Thottal Thodarum

Aug 19, 2012

கொத்து பரோட்டா -20/08/12

55 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவளித்து அன்பு செலுத்திவரும் நண்பர்கள், வாசகர்கள், சக பதிவர்கள் அனைவருக்கும் என் கோடானு கோடி நன்றிகள் -கேபிள் சங்கர்
மீண்டுமொரு பள்ளி விபத்தும், உயிரிழப்பும். இப்படி சொல்லும் அளவிற்கு ஆகிவிட்டது நாட்டில் நிகழும் பள்ளிச் சிறுவர்களின் மரண நிகழ்வுகள். சிறுவன் ரஞ்சித்தின் மரணம் பெற்றோர்களிடையே ஒரு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மேலாளர்களை கைது செய்யவும், நடவடிக்கை எடுக்கவும் திடீர் புரட்சியாளர்கள், பார்பனிய எதிர்பாளர்கள், நிஜமாகவே சமூக அக்கறைக் கொண்டவர்கள் என்று பல தரப்பிலிருந்து எதிர்ப்பும், போராட்டமும் கிளம்பியிருப்பது நல்ல விஷயம்தான் என்றாலும் இவ்வளவு எழுச்சியும் , கேள்விகளும் இம்மாதிரியான பள்ளிகளில் நம் குழந்தைகளை சேர்க்கும் போது கேட்கிறோமா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். நல்ல பள்ளி, பிரபலமான பள்ளி என்பதை மட்டுமே வைத்து டொனேஷன் கொடுத்தெல்லாம் அப்பள்ளியில் நம் பிள்ளைகளை சேர்க்கிறோம். ஆனால் எப்போது நாம் அவர்கள் செய்யும் தவறுகளையெல்லாம் தட்டிக் கேட்கிறோம்?. நீச்சல் குளத்தில் அதிகப்படியான மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறார்கள். சரியான ஆள் பலம் இல்லை என்று இன்று குற்றச்சாட்டு சொல்பவர்கள் அதை உணர்ந்த அன்றே எதிர்த்து போராடியிருக்க வேண்டும். கேட்டிருக்க வேண்டும். இப்படி எல்லோரும் கேட்டிருந்தால் நிச்சயம் நீச்சல் பயிற்சியை கட்டாயமாக வைத்திருக்கும் பள்ளியும் யோசித்திருக்கும். நான் அந்த பள்ளிக்காக வாதாடவில்லை. அவர்கள் மேல் குற்றம் இருக்கிறதா இல்லையா? என்பதை சிறுவனின் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் தான் முடிவு செய்யும் என்று தெரியும் என்கிறார்கள். பஸ்ஸில் ஓட்டையை வைத்துக் கொண்டு ஓட்டியதற்கும் இந்த விபத்துக்கும் நிறைய வித்யாசம் இருந்தாலும், இந்நிகழ்வுகள் எல்லாம் பள்ளியின் பொறுப்பற்ற தன்மையைத்தான் காட்டுகிறது. போராட்டக்காரர்களின் ப்ரெஷர் காரணமாய் பள்ளியின் முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட்டார்கள். அன்றிரவே ஜாமீனில் விடுதலையும் செய்யப்பட்டார்கள். சரி.. திருப்தி என்று அடுத்த வேலையைப் பார்க்க போகாமல்  நம் பிள்ளைகள் படிக்கும் பள்ளி, வேன் மற்றும் அவர்களின் பாதுகாப்பு முறைகள் எல்லாம் சரியாக உள்ளனவா? இல்லையென்றால் பணம் கட்டி படிக்க வைக்கும் நமக்கு கேட்கும் உரிமை இருக்கிறது. கேளுங்கள் தனியாய் கேட்டு பதில் இல்லை என்றால் இப்போது ஒன்று கூடி போராட்டம் நடத்த குழுமும் கூட்டம் போல கூடி கேளுங்கள் நிச்சயம் சரியான பதில் கிடைக்கும். 
@@@@@@@@@@@@@@@@@@@@


என் ட்வீட்டிலிருந்து
ஒரு பெண் தோழியாய், மனைவியாய், எதிரியாய், கொடுமையான பேயாய் இருக்கக் காரணம் நீ அவளை எப்படி மதிக்கிறாய் என்பதைப் பொறுத்துத்தான்.

நல்ல உறவு என்பது எதிர்பாராமல் தான் ஏற்படும்.

நீ எவ்வளவுதான் எல்லாச் செயல்களையும் சிறப்பாய் செய்தாலும் யாராவது ஒருவர் அதை விமர்சித்தால் தான் செயல் மேன்மையடைகிறது.

கணவனை இழந்து உறுதியாய் நின்று குடும்பம் தழைய வைக்கும் பெண்களைப் போல ஆண்களால் பெரும்பாலும் முடிவதில்லை.# அட்டக்கத்தி ஆண்கள்

காதல் எப்போதும் இதயங்களை உடைப்பதில்லை. காதலிப்பவர்கள் தான்.

வாழ்க்கை ஒரு ஃபிரிஸ்பீயைப் போல நான் அனுப்பும் வேகத்தில்தான் திரும்ப வரும்.

நீ அன்பாய் இருப்பதால் உலகமே உன்னிடம் அன்பாக நடந்து கொள்ளுமென எண்ணுவது நீ சிங்கத்தை சாப்பிடாததால் அது உன்னை சாப்பிடாது என நினைப்பதற்கு சமம்
@@@@@@@@@@@@@@@@@@@@
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று வந்த வீரர்களுக்கு கொடுத்த வரவேற்பில் தள்ளுமுள்ளு நடந்திருக்கிறது. விழாவை படு மோசமாக ஒருங்கிணைத்து,  வந்திருந்தவர்கள் மேடையை பார்க்க முடியாத அளவிற்கு மறைத்துக் கொண்டு புகைபடக் காரர்களும் அரசியல் வாதிகளின் ஜிங்குச்சாக்களுமாய் ஆக்கிரமித்திருக்க, சில பேர் பாதியில் போய் விடலாமா என்று யோசித்திருக்கிறார்கள். அவ்வளவு இம்சை படுத்தியிருக்கிறது அரசின் விளையாட்டுத்துறை. இதே கிரிக்கெட் வீரர்கள் பங்கு பெறும் விழாவாக இருந்திருந்தால் இப்படி அன் ஆர்கனைஸ்டாக நடத்தியிருப்பார்களா?
@@@@@@@@@@@@@@@@@@@@
வாரத்திற்கு ஏழு படங்கள் வெளியாகிறது தமிழ் சினிமாவில். இதெல்லாம் நலல்தற்கில்லை. இதைக் கட்டுப்படுத்த வேண்டிய தயாரிப்பாளர் சங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. பெரிய நடிகர்களின் படங்கள் பண்டிகை நாட்களில் மட்டுமே வெளிவர வேண்டும், வாரத்திற்கு மூன்று படங்கள் மட்டுமே வெளிவர வேண்டுமென்றெல்லாம் சட்டம் போட்ட சங்கம் அதை அமல் படுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது என்ன நியாயம்? இவர்களின் சண்டைக்கு தமிழ் திரையுலகம் ஊறுகாயா?
@@@@@@@@@@@@@@@@@@@@@
ஈமு கோழிகளை அம்போவென விட்டு ஓடிப் போன அதன் உரிமையாளர்களின் சொத்துக்களை அட்டாச் செய்யவும், கோழிகளை அரசின் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் பராமரித்து, அதன் இறைச்சியை விற்று அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து, செலவுகள் போக வரும் மீதமிருக்கும் தொகையை முதலீட்டாளர்களுக்கு வழங்கப் போவதாய் “நான்” முடிவெடுத்திருக்கிறேன் என்று அறிவித்திருக்கிறார் ஜெ. இத்தகைய முதலீடுகள் ஆரம்பிக்கும் போதே அரசு முன்னெடுத்து அதை தடுத்திருக்க வேண்டும் சரி இப்போதாவது செய்தார்களே என்று சந்தோஷப்பட்டாலும் இதே முடிவை பள்ளிகளில் நடக்கும் அநியாயங்களையும் பொறுப்பற்ற தன்மையையும் பார்த்து எல்லா பள்ளிக்ளையும் அரசுடமை ஆக்கியதாய் “நான்” உத்தரவிடலாமே?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
சிம்பிள் அண்ட் க்யூட் குறும்படம். சில விஷயங்களை திரைப்படங்களாய் எடுத்தால் சுவாரஸ்யம் குறைந்துவிடும். இம்மாதிரியான கதைகளை குறும்படங்களில் தான் சட்டென மனம் நெகிழ வைக்க முடியும். நல்ல ஒளிப்பதிவு, பின்னணியிசை என்று படம் முடியும் போது லேசாய் கண்ணீர் துளிர்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் அஸ்வத் நாராயண். ஒரு சில ஷாட்களில் விஷுவல் ப்யூட்டிக்காக ஸ்டில்களாய் போஸ் கொடுத்த காட்சிகளைத் தவிர குறையொன்றுமில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மீண்டும் இளையராஜாவின் இசை.  கவுதம் மேனனின் ‘நீ தானே என் பொன் வசந்தம்” படத்தின் மூலம் நம்மை ஆக்கிரமிக்க போகிறது என்பதை இப்படத்தின் ட்ரைலரே சாட்சி. சமீப காலத்தில் இவ்வளவு துள்ளலான இசையை, கேட்டவுடன் உள்ளூக்குள் ஜிவ்வென நரம்புகளை தூண்டும் இசையை கேட்கவில்லை. அதிலும் “என்னோடு வா..வா” பாடலின் பின்னணியில் வரும் வயலின் வாவ்.. வாவ்.. அமேசிங்.. இன்னும் எத்தனை நாளைக்கு காத்திருக்க வேண்டும் கவுதம்?
@@@@@@@@@@@@@@@@@@@@
செவிக்கினிமை
சமீபகாலமாய் இமானின் பாடல்கள் கவனம் ஈர்க்க ஆரம்பித்திருக்கிறது. அதிலும் குறிப்பாய் மெலடி பாடல்கள். சட்டென பழைய இளையராஜாவை ஞாபகப்படுத்தும் கம்போசிஷனையும், ஆர்கஸ்ட்ரேஷனையும்  ஞாபகப்படுத்தினாலும் தமிழ் சினிமா பாடல்கள் மீண்டும் மெலடி பக்கம் திரும்புவது ஆரோக்கியமானது. அப்படியான ஒரு பாடல் தான் அய்யய்யோ என்று கும்கி படத்தில் வரும் பாடல். அருமையான மெலடி. இளையராஜாவின்  இசையில்  பிரம்மா படத்தில் வரும் “இவள் ஒரு இளங்குருவி இன்னிசைப்பாடும் இளங்கிளி” என்ற பாடலையும், மேலும் சில பல  பாடலையும் ஆங்காங்கே நினைவுப்படுத்தினாலும் சமீபத்தில் நான் அடிக்கடி கேட்கும் பாடலாய் அமைந்துவிட்டது. முக்கியமாய் பின்னணியில் வரும் செலோ, வயலின், மற்றும் ஹரிசரன் பாடிய விதம் எல்லாமும் சரியாய் அமைந்திருக்கிறது இந்த பாடலில்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
தமிழ் நாட்டில் பல மலையாள படங்கள் ஒரு காலத்தில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தது. அப்படியான ஒரு படம் தான் இந்த பரதம்.  அற்புதமான பாடல்கள் கொண்ட படம்.  அண்ணன் ஒரு கர்நாடக சங்கீத வித்வான். தம்பி பாட ஆரம்பித்து புகழடைவதனால் ஈகோவாகி குடித்து ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு போய் இறந்து போய்விடுகிறார். அவர் இறந்தது மோகன்லாலுக்கு மட்டுமே தெரியும். வீட்டில் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் தங்கையின் திருமணம். அந்த துக்கத்தை வைத்துக் கொண்டு கச்சேரியில் பாடும் பாடல் காட்சி. அண்ணனின் சிதையின் மேல் உட்கார்ந்து பாடுவது போல் அவஸ்தையும், துக்கமுமாய் ரவீந்திரனின் இசையில் ஜேசுதாஸ் பாடிய பாடல். பாடல் முடியும் போது சட்டென கண்களில் ஒரு துளி கண்ணீர் எட்டிப் பார்க்க வைத்துவிடும் பாடல். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
அடிக்காத, என்னைக் கண்டு பயப்படாத, செக்ஸில் என்னை திருப்தி செய்யும் ஆண் தேவை என்று ஒரு பெண் பேப்பரில் விளம்பரம் கொடுத்தாள். அடுத்த நாள் காலையில் வாசலில் காலில் பெல் அடிக்க, இரண்டு கால்களும் கைகளும் இல்லாத ஒருவன் வந்திருக்க அவனை பார்த்து ஆச்சர்யப்பட்டபடியே  அந்தப் பெண் பார்க்க “ரெண்டு கைகளும் இல்லாததால் அடிக்க மாட்டேன், கால் இல்லாததால் ஓட முடியாது” என்று சொல்ல “என்னை எப்படி செக்ஸில் திருப்தி படுத்துவாயென்று நினைக்கிறாய்?:” என்று கேட்க, “காலிங் பெல்லை அடிச்சத வச்சே நீங்க முடிவு பண்ணலாமில்லை” என்றான்.
கேபிள் சங்கர்

Post a Comment

27 comments:

Sen said...

"naan" -- nach!!!

கோவை நேரம் said...

கொத்து புரோட்டா...நல்ல சுவை,மணம், திடம் ...த்ரீ ரோஸ் போல...வாழ்த்துக்கள் தல...

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல தகவேல்கள்



நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்

ARASU said...

ADULT CORNER SAMA HA HA HA...TAMIL LA KARTHIK NADITHA SEENU PADAM BARATHAM PADATHODA REMAKE KA THALAIVARE?

Cable சங்கர் said...

aamaam arasu

தருமி said...

இமானின் இப்பாடலும் நீங்கள் ஏற்கெனவே கொடுத்த சகாயனே .. சகாயனே பாடலும் இனிது .. இனிது.

வவ்வால் said...

கேபிள்ஜி,

மற்றவை சரியாக சொல்லி இருக்கீங்க, ஆனால்,

// பார்பனிய எதிர்பாளர்கள்//

இது ஏன், அப்படி எனில் சியோன் பள்ளிக்கு எதிராக போராடியவர்களில் கிருத்துவ எதிர்ப்பாளர்கள், அல்லது இந்துத்வாக்களும் முக்கியமாக இருந்தார்களா?

இரண்டு பள்ளி முதல்வர்கள் மீதும் section 304-A of I.P.C. இன் கீழ் வழக்கு பதியத்தக்க குற்றமே செய்துள்ளார்கள்.

அப்பிரிவு ,கவனக்குறைவாக நடந்துக்கொன்டு ஒருவரது இறப்பிற்கு காரணமாதல் ஆகும், வாகனம் ஓட்டி விபத்தில் ஒருவரை கொன்றாலும் அதே பிரிவில் தான் வழக்கு வரும்.

அப்படி இருக்கும் போது பத்மா சேஷாத்திரி நடத்துபவர்களை மிக மென்மையாக கண்டித்ததே தெரியாதது போல கண்டித்துள்ளீர்களே.

பிரபல பள்ளி மோகம் இதற்கு காரணம் என்பதை நானும் பல முறை சொல்லி இருக்கிறேன், அப்படி சொன்னால் யதார்த்தம் தெரியாதவன் என சொன்னார்கள், நீங்களும் இப்போது சொன்னால் அதையே சொல்வார்கள் :-))


சியோன் பள்ளி மற்றும் பத்மா சேஷாத்ரி பள்ளி இரண்டும் செய்தது ஒரே வகையான குற்றமே ,ஆனால் உங்கள் தீர்ப்பு ஏன் மாறுப்படுகிறது ?

-------

இங்குப்பின்னூட்டமிட்டவர்களும் அடல்ட் கார்னர், சினிமா ,பாட்டுப்பற்றி கவனமாக சொல்லிவிட்டு போவதில் இருந்து அவர்கள் இப்பதிவினை எவ்வாறு எடைப்போட்டுள்ளார்கள் என்பது தெரிகிறது.

நீங்கள் இப்பதிவில் சொல்லியிருப்பதில் மிக முக்கியமான கருத்து பள்ளியில் மாணவர்கள் இறப்பு மற்றும், பெற்றோரின் பிரபல பள்ளி மோகம் ஆகியவையே.

சரி நான் மட்டும் இதனை பேசி முட்டாள் ஆவதற்கு பதில் ,

#ஒரு கோடி ஹிட் அடிக்க வாழ்த்துக்கள்,

#பாடல்கள் அருமை,

#ஈமு கோழி பிரச்சினை நன்றாக சொன்னீர்கள், அடுத்து கோக்கோ மரம் வளர்ப்பு வருமா?

நன்றி! வணக்கம்!

Cable சங்கர் said...

wநான் கண்டிப்பு போதாது போராடுங்கள் என்றுதான் சொல்லியிருக்கிறேன். வவ்வால்.

வவ்வால் said...

கேபிள்ஜி,

நீங்க சொல்லியிருப்பது அனைத்தும் சரின்னு சொல்லிவிட்டு தான் ஏன் "பார்ப்பன எதிர்ப்பாளர்கள்" என ஒன்றை குறிப்பிட வேண்டும் எனக்கேட்டேன். அப்படி இங்கு சொல்லப்போனால் சீயோன் பள்ளி நிர்வாகம் அல்லது அதன் சார்ந்தவர்கள் போராடியவர்கள் இந்துத்துவாக்கள் என சொன்னால் ஏற்க முடியுமா?

இப்பிரச்சினை தனியார் பள்ளி மீதானா மோகம், மேலும் தனியார்ப்பள்ளிகளின் பொறுப்பற்றத்தனம் என்ற அடிப்படையிலேயே அணுக வேண்டியவை.

கண்டிப்பாக மக்கள் தான் கேட்க வேண்டும், எப்படி 10 பேரை ஒரே ஆட்டோவில் காசுக்கொடுத்து ஏற்றி அனுப்பிவிட்டு பெற்றோர் அரசையே சொல்கிறார்களோ அதே தான் இங்கேயும்.

இதற்கு அடிப்படையான தீர்வு துவக்கப்பள்ளியில் 2 கி.மீக்கு அப்பால் உள்ளப்பள்ளியில் சேர்க்க கூடாது, மேலும் 5 ஆம் வகுப்பு வரையில் பெற்றோர் யாரோ ஒருவர் அழைத்து சென்று விட்டு வர வேண்டும்.

அல்லது பத்துப்பேர் ஏற்றும் ஆட்டோவில் 5 பேர் சென்றாலும் 10 பேர் செல்லும் போது கிடைக்கும் வருவாயை ஆட்டோ ஓட்டுனருக்கு கொடுத்து பாதுகாப்பாக குழந்தைகளை அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.

நீச்சல்,கராத்தே, நடனம், இசை, கிரிக்கெட், செஸ், இன்னும் யானை ஏற்றம்,குதிரை ஏற்றம் என சொல்லி தனியார்ப்பள்ளிகள் கட்டனம் வசூலிக்கின்றன ,அதற்கு தேவையான வசதி இருக்கா எனப்பார்க்காமல் பெற்றோர்கள் கட்டணம் செலுத்தக்கூடாது.

பத்மா சேஷாத்திரியில் ஒரு மாணவன் கட்டாயம் ஏதேனும் ஒரு எக்ஸ்ட்ரா கரிகுலரில் சேர வேண்டும் என சொல்கிறார்கள் ,அப்படிக்கட்டாயத்தின் பேரில் நீச்சலில் சேர்ந்து இருக்கலாம்.

அப்படி பயிற்சி அளிப்பது நல்லது தானே எனலாம் ஆனால் கவனக்குறைவாக இருப்பவர்கள் ஏன் கட்டாயம் சேர சொல்லவேண்டும்,எல்லாம் மேற்படி வருவாய்க்கு தானே.

நீங்கள் குறிப்பிட்டது போல பெற்றோர்கள் கேள்விக்கேட்க வேண்டும், ஆனால் பிரபல பள்ளி கேள்விக்கேட்டால் டி.சி கொடுத்துவிடுவார்கள் என அடங்கி ஒடுங்கி போகிறார்கள்.

மேலும் பல பிரபலப்பள்ளிகளில் தேர்ச்சி காட்ட 9 ஆம் வகுப்பில் சுமாரான மாணவர்களுக்கு டீ.சி கொடுப்பதும் வழக்கமாக வைத்துள்ளார்கள். அல்லது பள்ளியின் சார்பில் தனித்தேர்வர்களாக அனுப்பிவிடுகிறார்கள்.

தருமி said...

வவ்வாலின் பின்னூட்டம் பார்த்த பிறகு மீண்டும் வாசித்தேன்.
//திடீர் புரட்சியாளர்கள், பார்பனிய எதிர்பாளர்கள், நிஜமாகவே சமூக அக்கறைக் கொண்டவர்கள் என்று பல தரப்பிலிருந்து..// இதில் ’பார்பனிய எதிர்ப்பாளர்கள்’ என்ற வார்த்தைக்கு இடமேதுமில்லை என்றே கருதுகிறேன். ஒரு பள்ளி பிரின்சிபல் கைது. அதே குற்றம் செய்த அடுத்த பள்ளி தலைமைக்கு ஏதுமில்லை என்பதும் வெளிப்படை உண்மை.

//இங்குப்பின்னூட்டமிட்டவர்களும் அடல்ட் கார்னர், சினிமா ,பாட்டுப்பற்றி கவனமாக சொல்லிவிட்டு போவதில் இருந்து ..//
மன்னிக்கணும், வவ்வால்.

வவ்வால் said...

தருமிய்யா,

நான் சொன்னது எல்லாம் கவனிக்காம போகும் போது நான் மட்டும் குறிப்பிட்டு கேட்டு "அயோக்கியன்" ஆகிவிடுகிறேன் என்பதால் சொன்னே.

நீங்க சீரியசாக மன்னிக்கவும் என்றெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கணுமா?

// இதில் ’பார்பனிய எதிர்ப்பாளர்கள்’ என்ற வார்த்தைக்கு இடமேதுமில்லை என்றே கருதுகிறேன். ஒரு பள்ளி பிரின்சிபல் கைது. அதே குற்றம் செய்த அடுத்த பள்ளி தலைமைக்கு ஏதுமில்லை என்பதும் வெளிப்படை உண்மை.//

அதே அதே, இதான் நான் சொன்னதும், இருவரும் ஒரே செக்‌ஷனில் வழக்குப்பதிவாகி ஒரு பிரபலப்பள்ளியின் ந்ர்வாகிகள் அன்று மாலையே ஜாமினில் வர முடியும் சூழலில் உண்மை என்னவென்பது மக்களுக்கு தெரியும்.

இப்போது புதிதாக ஏற்கனவே சிலநாட்களுக்கு முன்னர் அதே பள்ளியின் நீச்சல் குளத்தில் ஒரு மாணவன் ஏற்கனவே இறந்துள்ளான், ஆனால் நிர்வாகம் பணம் கொடுத்து வெளியில் தெரியாமல் பெற்றோருடன் சமரசம் செய்துவிட்டது என இப்போது செய்திகள் வருகின்றன.

பிரபலப்பள்ளி என்ற மோகத்தினாலும், நம்மை தேடி பெற்றோர் எப்படியும் வருவார்கள் என்பதால் பிரபலப்பள்ளீகள் சர்வாதிகாரப்போக்கில் செயல்ப்படுகின்றன.

arul said...

neethane en ponvasantham nice song

Cable சங்கர் said...

பார்பனீய எதிர்பாளர்கள் என்பதற்கு பேஸ்புக்கில் ஓடிய சில விஷயஙக்ளை வைத்து எழுதியது.

சேக்காளி said...

//கணவனை இழந்து உறுதியாய் நின்று குடும்பம் தழைய வைக்கும் பெண்களைப் போல ஆண்களால் பெரும்பாலும் முடிவதில்லை//
காரணம் ஆண்களால் "கணவனை" இழக்க முடியாது.

குட்டிபிசாசு said...

//“நான்” முடிவெடுத்திருக்கிறேன் என்று அறிவித்திருக்கிறார் ஜெ. இத்தகைய முதலீடுகள் ஆரம்பிக்கும் போதே அரசு முன்னெடுத்து அதை தடுத்திருக்க வேண்டும்//

ஈமு திட்டங்கள் 4-5 ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிவிட்டன. அப்போது ஜேவின் ஆட்சி இல்லை.

குட்டிபிசாசு said...

பரதம்

…தமிழில் சீனு என்ற பெயரில் கார்த்திக், பி.வாசு, மாளவிகா நடித்து ரீமேக் ஆனது.

குட்டிபிசாசு said...

//பார்பனீய எதிர்பாளர்கள் என்பதற்கு பேஸ்புக்கில் ஓடிய சில விஷயஙக்ளை வைத்து எழுதியது.//

…பேஸ்புக் ஓடியவை, தெருச்சண்டைகள் எல்லாம் பெரும்பாலும் தனிநபர் கருத்தாக இருக்க வாய்ப்புண்டு. அதை நீங்களும் பதிவிடுவது சரியா?
…பார்ப்பனீய எதிர்ப்பாளர்கள் என்பது நீங்கள் சொல்லவரும் விடயத்தை திசை திருப்புவதாக உள்ளது. அதைத்தான் மற்றவர்களும் சுடிக்காட்டுகிறார்கள்.

வருண் said...

******குட்டிபிசாசு said...

//பார்பனீய எதிர்பாளர்கள் என்பதற்கு பேஸ்புக்கில் ஓடிய சில விஷயஙக்ளை வைத்து எழுதியது.//

…பேஸ்புக் ஓடியவை, தெருச்சண்டைகள் எல்லாம் பெரும்பாலும் தனிநபர் கருத்தாக இருக்க வாய்ப்புண்டு. அதை நீங்களும் பதிவிடுவது சரியா?
…பார்ப்பனீய எதிர்ப்பாளர்கள் என்பது நீங்கள் சொல்லவரும் விடயத்தை திசை திருப்புவதாக உள்ளது. அதைத்தான் மற்றவர்களும் சுடிக்காட்டுகிறார்கள்.***

கு. பி: நான் எல்லாம் பார்ப்பீனிய எதிர்ப்பாளர்தான். எதை எடுத்தாலும் பார்ப்பனர்கள்/பார்ப்பீனியத்தை குறை சொல்வதுண்டு. அது பஸ்ல வவ்வால் போற அளவுக்கு ஓட்டையிருந்தாலும், அது எருமைமாட்டு போற அளவுக்கு ஆனாலும் சரி, பார்ப்பீனியத்தையும் பார்ப்பனர்களியும்தான் குறை சொலவதுண்டு. என்போல் ஆட்களுக்காக அந்த …"பார்ப்பனீய எதிர்ப்பாளர்கள்" சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதிலே என்ன பெரிய தப்பு இருக்குனு அதைப்பிடிச்சு தொங்கிக்கிட்டே திரிகிறீங்கனு தெரியலை!

வருண் said...

***அவர்கள் மேல் குற்றம் இருக்கிறதா இல்லையா? என்பதை சிறுவனின் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் தான் முடிவு செய்யும் என்று தெரியும் என்கிறார்கள். பஸ்ஸில் ஓட்டையை வைத்துக் கொண்டு ஓட்டியதற்கும் இந்த விபத்துக்கும் நிறைய வித்யாசம் இருந்தாலும், இந்நிகழ்வுகள் எல்லாம் பள்ளியின் பொறுப்பற்ற தன்மையைத்தான் காட்டுகிறது. போராட்டக்காரர்களின் ப்ரெஷர் காரணமாய் பள்ளியின் முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட்டார்கள். அன்றிரவே ஜாமீனில் விடுதலையும் செய்யப்பட்டார்கள். சரி.. திருப்தி என்று அடுத்த வேலையைப் பார்க்க போகாமல் நம் பிள்ளைகள் படிக்கும் பள்ளி, வேன் மற்றும் அவர்களின் பாதுகாப்பு முறைகள் எல்லாம் சரியாக உள்ளனவா? இல்லையென்றால் பணம் கட்டி படிக்க வைக்கும் நமக்கு கேட்கும் உரிமை இருக்கிறது.***

விபத்தெல்லாம் நடக்கத்தான் செய்யும். ஆனால் சிறுகுழந்தைகள் போற பஸ்ல இவ்ளோ பெரிய ஓட்டையை வச்சுக்கிட்டு கவனக்குறைவாக இருந்து ஒரு பச்சைக் குழந்தையை பலிகொடுத்து இருக்கோம். போராட்டம் ஒரு பக்கம் இருக்கட்டும், நம்ம சிஸ்டம். நம்மளிடம் உள்ள கவனக்குறைவை, -இதுபோல் பின் விளைவுகளை யோசிக்காமல் இருத்தல்- என்பதையெல்லாம் எண்ணி நம்ம எல்லாருமே வெட்கி தலைகுனிய வேண்டிய ஒரு தருணம் இது! :(

குட்டிபிசாசு said...

//நான் எல்லாம் பார்ப்பீனிய எதிர்ப்பாளர்தான். எதை எடுத்தாலும் பார்ப்பனர்கள்/பார்ப்பீனியத்தை குறை சொல்வதுண்டு. அது பஸ்ல வவ்வால் போற அளவுக்கு ஓட்டையிருந்தாலும், அது எருமைமாட்டு போற அளவுக்கு ஆனாலும் சரி, பார்ப்பீனியத்தையும் பார்ப்பனர்களியும்தான் குறை சொலவதுண்டு. என்போல் ஆட்களுக்காக அந்த …"பார்ப்பனீய எதிர்ப்பாளர்கள்" சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதிலே என்ன பெரிய தப்பு இருக்குனு அதைப்பிடிச்சு தொங்கிக்கிட்டே திரிகிறீங்கனு தெரியலை!//

…ஆம்! பார்ப்பனிய எதிர்ப்பு தான் பலருக்கு தற்போது பதிவெழுத அடிப்படை தகுதியாக இருக்கிறது! வாய்க வளமுடன்!

உபகாரி said...

@குட்டிபிசாசு

//ஈமு திட்டங்கள் 4-5 ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிவிட்டன. அப்போது ஜேவின் ஆட்சி இல்லை.//
எனக்கு தெரிந்து ஈமு மோசடி 2003 ஜெ. ஆட்சியிலேயே துவங்கி விட்டது எனவே ஜெ. ஆட்சியில் துவங்கி அடுத்த ஜெ. ஆட்சியில் மோசடி திட்டமாக பெரும்பாலோரால் உணரப்பட்டது என்று வேண்டுமானால் சொல்லலாம். (எனக்கு இந்த திட்டம் பற்றி தெரிய வந்த ஆரம்ப நிலையிலேயே நான் இது அதற்கு சில வருடங்கள் முன்பே நடந்து முடிந்த வேறு மோசடி திட்டம் போல் உள்ளது என்று சொன்னேன் ஆனால் அங்கு உடன் இருந்தவர்கள் என்னை அப்பொழுது நம்பவில்லை, ஒவ்வொரு 5 வருடங்களுக்கு பிறகும் இதுபோன்ற மோசடிகள் வெவ்வேறு ரூபங்களில் நிகழ்வது நம் நாட்டில் சகஜமாய் விடும் போல் உள்ளது ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் போல் உள்ளது).சென்ற வருடமே பத்திரிகைகளிலும் சில மாதங்கள் முன்பு தே.மு.தி.க. சட்ட மன்ற உறுப்பினரால் சட்ட மன்றத்திலும் தெரிய வந்த போதும் அரசு சார்பாக ஏன் சரியான நடவடிக்கை எடுக்க படவில்லை.

வவ்வால் said...

உபகாரி,

//(எனக்கு இந்த திட்டம் பற்றி தெரிய வந்த ஆரம்ப நிலையிலேயே நான் இது அதற்கு சில வருடங்கள் முன்பே நடந்து முடிந்த வேறு மோசடி திட்டம் போல் உள்ளது என்று சொன்னேன் ஆனால் அங்கு உடன் இருந்தவர்கள் என்னை அப்பொழுது நம்பவில்லை//

நம்மக்கட்சி தான் அப்போ, நான் கூட இப்போவே கோக்கோ மரம் வளர்ப்பு பற்றி சொல்லி இருக்கேன், இப்போ யாரும் நம்ப போவதில்லை, 4-5 ஆண்டு ஆகும் இதெல்லாம் வெடிக்க.


இது போன்ற பணம் கொட்டும் குபேரத்திட்டங்கள் எல்லாம் ஆரம்பத்தில் ஒழுங்காக போய் நிறைய பேர் சேர்ந்த பின்னரே "குமிழி வெடிப்பு" நிகழும் என்பது விதி :-))

முதலில் சேர்ந்தவங்க அதிஷ்டசாலியாக கொஞ்சம் காசுப்பார்ப்பாங்க, கடசியில் சேர்ந்தவங்களுக்கு முக்காடு தான் :-))

---------

குட்டிபிசாசு,

//பார்ப்பனீய எதிர்ப்பாளர்கள் என்பது நீங்கள் சொல்லவரும் விடயத்தை திசை திருப்புவதாக உள்ளது. //

அதே அதே, அப்பள்ளியை எதிர்ப்பதற்கு காரணமே பார்ப்பனர்கள் பள்லி என்பது போலவும், பள்ளி நிர்வாகம் அப்பாவி என்பது போலவும் ஒரு "மென்மையான இமேஜ்" இதனால் உருவாகிறது என்பதையே சொல்ல வந்தேன்.

பேஸ்புக்கில் இவ்வாறு பேசுகிறார்கள் என்பதை முன்னரே குறிப்பிட்டு இருக்கலாம்.

என்னைப்பொறுத்தவரை இருப்பள்லியும் குற்றம் செய்தவர்களே, தங்கள் வாரிசுகள் நன்றாக வரவேண்டும் என்று தான் கடன் வாங்கியாவது பிரபலப்பள்ளிகளில் சேர்த்துவிடுகிறார்கள்,ஆனால் அவர்களோ மனித உயிர் என்பது பணத்திற்கு முன் ஒன்றும் இல்லை என நடந்துக்கொள்கிறார்கள்.

அதுவும் பிரபலப்பள்ளிகள் சேர்க்கையின் ,போதும் பிறகும் பெற்றோர்களை நடத்தும் விதம், ஏதாவது ஒன்று என்றால் டி.சி வாங்கிக்கொண்டு போ என மிரட்டுவதும், பெற்றோர்கள் வாரிசுகளின் நலன் கருதி அடங்கி ஒடுங்கி போவதும் ,நேராகப்பார்த்தால் தான் அப்பள்ளிகளின் அட்டகாசங்கள் தெரிய வரும்.

குட்டிபிசாசு said...

//இதே முடிவை பள்ளிகளில் நடக்கும் அநியாயங்களையும் பொறுப்பற்ற தன்மையையும் பார்த்து எல்லா பள்ளிக்ளையும் அரசுடமை ஆக்கியதாய் “நான்” உத்தரவிடலாமே?//

அரசு பேருந்தோ, ரயிலோ தாமதமாக வந்தால்... வங்கியில் கால்கடுக்க வரிசையில் நின்றால்... நம்முடன் இருக்கும் சிலர் சொல்லுவார்கள். எல்லாவற்றையும் தனியார்மயம் ஆக்க வேண்டும் என்று. தனியார் பள்ளி தவறு செய்தவுடன் அரசுடமையாக்க வேண்டும் என்று சொல்லுவது. இதெல்லாம் அந்த சமயத்திற்கு உணர்ச்சி வசப்படுபவர்கள் பேசும் பேச்சு. முதலில், இருக்கும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தினால் தனியார் பள்ளிகளைத் தேடி யாரும் போகமாட்டார்கள்.

kailash said...

In most of the schools they dont have school tour for parents at all , If we ask questions they wont answer and wotn give admission . I have rejected few schools for their lack of transparency with parents and put my daughter in a school where they atleast answer parents question and have some transparency . We just look for admission and never ask them about the facilities . Two questions rise in everyones mind about this death, trainer came to know about the missing child only at the end of session what the hell he was doing . Why rest of the children dint shouted for this kid ?

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல தகவல்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

@Ganshere said...

//ஒரு பெண் தோழியாய், மனைவியாய், எதிரியாய், கொடுமையான பேயாய் இருக்கக் காரணம் நீ அவளை எப்படி மதிக்கிறாய் என்பதைப் பொறுத்துத்தான்.

நீ அன்பாய் இருப்பதால் உலகமே உன்னிடம் அன்பாக நடந்து கொள்ளுமென எண்ணுவது நீ சிங்கத்தை சாப்பிடாததால் அது உன்னை சாப்பிடாது என நினைப்பதற்கு சமம்
//

2ம் ஒன்னுக்கொன்னு முரணாத்தெரியுதே