Thottal Thodarum

Oct 15, 2010

குளிச்சா.. குத்தாலம்.



திடீரென ஏற்பாடானதுதான் இந்த குற்றால டூர். நான் போய் வந்து சுமார் பத்து வருடங்கள் இருக்கும். நான், நண்பர் தண்டோரா, அவரது நண்பர், இன்னொரு  நண்பர், என்று நான்கு பேராய் காலை குருவாயூரில் கிளம்ப, வண்டி கிளம்பிய கொஞ்ச நேரத்திற்கெல்லாம் வெளியே அடிக்கும் ஊமை வெய்யில் உள்ளே உறுத்த, ஏனடா காலை ரயிலை புக் செய்தோம் என்ற எண்ணம் வந்துவிட்டது.  வண்டி கிளம்பிய அடுத்த நொடியிலிருந்து, ஐந்து நிமிடத்துக்கு ஒரு  முறை டீ.டீ, காபி.. காபி, பொங்கல் வடை, பூரி மசால், பருப்பு வடை, சமோசா என்று இடைவெளி இல்லாமல் மசாலா மற்றும் வெங்காய  வாசனையுடன்  வந்து போய் கொண்டிருக்க, நேரம் போக, போக வெயிலும் ஏற எங்களுக்கு கடுப்பும் ஏறிவிட்டது.  எங்கள் கோச்சு முழுவதும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களே ஆக்கிரமித்திருக்க, யூத்தான என் மனசு கடுப்பாகி போனது தான் மிச்சம்.

அவ்வளவு கடுப்பையும் ஒரு சேர போக்க என்ன செய்வது என்று தெரியாமல் புத்தகம் படிப்பதும், வெட்டி அரட்டை என்று பொழுதை போக்க முயல,  ரயிலின் ஓட்ட சத்ததில் சத்தம் போட்டு பேச் வேண்டியிருக்க, மிகவும் சோர்வானது. நேரம் ஹை ஸ்பீடில்  ஓடியது.   டல்லாய் இருந்த முன் பகல்   வேளையில் ஒரு ப்ரெஞ்சு பெண்ணும் அவனுடய் பாய் ப்ரெண்டும்  கோடையில் பெய்யும் ஐஸ் கட்டி மழையாய் ஏற மொத்த கோச்சுக்கும் ஒரு புத்துணர்ச்சி வந்தது போல் இருந்தது.  அவனுடன் இரண்டு இந்திய ஜோடிகள், அவர்களின் ஒருவன் ப்ரெஞ்சு பேச, பிறகு தான் புரிந்த்து அவர்களை அழைத்து செல்பவன் அவன் தான் என்று.

அவள் நல்ல திடகாத்திரளாய் இருந்தாள், கூரான நாசி,  மெல்லிய ரோஸ் நிற  உதடுகள், பாவாடை போன்ற ஒரு வஸ்துவை இடுப்பில் கட்டி, மேலே ஒரு காட்டன் டிசர்ட்.  டீசர்ட் வெளியிட்ட க்ளிவேஜை பற்றி கவலை படாமல், குறுக்கே ஒரு சின்ன மணிபர்ஸை மாட்டியபடி அவள் பேசிக் கொண்டிருந்ததை, பார்க்காமல் இருக்க முடியவில்லை..  தன்னுடய ப்ளாண்ட் தலைமுடியை ஒன்றாய் சேர்ந்து ஒரு தொப்பிக்குள் அடைத்துவிட்டு, கூட வந்த பெண்ணிடம் ஒரு சிறிய ஸ்டிக்கர் பொட்டை வாங்கி நெற்றியில் வைத்து கொள்ள, அடிக்கொரு முறை கண்ணாடி பார்த்து வெட்கப்பட்ட அழகிருக்கிறதே..  ம்ஹூம். கூட வந்த ப்ரெஞ்சன் தன்னுடன் ஒரு அழகி இருப்பதை கண்டு கொள்ளாமல், ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.

மதுரையில் தண்டோராவின் நண்பர் ரவி உடன் சேர்ந்து கொள்ள, வரும் போதே "கோக்" பாட்டிலுடன் வர, சந்தோஷமானது சுற்றுபுறம். "கோக்" கொடுத்த சந்தோஷத்தை விட திடீர்ரென உடன் வந்த நண்பர் ஒருவருக்கு டீ ஹைட்ரேஷன் ஆகி, வாந்தியும், .. தியுமாய் வந்து சுருண்டு போக, எங்களுக்குள் பதட்டம்.  அவ்வளவு பதட்டத்திலும், அவள் ஜன்னல் ஓரம் தூங்கும் அழகை ரசித்து கொண்டிருந்தேன். அவளுடன் வந்த இரு பெண்கள், அவர்களின்  கணவனிடம், அவளை காட்டி.. “என்னா கலருல்லா.” என்றாள்.  அவளின் கணவன்  அதை பொருட்படுத்தியதாய் தெரியவில்லை. ப்ரெஞ்சன் அவர்களை ஒரு பொது பார்வையால் அளந்து கொண்டிருக்க, இதற்குள் திருநெல்வேலி ஸ்டேஷன் வருவதற்கான அறிகுறி பேக்குகளை எடுத்து ரெடியாகும் பயணிகளின் ஏற்பாட்டில் தெரிய, நம் நண்பர்  இன்னும் மோசமாகி சுருண்டு போக, ப்ரெஞ்சு அழகியுடனும் ப்ரெஞ்சனுடனும், கூட்டி வந்தவன், தன் மனைவியுடன் போட்டோ எடுத்து கொள்ள,   ப்ரெஞ்சன் அவனின் மனைவியுடன் கூட நிற்காமல் சற்றே தள்ளி நின்று  படமெடுத்து கொள்ள, நம்ம ஆள் மட்டும் அவளுடன் நெருக்கமாய்,  தோளணைத்து, கன்னம் ஒட்டி, என்று படமெடுத்து கொண்ட்தை, அவனின் மனைவி ஒரு அசட்டு சிரிப்புடன் சிரித்த சிரிப்பு அவள் கண்களில் இல்லை.

ரயில் திருநெல்வேலியில் நின்றவுடன் எல்லோரும் அவசரத்தில் இறங்க, நம் நண்பர் மிகவும் பலவீனப்பட்டிருந்த்தால் வெயிட் செய்ய,  அவளும், ப்ரெஞ்சனும்,  வெயிட் செய்ய, கடைசியாய் நாங்கள் இறங்க,  ப்ளாட்பாரத்திலிருந்து கிளம்ப எத்தனிக்கையில்  அவள் எங்களை நோக்கி வ்ந்து , என் நண்பரை பார்த்து “டேக் கேர் ஆப் ஹிம்” என்று சொல்லிவிட்டு பை என்று கையாட்டி  விடைபெற்ற போது,  அவளின் வலடு கையின் மேல் பெர்க் செய்யப்படட் ஒரு அமெரிக்கன் டைமண்ட் ஸ்டெட் மின்னியது.(தொடரும்) நீங்கள் விரும்பினால்.


நிதர்சன கதைகள் -9- Lemon Treeயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

12 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரொம்ப நல்லா ஜோள்ளிருக்கீங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்படியே எங்க ஊர்ல கடலை மிட்டாய் வாங்கிட்டு வந்திருக்கலாம்ல

VISA said...

முன்னாடி படிச்ச மாதிரி இருக்கு இல்லையா?

pichaikaaran said...

தொடருங்கள்... நன்றாக இருக்கிறது

sinmajan said...

வ குவாட்டர் ரெயிலரின் பாதிப்போ.. அந்த இறுதி வரி..

முரளிகண்ணன் said...

மீள் பதிவா தலைவரே?

a said...

appuram???

நேசமித்ரன் said...

அவர்களின் கணவனிடம்//

is it correct thala ?

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

இப்படியே கையில பிடிச்சு திரியும் ஓய்!!!

Suthershan said...

குளிச்சா குத்தலாம் ன்னு சொல்லிடு குடிச்சதை மட்டும் தன சொல்லியிருகிங்க ... யூத் ஸ்டோரி தொடரட்டும்...

Vathiyar Paiyan said...

Thala,

last kodaikannal tour pogum pothum vanthi ...bethiiii matter ippavummma......
Thodarunga adutha mattera....