காதலில் விழுந்தேன் இயக்குனரின் அடுத்த படைப்பு.என்று எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஸ்டைலில் ஸ்டாம்ப் எல்லாம் போட்டு விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அதே காதலில் விழுந்தேன் பாணிக் கதையையே வேறு ஒரு மொந்தையில் போட்டு கொடுத்திருக்கிறார்கள் என்பதை சொல்லாமல் விட்டுவிட்டார்கள்.
வழக்கமான ஏழைப் பையன், பணக்காரப் பெண்ணின் மீதான அதீத காதல். அதனால் ஏற்படும் விளைவுகள். சலவைக்காரரின் மகன் விஷ்வா. பெரிய டெக்ஸ்டைல் மில் ஓனரின் ஒரே பெண் தன்வி. அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே காதல் கொள்கிறார் விஷ்வா. தன்வியும், அவளது சிறு வயது நண்பன் இர்பானும் ஒரே வீட்டை எடுத்து தங்கியிருக்கிறார்கள். தன்வியின் காதலை அடைய இர்பானுடன் நெருக்கிய விஷ்வா ஒரு நாள் அவள் குளிப்பதைப் பார்த்துவிட, அதை அவளிடம் சொல்லிவிடுவதாய் இர்பார்ன் மிரட்ட, கைகலப்பாகிப் போய், இர்பானை கொலை செய்துவிடுகிறார் விஷ்வா. பின்பு என்ன நடந்தது என்பது தான் கதை.
புதுமுகம் விஷ்வாவின் தலை முடியும், உயரமும் ஒரு டஃப் லுக்கை அவருக்கு கொடுத்தாலும், எக்ஸ்பிரஷனிலும், நடிப்பிலும், இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம். பல காட்சிகளில் பெரிதாய் கத்தியே நடிக்க முயற்சித்திருக்கிறார். நடனம் நன்றாக வருகிறது. அது போல நடிப்பும் வரும் என்று நம்புவோம்.
கதாநாயகி தன்வி. 2008 இந்திய அழகிப் போட்டியில் பங்கு பெற்றவராம். பெரிதாய் நடிக்க வாய்ப்பில்லை. ஆனாலும் இந்த பிகருக்கா? இரண்டு பேரும் சண்டைப் போட்டார்கள் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. உடன் வரும் இர்பான் கொஞ்சம் நேரமே வந்தாலும் நன்றாக செய்திருக்கிறார்.
பாடல்கள் உள்பட எழுதி இயக்கியவர் பிரசாத். கிட்டத்தட்ட காதலில் விழுந்தேனின் இன்னொரு வர்ஷனாகத்தான் இந்தப்படமும் இருக்கிறது. அதீத காதல் கொண்ட ஏழை மாணவன், காதலை அடைவதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் கேரக்டர். என்று டெம்ப்ளேட்டாய் இருந்தாலும், வீட்டின் உள்ளேயே பிணத்தை புதைத்துவிட்டு, அதன் மேல் படுத்துறங்குவதும், ப்ரைவேட் டிடெக்டிவ் வீட்டில் வந்து கலைத்து போட்டதை வைத்து அவனைப் போலவே நடந்து அவன் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பது நன்றாக இருந்தாலும், நம்பும் படியாய் இல்லை. இதே போல சமீபத்தில் பார்த்த் ஜூலாயி படத்திலும் வருகிற பட்சத்தில் இரண்டு டைரக்டரும் ஒரே படத்தைப் பார்த்து இன்ஸ்பயர் ஆகியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆரம்பக் காட்சிகளில் பொறுமையை சோதித்த திரைக்கதை, கொலை ஆனதும் சுறுசுறுப்பாக ஆரம்பித்து, க்ளைமாக்ஸ் வரை பல ட்விஸ்ட் அண்ட் டர்ன்ங்களை வைத்து சுவாரஸ்யப்படுத்திய விதத்தில் திரைக்கதை ஓகேயென்றாலும், கேள்வியே கேட்காமல் ஐம்பது லட்சமெல்லாம் நொடிகளில் கொண்டு வந்து கொடுப்பதும், பிணம் காணாமல் போவதும், கட்டிலுக்கு அடியில் பிணத்தை புதைத்து வைப்பது போன்ற பல லாஜிக் ஓட்டைகளால் படத்துடன் ஒன்ற விடாமல் போனது வருத்தமே.
கேபிள் சங்கர்
Comments
// இதே போல சமீபத்தில் பார்த்த் ஜூலாயி படத்திலும் வருகிற பட்சத்தில் இரண்டு டைரக்டரும் ஒரே படத்தைப் பார்த்து இன்ஸ்பயர் ஆகியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.//
அந்த இன்ஸ்பயரிங் படம் எதுவோ?
உங்களுக்கு தான் எல்லாம் தெரியுமே கண்டுபிடிச்சு சொல்லுங்க வவ்வாலு..
ஆனாலும் நீங்க என்னை ரொம்ப தான் புகழுறிங்க;-))
எனக்கு ரெட் டிராகன் (அந்தோணி ஹாப்கின்ஸ் இதன் தொடர்ச்சி தான் "ஹனிபல்" என நினைக்கிறேன், சரியான தொடர்ச்சியின் காலக்கட்டம் தெரியவில்லை,முன்னாடி சைலண்ஸ் ஆப் தி லேம்ப்)படம் நினைவுக்கு வருது அதை நான் சொன்னால் இல்லைனு நீங்க வேற படம் சொல்வீங்க ,அதான் உங்கக்கிட்டேவே கேட்டுக்கிறேன்.
வேட்டையாடு விளையாடு படத்தில் கமல் ரெட் டிராகன்ல வர்ர டிடெக்டிவ் போல தான் செய்வார், ஆனால் அதற்கும் முன்னரே புஷ்பாதங்க துரையின் கதையில் வரும் இன்ஸ்பெக்டர் "சிங்க்" அப்படி துப்பறியும்.