாதீர்கள். அவருடைய இடத்தை தொட ரகுமான் எவ்வளவோ தூரம் போக வேண்டியிருக்கிறது.

kavi said...

//தல..

ராஜா பேர்ல தனி வலைப்பூ தொடங்கி தினமும் ஆளாளுக்கு அவரோட பாடல்களைப் பகிர்ந்துக்குவோமா?//

சூப்பர் ஐடியா ஸார், யாராவது ஆரம்பிச்சி வையுங்க.

manjoorraja said...

மூடுபனி, நிழல்கள், நெஞ்சத்தைக்கிள்ளாதே போன்ற படங்களிலும் பின்னணி இசை பிரமாதமாக இருக்கும்.

முதல் மரியாதையின் நீங்கள் சொன்ன அந்த புல்லாங்குழல் இசையானது திரும்பத்திரும்ப கேட்கும்போது ஒரு புதிய அனுபவத்தை தரும் என்பதை மறுக்க முடியாது.

ஏன் ராஜாவின் முதல் படமான அன்னக்கிளியிலும் சில இடங்களில் பின்னணி இசை மிக சிறப்பாக இருக்கிறது.

Cable சங்கர் said...

/தல..

ராஜா பேர்ல தனி வலைப்பூ தொடங்கி தினமும் ஆளாளுக்கு அவரோட பாடல்களைப் பகிர்ந்துக்குவோமா?//

நான் ரெடி.. எப்ப ஆரம்பிப்போம்.?

Cable சங்கர் said...

/ have seen "Kaadhalukku mariyadhai" climax in mute...
Raja speaks....!!

Your post is simply awesome and registers a royal salute to Mottai the great :)//

காதலுக்கு மரியாதையெல்லாம் ராஜா இல்லைன்னா பெரிசா போயிருக்க வாய்ப்பில்லை. அதிலும் கடைசியில் ஒரு சின்ன ட்ரம் பிட்டும் சிதார் போன்ற ஒரு இசையும் நம் கண்களை குளமாக்கிவிடும்..

நாஞ்சில் நாதம் said...

வயலின் தான் அவர் ஸ்பெஷல். தபேலா நிறுத்தி அடிப்பாரு பாருங்க சூப்பர் ( முத்துமணி மாலை - சின்ன கவுண்டர், ஆனந்தகுயிலின் பாட்டு - காதலுக்கு மரியாதை ) ராஜா ராஜாதான். பல இசை கருவிகளை எடத்துக்கு ஏத்தமாதுரி பயன்படுத்துவாரு.

அருமையான பகிர்வு

நாஞ்சில் நாதம் said...

தமிழ் படத்தை போல பல மலையாள படங்களில் சூப்பரா மியூசிக் பண்ணியிருப்பாரு

Cable சங்கர் said...

/முதல்ல...பாரதிராஜா வோட ராஜா சாரோட காம்பினேஷன் பத்தி இன்னும் விலாவரியா எழுதுங்க
//

எழுதிட்டு இருந்தா எழுதிகிட்டேயிருக்கணும்.. ராஜ்.

Cable சங்கர் said...

/கண்டிப்பாய் இதனைப்பற்றி நிறைய எழுத தம்பி எதிர் பார்க்கிறான்//

எழுதிகிறேன்.. உங்க்ள் ஆதரவுடன். பிரபாகர்.

Cable சங்கர் said...

/எனக்கும் முதல் மரியாதை படத்தின் பின்னனி இசை ரொம்ப பிடிக்கும்.

அதே போல காதலுக்கு மரியாதை படத்தின் க்ளைமேகஸில் இ.ரா.வின் பின்னனி இசை ரொம்ப பிடிக்கும்.

நல்ல பதிவு.
//

மிக்க நன்றி வரதராஜுலு..

Cable சங்கர் said...

/நல்லா படங்களை கவனிச்சு எழுதியிருக்கீங்க.!
சூப்பர்.
80களின் முடிசூடா மன்னன் ராஜா....!
//
80களில் மட்டும்தானா..டக்ளஸ்.. என்றென்றும் ராஜா ராஜாதான்

Cable சங்கர் said...

/அருமையான அலசல்.கண்டிப்பாக உங்கள் பதிவு வெற்றி தான்.
//

நன்றி பிரேம்ஜி..

Cable சங்கர் said...

/பின்னணி இசை என்றால் அது இசைஞானிதான். காதலுக்கு மரியாதை பின்னணி இசை அதிலும் கிளைமாக்ஸ் பின்னணி இசையில் ஞானி கலக்கியிருப்பார். இதேபோல் வெற்றிவிழா பின்னணி இசை ஜிந்தாவும் கமலும் கப்பலில் சண்டைபோடும் காட்சியில் ஆங்கிலப்படங்களுக்கு நிகரான இசை ராஜாவின் இசை.
//

ஆமாம் வந்தியத்தேவன்..

Cable சங்கர் said...

/தம் தனனம் தம் தனனம்

இந்த மெட்ட விட்டுடீங்க

இது பாட்டுக்கு தான் அந்த படத்திலே ரொம்ப நேரம் எடுத்தார் இளையராஜா
//

அது பாட்டின் லீட் இசையாய் வந்து படம் முழுவதும் பிண்ணனி இசையாய் உருவெடுக்கும். தமிழ் சினிமாவில் ஒரு பாடலையோ.. அல்லது பாட்டின் பிஜிஎம்மையோ படம் முழுவதும் பிண்ணனியிசையாய் உபயோகபடுத்தியவ்ர் நம்ம மொட்டைதான்

அது ஒரு கனாக் காலம் said...

சூப்பர் பதிவு

Valaimanai said...

இளையராஜா இசைய ராஜா தான்...
தொடருங்கள் தல...
300 பின் தொடர்பவர்கள் பெற்றதற்கு வாழ்த்துக்கள் தல....
(ஹி.. ஹி... நாந்தான் அந்த 300......)

VISA said...

என்ன தலைவரே திருந்திட்டீங்களா? HOT ஸ்பாட் HUTTU ஸ்பாட்டாயிடிச்சே

VISA said...

சாரு நிவேதிதா உங்க பதிவ படிச்சாருன்னு...கருட புராணத்தின் படி கேபிளுக்கு என்ன தண்டனைன்னு பதிவு போட்டிடுவாரு.

முரளிகண்ணன் said...

கலக்கல் கேபிள்

நாஞ்சில் நாதம் கூட இங்கே டெக்ஸ்ட் கமெண்ட் போட்டிருக்காரே

நம்பிக்கைபாண்டியன் said...

உண்மைதான் நண்பரே பிண்னனி இசையில் இளையராஜவுக்கு நிகர் யாருமில்லை!!! சமீபத்திய படங்களில்கூட அழகி மற்றிம் ரமணா ஆகிய படங்களின் பின்ணனி இசையை கவனித்து பாருங்கள் இளைய ராஜாவின் அருமை புரியும்.
இளையாராவால் வளர்ந்த இயக்குனர்களைப்போல் இளையராஜாக்களால் வளர்ந்த ஹீரோக்களும் பலர் உண்டு(மோகன்,ராமராஜன்). ரஜினியும் கமலும் கூட‌ சினிமா உலகில் அவர்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் ப்டங்களுக்கு கால்ஷீட் கொடுக்கும் முன்பு இளையாரஜாவை புக் செய்துவிட்டீர்களா என்றுதான் தயாரிப்பாளர்களிடம் கேட்பார்களாம்,

பாரதிராஜாவைப் போல் மணிரத்னம் படங்களிலும் இளையராஜாவின் இசை மிக அருமையாக இருக்கும்,மெளனராகம், இத‌யத்தை திருடாதே, தளபதி, அஞ்சலி(500வது படம்),ஆகியவற்றின் பின்னனி இசையை கவனித்து கேட்டுப்பாருங்கள் இளையராஜா நம்மை பிரம்மிக்க வைப்பார். எல்லா த‌லைமுறையின‌ரும் விரும்பி ர‌சிக்கும் இசையை கொடுத்த ஒரே இசைய‌மைப்பாள‌ர் இளைய‌ராஜா ம‌ட்டுமே!

Raj said...

//இளையராஜாவின் சகாப்தம் இன்னும் முடியவில்லை, அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. முடியவும் முடியாது. தயவு செய்து இளையராஜாவிற்குப் பின் ரகுமான் என சொல்லாதீர்கள். அவருடைய இடத்தை தொட ரகுமான் எவ்வளவோ தூரம் போக வேண்டியிருக்கிறது//

ரிப்பீட்டேய்.......!

Cable சங்கர் said...

/1. முள்ளும் மலரும் படத்துல கிளைமாக்ஸ் மியூசிக்.. ரொம்ப வித்தியாசமா ஒரு மாதிரியான தப்பாட்ட இசையை வைத்தே மிரட்டிருப்பார் நம்ம ராஜா..
2. ரமணா படத்துல, விஜயகாந்த் பெயில்-ல வெளிய வந்து (தூக்கு தண்டனைக்கு முன்னால) தன்னோட குழந்தைகள் தூங்குறத பாத்துட்டுப் போவாரு.. அப்போ நம்ம ராஜாவோட பின்னணி இசை நம்மள கண் கலங்க வச்சுரும்..
//

நல்ல ரசிப்புதன்மை.ப்ரசன்னா..

Cable சங்கர் said...

/நல்ல பதிவு..மிக நல்ல பதிவு./

நன்றி நர்சிம்..

Cable சங்கர் said...

/அதே மாதிரி என்னைப் பொறுத்தவரையில் தமிழ் திரைஇசை இளையராஜாவுடன் முடிகிறது.தன் முன் இருந்த ஜாம்பவான்களிடம் இருந்து அடுத்தக் கட்டத்திற்கு அதை மேம்படுத்தி கொண்டுவந்து
இசையின் சகல பரிமாணமும் காட்டியாகிவிட்டது.

புதுசாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
//

உலகில் இதுதான் முடிவு என்று வந்துவிட்டால் அதுதான் உலகத்தின் முடிவு என்று அர்த்தம்.. இதை நான் உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை என்று நினைக்கிறேன். ரவிஷங்கர் சார்.

Cable சங்கர் said...

/who wrote lyrics to kadaloarakavithaikal? vairamuthu??//

அப்படித்தான் நினைக்கிறேன் மனசு..

Cable சங்கர் said...

/இளையராஜாவின் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்தத் தயாராகவே இருக்கிறோம். தினசரி ஒரு பதிவு போட்டால் கூட அது நீ.......................ண்டு கொண்டே போகும். நல்ல பதிவு, தொடருங்கள்..//

நன்றி கவி..

Cable சங்கர் said...

/அப்படியே அவருடன் இணைந்து வெற்றியை ருசித்து விட்டு, அவரை மறந்து விட்ட இயக்குனர்களைப் பற்றியும் எழுதுங்கள்.
//

அப்படியெல்லாம் சொல்ல முடியாது கவி.. அவரால்தான் வளர்ந்தார்கள் என்றால் அதற்கு அடுத்த படங்களில் அவர்கள் காணாமல் போயிருப்பார்கள். அப்படி போனவர்களை பற்றி சொல்லி என்ன பயன்.?

Cable சங்கர் said...

/உங்கள் மவுன வாசகனைக்கூட பின்னூட்ட வைத்த பதிவு..//

ஆமாம் தமிழ்ப்பறவை.. நீங்க் பீன்னூட்டி ரொம்ப நாளாச்சு.. மிக்க் நன்றி இளையராஜாவுக்கு.

Cable சங்கர் said...

/ராஜா ராஜாதி ராஜன் இந்த இளையராஜா

முடிசூடா மன்னன் ராஜா
//

ஆமாம் கோஸ்ட்..

Cable சங்கர் said...

/Yaraa pa annaga , Hot Spot . Enna padam ithu. Change imm....,

polam writeeee.................//

ஹி.. இது ஹாட்டா இல்லையா..?

Cable சங்கர் said...

/ராஜா இசை - இதைப் பற்றி பேசக் கூட எனக்கு அருகதை கிடையாது. ஒரு அருமையான கலைஞன்.

பல மறக்க முடியாதப் பாடல்கள் கொடுத்தவர்.
//

ஆமாம் இராகவன்ணே..

Cable சங்கர் said...

/இளையராஜாவை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படங்கள் நிறைய உண்டு. ஆர்.சுந்தரராஜன் படங்கள் எல்லாவற்றுக்கும் முதுகெலும்பே ராஜாவின் இசைதான். இசையமைப்பாளர்களுக்கு நன்றாகத் தெரிய வேண்டிய இன்னொரு விஷயம் எங்கே இசை வரக்கூடாது என்பது. அதை ரொம்ப நன்றாகத் தெரிந்தவர் ராஜா.//
சரியாக சொன்னீர்கள் ஜவர்லால்..

Cable சங்கர் said...

/ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்று பிடிக்கிறது..!

பின்னணி இசை என்பது முக்கியம்தானா என்பது வலையுலகில் சினிமா தொடர்பில் இருப்பவர்களுக்குத் தெரிகிறது..

ரசிப்புத் தன்மை உள்ளவர்களுக்குப் புரிகிறது..

சாதாரண பொது ஜனங்களுக்கு..?

அது ஏதோ ஒண்ணு..!!!
//

தலைவரே.. ஏன் இவ்வளவு பின்னோக்கி இருக்கிறீர்கள் கிட்டத்தட்ட 60 பின்னூட்டம் இருக்கிறது. அதில் நீங்க, நானு, இன்னும ஒரு பத்து பேர் தவிர சினிமாகாரர்கள் கிடையாது.. ஆனால் மற்றவர்கள் எல்லாம் படத்தின் பெயரை குறிப்பிட்டு இந்த இடத்தில் பிண்ணனி இசை நன்றாக் இருக்கும் என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறார்கள் எனவே பொது ஜனத்துக்கு தெரியாது என்றே நினைக்காதீர்கள்.

Cable சங்கர் said...

/அக்னி நட்சத்திரம் படத்தில், வி கே ராமசாமியும் ஜனகராஜும் 'டிஸ்கோ சாந்தியை தள்ளிக்கொண்டு வரும் ஒரு சீன்.. சுலோ மோஷனில் 'டிஸ்கோ சாந்தி' நடந்து வரும் போது
இருவரும் வாய் பிளந்து நிற்பார்கள். அப்போது ஒரு பின்னணி இசை.... அதை கேட்டுப்பாருங்கள்.//

ஆமாம் ராட்மாதவ்.. அருமையான பிண்ணனி இசை.. அதில் ஒரு இளமை துள்ளல், எள்ளல், ஒரு பெப் எல்லாமே இருக்கும்

Cable சங்கர் said...

/gunaa padaththin pinnani isai ..........!!! solla vaarthai illai .....!!!//

கமல் ராஜா காம்பினேஷன் படஙக்ள் எல்லாமே மாஸ்டர் பீஸ்.. அதை பற்றி எழுத ஒரு பதிவு போதாது ஜீவன்.

Cable சங்கர் said...

/அண்ணே காதலுக்கு மரியாதை படத்தின் கிளைமாக்ஸில் ஸ்ரீவித்யா என் மருமகளை குடுத்திடுங்கன்னு கேக்கும்போது அந்த அம்மா பதிலுக்கு எடுத்துக்கங்கன்னு சொல்லும்பொது டிரம்ஸில் ஓரு ஓத்தை அடி அடித்து இருப்பாரே நினைவிருக்கின்றதா?? அந்த ஓத்தை அடி இல்லாவிட்டால் படம் டோட்டல் ஃபிளாப் ஆகி இருக்கும்.
//

நிச்சயமாய்.. மெளன்ராகத்தில் கார்திக்குக்கு ஒரு ட்ராக்போட்டிருப்பாரே.. அது இல்லாவிட்டால் கார்திக்கின் துள்ளல் ஒரு பர்செண்ட் குறைச்சல் தான்.

Cable சங்கர் said...

/கேபிள் சார் கேபிள் சார், இந்த நட்சத்திர வாரத்தில நம்ம ஏ.ஆர். ரகுமான் பத்தியும் ஒரு பதிவு எழுங்களேன்.//

நட்சத்திர வாரத்தில் எழுதுகிறேனோ இல்லையோ நிச்சயமா ஏ.ஆர்.ரஹ்மானை பற்றியும் எழுதுவேன்..

Cable சங்கர் said...

/remove "Mottai".Its disgusting.Use this name.Thus you can show ur respect on a Legend//

மிஸ்டர் வேர்ல்ட்..உங்களுக்கான பதிலை அண்ணன் அப்துல்லா சொல்லிவிட்டதால் நான் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

Cable சங்கர் said...

/super.. i always remember raja for BGM only//

தலைவரே அப்ப அவரு பாட்டெல்லாம் அவ்வளவு பிடிக்காதா.. :)

Cable சங்கர் said...

/இன்றும் பலருடைய மறக்க முடியாத பாடல்கள் இளையராஜா எனும் மகானால் படைக்கப்பட்டதுதான்.

நல்ல பதிவு...
//

நன்றி பாலாஜி உங்கள் பின்னூட்ட்திற்கும், வருகைக்கும்.

Cable சங்கர் said...

/ஏன் ராஜாவின் முதல் படமான அன்னக்கிளியிலும் சில இடங்களில் பின்னணி இசை மிக சிறப்பாக இருக்கிறது.
//

அதான் சொன்னேனே மஞ்சூர்.. அவரின் ஆரம்ப கால படங்களிலேயே அவர் ரசிகர்களை தயார் செய்ய ஆரம்பித்துவிட்டார் என்று

Cable சங்கர் said...

/வயலின் தான் அவர் ஸ்பெஷல். தபேலா நிறுத்தி அடிப்பாரு பாருங்க சூப்பர் ( முத்துமணி மாலை - சின்ன கவுண்டர், ஆனந்தகுயிலின் பாட்டு - காதலுக்கு மரியாதை ) ராஜா ராஜாதான். பல இசை கருவிகளை எடத்துக்கு ஏத்தமாதுரி பயன்படுத்துவாரு.

அருமையான பகிர்வு
//

ஆமாம் நாஞ்சில் நாதம். நன்றி

Cable சங்கர் said...

/இளையராஜா இசைய ராஜா தான்...
தொடருங்கள் தல...
300 பின் தொடர்பவர்கள் பெற்றதற்கு வாழ்த்துக்கள் தல....
(ஹி.. ஹி... நாந்தான் அந்த 300......)
//

300 வதுக்கு மிக்க நன்றி வலைமனை..

Cable சங்கர் said...

/சாரு நிவேதிதா உங்க பதிவ படிச்சாருன்னு...கருட புராணத்தின் படி கேபிளுக்கு என்ன தண்டனைன்னு பதிவு போட்டிடுவாரு.
//

சாருவின் அங்கீகாரத்துக்காகவா இளையராஜா இசையமைத்தார்..? இல்லை நான் அவரை பற்றி எழுதினேன்.? பாவம் அவரு.. ஏதாவது சொல்லிட்டே இருப்பாரு விடுங்க விசா..

Cable சங்கர் said...

/பாரதிராஜாவைப் போல் மணிரத்னம் படங்களிலும் இளையராஜாவின் இசை மிக அருமையாக இருக்கும்,மெளனராகம், இத‌யத்தை திருடாதே, தளபதி, அஞ்சலி(500வது படம்),ஆகியவற்றின் பின்னனி இசையை கவனித்து கேட்டுப்பாருங்கள் இளையராஜா நம்மை பிரம்மிக்க வைப்பார். எல்லா த‌லைமுறையின‌ரும் விரும்பி ர‌சிக்கும் இசையை கொடுத்த ஒரே இசைய‌மைப்பாள‌ர் இளைய‌ராஜா //

நிச்சயமா நம்பிகை.. மணியின் படஙக்ளை பற்றி பேச ஒரு பதிவு போதாது.

Jackiesekar said...

நீங்கள் சொன்ன முதல் மரியாதை சீன் ரசித்து இருக்கி்றேன்

VISA said...

//ஏதாவது சொல்லிட்டே இருப்பாரு விடுங்க விசா..//

rompa correct - REPEATUUUUUUUUU.

அத்திரி said...

அண்ணே அருமையான பதிவு...........ராஜா எப்பவும் ராஜா...............அவரோட பிண்ணனி இசைன்னா உடனே ஞாபகத்துக்கு வரும் படம் தளபதிதான்.......

மணிஜி said...

கேபிள்..மெளனராகத்தில் கார்த்திக்கை போலிஸ் துரத்தும் காட்சியில் வரும் சிந்தர்சைசர்.அப்புறம் எனக்கு பிடிச்சது...தேவதை படத்தின் பிண்ணனி இசை..ராஜராஜன் தான்

அறிவிலி said...

வெற்றி

டக்கால்டி said...

Agni Natchathiram and Anjali BGM is Fantastic...
Especially in Agni natchatthiram when prabhu and karthik met over ezch other some thunder like sound will come...

Raja Sir is gr8.
But one disgusting fact about him now a days is singing about his own acheivements.

Latest Eg- Azhagar Malai Song

Plz avoid Raja Sir. We know u r a gr8 Music artist and composer.

Sanjai Gandhi said...

முரளிகண்ணனுக்கு டஃப் காம்படிஷன் போல... நல்ல தொகுப்பு கேபிளாரே.. ஹாட் ஸ்பாட்டில் என் ஸ்வீட் ஹார்ட்க்கு இடம் கொடுத்ததுக்கு நன்றி. :)

புருனோ Bruno said...

//எத்தனையோ இசையமைப்பாள்ர்கள் கோலோச்சியுள்ள தமிழ் சினிமாவில், ஆர்.ஆர்னா அது ராஜா தான் என்று இன்றளவும் பேசப்படும் ஒரு மாபெரும் கலைஞன் இளையராஜா மட்டும்தான் என்று சொன்னால் அது மிகையாகாது//

கண்டிப்பாக இது மிகைப்படுத்தப்பட்ட வாசகம்

நீங்கள் யாரும் பேசும் படம், பாட்ஷா !!, அன்பேசிவம் போன்ற படங்களை பார்த்ததில்லையா !!

மாபெரும் கலைஞன் இளையராஜா என்பது உண்மை

ஆனால் அவர் மட்டும் தான் கலைஞன் என்பது அறியாமை

//அதே மாதிரி என்னைப் பொறுத்தவரையில் தமிழ் திரைஇசை இளையராஜாவுடன் முடிகிற//

உங்களை பொருத்தவரை என்பது சரி

ஆனால் ஒட்டுமொத்தமாக தமிழ் திரையிசை என்பது தமிழகத்தை கடந்து இந்தியா முழுவதும் சென்றது இளையராஜாவால் அல்ல

அதை சாதித்த அவரை விட அதிகம் சாதனை புரிந்தவர்கள் இருக்கிறார்கள்

புருனோ Bruno said...

//தன் முன் இருந்த ஜாம்பவான்களிடம் இருந்து அடுத்தக் கட்டத்திற்கு அதை மேம்படுத்தி கொண்டுவந்து
இசையின் சகல பரிமாணமும் காட்டியாகிவிட்டது.

புதுசாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை.//

புதுசாக சொன்னவரை உலகம் முழுவதும் பாராட்டி கொண்டாடுகிறது சார்

பூனை தன் கண்களை மூடி விட்டு உலகம் இருண்டுவிட்டது என்று நினைப்பது போலிருக்கிறது உங்களின் கருத்து :) :) :)

புருனோ Bruno said...

//இளையராஜாவின் சகாப்தம் இன்னும் முடியவில்லை, அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. முடியவும் முடியாது. தயவு செய்து இளையராஜாவிற்குப் பின் ரகுமான் என சொல்லாதீர்கள். அவருடைய இடத்தை தொட ரகுமான் எவ்வளவோ தூரம் போக வேண்டியிருக்கிறது//

அவரை தாண்டி ரஹ்மான் எங்கோ போய் விட்டார் :) :) :)

இளையராஜாவால் இந்தி திரைப்படங்களுக்குள் கூட நுழைய முடியவில்லை

ஆனால் ரஹ்மானோ இந்தியா முழுவதும் கடந்து இங்கிலாந்து அமெரிக்கா வரை சென்று விட்டார்

Cable சங்கர் said...

/நீங்கள் சொன்ன முதல் மரியாதை சீன் ரசித்து இருக்கி்றேன்
//

அருமையான சீன் தலைவரே.. வருகைக்கும் பின்னூட்டதிற்கும் மிகக நன்றி

Cable சங்கர் said...

நன்றி யாழிசை
நன்றி மங்களூர் சிவா. உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்

Cable சங்கர் said...

/அண்ணே அருமையான பதிவு...........ராஜா எப்பவும் ராஜா...............அவரோட பிண்ணனி இசைன்னா உடனே ஞாபகத்துக்கு வரும் படம் தளபதிதான்......//

தளபதி பற்றி ஒரு பதிவே எழுத வேண்டிய அளவிற்கு இருக்கிறது விஷயம். மிக்க நன்றி அத்திரி..

Cable சங்கர் said...

/கேபிள்..மெளனராகத்தில் கார்த்திக்கை போலிஸ் துரத்தும் காட்சியில் வரும் சிந்தர்சைசர்.அப்புறம் எனக்கு பிடிச்சது...தேவதை படத்தின் பிண்ணனி இசை..ராஜராஜன் தான்
//

அது ஒரு மாஸ்டர் பீஸ் பிண்ணனி கோர்வை.. தண்டோரா..

Cable சங்கர் said...

/Agni Natchathiram and Anjali BGM is Fantastic...
Especially in Agni natchatthiram when prabhu and karthik met over ezch other some thunder like sound will come...

Raja Sir is gr8.
But one disgusting fact about him now a days is singing about his own acheivements.

Latest Eg- Azhagar Malai Song

Plz avoid Raja Sir. We know u r a gr8 Music artist and composer.
//

சரி விடுஙக் யாழிசை.. வயசான வர்றா பிரச்சனைதான். ந்ம்ம மொட்டை அதுகூட சகிச்சிகலைன்னா எப்படி./

Cable சங்கர் said...

/முரளிகண்ணனுக்கு டஃப் காம்படிஷன் போல... நல்ல தொகுப்பு கேபிளாரே.. ஹாட் ஸ்பாட்டில் என் ஸ்வீட் ஹார்ட்க்கு இடம் கொடுத்ததுக்கு நன்றி. :)
//

அய்யோ.. அவரின் டேட்டா பேஸ் எங்கே நான் எங்கே.. சஞ்செய்.. மிக்க நன்றி.. வருகைக்கும் பின்னூட்ட்த்திற்கும்

Cable சங்கர் said...

/ஆனால் அவர் மட்டும் தான் கலைஞன் என்பது அறியாமை
//

நான் அப்படி சொல்லவில்லை புருனோ. அதானே பார்த்தேன். இப்பத்தான் கலை கட்டியிருக்கு.. ஆட்டம் ம்.. ஸ்டார்ட் மீசீக..

கோபிநாத் said...

அருமை..அருமை...;))

\\நம்ம மொட்டையுடன் இணைந்து வெற்றி பெற்ற இயக்குனர்களின் படங்களை பற்றி இன்னும் எழுதலாம் என்று நினைக்கிறேன் நீங்கள்???
\\

என்ன கேள்வி இது கண்டிப்பாக செய்யுங்கள் தல.

நேரம் கிடைக்கும் போது இந்த பதிவையும் பாருங்கள்

ராஜா அடியெடுத்துக் கொடுக்க....
http://radiospathy.blogspot.com/2009/08/blog-post_20.html

ganesh said...

Agree with all the things you said,

P.S Thevar Magana miss pannitenga

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான பதிவு சங்கர்

Jacks said...

A good post. Also "Thalapathi" is one of the greats movies for it's direction and bacground music. No matter how much time I watch that movie, I get involed for it's directorial touch and the music. Especially the temple seen between Rajni & Srividya.

Lenin said...

Nayagan,Aboorva sagotharargal...miss panniteenga

Cable சங்கர் said...

/என்ன கேள்வி இது கண்டிப்பாக செய்யுங்கள் தல.

நேரம் கிடைக்கும் போது இந்த பதிவையும் பாருங்கள்

ராஜா அடியெடுத்துக் கொடுக்க....
//

நன்றி கோபிநாத. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Cable சங்கர் said...

/Agree with all the things you said,

P.S Thevar Magana miss pannitenga//

கணேஷ் விடவில்லை கமல் ராஜா காம்பினேஷ்ன் பற்றி தனியாய் ஒரு பதிவு எழுதலாம்னுதான். வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி

Cable சங்கர் said...

/அருமையான பதிவு சங்கர்//

நன்றி ராதாகிருஷ்ணன் சார்..


//Jack said...
A good post. Also "Thalapathi" is one of the greats movies for it's direction and bacground music. No matter how much time I watch that movie, I get involed for it's directorial touch and the music. Especially the temple seen between Rajni & Srividya.//

மணி ராஜா பற்றி வருகிற பதிவுகளில் எழுதுகிறேன்


// Lenin said...
Nayagan,Aboorva sagotharargal...miss panniteenga
//

மிஸ் பண்ணவில்லை.. லெனின் உங்க்ள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி..

geethappriyan said...

இசைஞானியை பற்றி படித்ததில் பிடித்தது-4

நண்பர் கேபிள்ஷங்கர் அவர்கள் மிக நேர்த்தியாக இசைஞானியின் பிண்ணனி இசை சிறப்பு பெற்ற படங்களை ஒப்பில்லா ரசனையுடன் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு கலை ரசனையுடன் கூடிய ஒப்பீட்டு உரை எழுதி, தன் வலை பூவில் வழங்கியுள்ளார்.
அதற்கு வெகுமதியாக இளையராஜா ரசிகர்களிடமிருந்து அருமையான பின்னூட்டங்களும் வந்துள்ளன.நீங்களும் சென்று பின்னூட்டமிட்டு இசை ரசனையை சொல்லுங்களேன்.

அவர் சேவை மேலும் சிறக்கட்டும்.
இது ராகதேவனின் ரசிகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு,அவரின் தளம் சென்று படித்து ஒட்டு போட்டு ஊக்கம் கொடுக்கவும் வேண்டுகிறேன்.

அவர் மேலும் ராகதேவனின் பல அறிய பாடல்களை பற்றிய தொகுப்புகளை அள்ளித்தர வேண்டும் என வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
பதிவின் தலைப்பு:-

இசையெனும் ”ராஜ” வெள்ளம்
Aug 20, 2009

பதிவின் சுட்டி:-
http://cablesankar.blogspot.com/2009/08/blog-post_20.html

tekvijay said...

ரஹ்மான் ஒரு மேதை, அவர் தான் ஹிந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற முதல் தென்னிந்திய இசையமைப்பாளர். அவர் தான் வேறு இந்திய இசையர்களைவிடவும் அதிகம் பல மடங்கு பெரிய அளவில் உலக அங்கீகாரம் பெற்றவர். இது எதுவுமே ராஜாவுக்கு கைகூடவில்லை.

இன்றைய இளைஞர் கூட்டம் மொத்தமும் ரஹ்மான் பின்னால் தான். அதில் சந்தேகமில்லை.

ஆனால் இந்த சாதனைகளால் எல்லாம் ரஹ்மான் இளையராஜாவை முந்திவிட்டார் என்று சொல்வது அடிமுட்டாள்தனம். ஏனென்றால் இளையராஜாவின் இசை

1) கிட்டதட்ட எல்லா இந்திய இசை மேதைகளால் பாராட்டப்பட்டது

2) கிரியேட்டிவிட்டி என்றாலும் விதிமுறை மீறாமல் பலப்பல ஆயிரக்கான வெவ்வேறு விதமான இசை வடிவங்களை, விதிமுறை மீறாமல் படைத்துள்ளார். இது எத்தனை ஆஸ்கார் வாங்கினாலும் ரஹ்மானால் முடியாது.

3) ராஜாவின் இசை எப்போதும், இப்போதும் உலகின் பல மூலைகளில் ஒலித்துக்கொண்டிருக்கும். நான்ஸ்டாப்.

4) இன்றைய பல படங்களில் அவரின் பின்னணி இசை இரவல் வாங்கப்படுகிறது. பின்னணி ஒன்று போதும் ரஹ்மானை பின்னுக்குத்தள்ள.

ராஜாவின் திறமையை ஏற்கும் பக்குவமும் அறிவும் ரஹ்மானின் சிலபல ரசிகர்களுக்கு இல்லை. கண்டபடி பேசுகிறார்கள். இதனால் டென்ஷனாகும் ராஜா அழகர்மலை போன்ற மொக்கைப்படங்களில் தன் ஆதங்கத்தை(தனக்கு எதுவுமே வேண்டாம், அன்னைபூமி மட்டும் போதும்) வெளிப்படுத்துகிறார். இது ராஜாவுக்கு தேவையற்றது. அவரைவிட அதிகம் திறமைவாய்ந்த 17ஆம் நூற்றாண்டு இசையர் மொசார்ட் சாப்பிட காசில்லாமல் செத்துப்போனார். ஆனால் ராஜாவுக்கு நாம் என்ன குறை வைத்தோம்? எனவே அவர் அமைதி காக்கவேண்டும்.

ஆஸ்காரே வாங்கினாலும் ராஜாவின் திறமை அளவுக்கு ரஹ்மானால் செய்ய முடியாது என்று பலர் சொன்னபோதும் ரஹ்மான் மிக அழகாக அமைதி காக்கிரார். தனக்கு வேறு திறமைகள் உண்டு, அது தன்னை உலகத்தரத்திற்கு அழைத்துச்செல்லும், இன்னும் பல ஆஸ்கர் வாங்கித்தரும் என்று திடமாக நம்புகிரார்.

பக்கா ராஜா வெறியனான நானும் அதை நம்புகிறேன்.

- ரஹ்மானை மதிக்கும் ராஜா வெறியன்

புருனோ Bruno said...

//Nayagan,Aboorva sagotharargal...miss panniteenga//

ஆமாம்

அதிலும் பதிவாளர் அலுவலகத்திலிருந்து பிளாஷ்பேக் காட்சி ஆரம்பிக்கும் வரை வரும் இசை... சிம்ப்ளி சூப்பர்ப்

புருனோ Bruno said...

//ஆனால் இந்த சாதனைகளால் எல்லாம் ரஹ்மான் இளையராஜாவை முந்திவிட்டார் என்று சொல்வது அடிமுட்டாள்தனம்.//

இல்லை. முட்டாள்தனம் இல்லை. அது மிகச்சரியான கருத்துதான்.

இளையராஜாவால் இந்தியில் சாதிக்க முடியவில்லை.

ரஹ்மான் அவரை முந்தி சாதித்து விட்டார்

இளையராஜாவை எந்த ஹாலிவுட் இயக்குனரும் இசையமைக்க அழைக்கவில்லை

ரஹ்மானை அழைத்து, அவர் இசையமத்து உள்ளார்.

அதிலும் அவர் முந்தி விட்டார்

எனவெ ரஹ்மான் முந்தி விட்டார் என்பது மிகச்சரியான கருத்தே

புருனோ Bruno said...

//1) கிட்டதட்ட எல்லா இந்திய இசை மேதைகளால் பாராட்டப்பட்டது
//

ரஹ்மானின் இசை உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது

இதிலும் ரஹ்மான் முந்தி விட்டார் !!! என்பதில் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா

புருனோ Bruno said...

//2) கிரியேட்டிவிட்டி என்றாலும் விதிமுறை மீறாமல் பலப்பல ஆயிரக்கான வெவ்வேறு விதமான இசை வடிவங்களை, விதிமுறை மீறாமல் படைத்துள்ளார்.//

உண்மை. சரி

// இது எத்தனை ஆஸ்கார் வாங்கினாலும் ரஹ்மானால் முடியாது.
//

முழுப்பொய். அதை விட அதிகம் ரஹ்மான் சாதித்து விட்டார்.

நீங்கள் ரஹ்மான் இசையை கேட்டு பாருங்கள்.

புருனோ Bruno said...

//3) ராஜாவின் இசை எப்போதும், இப்போதும் உலகின் பல மூலைகளில் ஒலித்துக்கொண்டிருக்கும். நான்ஸ்டாப்.
//

முழுவதும் உண்மை. மறுக்க முடியாத உண்மை

ரஹ்மானின் இசை எப்போதும், இப்போதும் உலகின் பல மூலைகளில் ஒலித்துக்கொண்டிருக்கும். நான்ஸ்டாப்.

இதுவும் உண்மை தான் . அதை புரிந்து கொள்ளுங்கள்

புருனோ Bruno said...

//4) இன்றைய பல படங்களில் அவரின் பின்னணி இசை இரவல் வாங்கப்படுகிறது. பின்னணி ஒன்று போதும் ரஹ்மானை பின்னுக்குத்தள்ள.
//

தமிழ் படங்களில் மட்டும் தான் இராஜாவின் இசை இரவல் வாங்கப்படுகிறது

இந்தி படங்களில் ??

ஆனால்

பிராட்வே நாடகங்களில் வரை இரவல் வாங்கப்படுகிறது ரஹ்மானின் இசைதான்

ரஹ்மான் முந்தி விட்டார் என்பதற்கு இதை விட வேறு காரணம் வேண்டுமா

புருனோ Bruno said...

//ராஜாவின் திறமையை ஏற்கும் பக்குவமும் அறிவும் ரஹ்மானின் சிலபல ரசிகர்களுக்கு இல்லை. /

ராஜாவின் திறமையை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள்

அதை யாரும் மறுப்பதே இல்லை

அவர் மிகப்பெரிய கலைஞர்

இதையும் யாரும் மறுக்க முடியாது

அவர் இசை காலத்தால் அழிக்க முடியாது

இதை யாரும் மறுக்க வில்லை

--

அவர் தான் உங்களின் விருப்ப இசைக்கலைஞர் என்று கூறுங்கள். இதை யாரும் மறுக்க வில்லை


---

அவரைத்தான் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறுங்கள் இதை யாரும் மறுக்க வில்லை

--

அவர் இசையை தவிர நீங்கள் வேறு இசை கேட்பதில்லை என்று கூறுங்கள் இதை யாரும் மறுக்க வில்லை


--

ஆனால் அவர் மட்டும் தான் இசையமைப்பாளர் என்று கூறுகிறீர்களே அதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

புரிகிறதா

புருனோ Bruno said...

இந்தி பாட்டு கேட்டுக்கொண்டிருந்த தமிழர்களை தமிழ் பாட்டு கேட்க வைத்தவர் இளையராஜா
இந்தி பாட்டு கேட்டுக்கொண்டிருந்த இந்திக்காரர்களையும் தமிழ் பாட்டு கேட்க வைத்தது யார் என்று நினைக்கிறீர்கள்

புருனோ Bruno said...

இளையராஜா மாபெரும் இசை மேதை என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது

ஆனால் அவர் தொடமுடியாத உயரங்களை எல்லாம் தொட்டவர் ரஹ்மான் என்பதை யாராலும் மறுக்க முடியாது

புருனோ Bruno said...

எனக்கு பிடித்தது தான் உலகில் சிறந்தது என்ற மாயையிலிருந்து வெளிவந்தால் பிரச்சை தீர்ந்தது.

My favourite need not be the world’s best
World Best need not be my favourite


உங்களுக்கு பிடித்த பெண் என்றால் உங்கள் அம்மா / மனைவி / மகள் என்று இருக்கலாம் (உதாரணத்திற்காக)
ஆனால் சிறந்த பாடகி என்றால் அது லதா மங்கேஷ்கரோ அல்லது எம்.எஸோ அல்லது ஜானகியோவாகத்தான் இருக்க முடியும் (உதாரணத்திற்காக)



இதே தான் இசையிலும்



புரிகிறதா

புருனோ Bruno said...

அது சரி

சிம்பொனி இசை பற்றி யாராவது கூறுங்களேன்

கேபிள்.. நீங்கள் அதை கேட்டிருக்கிறீர்களா :) :)

pachhamilaka said...

இளையராஜாவோடுயாரையும் ஒப்பிடாதிங்க

Cable சங்கர் said...

/இந்தி பாட்டு கேட்டுக்கொண்டிருந்த தமிழர்களை தமிழ் பாட்டு கேட்க வைத்தவர் இளையராஜா
இந்தி பாட்டு கேட்டுக்கொண்டிருந்த இந்திக்காரர்களையும் தமிழ் பாட்டு கேட்க வைத்தது யார் என்று நினைக்கிறீர்கள்
//

:)

Cable சங்கர் said...

/ஆனால் அவர் மட்டும் தான் இசையமைப்பாளர் என்று கூறுகிறீர்களே அதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
//

இதுவும் நிஜம் தான் புருனோ.

tekvijay said...

இங்கே உள்ள பல கத்துகுட்டி ரஹ்மான் ரசிகர்களின் பதில் எதிர்பார்த்ததே!! முதலில் நான் சொன்னதே ரஹ்மானிடம் உள்ள பல திறமைகள் ராஜாவிடம் இல்லை
என்று தான்! அப்புறம் எப்படி நான் ரஹ்மான் எதிர்ப்பாளன் ஆனேன்?!? ரஹ்மானின் சமீபத்திய டெல்லி-6 வரை எல்லா ஆல்பங்கள் மற்றும் பின்னணி
இசையையும் கேட்டவந்தான் நான்!

ரஹ்மான் உலகப்புகழ் பெற்றுவிட்டார் சரி, அதனால் அவரின் இசை இளையராஜாவின் இசையை மிஞ்சிவிடவில்லை. அவரும் வேறு தளத்தில் தான்
இசையமைக்கிறார் என்பதை புரிந்துகொள்ளுங்கள். ராஜாவின் வேகம் ரஹ்மான் உள்பட யாருக்குமே வராது. காலப்போக்கில் ரஹ்மானை, அவரின் அதே திறமை
எல்லைக்குள்ளேயெ மிஞ்ச ஒரு ஆள் கட்டாயம் வருவார். ஏனென்றால் உலகம் எந்த இசையை நோக்கி செல்கிறதோ அதப்பாதையில் பயணித்துதான் ரஹ்மான்
இன்று வெர்றிபெற்றுள்ளார். ஆனால் ராஜாவின் இசை பாணி மிகவும் எளிமையான அதேசமயம் மிகவும் முழுமையாக, முழுக்க நம் நேட்டிவிட்டியுடன் உள்ளது.
ரஹ்மான் மட்டுமல்ல, ராஜாவின் தரம் டெக்னிக்கலாக யாரும் தொடமுடியாத உயரம். அவரின் வேகம் மற்றவர்களால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒன்று.

ரஹ்மான் பயன்படுத்தும் சுஃபி உள்பட ராக் பாப் ரெகே(சிவாஜி படம்) மேற்கத்திய கிளாஸிக்கல் மற்றும் ஹிந்துஸ்தானி கர்னாடக இசைவகைகள் உலகெங்கிலும்
பல இசையமைப்பாளர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. அடில் சிலரும் ஆஸ்கர் வென்றுள்ளனர்.

ராஜா ஃபோக் எனப்படும் நாட்டுப்புர/கிராமிய இசையில் மிகவும் பிரபலமானவை என்று சொல்வார்கள், ஆனால் உன்மையில் அப்படி ஒரு வகையில்/ஜெனிர் இல்
இம்ப்ரூவைஸ் செய்து ராஜா உருவாக்கியது கிட்டதட்ட ஒரு புது ஜெனிர். நாட்டுப்புர இசை என்ற பெயரில் ராஜா ஒரு புதுஇசை வடிவத்தையே படைத்திருக்கிறார்.
எந்த கிராமத்தில் ராஜாவின் இசை போன்று கோரஸ் பாடிக்கொண்டும் வயலின் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டும் உள்ளனர்?? ஆனால் ராஜா தன்
கற்பனையால் ஒரு புது உலகையே உருவாக்கியுள்ளார். இந்த பதிவும் அதைப்பர்றிதான் பேசுகிரது. இது அவரின் இசை வெள்ளத்தில் ஒரு சொட்டு மட்டுமே.
கிராமிய படங்களில் அவர் பியானோ கிட்டார் போன்ற நவீன கருவிகளையும் நகர்மையமான நவீன படங்களில் நாதஸ்வரம், மிருதங்கம் போன்ற சாஸ்த்ரீய
கருவிகளையும் பயன்படுத்தி உள்ளார்.

அவரின் பின்னணி இசை வெள்ப்படுதும் உணர்வுகள் நிச்சயம் ஒரு ரிசர்ச் மெட்டீரியல். அதேசமயம், ரஹ்மானே சொன்னதுபோல் அவரின் இசை ஒரு
பாமரனுக்கும் புரியும் விதம் எளிமையானது. அதனால் தான் பாலமுரளிகிருஷ்னா சொன்னார், பல்லாயிரம் இசை வடிவங்களையும் ராஜா விதிமுறை மீராமல்
மாராமல் கொடுத்துள்ளார்.

எல்லோரும் சொல்வதுபோல், ராஜா ரஹ்மான் இருவருமே சாதனையாளர்கள் தான், ஆனால் ரஹ்மான் போன்ற (ஆஸ்கர் வென்ற\வெல்லாத) பலப்பல
இசையமைப்பாளர்கள் உலகளவில் உள்ளனர். ராஜா போன்ற மிகவும் தனித்துவம் வாய்ந்த இசையர்கள் ரொம்ப ரேர். அதுதான் மிகமுக்கிய வித்தியாசம்.

ராஜா கிட்டதட்ட மொசார்ட், பீத்தோவென் வகையரா. 250 ஆண்டுகளுக்குப்பின்னரும் மொசார்ட் இசை கொண்டாடப்படுகிறது. இந்த உலகமேதைகளைவிட பலப்பல
மடங்கு சிரியவர்தான் ராஜா, மர்றவர்களை விட அவர் அதிகம் வெஸ்டர்ன் (ஃபுஷன் மற்றும் தனியிசை) கொடுத்திருக்கிறார். ஆனால், சும்மா ஒரு பத்துபாட்டு
போட்டுவிட்டு ரஹ்மான் மொசார்ட் ஆஃப் மெட்ராஸ் பட்டத்தை தட்டிவிட்டார். மேற்கத்திய இசையுல் வேறு எந்த இந்திய இசையர்களையும் விட அதிக
எண்ணிக்கை மற்றும் தரமும் வாய்ந்த ராஜாவே மொசார்ட் ஆஃப் இந்தியா. அவரின் ராக்கம்மா பாடல் முழுக்க ஒரு வெஸ்டர்ன் கம்போசிஷன். அதற்கு
பிபிசியின் சிறந்தபாடல் பரிசும் கிடைத்தது.ரஹ்மான் சும்மா அங்கே இங்கே கொஞ்சம் வெஸ்டர்ன் (பாம்பே ட்ரீம்ஸ் உள்பட) பண்ணியிருக்கிரார்.எண்ணிக்கை
கம்மிதான்.

பாமரனுக்கும் பண்டிதனுக்கும் ஒரு பாலம் போன்ற இசை ராஜாவின் இசை. அதை தரத்தில் மட்டுமல்ல எண்ணிகையிலும் ரிச்சான கற்பனையிலும் வெல்ல இனி
ஒருவன் பிறக்கவேண்டும்.
(contd on next post)

tekvijay said...

நம்மவர்களிடம் உள்ள பிரச்சனை என்னவென்றால் ஒருவனின் இசையை கேட்டு, பிடிக்கலைன்னா திட்டுவார்கள் பிடித்தால் உணர்சிவசப்பட்டு செண்டிமெண்டின்
எல்லைக்கே போய், சிலசமயம் ஆளின் தகுதிக்குமீறியும் பாராட்டுவார்கள், இல்லை திட்டுவார்கள். இந்த இரண்டைவிட்டால் வேரொன்றும் தெரியாது. Music
Appriciation What to expect in music, critical technical & layman's review இதெல்லாம் ஒரு மண்ணும் பண்ணமாட்டான்.
பாரதியாரயும் கூட இப்படித்தான், நம் முன்னோர்களில் பலர் அவரை தூற்றினர், நம் தலைமுறையில் கொண்டாடினோம் ஆனால் எதற்கு என்று யாராவது
யோசித்தானா?? அவர் காலகட்டத்தில் வேறு இலக்கியவாதிகளிடம் இல்லவே இல்லாத ஒரு சிறப்பு அவரிடம் உள்ளது. அதை எந்த தமிழ் வாத்திமாரும், எந்த
இலக்க்யவாதியும் எனக்கு சொல்லியதில்லை.(முடிந்தால் நீங்கள் ட்ரை பண்ணுங்கள்) பாரதிக்கே இந்த நிலமைதான்! சமீபத்திய கமல் படங்களில் உள்ள
நுண்ணரசியல், நுணுக்கங்கள், இவற்றையெல்லாம் அலச எந்த ஒரு தமிழ் பத்திரிக்கையும் இல்லை. ஆனால் 20 25 வயது பொடியஙள் சூப்பராக அலசுகின்றனர்,
இணையத்தில். அதுபோல்தான் ராஜாவின் இசையை அலச ஒருத்தரும் வரமாட்டேன்கிறார்கள். அவரின் 80 90 களின் பல இசையும் ரிசர்ச் மெட்டீரியல்கள்.

இங்கே உள்ளவன்களும் ஆஸ்கர், உலகப்புகழ் தவிர ஒரு மண்ணையும் பேசமாட்டேன்கிறார்கள். அப்போ வெற்றிபெராத கலைஞ்சர்கள் எல்லாம் ஜெயித்தவர்களை
விட திரமை குறைந்தவர்கள் என்பதுபோல் வரும். அடு எப்படி சரியாகும். மொசார்ட் பீத்தோவென் உள்பட ஜெயிக்காத ஆனால் மிகவும் திறன்வாய்ந்த
இசையர்கள் இந்த உலகத்தில் நிறைய உண்டு. ராஜா முழுக்க முழுக்க இடதுமூளைகாரர், அவருக்கு ரஹ்மான் போல் கிராப் வைத்துக்கொள்ளவோ உலக
தொடர்புகளை அதிகரித்துக்கொள்ளவோ வெளிநாடு செல்லவோ ஆர்வம் வரவே வராது. உள்ளூரில் இங்கே இசையைத்தவிர வேறு எதையும் யோசிக்கவே
யோசிக்காது அந்த மூளை.

எனக்கு பாலமுரளிகிருஷ்னாவின் தொடர்பெல்லாம் கிடையாது. அவரைத்தெரிந்தவர்கள் அணுகமுடித்தவர்கள் யாரேனும், இந்திய சினிமாவில் ராஜாவை
மிஞ்சியவர்கள் யாரேனும் உள்ளார்களா என்று கேட்டு சொல்லுங்கள். அந்த பதிலுக்க்கான காரணத்டையும் அவரிடம் கேளுங்கல், அப்போது புரியும்.

மற்றபடி, ரஹ்மானைத்தவிர எந்த இந்திய இசையமைப்பாளர்களும்(சினிமாவிலும்சரி, வெளியிலும் சரி)உலகளவில் அவர்போல் பிரபலமில்லை தான். அதனால்
இந்தியாவிலேயா ரஹ்மான் மட்டும் தான் சிறந்தவர் என்றும் ராஜா, நௌஷாத், ஃபதேக் அலிகான், பர்மன், தியாகராஜ பாகவதர் எல்லோரும் அவருக்குக்கீழேதான்
என்று ஆகிவிடுமா என்ன?!?

சி.வேல் said...

தமிழ் திரைஇசை இளையராஜாவுடன் முடிகிறது.தன் முன் இருந்த ஜாம்பவான்களிடம் இருந்து அடுத்தக் கட்டத்திற்கு அதை மேம்படுத்தி கொண்டுவந்து
இசையின் சகல பரிமாணமும் காட்டியாகிவிட்டது.

ISai: Illayraja (No other Choice)

சி.வேல் said...

Excellent Comments Silicon Sillu ?

Nanum Repeat

சி.வேல் said...

Oscar ellam enna dupuku, enga raja pola , thalata mudiyuma, thungavaikamudiyuma,
raja is god, raja always god

சி.வேல் said...

ராஜா பேர்ல தனி வலைப்பூ தொடங்கி தினமும் ஆளாளுக்கு அவரோட பாடல்களைப் பகிர்ந்துக்குவோமா?

Thanks Parisal
Nanum ready

Kaargi Pages said...

பதிவை படித்து முடித்து மறுமொழிகளைப் படிக்க ஆரம்பித்த போதே டாக்டர் புரூணோவையும் எதிர்பார்த்தேன். அவரும் ஏமாற்றவில்லை.

முதலில் இந்தியில் இசை அமைப்பது இந்தியப் புகழ் பெற்றுவிட்டதற்கான ஒரு பென்ச்மார்க் என்பது போலவும். ஹாலிவுட்டில் இசையமைப்பது
உலகப் புகழுக்கான பென்ச்மார்க் போலவும் உளறிக் கொண்டிருப்பதை எப்போது நீங்கள் விடப்போகிறீர்கள் என்று தெரியவில்லை.

ரஹ்மான் ஒரு திறமைசாலி என்பதை மறுக்கவில்லை. ஆனால் அவர் இளையராஜாவை தாண்டிச் சென்றாரா? அப்படி அவர் இளையராஜாவைத்
தாண்டிவிட்டார் என்று நீங்கள் சொல்வதானால் அவர் இளையராஜாவால் கையாள முடியாத எந்த வகை இசை வடிவத்தை உருவாக்கினார் என்பதை
நீங்கள் விளக்க வேண்டும்.

அதே நேரம் இளையராஜாவோ தனக்கு முன் இருந்த எல்லா திரைஇசை அமைப்பு முறைகளையும் மரபுகளையும் வடிவங்களையும் (மோனோடோ ன்)
உடைத்து இசையை ஒரு பலவண்ணக் கலவையாக பாமரனுக்குக் காட்டினார். நாட்டுப்புற மெட்டு கருநாடக மெட்டாக உருமாறுவதாகட்டும்..
தமிழக நாட்டுப்புற இசையும் கருநாடக இசையும் மேற்கத்திய செவ்வியல் இசையும், ஜாஸ் ராக் போன்ற மேற்கத்திய இசை வடிவங்களும் ஒன்றன்
மேல் ஒன்றாக - ஒன்றில் ஒன்று கலந்து - ஒன்றை ஒன்று தொடர்வது போல் - ஒன்று இன்னொன்றாக உருமாறுவது போல - ஒன்றின் வடிவத்தில்
இன்னொன்றின் உள்ளடக்கம் கொண்டு - இப்படி அவர் செய்யாத பரிசோதனை முயற்சிகள் இல்லை. அவரின் ஒவ்வொரு பரிசோதனை முயற்சியும்
இன்று வரையில் ஒரு ரீங்காரமாய் நம்மை விட்டு அகலாமல் சுற்றிச் சுற்றி வந்து கொண்டே இருக்கிறது..

இந்த மறுமொழியை டைப் அடிக்கும் போதே கணினியில் இளையராஜாவின் இசையில் போன மாதம் வெளியான ஒரு கன்னட பாடலான
"ஹொடதவனே" ஓடிக்கொண்டிருக்கிறது ( http://www.youtube.com/watch?v=RHSpqVaud80 ) இந்த மனிதருக்கு 67 வயதாகி விட்டது என்பதை அவ
ரைக் கண்டிராத ஒருவர் இந்தப் பாடலைக் கேட்டால் ஒப்புக் கொள்ளவே மாட்டார். ஒரு 'குத்து' பாட்டிற்குள் ஆங்காங்கே மெல்லியதான ஒரு
மெலடி - இப்போதைய "குத்தர்களின்" ( ஏ.ஆர், ஹாரிஸ், யுவன், தொடங்கி இமான் வரையிலான) பாணியை கேலி செய்யும் ஒரு
ஆர்கெஸ்ட்ரேஷன்.. அந்த ரிதம்... ஓ...

ஏ.ஆர் ரஹ்மான் சில குறிப்பிடத்தகுந்த பாடல்களைக் கொடுத்திருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. அவரின் தளம் வேறு. அவர் இன்றைய
உலகமயமாக்கல் யுகத்தின் பிரதிநிதி. இளையராஜாவோ எழுபதுகளில் கொந்தளித்துக் கொண்டிருந்த ஒரு உலகத்தை பிரதிபலித்தவர் -
கட்டுமீறத் துடித்த இளைஞர்களின் - ஒரு வெடித்துக் கிளம்பிய ஒரு குரல். அன்னக்கிளியின் டைட்டில் பி.ஜி.எம்மில் பீறிட்ட அந்த வயலின்..
என்பதுகளில் அவரின் இசையில் பிரதான இடத்தைப் பிடித்திருந்த அந்த மெட்டாலிக் ஸ்ட்ரிங் கிடார்கள்.. அவரது பாடல்களில் இடம்பெற்ற
ஒவ்வொரு இண்டர்லூட்களிலும்(இடைஇசை) ப்ரீலூட்களிலும் (துவக்கஇசை) நமது நரம்புகளைப் பிடித்து இழுத்த அந்த தந்திக் கம்பிகள்.. அவர்
அன்றைய தனது சூழலைப் பிரதிபலித்தார்.. அந்த காலகட்டத்தின் இளையராஜாவின் இசை விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டியது

இன்றைய மாறிப்போன சமூக சூழல் பாஸ்ட் புட் கேட்கிறது. ரஹ்மான் சிறப்பான பீஸ்ஸா தயாரிப்பாளர்.. அவர் தனது சூழல் எதைக் கேட்கிறதோ
அதை விற்கிறார்.. இளையராஜாவோ தனது படைப்பின் வடிவத்தை சூழலின் டிமாண்டிற்கும் உள்ளடக்கத்தை தனது ஒரிஜினாலிட்டியுடனும் கொடுக்க
முடியுமா என்று பரிசோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்... கடந்த ஒரு பத்தாண்டுகளாக அந்தப் பரிசோதனையின் சில வெளிப்பாடுகள் ஏற்றுக்
கொள்ளப்பட்டது ( சில உதாரணங்கள் - ஹேராம், விருமாண்டி, சிறைச்சாலை, ஆதினகலூ(கன்னடம்), நான் கடவுள், ப்ரேம் கஹானியின்(கன்னட)
பாடல்கள், வால்மீகி,) சில ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவர் தனது காலம் முழுவதும் பரிசோதனைகள் செய்து கொண்டிருப்பார்.. அந்தப் பரிசோதனைகள் எதிர்காலத்தில் இசை ஆய்வு செய்யும்
மானவர்களுக்கு ஒரு புதையலாக காத்திருக்கும்.

நாளை சந்தையில் வாடிக்கையாளர்கள் பர்கர் வேண்டும் என்று கேட்டால் ரஹ்மான் சிறப்பான பர்கர்களை விற்கத்துவங்குவார் - அவர் ஒரு நல்ல
திறமையான வியாபாரி. பர்கரோ பீஸாவோ ஒரு ஏழு மணி நேரம் போனால் கழிந்து போகும்.

ROSAVASANTH said...

kaargi pages, உங்கள் மறுமொழியை விரும்பி வாசித்தேன். எனக்கும் இதே கருத்துக்கள் உள்ளன. நீங்கள் சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள் - குறிப்பாக நான்காவது பத்தியில்.

ROSAVASANTH said...

சாரு நிவேதிதா ஒரு அறிவில் சிறந்த முட்டாள். இப்படி எதையாவது, அதன் மூலக்கருத்தை யாரிடமாவது கேள்விப்பட்டு உருமாற்றி மிகைப்படுத்தி வாந்தி எடுப்பார் புருனோ இப்படி எல்லாம் சாரு எடுத்ததை திரும்ப எடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. (சமீபமாய் அவரை படித்ததில்லை எனினும்).

புருனோ Bruno said...

//இந்தியாவிலேயா ரஹ்மான் மட்டும் தான் சிறந்தவர் என்றும் ராஜா, நௌஷாத், ஃபதேக் அலிகான், பர்மன், தியாகராஜ பாகவதர் எல்லோரும் அவருக்குக்கீழேதான்
என்று ஆகிவிடுமா என்ன?!?//

ஆகாது ... மிகச்சரியான கேள்வி !!

அதே போல் இந்தியாவிலேயா ராஜா மட்டும் தான் சிறந்தவர் என்றும் ரஹ்மான், நௌஷாத், ஃபதேக் அலிகான், பர்மன், தியாகராஜ பாகவதர் எல்லோரும் அவருக்குக்கீழேதான்
என்று கூறுவது தான் எரிச்சலை ஏற்படுத்துகிறது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்

:) :) :)

புருனோ Bruno said...

//முதலில் இந்தியில் இசை அமைப்பது இந்தியப் புகழ் பெற்றுவிட்டதற்கான ஒரு பென்ச்மார்க் என்பது போலவும். ஹாலிவுட்டில் இசையமைப்பது
உலகப் புகழுக்கான பென்ச்மார்க் போலவும் உளறிக் கொண்டிருப்பதை எப்போது நீங்கள் விடப்போகிறீர்கள் என்று தெரியவில்லை.//

இந்தியப்புகழ் பெற்றதற்கான உங்களின் பென்ச் மார்க் என்ன

உலகப்புகழ் பெற்றதற்கான உங்களின் பென்ச் மார்க் என்ன

என்று விளக்கினால் நலம்.

புருனோ Bruno said...

//இளையராஜாவோ எழுபதுகளில் கொந்தளித்துக் கொண்டிருந்த ஒரு உலகத்தை பிரதிபலித்தவர் -
கட்டுமீறத் துடித்த இளைஞர்களின் - ஒரு வெடித்துக் கிளம்பிய ஒரு குரல். அன்னக்கிளியின் டைட்டில் பி.ஜி.எம்மில் பீறிட்ட அந்த வயலின்..
என்பதுகளில் அவரின் இசையில் பிரதான இடத்தைப் பிடித்திருந்த அந்த மெட்டாலிக் ஸ்ட்ரிங் கிடார்கள்.. அவரது பாடல்களில் இடம்பெற்ற
ஒவ்வொரு இண்டர்லூட்களிலும்(இடைஇசை) ப்ரீலூட்களிலும் (துவக்கஇசை) நமது நரம்புகளைப் பிடித்து இழுத்த அந்த தந்திக் கம்பிகள்.. அவர்
அன்றைய தனது சூழலைப் பிரதிபலித்தார்.. அந்த காலகட்டத்தின் இளையராஜாவின் இசை விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டியது//

இதை முழுவதும் ஏற்றுக்கொள்கிறேன்

ஆனால் இளையராஜா மட்டுமே இசையப்பாளர் என்பதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது

புருனோ Bruno said...

//நாளை சந்தையில் வாடிக்கையாளர்கள் பர்கர் வேண்டும் என்று கேட்டால் ரஹ்மான் சிறப்பான பர்கர்களை விற்கத்துவங்குவார் - அவர் ஒரு நல்ல
திறமையான வியாபாரி. பர்கரோ பீஸாவோ ஒரு ஏழு மணி நேரம் போனால் கழிந்து போகும்.//

ஓகோ !!!

உங்கள் ஊரில் சமைக்கப்படும் சாதம் மட்டும் (வடாம் போடாவிட்டாலும் கூட) 2 வருடம் கெடாமல் இருக்குமோ

அது சரி

சங்கமம், புதியமுகம் போன்ற படங்களின் பாடல்களை நீங்கள் கேட்டதேயில்லையா :) :) :)

புருனோ Bruno said...

//புருனோ இப்படி எல்லாம் சாரு எடுத்ததை திரும்ப எடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. //

மன்னிக்க வேண்டும் சார்

இது எல்லாம் எனது சொந்த கருத்து. நான் சாருவை படித்து எழுதுவதாக நீங்கள் கூறுவது மிகவும் தவறானது. ஆதாரமற்றது. விஷமத்தனமானது.

உங்கள் வயதிற்கு சற்றும் பொருத்தமில்லாத தரக்குறைவான விமர்சணம் என்பது எனது கருத்து

of course, தன்னை விட முன்னேறிய திறமைசாலியை பார்த்து “கிரிக்கெட்டில் கவர்ச்சி நடிகை” என்று ஒரு மூத்தவர் கூறிய தரங்கெட்ட விமர்சணத்தை விட உங்கள் கருத்து ஒன்றும் கேவலமானதல்ல என்பது வேறு விஷயம் :) :) :)

வயதான மூத்தவர்கள் எவ்வளவு தரம் தாழ்ந்து கீழ்த்தரமாக விமர்சித்தாலும், அவர்களின் வயதிற்கு மரியாதையாக அதற்கு வரிக்கு வரி பதிலளிக்காத நல்ல பழக்கத்தை எனக்கு ஒருவர் தனது செயல்கள் மூலம் கற்றுத்தந்திருக்கிறார் !!

எனவே உங்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை :) :) :) :)

logesh said...

mr. bruno,
though i do not subscribe your views regarding ilaiyaraja sir, i accept that ilaiyaraja sir should have avoided the comment " glamour actress in cricket field", which was published in ananda vikatan during 1997, if my memory serves me correct. i dont know the context of the comment, still it is bad to comment like that.
btw, do u have that interview? because being an ardent fan of ilaiyaraja i badly need that interview.

Unknown said...

<<<
kavi said...
2:04 PM
//இளையராஜாக்கு பின்னால் இசையை அடுத்த தளத்திற்கு கொண்டு போனது இசைப்புயல்தான்//

இளையராஜாவின் சகாப்தம் இன்னும் முடியவில்லை, அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. முடியவும் முடியாது. தயவு செய்து இளையராஜாவிற்குப் பின் ரகுமான் என சொல்லாதீர்கள். அவருடைய இடத்தை தொட ரகுமான் எவ்வளவோ தூரம் போக வேண்டியிருக்கிறது.
>>>

அய்யோ காமெடி காமெடி... :D

Socrates said...

To bruno/ logesh:

Can you Post the question raised for below answer?

" glamour actress in cricket field"

Socrates said...

Whether you are a Ilayaraja fan or ARR fan whoever it is, if you want to argue that your favorite music director is better than the others give hardcore evidence to support your argument. Do not just like that say that ARR has set the Trend, So he is better Or Ilayaraja has composed this song and he is better. You may like your favorite. It does not mean that your favorite music director is better than others. Your wishes are different from the facts. To be an active participator and to participate in a healthy discussion always support your arguments with solid evidence.

I will start with my arguments that Ilayaraja is the all time best for music of any kind.

First I will answer to the following words by Bruno discussion.

"Accept it or not, Rahman HAS replaced Raja. If you are comparing achievements, it is totally unfair to compare one's 35 year career with other's 15.

Rahman has replaced Raja. In what sense Rahman replaced Raja? Being the No 1 music director in Tamilnadu / India/ world ?

Can any one of you give me a department in Music where any music director has achieved something better than Ilayaraja? I will discuss in detail his achievement in all departments of music to my knowledge. If I am wrong or If you know something I missed I welcome a healthy argument supported by solid arguments.

I claim Ilayaraja to be uncomparable in the following concerns.

1. Songs
2. Background Music
3. Trend Setter
4. Consistency
5. Carnatic Music
6. Albums
7. Multi Lingual Perfomance
8. Customizing Songs for directors/actors
9. Technology in music
10. His magnanimity
11. His responsibity in making the film A super hit
12. His Productivity - Quickness & Excellence
13. His professional Composing style
14. Promoting the cine industry / consumer electronics

Karthik Nagarajan said...

Pls read this very objective article...

http://www.outlookindia.com/article.aspx?239907

Unknown said...

நல்ல கேள்வி, லோகேஷ்! இளையராஜாவின் அந்தப் பேட்டி புருனோவிடம் இருந்தாலும் அவர் அதைப் பொதுவில் வெளியிட மாட்டார்! காரணம் - இளையராஜா "நடிகை" என்று தான் சொன்னார்; "கவர்ச்சி நடிகை" என்று சொல்லவில்லை. இவ்விரண்டு சொற்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன - குறிப்பாகக் 'கவர்ச்சி நடிகைகள்' என்றால் கேவலம் என்றென்னும் 'நல்லவர்கள்' உள்ள நம் நாட்டில்! அவசரப்பட்டு நீங்களும் "இளையராஜா அப்படிப் பேசியிருக்கக் கூடாது" என்றெல்லாம் சொல்லி புருனோ போன்று இளையராஜாவை Character Assasination ​​​​​​​​​​​செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்போரின் பணியை மேலும் சுலபமாக்க வேண்டாம்!