Thottal Thodarum

Aug 11, 2009

Hangover

மூன்று லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர் அன்பும், ஆதரவும் தந்து கொண்டிருக்கும் சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..

hg

நான்கு நண்பர்களில் ஒருவனது திருமணத்துக்கு ரெண்டு நாளுக்கு முன் லாஸ்வேகாஸுக்கு டிரிப் போக, ஓட்டலில் ஒரு பெரிய சூட்டை போட்டு தங்குகிறார்கள். ராத்திரி ஹோட்டலின் மொட்டை மாடியில் பார்ட்டியை ஆரமிபிக்க, விடிந்தால் ஹோட்டல் ரூமே கந்தர்கோளமாகியிருக்க, பாத்ரூமில் போனால் உச்சா போகுமிடத்தில் பச்சாவாக ஒரு புலி உட்கார்ந்திருக்க, வெளியே ஒரு சேவலும், கப்போர்டில் ஒரு குழந்தையும், ரூமில் உள்ள ஒருவனது பல் மொத்தமாய் போயிருக்க,  கல்யாண பையனை காணோம்.  சரி காரை கொண்டு போய் தேடலாம் என்றால் ஒரு போலீஸ் காரை ஓட்டல் நிர்வாகம் கொடுக்கிறது. இதைத்தான் நீங்கள் ராத்திரி ஓட்டி வந்தீர்கள் என்று.
(L-r) Alan (ZACH GALIFIANAKIS), Stu (ED HELMS), Doug (JUSTIN BARTHA) and Phil (BRADLEY COOPER) raise a toast on the rooftop to commence Doug's bachelor party in Warner Bros. Pictures' and Legendary Pictures' comedy "The Hangover," a Warner Bros. Pictures release.
PHOTOGRAPHS TO BE USED SOLELY FOR ADVERTISING, PROMOTIONAL, PUBLICITY OR REVIEWS OF THIS SPECIFIC MOTION PICTURE AND TO REMAIN THE PROPERTY OF THE STUDIO. NOT FOR SALE OR REDISTRIBUTION.

முதல் நாள் இரவு நடந்தது எதுவும் யாருக்கும் ஞாபகமில்லை அவ்வளவு மப்பு. சரி என்ன நடந்த்து என்று தேடிப்போனால் திடீர், திடீர் என ஒரு சைனீஸ் மாப்பியா கும்பல் ஒன்று துரத்துகிறது. இதற்கு நடுவில் மூவரில் ஒருவர் ஸ்டிரிப்பர் க்ளப்பில் உள்ள ஒரு பெண்ணை ராவோடு ராவாக திருமணம் செய்திருக்க, அவளுடய குழந்தைதான் ஹோட்டல் குழந்தை என்று கண்டுபிடிக்க,  திடீரென காரின் டிக்கியிலிருந்து ஒரு அம்மண சைனன் எல்லாரையும் அடித்து விட்டு ஓட,  ஓட்டல் ரூமில் மைக் டைசன் ஓங்கி ஒரு குத்து விட்டு ஒழுங்கு மரியாதையாய் புலியை வீட்டிற்கு கொண்டு வந்து சேர்க்க சொல்ல, ஒரு பக்கம கல்யாண பையனை காணோம், இன்னொருபக்கம், சைனீஸ்மாபியா, முதல் நாள் நடந்தவைகள்  ஞாபகமில்லாமை, புலி,  குழந்தை என்று ஒரே காமெடி கூத்துதான் போங்கள்.
_MG_4160.DNG

ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படங்களுக்குண்டான அத்துனை விஷயங்களுடன் ஒரு  காமெடி படம்.  சும்மா விழுந்து, விழுந்து சிரிக்க வைக்கும் படம்.  அதிலும் பாத்ரூமில் புலிக்கு மயக்க மருந்து கொடுத்து, புலியை ஹோட்டலுக்கு தெரியாமல்  கடத்தி, பாதி வழியில் புலிக்கு முழிப்பு வந்து நடக்கும் களேபரங்கள் சொன்னால் புரியாது.. பாருங்கள். திரைக்கதையின் முக்கியமான விஷயமே அந்த ஒரு நாள் இரவு நடந்ததை ப்ளாஷ்பேக்காக சொல்லாமல், எண்ட் கார்டு போடும் போது ஸ்டில்களாய் காட்டி படம் முடியும் போதும் நின்று சிரிக்க வைக்கிறார்கள்.

இந்த படம் எங்கள் அண்ணன் ரமேஷ்வைத்யாவுக்கு சமர்ப்பணம்

Hangover – Dont Miss
டிஸ்கி
(L-r) Alan (ZACH GALIFIANAKIS), Phil (BRADLEY COOPER), Stu (ED HELMS) and Doug (JUSTIN BARTHA) check in with reception at Caesars Palace in Warner Bros. Pictures' and Legendary Pictures' comedy "The Hangover," a Warner Bros. Pictures release.
PHOTOGRAPHS TO BE USED SOLELY FOR ADVERTISING, PROMOTIONAL, PUBLICITY OR REVIEWS OF THIS SPECIFIC MOTION PICTURE AND TO REMAIN THE PROPERTY OF THE STUDIO. NOT FOR SALE OR REDISTRIBUTION.

வெறும் 27 மில்லியன் செலவில் எடுக்கப்பட்டு இதுவரை சுமார் பத்து நாட்களில் 104.8 மில்லியன் சம்பாதித்து கொடுத்திருக்கும் படம். இந்த படத்தை லீகலாய் ரைட்ஸ் வாங்கி இந்தியில் எடுக்கிறார்கள். தமிழில் கமல் அண்ட் கோ காம்பினேஷனில் வந்தால் சும்மா பின்னும். நேத்து ராத்திரி சென்னையில் நிலநடுக்கமா என்ன? நான் படம் பார்த்துவிட்டு விழுந்து, விழுந்து சிரித்து கொண்டிருந்ததால் தெரியவில்லை.

Technorati Tags: ,


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

68 comments:

சங்கா said...

அருமை அண்ணே, ஸாரி தம்பி நீங்கதான் யூத்தாச்சே!. என்னுடைய முந்தைய இடுகையில் இந்தப் படத்தைப் பற்றி என் அலுவலகத் தோழி சொல்லியதை எழுதியிருந்தேன். தியேட்டரில் அவள் சிரித்த சிரிப்பில் பக்கத்திலிருந்தவர்கள் எழுந்து போய் விட்டார்களாம்.

Sukumar Swaminathan said...

மூன்று லட்சம் ஹிட்ஸ் அடித்ததை கொண்டாடும் விதமாக இன்று பின்னூட்டம் போடும் அனைவருக்கும் இந்த படத்தின் டி.வி.டி.யினை இலவசமாக அனுப்பி வைப்பேன் என அறிவித்த அண்ணன் கேபிள் சங்கர் வாழ்க....!

Busy said...

//நேத்து ராத்திரி சென்னையில் நிலநடுக்கமா என்ன? நான் படம் பார்த்துவிட்டு விழுந்து, விழுந்து சிரித்து கொண்டிருந்ததால் தெரியவில்லை.//


Athanalatha Pogambam Vanthathooo..............

Sorry Timing ..............

சங்கா said...

மூன்று லட்சம் ஹிட்ஸுக்கு வாழ்த்துகள்

என். உலகநாதன் said...

வாழ்த்துக்கள் சங்கர்.

நட்புடன் ஜமால் said...

லட்சம்
லட்சம்
லட்சம்


ஹிட்ஸுகளுக்கு வாழ்த்துகள்.

----------------

படம் இருக்குது இன்னும் பார்க்கலை.

Ravi said...

one of the very intelligent comedy movie i ever saw! it was absolutely hilarious!

a must watch!

பிரபாகர் said...

அண்ணா,

படிக்கும் போதே பாக்கனும் போலிருக்கு. தேன்க்ஸ் அண்ணா.

நீங்க ரொம்ப நல்லாருக்குன்னு விமர்சனம் பண்ணின ஒரு சில படங்கள்ல இதுவும் ஒன்னுங்கற பெருமை இந்த படத்துக்கு கிடைச்சிருக்கு.

அண்ணா, ஒரு சின்ன விண்ணப்பம்! படம் விமர்சனம் முடிஞ்சதும் பன்ச்சிங்க ஏதாச்சும் புதுசா ஒரு சிம்பல் தரலாமே?

மூனு லட்சம் ஹிட்ல நம்ம ஹிட் எத்தனைன்னு யோசிச்சிகிட்டிருக்கேன்.

கலக்கும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...

பிரபாகர்.

Cable Sankar said...

/அருமை அண்ணே, ஸாரி தம்பி நீங்கதான் யூத்தாச்சே!. என்னுடைய முந்தைய இடுகையில் இந்தப் படத்தைப் பற்றி என் அலுவலகத் தோழி சொல்லியதை எழுதியிருந்தேன். தியேட்டரில் அவள் சிரித்த சிரிப்பில் பக்கத்திலிருந்தவர்கள் எழுந்து போய் விட்டார்களாம்//

நெஜமாகவே செம காமெடி சங்கா..

Cable Sankar said...

/மூன்று லட்சம் ஹிட்ஸ் அடித்ததை கொண்டாடும் விதமாக இன்று பின்னூட்டம் போடும் அனைவருக்கும் இந்த படத்தின் டி.வி.டி.யினை இலவசமாக அனுப்பி வைப்பேன் என அறிவித்த அண்ணன் கேபிள் சங்கர் வாழ்க....!
//

ஒன்ணும் பிரச்சனையில்லை டவுன்லோட் லிங்க் எடுத்து கொடுத்துருவேன். சுகுமார்

Cable Sankar said...

/Athanalatha Pogambam Vanthathooo..............

Sorry Timing ..............
//

எதுக்கு சாரியெல்லாம்.. ஜோக் அடிக்ககூடாதா என்ன..?பிஸி

Cable Sankar said...

நன்றி சங்கா.
நன்றி உலகநாதன்
நன்றி நட்புடன் ஜமால்.

உங்கள் வாழ்த்துகளுக்கும் பின்னூட்டத்திற்கும்.

Cable Sankar said...

/one of the very intelligent comedy movie i ever saw! it was absolutely hilarious!

a must watch!//

ஆங்காங்கே ஓட்டைகள் இருந்தாலும்.. அதையெலலம் மறக்கடிக்க கூடிய புத்திசாலிதனமான திரைக்கதை.

Cable Sankar said...

/அண்ணா,

படிக்கும் போதே பாக்கனும் போலிருக்கு. தேன்க்ஸ் அண்ணா.

நீங்க ரொம்ப நல்லாருக்குன்னு விமர்சனம் பண்ணின ஒரு சில படங்கள்ல இதுவும் ஒன்னுங்கற பெருமை இந்த படத்துக்கு கிடைச்சிருக்கு.

அண்ணா, ஒரு சின்ன விண்ணப்பம்! படம் விமர்சனம் முடிஞ்சதும் பன்ச்சிங்க ஏதாச்சும் புதுசா ஒரு சிம்பல் தரலாமே?

மூனு லட்சம் ஹிட்ல நம்ம ஹிட் எத்தனைன்னு யோசிச்சிகிட்டிருக்கேன்.

கலக்கும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...
//

நன்றி பிரபாகர். உங்கள் பின்னூட்டம் என்னை மேலும் உற்சாகபடுத்துகிறது..

Bala said...

வாழ்த்துகள் கேபிள். 300000 hits ku
இதே கதை கேபிள்லின் வாழ்க்கையில் வந்தால்........................
யுத் கேபிள்இன் நிலை என்ன ஆகுமோ??????

தாத்தா அதம இருந்த சரி...

யாசவி said...

it was long time after I receive a strong positive comment for english comedy movie

:-))

நையாண்டி நைனா said...

நான்கூட நீங்க யூத்துகள் எல்லாம் சேர்ந்து அடிச்ச லூட்டியை சொல்லுவீங்கன்னு வந்து பார்த்தா.....

ஆங்கிலப்படமா?

சரி முடிஞ்சா பார்கிறேன்.

குசும்பன் said...

//நேத்து ராத்திரி சென்னையில் நிலநடுக்கமா என்ன? நான் படம் பார்த்துவிட்டு விழுந்து, விழுந்து சிரித்து கொண்டிருந்ததால் தெரியவில்லை.

//
அம்புட்டு பெரிய உருவமா இல்லீயே நீங்க, உங்க இடுப்பு சைஸ் கூட 18தானே அப்படி இருக்கும் பொழுது நீங்க விழுந்து விழுந்து சிரிச்சா எல்லாம் பூகம்பம் வராது:)

சுனாமிதான்!

அனுஜன்யா said...

இங்கேயும் பிரெண்ட்ஸ் இந்தப் படத்தை பற்றி சிலாகித்தார்கள். லிங்க் கொடுங்களேன்.

மூன்று இலட்சத்திற்கு வாழ்த்துகள். ஆமா, ஒரு நாளைக்கு முப்பது பேர் வீதம் (என் தளத்திற்கு) அதுக்கு என்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகும்?

keep rocking Sankar.

அனுஜன்யா

ghost said...

குசும்பன் said...
//நேத்து ராத்திரி சென்னையில் நிலநடுக்கமா என்ன? நான் படம் பார்த்துவிட்டு விழுந்து, விழுந்து சிரித்து கொண்டிருந்ததால் தெரியவில்லை.

//
அம்புட்டு பெரிய உருவமா இல்லீயே நீங்க, உங்க இடுப்பு சைஸ் கூட 18தானே அப்படி இருக்கும் பொழுது நீங்க விழுந்து விழுந்து சிரிச்சா எல்லாம் பூகம்பம் வராது:)

சுனாமிதான்!


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

VISA said...

//நான் படம் பார்த்துவிட்டு விழுந்து, விழுந்து சிரித்து கொண்டிருந்ததால் தெரியவில்லை.
//

athanaal thaan thalaivare nila nadukam he he he....

padam paarkum aavalai thoondi viteerkal. paarkirean....kamal tamilil edukalaam....aanaal eduthu kedukaamal irunthaal sari.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

எந்தத் தியேட்டர்ல ஓடுது..?!!!

ஜெட்லி said...

கூடிய விரைவில் பார்த்து விடுவேன் கேபிள் அண்ணே....
ஆமாம் hangover னா என்ன அண்ணே?....

Truth said...

ஓட்டு போட்டுட்டேன் அண்ணே.
இந்த படம் என்னோட to-see லிஸ்ட்ல இருக்கு. இன்னும் நேரம் கிடைக்கல. அநேகம இந்த வாரத்துக்குள்ள பாத்திருவேன். உங்க திரை விமர்சணம் சூப்பர்.

D.R.Ashok said...

மூன்று லட்சம் ஹிட்ஸ் அடித்ததை கொண்டாடும் விதமாக இன்று பின்னூட்டம் போடும் அனைவருக்கும் இந்த படத்தின் டி.வி.டி.யினை இலவசமாக அனுப்பி வைப்பேன்// repeatai...

//மூன்று இலட்சத்திற்கு வாழ்த்துகள். ஆமா, ஒரு நாளைக்கு முப்பது பேர் வீதம் (என் தளத்திற்கு) அதுக்கு என்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகும்? keep rocking Sankar. அனுஜன்யா//
அனுஜன்யா உங்கள் அடக்கதிற்கு அளவேவில்லையா..

R.Gopi said...

//தமிழில் கமல் அண்ட் கோ காம்பினேஷனில் வந்தால் சும்மா பின்னும். //

-**********

அண்ணே....பஞ்சதந்திரம் படத்த மனசுல வச்சுட்டு எம்புட்டு நாளு பேசுவீங்க??!!

இப்போ எல்லாம் அவர வச்சு எடுத்தா, டப்பா டான்ஸ்..... வேணாம் வுடுங்க....

தயாரிப்பாளருக்கு "பின்னால பின்னும்"......

க. பாலாஜி said...

மூன்று இலட்சத்திற்கு வாழ்த்துகள்... அப்படியே நாற்பது..ஐம்பது...நூறு....ம்ம்ம்...

வாழ்த்துக்கள் தல.

தராசு said...

அண்ணே,

காமெடி படமா, கண்டிப்பா பாக்கணும்.

அது சரி, ஹாட் ஸ்பாட்ல ஏன் ரிப்பீட் ஆகுது.

நாஞ்சில் நாதம் said...

கூடிய விரைவில் பார்த்து விடுவேன்

இராகவன் நைஜிரியா said...

நீங்க சொல்லிட்டீங்க... ஆனா படம் பார்க்க என்னா இங்கு வசதியில்லை.

ஒரு டிவிடி வாங்கி பத்திரமா வைங்க. அடுத்த தடவை ஊருக்கு வரும் போது வாங்கிக்கிறேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

படம் நல்லாருக்கும் போலயிருக்கே? எதில ஓடுது? (ஆமா சொன்னா உடனே சிட்டிக்குள்ள வந்துடறமாதிரிதான்..)

ஆதிமூலகிருஷ்ணன் said...

அனுஜன்யா கமெண்ட்.. செம்ம.. இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்..

T.V.Radhakrishnan said...

மூன்று லட்சம் ஹிட்ஸுக்கு வாழ்த்துகள்

ராஜராஜன் said...

படம் வந்து இத்தனை நாட்களுக்கு பிறகு தான் பார்த்திர்கள ?? நான் இந்த படத்த வந்த புதுசலையே பார்த்துட்டேன்.

எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு நேத்து உண்மையாலுமே பூகம்பம் தான் வந்ததா இல்ல நீங்க சிரிச்சதால சென்னை குளிங்கி போச்சா ??

ganesh said...

Nice post and a great blog. We just added your blogs to our tamil blogs section.
www.nrispot.com/tamil#7

Cable Sankar said...

/வாழ்த்துகள் கேபிள். 300000 hits ku
இதே கதை கேபிள்லின் வாழ்க்கையில் வந்தால்........................
யுத் கேபிள்இன் நிலை என்ன ஆகுமோ??????

தாத்தா அதம இருந்த சரி..//

பாலா உங்களுக்கு என் மேல என்ன கொலவெறி..?:)

Cable Sankar said...

/it was long time after I receive a strong positive comment for english comedy movie

:-))//

ஆமாம் யாசவி

Cable Sankar said...

/நான்கூட நீங்க யூத்துகள் எல்லாம் சேர்ந்து அடிச்ச லூட்டியை சொல்லுவீங்கன்னு வந்து பார்த்தா.....

ஆங்கிலப்படமா?

சரி முடிஞ்சா பார்கிறேன்.
//

நாங்க யூத்துங்க இப்படிதான் லூட்டி அடிக்கிறோம் ஆனா மட்டை ஆவறுதில்லை.

Cable Sankar said...

/சுனாமிதான்!//

என்னாது சுனாமியா.. அவ்வ்வ்வ்வ்

Cable Sankar said...

/சுனாமிதான்!


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
//

:(

Cable Sankar said...

/இங்கேயும் பிரெண்ட்ஸ் இந்தப் படத்தை பற்றி சிலாகித்தார்கள். லிங்க் கொடுங்களேன். //

டிவிடி கிடைக்கும் தலைவரே..

//மூன்று இலட்சத்திற்கு வாழ்த்துகள். ஆமா, ஒரு நாளைக்கு முப்பது பேர் வீதம் (என் தளத்திற்கு) அதுக்கு என்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகும்?//
இதுக்கு பேர்தான் தன்னடக்கமா தலைவரே..?

//keep rocking Sankar.

அனுஜன்யா
//

நன்றி தலைவரே..

Cable Sankar said...

/எந்தத் தியேட்டர்ல ஓடுது..?!//

சத்யமில.. தலைவரே..

Cable Sankar said...

/athanaal thaan thalaivare nila nadukam he he he....//

பூகம்பம் வந்ததில எல்லாருக்கும் நகைச்சுவை உணர்ச்சி ஜாஸ்தியாயிருச்சு.. போலருக்கே..

padam paarkum aavalai thoondi viteerkal. paarkirean....kamal tamilil edukalaam....aanaal eduthu kedukaamal irunthaal sari.//

கண்டிப்பாய் கமலை தவிர வேறு ஒருவர் செய்தால் ஒரு மாற்று குறைவாகத்தான் இருக்கும் விசா.

Cable Sankar said...

/கூடிய விரைவில் பார்த்து விடுவேன் கேபிள் அண்ணே....
ஆமாம் hangover னா என்ன அண்ணே?....
//

ஹாங் ஓவர்னா தலைகீழா தொங்கிறது.. ஜெட்லி :)

Cable Sankar said...

/ஓட்டு போட்டுட்டேன் அண்ணே.
இந்த படம் என்னோட to-see லிஸ்ட்ல இருக்கு. இன்னும் நேரம் கிடைக்கல. அநேகம இந்த வாரத்துக்குள்ள பாத்திருவேன். உங்க திரை விமர்சணம் சூப்பர்.
//

ஓட்டுக்கும், பின்னூட்டத்திற்கும்,மிக்க நன்றி ட்ரூத்.

Cable Sankar said...

//மூன்று லட்சம் ஹிட்ஸ் அடித்ததை கொண்டாடும் விதமாக இன்று பின்னூட்டம் போடும் அனைவருக்கும் இந்த படத்தின் டி.வி.டி.யினை இலவசமாக அனுப்பி வைப்பேன்// repeatai...//

உங்களுக்கும் டோரண்ட் லிங்க்தான்.

//மூன்று இலட்சத்திற்கு வாழ்த்துகள். ஆமா, ஒரு நாளைக்கு முப்பது பேர் வீதம் (என் தளத்திற்கு) அதுக்கு என்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகும்? keep rocking Sankar. அனுஜன்யா//
அனுஜன்யா உங்கள் அடக்கதிற்கு அளவேவில்லையா.//

ஆமா அசோக்..

Cable Sankar said...

/அண்ணே....பஞ்சதந்திரம் படத்த மனசுல வச்சுட்டு எம்புட்டு நாளு பேசுவீங்க??!!

இப்போ எல்லாம் அவர வச்சு எடுத்தா, டப்பா டான்ஸ்..... வேணாம் வுடுங்க....

தயாரிப்பாளருக்கு "பின்னால பின்னும்"......
//

நீங்க தீவிர ரஜினி ரசிகர் உங்கள் கருத்து பயாஸ்டாக வரும். அதனால ஆட்டைக்கு கிடையாது கோபி.. :)

Cable Sankar said...

/மூன்று இலட்சத்திற்கு வாழ்த்துகள்... அப்படியே நாற்பது..ஐம்பது...நூறு....ம்ம்ம்...

வாழ்த்துக்கள் தல.
//

நன்றி பாலாஜி.

Cable Sankar said...

/அண்ணே,

காமெடி படமா, கண்டிப்பா பாக்கணும்.

அது சரி, ஹாட் ஸ்பாட்ல ஏன் ரிப்பீட் ஆகுது.
//

சரி காமெடிண்ணே.. ஹாட்ஸ்பாட் படம் ரிபிட் இலலியேண்னே..

Cable Sankar said...

/கூடிய விரைவில் பார்த்து விடுவேன்//

நிச்சயமாய் பாருங்க நாஞ்சில் நாதம்..

Cable Sankar said...

/நீங்க சொல்லிட்டீங்க... ஆனா படம் பார்க்க என்னா இங்கு வசதியில்லை.

ஒரு டிவிடி வாங்கி பத்திரமா வைங்க. அடுத்த தடவை ஊருக்கு வரும் போது வாங்கிக்கிறேன்.
//

உங்களுக்கில்லாத டிவிடியா.. ரெடி.. இப்பவே..

Cable Sankar said...

/படம் நல்லாருக்கும் போலயிருக்கே? எதில ஓடுது? (ஆமா சொன்னா உடனே சிட்டிக்குள்ள வந்துடறமாதிரிதான்..)
//

கண்டிப்பா ஸ்டார் மூவிஸ்ல போடும்பபோதாவது பாத்துருங்க..

Cable Sankar said...

/அனுஜன்யா கமெண்ட்.. செம்ம.. இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்..
//

ஆமா ஆதி..

Cable Sankar said...

/படம் வந்து இத்தனை நாட்களுக்கு பிறகு தான் பார்த்திர்கள ?? நான் இந்த படத்த வந்த புதுசலையே பார்த்துட்டேன்//

நான் தியேட்ட்ர்ல பாக்கலாம்னு முடிவு பண்ணி கடைசில டிவிடில பார்த்ததுனால லேட்.

//எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு நேத்து உண்மையாலுமே பூகம்பம் தான் வந்ததா இல்ல நீங்க சிரிச்சதால சென்னை குளிங்கி போச்சா ??
//

அவ்வளவா சிரிச்சிட்டேன்..?

Cable Sankar said...

/Nice post and a great blog. We just added your blogs to our tamil blogs section.
www.nrispot.com/tamil#7//

மிக்க ந்னறி கணேஷ்.

Cable Sankar said...

நன்றி ராதாகிருஷ்ணன் சார்.

vettipaiyan said...

வணக்கம்,
தல நீங்க எப்படி எல்லா படத்தையும் பார்த்து முடிச்சுடுரிங்க,
கலக்க்ல்

vettipaiyan @ vettiபைய்யன்

முரளிகுமார் பத்மநாபன் said...

தல வாழ்த்துகள், 300000 ஹிட்ஸுக்கு.

முரளிகுமார் பத்மநாபன் said...

தல வாழ்த்துகள், 300000 ஹிட்ஸுக்கு.

Thennavan said...

Your way of narrating the story is very good, I like it keep rocking.

Cable Sankar said...

/வணக்கம்,
தல நீங்க எப்படி எல்லா படத்தையும் பார்த்து முடிச்சுடுரிங்க,
கலக்க்ல்

vettipaiyan @ vettiபைய்யன்
//

நன்றி வெட்டிப்பையன்..

கேபிள் சஙக்ர்

ஷண்முகப்ரியன் said...

சூப்பர் படம்.சூப்பர் விமர்சனம்,ஷங்கர்.

மங்களூர் சிவா said...

ஓ. இவ்ளோ சூப்பர் படமா. உடனே பாத்திடறேன்.

Cable Sankar said...

/சூப்பர் படம்.சூப்பர் விமர்சனம்,ஷங்கர்//

கண்டிப்பாக உங்களுக்கு பிடித்திருக்கும் சார்..

Cable Sankar said...

/ஓ. இவ்ளோ சூப்பர் படமா. உடனே பாத்திடறேன்.
//

மிஸ் பண்ணாதீங்க சிவா..

K.S.Muthubalakrishnan said...

மூன்று லட்சம் ஹிட்ஸுக்கு வாழ்த்துகள்

Kannan.S said...

Not to post only for you..
+++******************+++

Thala.. Tags are getting different..

For Lust & caution u gave,
Technorati Tags: உலக சினிமா,Lust & Caution

But here,Technorati Tags: Hangover,English film reveiw


= உலக சினிமா = missing..

Kannan.S said...

Not to post only for you..
+++******************+++

Thala.. Tags are getting different..

For Lust & caution u gave,
Technorati Tags: உலக சினிமா,Lust & Caution

But here,Technorati Tags: Hangover,English film reveiw


= உலக சினிமா = missing..