Thottal Thodarum

Aug 19, 2009

Kaminey – Hindi Film Review

kaminey-poster

இரட்டை பிற்வி, உருவ ஒற்றுமை, ஒருவன் நல்லவன், இன்னொருவன் கெட்டவன்,  உருவ ஒற்றுமை காரணமாய் ஆள் மாறாட்டம். என்று பார்த்து, பார்த்து சலித்து போன ஒரு விஷயத்தை சுவாரஸ்யமாய் சொல்ல முடியுமா..? அதுவும் 135 நிமிட படத்தில் ஒரு பத்து நிமிஷம் மிஸ் செய்தால் கூட புரியாமல் போய்விடக்கூடிய திரைக்கதையில். சும்மா அனல் போல பறக்க வைத்திருக்கிறார் இயக்குனர் விஷால் பரத்வாஜ், ஓம்கார், மக்பூலின் இயக்குனர்.

சார்லி, குட்டூ இருவரும் இரட்டை பிறவி சகோதரர்கள், மும்பய் தாராவியில் வாழ்க்கை நடத்த, ஒரு கட்டத்தில் இருவரின் ஆசாபாசங்களும் வேறு வேறு விதமாய் இருக்க, சார்லி குறுக்கு வழியில் சம்பாதிக்க ஒரு வழியில் போக, குட்டு ஒரு என்.ஜி.ஓவில் ட்ரைனியாய் வேலைக்கு சேர்ந்து ஒரு கார்பரேட் தலையாக, முதல் படியை வைக்க, மூன்று வருடங்களாய் சந்திக்காமல் இருக்கிறார்கள்  சகோதரர்கள். ஒரு  நாள் வருகிறது. அந்த ஒரு நாள் அவர்களின் வாழ்கையில் அவர்களுக்கு ஒரு மாறுபட்ட ஒரு நாளாய் அமைகிறது. அந்த நாள்  அவர்களின் வாழ்கையை பணயம் வைக்கும் நாளாய் அமைகிறது.
kaminey

சார்லிக்கு ஒரு பிரச்சனையிலிருந்து தப்பிக்கும் போது மும்பை போலீஸின் வண்டியை கடத்தி கொண்டு வந்துவிட, அதில் மும்பை போலீஸில் உள்ள இரண்டு உயரதிகாரிகள் மூலமாய் கடத்தபட இருக்கும்  தஷி எனும் மிகப்பெரிய அண்டர்வேர்ல்ட் ஆளின் பல கோடி ரூபாய் கோக்கைன் ஒரு கிடாரில், அந்த காரில் இருக்க,  அதை தேடி அவர்கள் இருவரும் சார்லியை தேடி அலைகிறார்கள்.

இன்னொரு பக்கம், பிரியங்காவை,(ஸ்வீட்டி) குட்டு (ஷாகித்கபூர்)  ஒரு காண்டமில்லா தினத்தில் கர்பமாக்கிவிட, அதனால் உடனடியாய் திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை, ஆனால் அதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் ஸ்வீட்டி லோக்கல் மாகாராஷ்ட்ரா அரசியல் கம், அண்டர்வேர்ல்ட் தாதா போபேவின் தங்கை.  அவனை ஏமாற்றி அவர்கள் திருமணம் செய்ய,  போபே அவர்களை துறத்த, போலீஸின் பார்வையில் இவன் சார்லியாய் தோன்ற், அவனை போலிஸ் தூக்கி கொண்டு போகிறது.
kaminey-wallpaper (1)

இன்னொரு பக்கம் சார்லி பல பிரச்சனைகளூக்கு பிறகு தஷியிடமே கோக்கெய்ன் பாக்கெட்டை விற்க முயல, அந்த பாக்கெட்டுகளை குட்டுவை வைத்து அடைய போபே முயல,  இன்னொரு பக்கம, துறத்தும் கடத்தல்கார போலீஸ்காரர்கள் இருவரில் ஒருவரை அவர்கள் கொன்றுவிட, க்ளைமாக்ஸ் அதகளம், ரத்தகளரி. விடியோ கேமில் நாம் சுட்டு விளையாடுவோமே அது போல.  படம் பார்கையில் இவர்களின் ஆட்டத்தில் நாம் ஆட்டத்தில் எந்த அளவு இன்வால்வ் ஆகி விளையாடுவோமோ அவ்வளவு இன்வால்வ் ஆகிவிடுகிறோம்

சார்லி, குட்டூ என்று இரண்டு வேடஙக்ள், இருவருக்கும் பேசுவதில் ப்ரச்சனை, சார்லிக்கு லைட்டாய் ஒரு மாதிரி ப்டபடக்கும் போது திக்கும்,  குட்டூக்கு நல்லாவே திக்கும். சாக்லெட் பாய் இமேஜிலிருந்து வெளியே வந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். சார்லி கேரக்டருக்கு மிக பொருத்தமாகி இருப்பதே அதற்கு சான்று.
kaminey-wallpaper

பிரியங்கா வழக்கம் போல இயல்பாய் நடித்திருக்கிறார். முழு மஹாராஷ்டிரிய பெண்ணாய் வருகிறார். பல இடஙக்ளில் மராத்தி பேசுகிறார் குட்டூவால் தான் கர்பமானதை சொல்லும் காட்சியில் ச்ச்சோ க்யூட்.

படத்தில் ஆளாளுக்கு கேரக்டராகவே வாழ்கிறார்கள், பிரியங்காவின் தாதா அண்ணனாக வ்ரும் போபே. இவரின் பாடி லேங்குவேஜும், நடிப்பும், சூப்பர்ப். இவர்தான் தாரே ஜமீன் பர் படத்தின் கதாசிரியராம்.

படத்தை சீட்டு  நுனிக்கு கொண்டு வருபவர்களில் முக்கியமானவர், கேமராமேன். சும்மா பின்னி பெடலெடுத்திருக்கிறார். பிண்ணனி இசையிலும், இரண்டு பாடல்களிலும் தூள் கிளப்பியிருக்கும் விஷால் பரத்வாஜும், எடிட்டிங்கும், என்று எல்லா துறையினரும் போட்டி போட்டிருக்கிறார்கள்.
kaminey_01

நைல் பைட்டிங் திரைக்கதை என்றால் அவ்வளவு டென்ஷனான திரைக்கதை, குட்டூ, ஸ்வீட்டி காதலை ஒரெ காட்சியில் விளக்கியிருக்கும் விதம் சூப்பர். அதே போல் க்ளைமாக்ஸ் காட்சி படமெடுத்திருக்கும் விதம்.. படம் முழுவதும்  இயல்பாய் ஓடும் நகைச்சுவை,  ஒரு பத்து நிமிஷம் மிஸ் செய்தால் அவ்வளவு தான்.  படத்தின் ஆதாரமான கதை அரத பழசாய் தெரிந்தாலும் அதை கொடுத்த விதம் குவாண்டின் டரண்டினோவின் ஸ்டைலில் ஒரு அதிரடிதான்.

Kaminey – Don’t Miss If You Like Quentin…

Technorati Tags: ,


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

50 comments:

kalil said...

me the first

பரிசல்காரன் said...

//காண்டமில்லா தினத்தில் கர்பமாக்கிவிட//

Touch!

பரிசல்காரன் said...

எனக்கு படத்தில் பிடித்தது போபே கதாபாத்திரம்தான்! அதேபோல பிடித்த சீன்கள் நீங்கள் குறிப்பிட்ட ப்ரியங்கா கர்பத்தைச் சொல்லும் கொஞ்சல் காட்சியும், போபே, குட்டுவின் அண்ணனான சார்லியின் குடிலுக்குப் போக அங்கே போபே-குட்டு-சார்லி-சார்லியின் நண்பர்களுக்குள்ளான டிஸ்யூம்-டிஸ்க்-விஷ்க்-காட்சியும்!

பரிசல்காரன் said...

நார்த்ல செம ஹிட்டாய்டுச்சு தல படம். நாலு ஸ்டார். கலெக்‌ஷன் அள்ளுதாம்!

GHOST said...

நல்லா எழுதி இருக்கீங்க கேபிள்.பார்க்கணும்

Cable சங்கர் said...

/எனக்கு படத்தில் பிடித்தது போபே கதாபாத்திரம்தான்! அதேபோல பிடித்த சீன்கள் நீங்கள் குறிப்பிட்ட ப்ரியங்கா கர்பத்தைச் சொல்லும் கொஞ்சல் காட்சியும், போபே, குட்டுவின் அண்ணனான சார்லியின் குடிலுக்குப் போக அங்கே போபே-குட்டு-சார்லி-சார்லியின் நண்பர்களுக்குள்ளான டிஸ்யூம்-டிஸ்க்-விஷ்க்-காட்சியும்!
//

இன்னும் நிறைய காட்சிகள்.. இருக்கு பரிசல் சொல்லிட்டா அப்புறம் படம் பாக்கிறவங்களுக்கு பெப்பு போயிருமேன்னுதான்.. சொல்லல.. நான் ரொம்ப என் ஜாய் பண்ணி பார்த்தேன்.பரிசல்.

Cable சங்கர் said...

/குட்டுவின் அண்ணனான சார்லியின் குடிலுக்குப் போக அங்கே போபே-குட்டு-சார்லி-சார்லியின் நண்பர்களுக்குள்ளான டிஸ்யூம்-டிஸ்க்-விஷ்க்-காட்சியும்//

நிஜமாவே அந்த சீன் சூப்பர்.. அதிலும் போபேவின் வாடாபாவ் சாப்பிட்டு கொண்டே வரும் ரியாக்‌ஷன்.. மேக்கிங் எல்லாமே பிரமாதம்.

கார்க்கிபவா said...

அய்யோ!! சீக்கிரம் பார்க்கனும்.. நான் ஷாஹித் கபூர் ஃபேனாக்கும்

இராம்/Raam said...

நெசமாலுமே நல்லாயிருக்கா? :)

K.S.Muthubalakrishnan said...

திரு ஷங்கர் சார்,

நல்ல விமர்சனம் விரைவில் பார்க்க வேண்டிய படம். வாழ்த்துக்கள்.

Romeoboy said...

ஓகே .. பார்த்துட வேண்டியது தான்..

மேவி... said...

"கார்க்கி said...
அய்யோ!! சீக்கிரம் பார்க்கனும்.. நான் ஷாஹித் கபூர் ஃபேனாக்கும்"


repeat uu.........

நையாண்டி நைனா said...

இன்னிக்கு பார்த்துர வேண்டியது தான்

மேவி... said...

itharkku thaan naan netru ponen ... aana time exceed agivitathu ... athanal harry potter and half blood prince parthu vittu vanthen.....


soon parkka vendum pol irukku unga padivai paditha pin

க.பாலாசி said...

வழக்கம் போல் நச் விமர்சனம்.

தமிழ்ப்படங்கள தான் ரொம்ப காட்டமா விமர்சனம் பண்றீங்கன்னு நினைக்கிறேன். (Just a feeling)

கிள்ளிவளவன் said...

Nice Review. As i donot know hindi very well , after read your review, it would be best for me to see that film in theatre......

இளவட்டம் said...

நல்ல விமர்சனம் சார்....

ஆமா உங்க பயோடேட்டாவில் நானும் யூத்துதான்னு சொல்லி இருந்திகளே..அப்படின்னா என்ன சார்?

ஜெட்லி... said...

subtitle வந்த டி.வி.டி கிடைச்சா உடனே பார்த்துருவோம்....

Prabu M said...

ரெடிஃப்ல ஃபைவ்ஸ்டார் கொடுத்திருந்தாங்க ஆன அவங்கள நம்ப முடியாது.. இப்போ நம்பிப் பார்க்கலாம்... படத்தோட வேகத்துக்கு இணையா எழுதியிருக்கீங்க!

Prapa said...

கதவுகள் பூட்டப்படாமல் எங்கள் வலைப்பூ உங்கள் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறது ,வந்து வனப்பாக்குங்கள்.

அன்பேசிவம் said...

வணக்கம் கேபிள் ,
ரொம்பவே எதிர்பார்த்துக்கொண்டிருந்த படம். நன்றி நல்லா இருக்குன்னு சொல்லி வயித்துல பால வார்த்ததற்கு.
டட்டடேடேன்ன்ன்.............

Ashok D said...

விமர்சனம் நல்லாயிருக்கு. 10 நிமிஷம் இரண்டு எடத்தல வ்ருது.(படத்தோட வேகத்த சிலாய்கிப்பதுக்கு சொல்லியிருப்பிங்க)

படத்த பார்க்கும் ஆசைய தூண்டிறீங்க. தமிழ் படத்த மட்டும் அம்போன்னு விட்டிறீங்க.

Truth said...

நான் ரீசெண்டா பார்த்த படங்கள்ல இது டாப்பு. நீங்க சொல்ற மாதிரி ஒரு பத்து நிமிஷம் கூட மிஸ் செய்ய கூடாத படம். screenplay amazing.

Prabhu said...

black comedynu sonanga.

enga oorla release agala. ena koduma sir idhu!

Prakash said...

பாட்டு எல்லாம் பட்டய கிளப்புது , விஷால் பரத்வாஜ் என்றால் நம்பி காதில் ஸ்பீக்கரை மாட்டலாம். ஒக்கா மக்கா அடி அவருடையது

Cable சங்கர் said...

/அய்யோ!! சீக்கிரம் பார்க்கனும்.. நான் ஷாஹித் கபூர் ஃபேனாக்கும்
//

நிச்சயம் பாருங்க கார்க்கி..

Cable சங்கர் said...

/நெசமாலுமே நல்லாயிருக்கா? :)//

ஆமா இராம்.. நிசமாவே..

Cable சங்கர் said...

/திரு ஷங்கர் சார்,

நல்ல விமர்சனம் விரைவில் பார்க்க வேண்டிய படம். வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி முத்துபாலகிருஷ்ணன்.

Cable சங்கர் said...

ப்டம் பார்த்துட்டு கருத்தை சொல்லுங்க.

டம்பிமேவி, நையாண்டி நைனா, ராஜராஜன்.

Cable சங்கர் said...

/itharkku thaan naan netru ponen ... aana time exceed agivitathu ... athanal harry potter and half blood prince parthu vittu vanthen.....


soon parkka vendum pol irukku unga padivai paditha pin//

அடப்பாவமே அந்த படத்தையா பார்த்தீஙகபடு மொக்கையாச்சே..

Cable சங்கர் said...

/வழக்கம் போல் நச் விமர்சனம்.

தமிழ்ப்படங்கள தான் ரொம்ப காட்டமா விமர்சனம் பண்றீங்கன்னு நினைக்கிறேன். (Just a feeling)
//

அப்படியெல்லாம் இல்லை பாலாஜி..

Cable சங்கர் said...

/ice Review. As i donot know hindi very well , after read your review, it would be best for me to see that film in theatre......//

நன்றி கிள்ளிவளவன்.. கொஞ்சம் கொஞ்சமாய் படம் பார்க்க ஆரம்பித்தால் பழகிவிடும்

Cable சங்கர் said...

/நல்ல விமர்சனம் சார்....

ஆமா உங்க பயோடேட்டாவில் நானும் யூத்துதான்னு சொல்லி இருந்திகளே..அப்படின்னா என்ன சார்?
//

இளவட்டம்தான்

Cable சங்கர் said...

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி யாசவி.. ஜெட்லி..

Cable சங்கர் said...

//ரெடிஃப்ல ஃபைவ்ஸ்டார் கொடுத்திருந்தாங்க ஆன அவங்கள நம்ப முடியாது.. இப்போ நம்பிப் பார்க்கலாம்... படத்தோட வேகத்துக்கு இணையா எழுதியிருக்கீங்க!
//

படத்தை பாருங்க.. என் வேகம் கம்மின்னு தெரியும்.

Cable சங்கர் said...

/கதவுகள் பூட்டப்படாமல் எங்கள் வலைப்பூ உங்கள் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறது ,வந்து வனப்பாக்குங்கள்.
//

கண்டிப்பாய் பிரபா..

Cable சங்கர் said...

/வணக்கம் கேபிள் ,
ரொம்பவே எதிர்பார்த்துக்கொண்டிருந்த படம். நன்றி நல்லா இருக்குன்னு சொல்லி வயித்துல பால வார்த்ததற்கு.
டட்டடேடேன்ன்ன்...//

வருகைக்கும், பின்னூட்டதிற்கும்ம், மிக்க நன்றி முரளிகுமார் பத்மநாபன்.

Cable சங்கர் said...

/படத்த பார்க்கும் ஆசைய தூண்டிறீங்க. தமிழ் படத்த மட்டும் அம்போன்னு விட்டிறீங்க.
//

அப்படியெல்லம் இல்லை அசோக்

Cable சங்கர் said...

/நான் ரீசெண்டா பார்த்த படங்கள்ல இது டாப்பு. நீங்க சொல்ற மாதிரி ஒரு பத்து நிமிஷம் கூட மிஸ் செய்ய கூடாத படம். screenplay amazing.

ஆமாம் ட்ரூத்..

Cable சங்கர் said...

../பாட்டு எல்லாம் பட்டய கிளப்புது , விஷால் பரத்வாஜ் என்றால் நம்பி காதில் ஸ்பீக்கரை மாட்டலாம். ஒக்கா மக்கா அடி அவருடையது
//
ஆமாம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பார்க்கணும் Sankar

Venkatesh Kumaravel said...

Even Shoba De had saidthat SRK's US Immigration office gimmick was a media trick against Kaminey's dreamrun. Hope to watch it soon! :)

manjoorraja said...

விரைவில் பார்க்க வேண்டுமென்ற ஆவலை தூண்டிவிட்டுவிட்டீர்கள்.

Cable சங்கர் said...

/பார்க்கணும் Sankar

6:14 AM//

நன்றி கண்டிப்பாக பாருங்கள் சார்.

Cable சங்கர் said...

/Even Shoba De had saidthat SRK's US Immigration office gimmick was a media trick against Kaminey's dreamrun. Hope to watch it soon! :)//

மும்பையில் இப்போதெல்லாம் இதுமாதிரி விஷயஙகள் சகஜமாகிவிட்டது.. வருகைக்கு நன்றி வெங்கி ராஜா.

Cable சங்கர் said...

/விரைவில் பார்க்க வேண்டுமென்ற ஆவலை தூண்டிவிட்டுவிட்டீர்கள்.
//

நன்றி மஞ்சூர் ராசா

குறை ஒன்றும் இல்லை !!! said...

நீங்க விமர்சனம் எழுத படம் எடுக்குறாங்களா இல்லே படம் எடுக்கிறதால விமர்சனம் எழுதறீங்களா?

ஆமா நீங்க டைரக்ட்டரா இல்லே ரசிகரா!!!!

ஷண்முகப்ரியன் said...

Kaminey – Don’t Miss If You Like Quentin… //

இந்த ஒரு வரி போதும் ஷங்கர்,நான் படம் பார்க்க.பார்த்து விட்டு உங்களிடம் பேசுகிறேன்.

Cable சங்கர் said...

/நீங்க விமர்சனம் எழுத படம் எடுக்குறாங்களா இல்லே படம் எடுக்கிறதால விமர்சனம் எழுதறீங்களா?

ஆமா நீங்க டைரக்ட்டரா இல்லே ரசிகரா!!!!
//

கொஞ்ச கொஞ்சமா புரிஞ்சிக்குவீங்க..

Cable சங்கர் said...

//இந்த ஒரு வரி போதும் ஷங்கர்,நான் படம் பார்க்க.பார்த்து விட்டு உங்களிடம் பேசுகிறேன்.
//

நிச்சயம் பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும் சார்..