Thottal Thodarum

Jun 10, 2013

கொத்து பரோட்டா-10/06/13

மாலை நேரங்களில் சாலிக்கிராமத்திலிருந்து வடபழனி பஸ்ஸ்டாண்ட் வருவதற்கு தாவூ தீர்ந்து விடுகிறது. சரி அங்கே வந்த பிறகாவது வடபழனி வரை ஈஸியாய் போய்விட முடிகிறதா என்றால் அதுவும் இல்லை. முக்கியமாய் அருணாசலம் சாலையிலிருந்து கே.கே.சாலைக்கு திரும்பும் வண்டிகள், அம்பிகா எம்பயரிலிருந்து ப்ரசாத் லேப் பின் பக்கம் இருக்கும் ஏரியாவிலிருந்து வரும் வண்டிகள், எதிர்புறம் வரும் வண்டிகள் என்று பாட்டில் நெக் இடமாய் அமைந்துவிட்டது. மாலை நேரங்களில் அங்கே போலீஸாரை போட்டு போக்குவரத்தை ஒழுங்குப் படுத்தலாம். நேற்று ஆறரை மணிக்கு காரெடுத்து கிளம்பவன் அடுத்த நூறு மீட்டர் போவதற்கு சுமார் அரை மணி நேரம் ஆனது. அதுவும் நான் போக வேண்டிய ரோட்டுக்கு போக முடியாமல் மேலும் அரை மணி நேரம் காத்திருந்தும் பிரயோஜனமில்லாமல் கிலோ மீட்டர் சுற்றி போய் அங்கேயும் கொஞ்சம் நேரம் ட்ராபிக்கில் மாட்டி மெயின் ரோடை பிடித்தேன். ஏற்கனவே ஒரு கொத்து பரோட்டாவில் சொல்லியிருந்தது போல, வடபழனியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் மாலில் உள்ள தியேட்டர்கள் திறந்தவுடன் தான் தெரிய போவுது வடபழனியின் லட்சணம். கொஞ்சம் கவனிங்க போலீஸ் சார்.
@@@@@@@@@@@@@@@@@@@என் ட்வீட்டிலிருந்து
காதலி(ன்) பற்றி என்ன உணர்கிறோம் என்று புரிய வைப்பது அவ்வளவு சுலபமானதில்லை
நீ விரும்புகிறவர்களிடம் பொய் சொல்லாதே. அதற்கு அவர்கள் தகுதியானவர்கள் கிடையாது.
  • வெற்றி எப்பவுமே உன்னை தனிமையில் தான் முத்தமிடும். ஆனால் தோல்வி எப்பவுமே பொதுவில் வைத்துதான் முகத்தில் அறையும் அது தான் வாழ்க்கை..
   • எப்பூட்டோ அறிக்கைங்களை தெனம் விடுறீங்க.. தியேட்டர்ல உங்க சாதனை படத்தை எடிட் பண்ணி போட சொன்னீங்கன்னா புண்ணியமா போவும். முடியலை.அவ்வ்
    • தினம் எதிரே வரும் ஆண்களின் முகம் பார்க்க மாட்டேன் என்று குனிந்த தலை நிமிராமல் வரும் பெண்ணின் முகவாய் பிடித்து பார்த்து நட எதிரே மோதிவிடப் போகிறாய் என்று சொல்லணும் போல இருக்கு. வாங்கிங் அவதானிப்பூ.

     ஹலோ யாரது கடவுளா? வைரமுத்து, எஸ்.எஸ்.குமரன், மோஹித் சவுஹான் செம மெலடிப்பா.. # கேரள நாட்டிளம் பெண்களூடனே.

     • கேப்டன் டிவில நியூஸ் படிச்சவங்க மேல கேஸ் போடுறதெல்லாம் கொஞ்சம் ஓவராத்தான் தெரியுது. நியூஸ் படிக்கவே ஆளிருக்க கூடாதுன்னு நினைக்கிறாங்களோ.

      ஒவ்வொரு அழகான பெண்ணின் வாழ்க்கையிலும் ஒரு அசிங்கமான பாய் ப்ரெண்டு உண்டு.#அவதானிப்பூ


      • எதையாவது செய்துவிட்டு ஓடும் போது தான் தெரிகிறது உடன் எவன் ஓடி வருகிறான் என்று..       சாகாவரம் பெற்றது நினைவுகள் மட்டுமே. அட்லீஸ்ட் நீ உயிருடன் இருக்கும் வரை

       தூரம் அதிகமாக அதிகமாக காதல் நெருக்கித் தள்ளுகிறதடி 


       எவ்வளவுதான் கோபத்தில் இருந்தாலும் காதலில் இருப்பவர்களிடையே அது நிலைப்பதில்லை.


       பெண்களை முழுவதுமா புரிந்து கொள்ள முயற்சிக்காதீர்கள். சமயங்களில் கிறுக்கு பிடித்து போய்விடவோ அல்லது அப்பெண்ணின் காதலிலோ வீழ்வீர்கள்


       கோபம் ஒன்றுதான் நம்மிடமிருந்து வார்த்தையை மூளையின் வேகத்தைவிட விரைவாக செயல்படுத்தும் உணர்வு.ஸோ.. நோ ஆங்ரி.

       காதலில் விழுவது சுலபம். விழுந்த காதலினுள் உழல்வதுதான் கடினமான விஷயம்.


       கருப்பு கலர் அபசகுனமாய் இருக்கலாம் ஆனால் கரும்பலகைதான் மாணவர்களின் ஞான ஒளிக்கு காரணமாயிருக்கிறது #அப்துல்கலாம்


       எவ்வளவுதான் நல்லவனாய் இருந்தாலும் அவனின் பொறுமைக்கும் ஒர் எல்லை உண்டு.


       நீ என்னை விட்டு பிரிந்த்தற்கு வலுவான காரணம் உண்டெங்கில் ஏதாவது சாக்கிட்டு திரும்ப வராதே


       கோபப்படுவதை விட அழுதுவிடுவது சிறந்தது. அழுகை நம்முள் உள்ள கோபத்தை கரைத்துவிடும்


       நமக்குள்ளான சண்டைக்கு உன் மீதான அதீத காதலே காரணம்.
       போட்டியிடு இல்லை கொண்டாடு #ஓஷோ


       உரிமைக்காக போராடாதவன் இழப்புக்காக அழுது பிரயோஜனமில்லை.#Will Smith


       எவனொருவ(ள்)னிலால் நாம் சந்தோஷமாக இருக்கிறோமோ, அவர்களால்தான் துன்பமும் படுகிறோம்
       @@@@@@@@@@@@@@@@@@@
       விவாதம்
       கேப்டன் டிவியில் சமீப கால தமிழ் படங்களின் வெற்றி, அதன் போக்கு  பற்றி கலந்துரையாட அழைத்திருந்தார்கள். நானும், இயக்குனர் மகிழ் திருமேனி, களஞ்சியம், நடிகர் ஸ்டில் போட்டோகிராபர் பந்தா பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினோம். கடைசி பத்து நிமிடம் எதையோ கீழே போட்டுவிட்டு தேடிக் கொண்டிருப்பேன். என்னவோ ஏதோ என்று நினைத்துவிடாதீர்கள் ஹெட் போன் வேலை செய்யலை..

       @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
       ஃபோரம் மாலில் கார், மற்றும் பைக்குகளுக்கு கட்டணம் ஏதும் வாங்காமல் அனுமதிக்கிறார்கள் என்று பலரும் சந்தோஷப்பட்டு பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் ஸ்டேடஸ் போட்டிருந்தார்கள். எல்லாம் அறிமுக காலம் வரை மட்டுமே மக்களே.. தியேட்டர் ஆரம்பிக்கட்டும் இவனுங்களும் கொள்ளையடிக்க ரெடியாயிருக்காங்க.
       @@@@@@@@@@@@@@@@@@
       கிராண்ட் ஸ்வீட்ஸின் உணவகம் வடபழனியில் ஆரம்பித்திருக்கிறார்கள். நேற்று மாலை நானும் என் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்கும் சந்தித்தோம். உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். யாரும் வந்து ஆர்டர் கேட்பது மாதிரியே தெரியவில்லை. கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு ஆர்டர் செய்வோம் என்று காத்திருந்தோம். அப்போதும் ஆள் வரவில்லை. நாங்களே அங்கே எனக்கென்ன என்று நடமாடி கொண்டிருந்த்வரை கூப்பிட்டு ஆர்டர் கொடுத்தோம். பேச்சு சுவாரஸ்யத்தால் ஆர்டர் செய்து வந்த நேரம் சரியாக தெரியவில்லை. உணவை சாப்பிட்டுவிட்ட்வுடன் உடனடியாய் பில் மட்டும் வந்தது. பில் கொடுத்த அடுத்த நிமிடங்களில் எங்களை எழுந்திருங்கள் என்றார். எதற்கு என்று கேட்டதற்கு பக்கத்தில் இருந்த வாடிக்கையாளருக்கு ஒரு டேபிளை இணைக்க வேண்டுமென சொன்னார். பில் கொடுத்த அடுத்த விநாடி எழுந்து போ என்று சொல்வது சரியா? என்று கேட்டதற்கு நக்கலாய் உட்காருங்கள் என்றார். உங்களை பற்றி புகார் செய்ய வேண்டும் என்ற போதும் அதோ அங்க ஒரு மேடம் இருப்பாங்க அங்க போய் பண்ணுங்க என்றார். நாங்களும் விடாமல் அந்த பெண்மணியிடம் போய் புகார் செய்தோம். அவர் பார்த்துக்குறேன் சார் என்று சொல்லிவிட்டு எதையும் காதில் வாங்காமல் வீட்டிற்கு கிளம்பும் அவசரத்தில் இருந்தார். நாங்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்த சுவீட் வாங்க வந்த வாடிக்கையாளரும் கஸ்டமர் சர்வீஸ் என்றால் என்னன்னு இவனுங்களுக்கு தெரியலை என்று சொல்லிக் கொண்டிருந்ததாகவும், இதே பதிலைத்தான் சொல்கிறார் அந்த பெண்மணி என்றார். இதை பற்றி பேசி கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த இன்னொரு கஸ்டமர் இன்னும் அப்ப்டியேத்தான் இருக்காங்களா? என்று கேட்டார். இப்படி வருகிற ஒவ்வொரு கஸ்டமருக்கும் இதே மாதிரியான மோசமான அனுபவங்கள் மட்டுமே மிஞ்சும் என்றால் உணவகம் நிச்சயம் வெளங்காது. கேட்டால் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த செய்தியை இங்கே போடுகிறேன். இதை கிராண்ட் ஸ்வீட்ஸ் நிறுவனத்தாருக்கும் அனுப்ப இருக்கிறேன். நிச்சயம் நடவடிக்கை எடுத்தால் அவர்களுக்கு நல்லது. 
       @@@@@@@@@@@@@@@@@@@@
       அடல்ட் கார்னர்Since the beginning of time women have claimed that giving birth is more painful than a kick in the testicles. That's not true, and here's the proof - often you will hear a woman say she'd like to have another child, but never will you hear a man say he'd like to get another kick in the testicles.
       கேபிள் சங்கர்

Post a Comment

4 comments:

rajamelaiyur said...

கப்டன் டிவி யில் பார்த்தேன் ...

Unknown said...

இதே போல அசோக் நகர் கிராண்ட் ஸ்வீட்ஸில் ஒருமுறை நான், ரமேஷ், நரேன் மூவரும் சாப்பிடபோனபோது பில் கொடுத்துவிட்டு உடனே டேபிளை காலி செய்ய சொன்னார்கள், மூவரும் மீண்டும் ஒரு காப்பி ஆர்டர் செய்துவிட்டு குடிக்காமல் பேசிக்கொண்டிருதோம். கொஞ்ச நேரம் கழித்து சீக்கிரம் குடிச்சுட்டு எந்திரிங்க என்றான் ஒருவன். போடா மயிராண்டி ஒன்னால என்ன செய்ய முடியுமோ அதை செஞ்சுக்கோ என்றதும் பம்மிகிட்டு போயிட்டான்.

இவனுங்க எப்படி இந்தமாதிரி கஸ்டமர் சர்வீஸ் செய்தே இத்தனை பிராஞ்ச் தொறந்தானுங்க என்பதுதான் ஆச்சர்யமா இருக்கு!!!

JEGANKUMARSP said...

Hi, According to me Grand Sweets Restautant in Vadapalani offers best customer services. I have experienced and enjoyed their service several times... My 14 months daughter loves their preparations and their kind service.

I completely disagree with ur broad statement and it would have happened to u due to various reasons. Its unfair to comment any business operations based on few bitter experiences.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

ஒரிஜினல் கிராண்ட் ஸ்வீட்ஸ் தனித்தனியாகப் பிரிந்து பல பிராஞ்ச்கள் ஆரம்பித்த பிறகு இந்தக் கொடுமை பல இடங்களிலும் நடப்பதைக் கண்டித்து நான் சில ட்வீட்ஸ் கூட போட்டேன்.

ஒரே இடத்தில் உட்கார்ந்து சௌகரியமாக ஸ்வீட் பாக்கெட்ஸ் விற்றுக் கொண்டிருந்தவர்களுக்கு ரீடெய்ல் சேல்ஸ், கஸ்டமர் சர்வீஸ் எல்லாம் சரியாகப் பிடிபடவில்லை. கஸ்டமர்களுக்கு எதிரேயே அவர்கள் காட்டுக் கூச்சலில் கத்துவது, சண்டை போடுவது எல்லாமே செம காமெடி!

விலை மட்டும் ஆனை விலை, குதிரை விலை!

A dissatisfied customer will never return என்பது அவர்களுக்குப் புரிய ஆரம்பிக்கும்போது it will be too late!