Thottal Thodarum

May 17, 2011

Stanley Ka Dabba

kadabba3_12may11_330x243 தாரே ஜமீன் பர் படத்தின் எழுத்தாளர், கிரியேட்டிவ் டைரக்டர் அமோல் குப்தா, எழுதி, இயக்கி, தயாரித்துள்ள படம். அமீரைப் பற்றி ஒரு குற்றச்சாட்டு உண்டு. தாரே ஜமீன் பர் படத்தைஅமோல் குப்தா பாதி இயக்கிக் கொண்டிருக்கும் போது, நடுவில் புகுந்து தானே இயக்குவதாய் சொல்லி இயக்குனர் ஆகிவிட்டார் என்று. ஏன் என்று கேட்டதற்கு அவருக்கு இயக்கம் சரிவர கைவரவில்லை என்றார் அமீர். ஆனால் இந்த படத்தை பார்த்த போது நிச்சயம் அமீர் பொய் சொல்லியிருக்கிறார் என்று தெரிகிறது.


ஸ்டான்லியின் டப்பா.. அதாவது டிபன் பாக்ஸ்.. ஒரு அருமையான சிறுகதையை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் அமோல் குப்தா. படம் ஆரம்பத்திலிருந்து க்ளைமாக்ஸுக்கு முன்பு வரை ஸ்கூலை விட்டு எங்கேயும் வெளியே போகவில்லை. திரைக்கதை. சும்மா நூல் பிடித்தார்ப் போல மிக இயல்பாய் போகிறது.
stanly3மிடில் க்ளாஸ் சிறுவர்கள் படிககும் உயர்நிலை பள்ளியில் படிக்கும் ஸ்டான்லி எனும் மாணவன் தினமும் லஞ்ச் பாக்ஸ் கொண்டு வருவதில்லை. அவனுடன் படிக்கும் இன்னொரு பணக்கார மாணவன் தினமும் நான்கடுக்கு கேரியர் கொண்டு வந்து அவனுடன் பகிர்ந்து உண்ணுகிறான். அந்தப் பள்ளியில் இந்தி வாத்தியாராக பணிபுரியும் அமோலுக்கும் அந்த நான்கடுக்கு கேரியர் மேல் கண். அதுவும் சிலபஸ் முடிக்க முடியாமல் தினமும் மூன்று பீரியடுகள் அதிக்ப்படுத்தபட, இரண்டு ப்ரேக்குகளுக்காக அதிகமான சாப்பாடு எடுத்து வர வேண்டும் என்று ஸ்கூல் நிர்வாகம் சொல்கிறது.  டிபன் பாக்ஸ் கொண்டு வராமல் ஓசியில் அவர்களுடன் சாப்பிடும் ஸ்டான்லிக்கு அவர் தான் முதல் எதிரி. ஸ்டான்லியும் நண்பர்களும் அவரிடமிருந்து தங்கள் சாப்பாட்டை காப்பாற்ற தினமும் ஒரு பொய் சொல்லி ஒவ்வொரு இடத்தில் சாப்பிட, ஒரு நாள் கையும் களவுமாய் மாட்டுகிறார்கள். டிபன்பாக்ஸ் எடுத்து வராமல் இனிமேல் பள்ளிக்கு வரக்கூடாது என்று சொல்லிவிடுகிறார். ஸ்டான்லி சாப்பாடு பாக்ஸ் கொண்டு வந்தானா? இல்லையா?  ஏன் அவன் சாப்பாடு கொண்டுவர முடியவில்லை? என்பது போன்ற கேள்விகளுக்கான பதிலை திரையில் தான் பார்க்க வேண்டும்.
stanly2 ஒரு டிபன்பாக்ஸை வைத்து கதை செய்ய முடியுமா? என்று கேட்பவர்களுக்கு நிச்சயம் இதோ என்று சொல்லியிருக்கிறார்கள். சிறுவர்களை வைத்து, கொஞ்சம் கூட பெரியவர்கள் படமாக இல்லாமல் சிறுவர்களின் வாழ்க்கையை சுற்றியே அமைக்கப்பட்ட ஸ்மூத்திங் திரைக்கதை.  ஆரம்பக் காட்சியில் ஸ்டான்லியின் கண்களிடையேயும், கன்னத்திலும் அடிப்பட்டு கருத்துப் போயிருக்க, அவனை அறிமுகப்படுத்தப்படும் காட்சியிலேயே அவனுடன் பயணிக்க வைக்கிறது திரைக்கதை.

ஸ்டான்லியாக பார்த்தோ.. இயக்குனர் அமோல்குப்தாவின் மகன். என்னா பர்பாமென்ஸ்.. சின்னச் சின்ன ரியாக்‌ஷனில் எல்லாம் பின்னி பெடலெடுக்கிறான். நண்பர்கள் தங்களுடன் சாப்பாட்டை ஷேர் செய்யச் சொல்லும் போது தன்னிடம் இரண்டு ருபாய் இருப்பதாகவும், வடாபாவ் வாங்கி சாப்பிடப்போவதாகவும் சொல்லி சமாளிக்கும் போது அவன் கண்களையும், பாடி லேங்குவேஜையும் பாருக்கள். சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் பிச்சை வாங்க வேண்டும். அதே போல் கூட நடிக்கும் மாணவர்கள். க்ளாஸுக்கு நடுவில் உருளைக்கிழக்கு அயிட்டம் ஒன்று பாக்ஸை திறந்து சாப்பிடடுவிடும் மாணவன் ஒருவன், இந்தி வாத்தியார் வாசனையை வைத்து அந்த அயிட்டத்தின் பெயரை சரியாகச் சொல்லி யார் சாப்பிட்டது என்று கேட்கும் போது அவன் ரியாக்‌ஷனைப் பார்க்க கண் கோடி வேண்டும். திவ்யாதத்தா இங்கிலீஷ் டீச்சராக வருகிறார். அந்த டீச்சரை பசங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதை  அவர் க்ளாசுக்குள் நுழையும் போது, மாணவர்கள் எல்லோரும் தலைமுடியை சரி செய்து கொள்ளும் காட்சியும், ஒவ்வொரு மாணவனுட்ய பாடி லேங்குவேஜையும் எடுத்திருக்கிற விதம். அடடா..

காண்டூஸ் என்று பட்டப்பெயர் வைத்து மாணவர்களால் அழைக்கப்படும் இந்தி டீச்சர் அமோல் குப்தாவின் கேரக்டர் கொஞ்சம் பேண்டஸியாக இருந்தாலும் இண்ட்ரஸ்டிங். தான் பாடினால் இம்சை தாங்காமல் டீச்சர்ஸ் ரூமில் உள்ள டீச்சர்கள் எல்லோரும் தம்தமது சாப்பாட்டை கொடுத்து டேஸ்ட் பார்த்து விடும் கேரக்டர். ஸ்டான்லியைப் போலவே டப்பா கொண்டு வராத கேரக்டர். சப்பாத்தியுடன் விதவிதமான் சைட்டிஷ் கொண்டு வந்து அசத்தும் ஹிஸ்டரி டீச்சர், அறிவியல் ஐய்யர் டீச்சர், என்று ஒவ்வொரு கேரக்டரும் ஒரு கேரிக்கேச்சர். stanly எழுதி இயக்கிய அமோல்குப்தா தான் யார் என்பதை நல்ல ஸ்திரமாக நிருபித்துள்ளார். மாணவர்களை பற்றி ஆசிரியர்கள் புரிந்து கொள்ளாமல எப்படியெல்லாம் நிர்பந்திக்கப் படுகிறார்கள். இடது கை பழக்கம் உள்ள ஸ்டான்லியின் கை பக்கத்தில் வலது கை பழக்கம் உள்ளவனுடன் இடிக்கிறது என்று கம்ப்ளெயிண்ட் செய்யும் ஸ்டான்லியிடம், எழுத்து என்பது லஷ்மி அதை மதிக்காமல் இடது கையால் எழுதக் கூடாது, வலது கையில் தான் எழுதவேண்டும் என்று இம்சித்து  எழுதச் சொலலும் காண்டூஸ் அமோல் சொல்ல, அதே ப்ரச்சனையை இங்கிலீஷ் டீச்சர் இரண்டு பேரையும் வலது, இடதாய் இடம் மாற்றி ப்ரச்சனையை சால்வ் செய்து வைக்கின்ற காட்சி.  இப்படி பல காட்சிகளை சொல்லிக் கொண்டு போகலாம்.  எங்கும் ஸ்டான்லியின் மனநிலையை விட்டு விலகாத திரைக்கதையால் அவனுடன் பயணிக்க, பயணிக்க அவனின் சந்தோஷம், துக்கம், எல்லாமே நமக்கும் ஒட்டிக் கொள்கிறது. டைட்டில் காட்சியிலேயே காட்டூன் மூல படத்தைப் பற்றி அறிமுகம் செய்வது சுவாரஸ்யம்.மூன்று பீரியட் க்ளாஸ் அதிகமானவுடன். பல வீடுகளில் டப்பாவிற்காக செய்யப்படும் டிபன்களுடன் ஆரம்பிக்கும் பாடலும், அதை படமாக்கியவிதமும்.. படு சுவாரஸ்யம். ஹாட்ஸ் ஆப் அமோல்.

இடறாத பாடல்கள். உறுத்தாத ஒளிப்பதிவு என்று டெக்னிக்கல் டிப்பார்ட்மெண்ட்  அழகாய் உழைத்திருக்கிறது. படத்தில் குறைகள் என்று சொல்லப் போனால் அமோல் குப்தாவின் காண்டூஸ் கேரட்டரினால் அவ்வ்ப்போது ஒன்ற முடியாமல்போவதுதான். ஏனென்றால் ஸ்டான்லி ஏன் டப்பா எடுத்து வருவதில்லை என்று ஒரு காரணமிருக்கிறது. ஆனால் அதே காண்டூஸ் வாத்தியாருக்கு என்ன ப்ரச்சனையால் சாப்பாடு மீது திருடித் தின்னும் அளவிற்கான ஆர்வம் ஏன்?.  என்ன தான் அதை ஒரு பேண்டஸி கேரக்டராய் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று புரிய முயன்றாலும் ஆழுத்த்மான காரணங்கள் அந்த கேரக்டருக்கு இல்லையென்பதால் கொஞ்சம் விலகி நிற்கத்தான் வேண்டியிருக்கிறது சில இடங்களில்.

Stanley Ka Dabba – A Cute Film to Watch 
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

11 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

விமர்சனம் சூப்பர்.

COVAIGURU said...

thank you

Sivakumar said...

அற்புதமான படம் சார். விமர்சனத்திற்கு நன்றி. இப்படம் குறித்து என் விமர்சனம்:
http://madrasbhavan.blogspot.com/2011/05/blog-post.html

CS. Mohan Kumar said...

Paarkkanum

Cable சங்கர் said...

நிச்சயம் பார்க்க வேண்டிய படம் தலைவரே..

King Viswa said...

தல,
ஸ்டான்லி படம் ஏதோ அவார்ட் படம் என்று என்னுடைய நண்பர் கூட வரவே இல்லை. பின்னர் அன்றைக்கு இரவு ஒரு ஆங்கில நியூஸ் சேனலில் ரிவியூ பார்த்துவிட்டு மறுபடியும் போகலாமா என்று கேட்டார். ஆனால் லிமிடெட் ரிலீஸ் அன்பதால் நிறைய பேருக்கு தெரியவில்லை.


இந்த வாரம் நம்ம ரவி தேஜா படம் வருது. மறந்துறாதீங்க.

கிங் விஸ்வா

கலைஞரின் பொன்னர் சங்கர் காமிக்ஸ்

Anonymous said...

அண்ணே வணக்கம் நீண்ட நாட்களாக உங்களது பதிவை படித்து கொண்டிருக்கின்றேன். உங்களது பதிவை முழுவதும் படித்த பிறகே நான் எழுத ஆரம்பித்தேன். ஒவ்வொரு முறையும் உங்களது ப்ளாக்கை பின்னூட்டம் போடா நினைத்தால் அதற்குள் ஐம்பது பின்னூட்டம் வந்து விடுகிறது. இப்பொழுது தான் ஆறு பின்னூட்டம் பார்த்தேன். எனவே பின்னூட்டமிடுகிறேன். எனக்கு தொழில் முறையின் காரணமாக தெலுகு , கன்னடம், ஹிந்தி தெரியும். அந்தந்த மொழி படங்களை பார்த்துவிடுவேன். இப்பொழுது தான் உங்களது பட விமர்சனத்தை பார்த்து தான் படங்களுக்கு செல்கிறேன். நன்றி அண்ணே.

மதுரை சரவணன் said...

பார்க்க வேண்டிய படமாக தெரிகிறது... ந்ல்ல விமர்சனங்களை தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்

King Viswa said...

நண்பரே,
வெகு நாட்களாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தாத தமிழ் சினிமா உலகம் என்ற தளம் இன்று முதல் இயங்க ஆரம்பித்து இருக்கிறது. இந்த வாரம் ரிலீஸ் ஆனா த ப்ரீஸ்ட் காமிக்ஸ் கதையை மைய்யமாக கொண்டு வந்த திரைப்படமே கல்லறை உலகம் என்கிற ப்ரீஸ்ட் படமே முதல் விமர்சனம்.

கிங் விஸ்வா

தமிழ் சினிமா உலகம் - ப்ரீஸ்ட் - கல்லறை உலகம் விமர்சனம்

rajasundararajan said...

‘ஸ்டான்லி’ என்னும் பெயருக்கு ‘வற்புலத்தில் இருந்து’ என்று பொருள். நாயகனின் வாழ்நிலைச் சூழலையும் அவனது மன உறுதியையும் அப் பெயர் குறிக்கிறது.

ஹிந்தி வாத்தியாருக்கு இடப்பட்ட வர்மா என்னும் பெயரொட்டு, இந்தியாவின் பழையதொரு க்ஷத்ரிய குலத்திற்கான வர்ணப்பெயர் ஆகும். ‘கடூஸ்’ என்னும் அவரது பட்டப்பெயருக்கு ‘அற்பன்’ என்று அர்த்தம்.

‘அய்யர்’ என்னும் பெயரொட்டோடு வரும் அறிவியல் ஆசிரியை, புத்தகப் படிதான் செய்முறை இருக்க வேண்டும்; புதிய கண்டு பிடிப்புகள் கூடாது என்று ஸ்டான்லி உருவாக்கிய ‘கலங்கரை விளக்கத்தை’ வெளியே தூக்கிப் போடச் சொல்லுவார். மாறாக, அதற்கு முந்திய காட்சியில் ஆங்கில ஆசிரியை அச் செய்முறை ஆக்கத்திற்காக ஸ்டான்லியைப் பாராட்டி இருப்பார். அறிவியல் படித்தாலும் புரோகித ஜாதி அப்படித்தான், ஆனால் ஆங்கிலேயர்கள் அப்படியில்லை என்னும் குறிப்புணர்த்தல் அது. அதே ஆங்கில ஆசிரியையும் அவருக்கு மணாளனும், ஸ்டான்லி மீந்ததைக் கொண்டுவந்து தன் தாய் ஆக்கியதாகக் கற்பித்துக் கூறுகையில் அதைச் சுவைத்துப் பாராட்டுவார்கள். அதாவது, ஆங்கிலேய/ மேற்கத்தியர்கள் நம் பழங்கதைப் புனைவுகளை ரசித்துப் பாராட்டித் திரிகிறார்கள் என்று பொருள்.

‘கடூஸ்’ என்று விளிக்கப்படுகிற ஹிந்தி வாத்தியார் இந்திய நாட்டின் குறியீடு. திருடி அல்லது கையேந்தி வாங்கித் தின்னும் பிழைப்பிற்குரியவராக அவர் காண்பிக்கப் படுகிறார்.

இப்படியெல்லாம் உள்-அர்த்தங்களோடு படம் இருந்தாலும், ‘தாரே ஜமீன் பர்’ படத்துக்கு ‘ஸ்டான்லி கா டப்பா’வை இணைவைக்க முடியாது என்பதே என் கருத்து. அதில் உள்ள வெளிவிரிவும் நகர்வும் வர்ணங்களும் இதில் இல்லவே இல்லை.

சாப்பாட்டுப் பிரச்சனை இறுக்கமான ஒன்று என்பதால், அடைத்துநெரிந்த காட்சிகளால் இப் படத்தை இயக்குநர் ஆக்கி இருக்கலாம் என்று என்னைத் தேற்றிக்கொண்டேன்.

Katz said...

உங்கள் விமர்சனம் படித்து தான் இப்படம் நேற்று பார்த்தேன். தாரே ஜமீர் பர் பக்கத்தில் கொஞ்சம் கூட நெருங்க முடியாது சங்கர் சார்.

இப்போதெல்லாம் உங்கள் விமர்சனத்தை நம்ப முடிவதில்லை. மன்னிக்கவும்.