Thottal Thodarum

May 12, 2013

நாகராஜசோழன் MA MLA

சத்யராஜ் நடித்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். அதுவும் அவரது நடிப்பில் 200 வது படம். இயக்குனர் மணிவண்ணனின் இயக்கத்தில் வெளிவரும் 50வது படம். இவர்கள் இருவரது மாஸ்டர் பீஸான அமைதிப்படையின் இரண்டாவது பாகம் என்றால் கேட்க வேண்டுமா? மக்களின் எதிர்பார்ப்பைப் போல விநியோகஸ்தர்களின் எதிர்பார்ப்பும் எகிறித்தான் இருந்தது. இல்லாவிட்டால் தயாரிப்பாளராய் இருக்கும், டாக்டர் ராமதாஸ் விநியோகஸ்தராய் அவதாரம் எடுத்திருப்பாரா? சரி.. இப்படி பல பாயிண்டுகளில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் திருப்தியை கொடுத்ததா? என்றால் பெரிய இல்லை என்றே சொல்ல வேண்டும்.


கொஞ்சம் நாள் அரசியல் கேப்பிலிருந்து நாகராஜ சோழன் மீண்டும் எண்டர் ஆக, வரும் போது திலலாலங்கடி செய்து துணை முதல்வர் ஆகிறார். இவருடன் வழக்கம் போல மணிவண்ணன் கூட்டணி. வழக்கம் போல அரசியலில் அராஜாக செய்கிறார்கள். ஊரில் உள்ள எல்லா கட்சிகளையும் போட்டு தாக்குகிறார்கள். அப்புறம் வழக்கம் போல் கதையை முடிக்க அந்தா இந்தா என்று மலை வாழ் ஜனங்கள், கம்யூனிசம், போராட்டம், என்று என்னத்தையோ உட்டாலக்கடி செய்து படத்தை முடிக்கிறார்கள். இதில் சிபிஐ ஆபீசராய் இன்னொரு சத்யராஜ் வேறு. 
நடிப்பென்று பார்த்தால் மணிவண்ணன், சத்யராஜ் காம்பினேஷன் எப்போது நம்மை மொக்கையாக்கியது இல்லை. அது போல இதிலும் எல்லாரையும் வாயாலேயே அடித்து துவைக்கிறார்கள். மணிவண்ணனுக்கு ஏழெட்டு ஜோடிகள் வேறு. மனிதர் துள்ளி விளையாடியிருக்கிறார். படம் நெடுக சூப்பர், சுமார், அட்டு, அட்டகாச பிகர்களை சுற்றிச் சுற்றி வளைய வர வைத்திருக்கிறார்கள். மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன் வேறு நடித்திருக்கிறார். நான்கு ஹீரோயின்கள். எல்லோரும் எதற்கு வருகிறார்கள். அவர்களால் என்ன பயன்? எதற்காக மணிவண்ணனின் மருமகள் மாமனாரை காட்டிக் கொடுக்க வேண்டும், சென்னையில் துணை முதல்வர் வீட்டில் துறத்தப்படும் மருமகள் கட் செய்தால் பொள்ளாச்சியில் இருக்கிறார். கதை எந்த ஊரில் நடக்கிறது. என்று ஏகப்பட்ட கேள்விகள் வேறு. சீமான் வேறு ரெண்டு காட்சிக்கு ஒரு முறை வந்து கை உயர்த்தி நாம் தமிழர் லோகோவை காட்டுகிறார். 
ஒளிப்பதிவு டி.சங்கர். குறையொன்றுமில்லை.  இசை ஜேம்ஸ் வசந்தனாம். சுப்ரமணியபுரம் இசையமைப்பாளர் என்றால் ஆச்சர்யம்தான் பட வேண்டும். துண்டுத் துண்டான திரைக்கதை, முதல் பாகத்தில் இருந்த கேரக்டர்களில்  சத்யராஜ், மணிவண்ணனைத் தவிர எந்த தொடர்பும் இல்லை. இன்னொரு சத்யராஜ் கேரக்டர் எதற்கு? முதல் பாகத்தில் சத்யராஜுக்கு குழந்தையே கொடுக்க மாட்டேன் என்று சொல்லி சுஜாதா இறப்பார். பின்பு எப்படி குழந்தை ?. வேறொரு தொடர்பில் என்றால் அதைப் பற்றிய விளக்கம்?. சீமானை பிரபாகரன் என்று காட்டுவதற்காக மொக்கையாய்  அருவிலிருந்து வீழ்ந்து போனார்கள் என்ற காமெடியெல்லாம் தாங்க முடியவில்லை. தொடர்பில்லாத க்ளைமாக்ஸ், க்ளிஷேவான பல விஷயஙக்ள் எல்லாம் மீறி ஆங்காங்கே சதய்ராஜ், மணிவண்ணன் அடிக்கும் விஜய்காந்த, கலைஞர், ஸ்டாலின், ராகுல்காந்தி, போன்றோர்களைப் பற்றி அடிக்கும் கமெண்டுகளை விட, கீப்புகளை வைத்து பேசும் வசனங்கள் தான் சுவாரஸ்யம். மற்றபடி ம்ஹும். 

Post a Comment

2 comments:

தினேஷ் ராம் said...

அதே.. அதே..

நாகராஜ சோழன் MA, MLA

குரங்குபெடல் said...

"கீப்புகளை வைத்து பேசும் வசனங்கள் தான் சுவாரஸ்யம். "

Keep it UP . . . . !?