Thottal Thodarum

May 25, 2011

Veera

ravi-teja-veera-telugu-movie-stills-4-todayandhra-com தெலுங்கு திரையுலகில் இந்த சம்மருக்கு வந்த பெரிய நடிகர்கள் படங்கள் எல்லாம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் அமையவில்லை. ஜுனியர் என்.டி.ஆரின் சக்தி,  ராணாவின் நீ நா ராக்‌ஷஷி, என்று ஊத்தி மூடிக் கொள்ள, நாக சைதன்யாவின் 100% லவ் மட்டுமே சூப்பர்ஹிட். அப்படி வெளிவரும் பெரிய பட்ஜெட் பட வரிசையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் வீரா. மிரபாகாயின் வெற்றியும், புதிதாய் மாஸ் மஹாராஜா என்ற பட்டத்துடன் அவதரித்திருக்கும் ரவிதேஜாவின் படம் என்பது மேலும் ஆர்வத்தை தூண்டியிருந்தது.

Veera-Telugu-Movie-Stills-0v017 வழக்கமாய் ரவிதேஜா படங்களில் வரும் மிக லேசான லைன். அடித்து தூள் கிளப்பும் காமெடி, ரத்தம் வழிந்தோடும் ஆக்‌ஷன் என்று எல்லா வித மசாலாக்களோடு, ரவிதேஜாவுக்கு ஒரே படத்தில் ரெண்டு விதமான கேரக்டர்கள் கொடுத்து அசத்த வேண்டும் என்று இயக்குனர் ஆசைப்பட்டிருப்பார் போலருக்கு. படம் ஆரம்பிககும் போதென்னவோ.. கொஞ்சம் சுறுசுறுப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் போகப்போக பொறுமை இழக்கச் செய்கிறது. ஒரு போலீஸ் ஆபீசருக்கு கமிஷனரே ஒரு பாடிகார்ட் ஏற்பாடு செய்வாரா? என்பது போன்ற அசுரத்தனமான லாஜிக்கைப் பற்றி பேசாமல் இருந்தால் மேலும் தொடரவும்.
veera-movie-stills-53-e1305865495355 ஏற்கனவே என்.டி.ஆர் முதல் ஜூனியர் என்.டி.ஆர் வரை ஊரைக் காப்பாற்றும் நல்லவராய், வல்லவரான கேரக்டர் ஆனால் ரவிதேஜாவுக்கு வேலைக்காகவில்லை. அதுவும் அந்த ப்ளாஷ்பேக்கில் காஜல் அகர்வாலோடு கபடி ஆடுவது பார்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்குமே தவிர. படத்திற்கு வேலைக்காகாது. அக்காட்சியில் காஜலின் தொப்புளைத் தவிர பெரிதாய் ஏதும் எக்ஸ்போஸ் செய்யவில்லை. என்ன ஆட்டம் ஆடுகிறார்கள். எங்க இளைய தளபதி விசயின் அப்பா ஒரு படத்தின் விஜயசாந்தி கபடி ஆடும் காட்சி எடுத்திருப்பார் அதில் கால் தூசு பெறாது இந்த கபடி. இதற்கு நடுவில் ஊரில் இரண்டு வில்லன், அவனோட மாமன் வில்லன், மாமன் வில்லனின் மனைவி சொர்ணக்கா போலஒரு வில்லி என்று மண்டை காய்கிறது.

லைவ்வில் தங்கச்சி பாசம். அங்கொருவில்லன், போலீஸ் ஆபீஸர் ஷாம். அதற்கு ஒரு கதை என்று சொதப்பியிருக்கிறார்கள். ஆனாலும் ஒரு விஷயம். ஜூனியர் என்.டி.ஆரின் சக்தி இம்சித்ததைப் போல இம்சிக்கவில்லை. ப்ரம்மானந்தத்தின் காமெடி எடுபடவில்லை. டாப்ஸி நாலு பாட்டுக்கு ஆடுகிறார். ப்ளாட்டாக இருக்கிறார். இருந்தாலும் அந்த சுருள் முடியும் உதடுகளும் இம்சிக்கின்றன.
Veera = Bore da
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்


Post a Comment

10 comments:

தினேஷ் ராம் said...

:-)

R. Jagannathan said...

அந்த விஜயசாந்தி கபடி போர்ஷன் வீடியோ போடமுடியுமா?! ஜொள்..ஜொள்.. - ஜெ.

King Viswa said...

இதுக்கு நீங்க சீம டபாக்காய் (அல்லரி நரேஷ் பூர்ணா படம்) பார்த்து இருக்கலாம். அதாவது காமெடி டைம் பாஸ் படம். இந்த படத்தின் செகண்ட் பார்ட் எல்லாம் உட்கார முடியல.

கிங் விஸ்வா
தமிழ் சினிமா உலகம் - மைதானம் விமர்சனம்

Prabhu said...

mass maharaja mirapakaaylaye aayachu!

Suthershan said...

அந்த விஜயசாந்தி கபடி போர்ஷன் வீடியோ போடமுடியுமா?! ஜொள்..ஜொள்.. - ஜெ.

கொத்து பரோட்டா ல இதையும் சேர்த்து கொத்துங்க பாஸ்..

shortfilmindia.com said...

சாம்ராஜ்யப்ரியன்
என்ன சிரிப்பு..? அ

shortfilmindia.com said...

சிலதையெல்லாம் தேடிப்பார்த்து கிடைச்சாத்தான் நல்லாருக்கு.. ஜெகன்நாதன்..

shortfilmindia.com said...

நான் இன்னும் அந்த படம் பாக்கலை.. ஆனா இது சகிக்கலை.. விஸ்வா..

shortfilmindia.com said...

விஜய்சாந்தி வீடியோ தேடிட்டிருக்கேன்.

Unknown said...

http://www.shashtikavasam.blogspot.com/ For tamil songs lyrics please voted and Comment what songs lyrics you need in Tamil