உங்கள் பக்கம்

ஷவர் ஒரு சந்தோஷ சாத்தான்


குளியலறைக்குள் 

நுழைந்தபின்தான்
நியாபகம் வரும்
டவல் எடுக்க மறந்தது.


உனை அழைத்து கேட்க

வெட்கங்களுடனே எடுத்துக்கொடுத்து

மின்னலாய் வெளியேறுவாய்.


என் இதழ்கள் உன் பெயரை 

மெதுவாய் உச்சரிக்க,
தயங்கியபடியே உள்நுழைவாய். 



ஷவரின் நீர்துளி 

உன்மீது படாதவாறு
எச்சரிக்கையுடன் ஒதுங்கி நிற்பாய்.


உன்னை அருகில் 

இழுக்கும் வேலையை
கச்சிதமாக என் ஒரு கரம் செய்ய, 

மறு கை ஷவரின் திறப்பானுக்கு
கட்டளையிடத்தொடங்கும்





மேலிருந்து நீர்த்துளி
பூவாய் பொழியத்தொடங்க,
பூவையின்ஆடைகள்
மொட்டவிழ்க்கத் தொடங்கும்.


உன் ஆடைகள் முழுவதும்

நீரால் சூழப்பட
நீயோ என்னால் சூழப்படுவாய்.



முழுக்க நனைந்தபின் 

முக்காடு தேவையா என்று 

நான் சூசகமாய் கேட்க,
முறைத்தவாறே திரும்பி நிற்பாய். 


விடுதலை என்றால் 

எனக்கு மிகப்பிடிக்கும்.
அதை உன் அனுமதியின்றி
உன் ஆடைகளுக்கு கொடுப்பேன்.



உன்னை நோக்கி நான்
ஈர்க்கப்படுவதைப்போல நம்மை
நோக்கி நீர் ஈர்க்கப்படும்.


உலகிலேயே நம்

இருவருக்கு மட்டுமே
மழை பெய்யும் இடம்
நம் குளியலறைதான். 



ஆடை தொந்தரவுகளின்றி

இருவரும் இதமாய்
அணைத்தபடி இருக்க,



நம்மிருவரையும் இன்னும்

நெருக்கமாய் இருக்க
வழி செய்தபடி
நம்மீது வழிந்தோடுகிறது
ஷவர் என்னும்
சந்தோஷ சாத்தானின்
நீர் தேவதைகள்.

கவிதைகளின் காதலன் என்கிற பெயரில் எழுதும் மணிகண்டனின் காதல் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இவரின் நால் வரி காதல் கவிதைகள் ஷார்ட் அண்ட் ஸ்வீட்
 இவரின் கவிதைகளை மேலும் படிக்க..

Comments

க ரா said…
இந்த கவிதைய ஏற்கனவே ரசித்து ருசித்திருக்கிறேன் ....
தலைவரே !

:)

வாழ்த்துகள் மணிகண்டன்
This comment has been removed by the author.
a said…
ம்...... நல்லா இருக்கு தல........
மணிகண்டன் : வாழ்த்துகள்!!!
நான்கூட இது கவிஞர் சங்கரநாராயணன் எழுதுனதோன்னு நினைச்சேன். அங்கங்கே அவர்து டச்சுக்கள் இருக்கு அதனாலதான்.

வாழ்த்துகள் மணிகண்டன். நல்லாயிருக்கு...
@roosvic
அப்ப நான் கவிஞன் ஆயிட்டனா../:))
அருமை
by mtvenkateshwar.blogspot.com
//
உன்னை நோக்கி நான்
ஈர்க்கப்படுவதைப்போல நம்மை
நோக்கி நீர் ஈர்க்கப்படும்.///

அருமை.... அருமை
Unknown said…
`நல்லாருக்கு மணிகண்டன் ...
நல்லாருக்கு.
சூப்பரா இருக்குங்க.
Katz said…
எனக்கும் குளிச்ச மாதிரியே இருந்துச்சு... ;-)
ஆர்வா said…
வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.. என்னை அறிமுகப்படுத்திய கேபிள் அண்ணனுக்கு மிக்க நன்றி,,,