Thottal Thodarum

Jan 16, 2010

நாணயம் – திரை விமர்சனம்

naanayam_box1 கொள்ளையடிக்கவே முடியாத ஒரு பேங்கை வடிவமைத்தவனையே, மடக்கி அவன் மூலமே அந்த பேங்கை கொள்ளையடிப்பதுதான் கதை. இம்மாதிரியான கதைகளை எடுக்கும் போது ஆங்கில படங்களின் பாதிப்பில்லாமல் எடுக்க முடியாது. அதையும் மீறி விறுவிறுப்பாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள்.

பிரசன்னா ட்ரஸ்ட் பேங்கின் முக்கிய பொறுப்பில் உள்ளவர், அவர் கனவெல்லாம் தனியே சொந்த தொழில் செய்வதுதான். அப்படியிருக்க பேங்கில் வேலை செய்து கொண்டே லோன் போட்டு, அதில் வரும் பணத்தை கொண்டு தொழில் ஆரம்பிக்கிறதாய் கனவு. பிரசன்னாவின் காதலி ஏற்கனவே ஒருவனை திருமணம் செய்து டைவர்ஸ் ஆனவள். ஏகாந்தமாய் கடற்கரையில் இருக்கும்போது அவளின் முன்னால் கணவன் வ்ந்து தகராறு செய்ய, அதில் ரவி, அவன் காதலி இருவரும் மயக்கமாக, கண் முழித்து வீடு வந்தால் வீட்டினுள் சிபி உட்கார்ந்திருக்கிறார். காதலியின் கணவனை அவன் கொன்று விட்டதாகவும, பிரசன்னா அவனுடன் சண்டையிட்ட காட்சிகளை படமெடுத்து வைத்திருப்பதாகவும், பிரசன்னா பேங்கை கொள்ளையடிக்க உடன்படாவிட்டால் அந்த போட்டோக்களை போலீஸுக்கு கொடுத்து மாட்டிவிட்டு விடுவோம் என்று சொல்லி மிரட்ட, ப்ரசன்னாவை வைத்தே காதலியின் கணவன் உடலை புதைக்க சொல்லி அதையும் போட்டோ எடுத்து மிரட்ட, வேறு வழியில்லாமல் தான் வடிவமைத்த பாங்கின் லாக்கரையே கொள்ளையடிக்க ஒத்துக் கொள்கிறார் பிரசன்னா. இதன் நடுவில் அவர்கள் கூட இருந்து கொண்டே, அதிலிருந்து தப்பிக்கவும் முயற்சி செய்கிறார். பாங்கை கொள்ளையடித்தார்களா..? ப்ரசன்னா அவரின் காதலியை காப்பாற்றினாரா? இல்லையா..? என்பது போன்ற கேள்விகளுக்கு சுறுசுறு, பரபரவென திரைப்படுத்தியிருக்கிறார்கள்.
nanayam340 அலட்டலில்லாத, அமைதியான நடித்திருக்கிறார் பிரசன்னா. எங்கெங்கு என்ன தேவையோ அதை சிற்சில பாடி லேங்குவேஜிலும், டயலாக் மாடுலேஷனிலும் மிக இயல்பாய் வெளிபடுத்தியிருக்கிறார். கொள்ளையடிக்க மிரட்டும் வில்லனாக சிபி. பெரியதாய் நடிக்க வராவிட்டாலும், டயலாக்கில் தந்தையை பாலோ பண்ண முயற்சித்து அதில் சில இடங்களில் வென்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள எஸ்.பி.பி, கொள்ளைக்கு உடன் வரும் அஞ்சாதே தடியாள், போலீஸ்காரன், கதாநாயகி என்று எல்லோருமே அவரவர் பாத்திரதை உணர்ந்து செய்திருக்கிறார்கள்.கதாநாயகியை விட இன்னொரு நாயகியாய் வரும் பெண் நல்ல பிகராய் இருக்கிறார்.

படத்தின் மைனஸ் என்று பார்த்தால் ப்ரசன்னாவின் இரண்டு மூன்று நாள் காதலிக்காக, இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுப்பதும், ஜேம்ஸ்வசந்தனின் பாடல்களில் எஸ்.பி.பியின் நான் போகிறேன் மேலே மேலே பாடலை தவிர மற்றதெல்லாம் பல இடங்களில் படத்தின் போக்கை மட்டுபடுத்துகிறது. அதே நேரத்தில் எஸ்.தமனின் பிண்ணனி இசை ஆப்ட்.
naanayam-prasanna-sibiraj

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு படத்தை ரிச்சாக வெளிப்படுத்தியிருக்கிறது. எடிட்டிங்கும் கச்சிதம். படத்தை பார்க்கும் போது ஆங்கிலத்தில் பார்த்த பல பேங்க் ராபரி படங்களான, Bank Job, Entrapment, ocean series , italian job போன்ற படங்களை ஞாபகபடுத்தினாலும் படம் நெடுக வரும் திடுக், திடுக் திருப்பங்களில் சில விஷயங்கள் ஒர்க் அவுட் ஆகிவிடுவதால் பரபரப்புக்கு பஞ்சமில்லை. இம்மாதிரியான படங்களுக்கு இன்னும் கொஞ்சம் டெக்னிகலாய் விஷயங்களை சொல்லி முடுக்கி இருக்கலாம். ஆரம்ப காட்சிகளில் ப்ரசன்னா அறிமுகம் கொஞ்சம் நாடகத்தனம் இருந்தாலும் பின்னே போக போக சரியாகிவிடுகிறது. வசனங்களே படத்தின் பிரதான விஷயமாய் இருப்பதால் அதை செவ்வனே செய்திருக்கிறார் இயக்குனர். டிகைரேகை வாங்குவதற்காக ஹீரோயின் மேடையில் டான்ஸ் ஆடி மயக்கி எடுப்பதெல்லாம் அரத பழசு. க்ளைமாக்ஸ் காட்சியில் அந்த லேசர் தாண்டும் காட்சியை இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். அதே போல ஹீரோயின் கேரக்டருக்கு இன்னும் நல்ல ஆர்டிஸ்டை செலக்ட் செய்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தை சரியாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சக்தி கே.ராஜன்.

டிஸ்கி:
நல்ல முறையில் பப்ளிசிட்டி செய்தால் நிச்சயம் ஒரு ஆவரேஜ் ஹிட் கொடுக்கக்கூடிய படம். கொள்ளையடிக்க வரும் வில்லன் கேரக்டர்களில் இரண்டு பேர் பெயர் முஸ்லிம் பெயராக இருப்பதை பார்த்தால் இதில் ஏதாவது உள்குத்து இருக்குமோ என்று பதிவர்கள் மனதில் வரும் என்பதால் அவஙக் பேரை எழுதல..:))

நாணயம் – செல்லும்



தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..
Post a Comment

28 comments:

Punnakku Moottai said...

Very Good! I am the first today.

Regards,

Bala
+234 708 999 6984

Punnakku Moottai said...

Cable,

Vimarsanam was very good. You have made me add this movie in my list 'movies to be in Feb 2010'. I think, if I can't find the movie screened in Chidambaram, I could find some pirated video of this from Pondy for sure.

Regards,

Bala

Punnakku Moottai said...

Cable,

Vimarsanam was very good. You have made me add this movie in my list 'movies to be WATCHED in Feb 2010'. I think, if I can't find the movie screened in Chidambaram, I could find some pirated video of this from Pondy for sure.

Regards,

Bala

1:55

gulf-tamilan said...

அட ரொம்ப பாசிட்டிவ்வா விமர்சனம் இருக்கு :)))))))

Romeoboy said...

\\இரண்டு பேர் பெயர் முஸ்லிம் பெயராக இருப்பதை பார்த்தால் இதில் ஏதாவது உள்குத்து இருக்குமோ என்று பதிவர்கள் மனதில் வரும் என்பதால் அவஙக் பேரை எழுதல..:)//

இதுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி இருக்கே ...

Raj Chandra said...

This movie plot sounds like "Firewall" (flop in hollywood) :).

பாலா said...

////கொள்ளையடிக்கவே முடியாத ஒரு பேங்கை வடிவமைத்தவனையே, மடக்கி அவன் மூலமே அந்த பேங்கை கொள்ளையடிப்பதுதான் கதை////

முக்கிய தீம்மை... Firewall படத்தில் இருந்து உருவியிருக்காங்க.

செந்தில் நாதன் Senthil Nathan said...

அப்ப பார்த்துடுவோம்!!! நன்றி கேபிள்!!

Paleo God said...

ஹாலிவுட் பாலா said...
////கொள்ளையடிக்கவே முடியாத ஒரு பேங்கை வடிவமைத்தவனையே, மடக்கி அவன் மூலமே அந்த பேங்கை கொள்ளையடிப்பதுதான் கதை////

முக்கிய தீம்மை... Firewall படத்தில் இருந்து உருவியிருக்காங்க//

’நாணயம்’
நம்ம மக்கள் அதுல கை தேர்ந்தவர்கள் ஆயிற்றே::))

உள்குத்து ஏதும் இருக்கறா மாதிரி தெரியலையே (மைனஸே விழல:))

மரா said...

நல்ல படம்.நல்லவேளை நாணயம் என்கிற ’ocean 13’ அது இதுனு போட்டு பீதியக் கிளப்பிறபோறீங்களோன்னு நெனைச்சேன்.எப்பிடி எல்லா படத்தையும் உடனே உடனே பாத்திறீங்க்ளோ! நன்றி.

bandhu said...

Shankar Sir.. I envy your passion for movies. It will take a minimum of 7 to 10 hours of your work to see the movie and think and put together the vimarsanam. It takes lot of passion to do this work and I just applaud you.

As for as the movie is concerned, appears to be a good attempt and will try to see it.

தராசு said...

உள்குத்து இருக்குமோன்னு ஒரு வெளிக்குத்து வைக்கறீங்களே.....

Ashok D said...

//உள்குத்து இருக்குமோன்னு ஒரு வெளிக்குத்து வைக்கறீங்களே.....//
அதானே :))

Ashok D said...

//கதாநாயகியை விட இன்னொரு நாயகியாய் வரும் பெண் நல்ல பிகராய் இருக்கிறார்.//
உங்க நேர்மை எனக்கு பிடிச்சுயிருக்கு.
கேபிள்ஜி மைனஸ் ஓட்டுன்னு சொல்லறாகலே அப்படின்னா என்னா???
இப்படிக்கு வெ.பு.வேல் பாய்ச்சுவோர் சங்கம்.

மேவி... said...

போய் பார்த்துவிட வேண்டியது தான் .....

தல இன்று இந்த படத்திற்கான விமர்சனத்தை தினகாரன் பேப்பர் ல போட்டு இருக்காங்க ...போய் பாருங்க

கடைசி ல அவங்க சென்னை ஒரு சர்வதேச வங்கி இருக்க வாய்ப்பே இல்லை ன்ற மாதிரி எழுதி காமெடி பண்ணிருக்காங்க

Cable சங்கர் said...

/தல இன்று இந்த படத்திற்கான விமர்சனத்தை தினகாரன் பேப்பர் ல போட்டு இருக்காங்க ...போய் பாருங்க //

அவங்களுக்கு இப்போதைக்கு வேட்டைக்காரன் படத்தில வர்ற சீனை விட வேற ஏதும் சாத்தியமேயில்லைதான்.:))

எம்.எம்.அப்துல்லா said...

கொள்ளையடிக்க வரும் வில்லன் கேரக்டர்களில் இரண்டு பேர் பெயர் முஸ்லிம் பெயராக இருப்பதை பார்த்தால் //


என்ன பேருண்ணே?? அ.மு.செய்யது மற்றும் எம்.எம்.அப்துல்லாவா??

:))

Ashok D said...

நாணயம் செல்லும், ஆனால் ஆயிரத்தில் ஒருவன் இருந்திருக்கவேண்டியவன்... ம்ம்ம்ம்...

குறை ஒன்றும் இல்லை !!! said...

நாணயமான விமர்சனம் வழக்கம் போல !!!

Raghu said...

நான் நேத்துதான் பாத்தேன், பாட‌ல்க‌ள்லாம் ரொம்ப‌ பெரிய‌ மைன‌ஸ் கேபிள். ஜேம்ஸ் வ‌ச‌ந்த‌னா இதுன்னு ந‌ம்ப‌வே முடிய‌ல‌.

ப‌ட‌த்துல‌ சில‌ விஷ‌ய‌ங்க‌ள‌ ஈஸியா யூகிக்க‌முடியுது.

//அந்த லேசர் தாண்டும் காட்சியை இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்//

சேம் ப்ள‌ட்!

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//உள்குத்து இருக்குமோன்னு ஒரு வெளிக்குத்து வைக்கறீங்களே.....//
அதானே :))//
அதானே!!!

இராகவன் நைஜிரியா said...

நடு நிலையான விமர்சனம். நிறை குறைகளை அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.

butterfly Surya said...

Firewall படத்தில் இருந்து உருவியிருக்காங்க..

பாலா, அப்படி போடு அருவாளை..

butterfly Surya said...

அந்த லேசர் தாண்டும் காட்சியை இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்//

பாலா.. Note this too..

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல அருமையான விமர்சனம் .. படம் நல்லாருக்கா ...

Anonymous said...

பார்த்துடுவோம்

sriram said...

ஜாம்பவான் ஹாலிவுட் பாலாவுக்குத் தெரியாம யாருமே காப்பி அடிக்க முடியாது போலிருக்கே??

மைனஸ் ஓட்டு மைனர் கேபிளு.. தண்டோராஜி சொன்னா மாதிரி நீங்க திருக்குறள் எழுதினா கூட மைனஸ் ஓட்டு போடுவாங்க போலிருக்கு, அடுத்த பதிவு ABCD மட்டும் எழுதிப் பாருங்களேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

P.S. Suresh Kumar said...

I have been following this blog for quite a while. It is good to see your reviews always have a note about film's background score.

Smile,
Sureshkumar.

http://backgroundscore.blogspot.com